குசேலன் படம் பார்த்தேன். பரவாயில்லை! 'கதபறயும்போள்' படம் போல இதுவும் மொக்கையாகத்தான் இருக்கிறது.பசுபதி மற்றும் ரஜினி தவிர யாரும் கதையோடு கொஞ்சமும் ஒட்டவில்லை. ரஜினியின் இமேஜை நம்பி மொத்தமாக கோட்டைவிட்டிருக்கிறார் இயக்குனர் வாசு. இப்படத்தில் ரஜினியைக் குறை சொல்லும்படி ஒன்றும் நடந்துவிடவில்லை. ஓவர் ஹைப் கொடுத்து ரஜினி ரசிகர்களை ஏமாற்றியது வாசு. சுமாராக படம் எடுத்துவிட்டு சிவாஜி, தசாவதாரம் ரேஞ்சுக்கு எதிர்பார்க்கிறது அவர்களுக்கே ஓவரா படலயா?
இது ஒரு பக்கம் இருக்க. நம்ம சாரு சார், அவரோட தளத்தில் குசேலனை ஒரு பிடி பிடித்துள்ளார். ஆனாலும்,
"ஹொகனேக்கல் பிரச்சினையிலும் கருத்து சொன்னார் ரஜினி. என்ன கருத்து? தண்ணி தராதவர்களை உதைக்க வேண்டும். அந்த உண்ணாவிரதக் கூட்டத்தில் பேசிய பலரும் இதையேதான் சொன்னார்கள். ரஜினியும் சொன்னார்." என்று எழுதி இருந்தார். ஆனால் "ஒகேனக்கல் குடிநீர்திட்டத்தை எதிர்ப்பவர்களை உதைக்கவேண்டாமா?" என்று தான் ரஜினி பேசினார். சாரு சார் எதோ புதுசா சொல்லி இருக்கார்...? அது அவருக்கே புரிந்த விடயம்.
சாரு சார் ஒரு தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட நூல் எழுதுவதாக சொல்லி இருந்தார். அவருக்கு கவுண்டமணியையே தெரியாதுனு சொல்லிட்டு தமிழ் சினிமாவை பற்றி எப்படி எழுத முடியும் என்று தெரியவில்லை. காமெடியையும் தமிழ் சினிமாவையும் எப்பவும் பிரிக்கமுடியாது. மற்றும் என்னைப் பொருத்தவரை காமெடியன்களுக்குத்தான் சிறந்த மற்றும் யதார்த்தமான நடிப்புத் திறன் உண்டு. அந்த வகையில் கவுண்டரும் சளைத்தவர் அல்ல. காலத்தால் மறையாத ஒரு புதிய தாக்கத்தை தமிழ்த்திரையுலகில் ஏற்ப்படுத்தியவர் அவர். இதை மறுப்பவர் யாரும் இருக்க இயலாது என்றே நினைக்கிறேன். கவுண்டமணி அப்படி ஏற்ப்படுத்திய 20 ஆண்டு தாக்கத்தை உணராதவர் எப்படி தமிழ் சினிமாவைப் பற்றி எழுத இயலும்?
***************
மம்மி படத்தில் வருவது போல ஒரு தகவலை சமீபத்தில் படித்தேன். 14-15-ம் நூற்றாண்டில் ஆசியாவை கலங்கடித்த தைமூர் இறந்தபோது, அவனது கல்லறையில் ஒரு சின்னம் பொறிக்கப்பட்டது, அது குறிப்பிடுவதாவது "இந்தக் கல்லறை திறப்பவர்கள் மண்ணில் போர் சூழும்". 1941-ல் ரஷியாவைச் சார்ந்த ஜெரசிமொவ் என்ற ஆராய்ச்சியாளர், தைமூரின் கல்லறையைத் தனது ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். தைமூரின் உயரம், தோற்ற அமைப்பு, மன்கோலிய அடையாளம் அனைத்தையும் உறுதிபடுத்தினார். அதேசமயம் ரஷியாவில் நாசிகளின் தாக்குதல் நடந்தது. 1942-ல் தைமூரின் உடல் மறுபடியும் அடக்கம் செய்யப்பட்டவுடன், அன்றைய தினமே, ரஷியா ஸ்டாலின்கிரெட்டில் மாபெரும் வெற்றியை ஈட்டியது. நம்ப முடிகிறதா உங்களால்...!!
**************
ஷேக்ஸ்பியரின கல்லறையையும் யாராவது திறக்க முயற்சி செய்தார்களா?
ReplyDeleteஷெக்ஸ்பியரின் கல்லறையை திறந்ததாக கேள்விப்படவில்லை. ஆனால், அவர் கல்லறையின் மேலும் கல்லறையை திறப்பவர்களை சாபிக்கும் வாசகங்கள் உண்டு.
ReplyDelete:))
ReplyDeleteதைமூர் பற்றிய தகவல்கள் பயன் மிக்கது உண்மைதானே
ReplyDeleteநட்புடன்
எஸ்.சத்யன்
//கவுண்டமணி அப்படி ஏற்ப்படுத்திய 20 ஆண்டு தாக்கத்தை உணராதவர் எப்படி தமிழ் சினிமாவைப் பற்றி எழுத இயலும்?//
ReplyDeleteசமீபத்தில் ஒரு கட்டுரையில் கவுண்டமணியை தனக்கு தெரியாது என சொல்லவில்லை என்று சாரு குறிப்பிட்டு இருந்தார்.
தமிழ் திரை படங்கள் குறித்த அவரின் நூலின் பெயர் "கோடம்பாக்கம்",அதற்கான களப்பணியில் உள்ளதாக கூறினார்.நூல் வந்தபின் தான் தெரியும்,முழுமை பெற்றதா இல்லையா என்று.
லேகா,
ReplyDelete//சமீபத்தில் ஒரு கட்டுரையில் கவுண்டமணியை தனக்கு தெரியாது என சொல்லவில்லை என்று சாரு குறிப்பிட்டு இருந்தார்.//
அவருடைய கோணல்பக்கங்களில் இவரே எழுதியதைத் தான் நான் கூறியிருக்கிறேன். சாருவின் நண்பர் ஒருவர் கவுண்டமணியை பற்றிக் கூற...அந்தப் பெயரையே கேள்விப் படவில்லை என்றாராம் இவர்.
சாரு கவுண்டமணியை தெரியாது என்று சொன்னது கோணல்பக்கங்களில் குறிப்பிட்டது உண்மை, ஆனால் அது பக்கத்தில் கவுண்டமணி அமர்ந்து இருந்தபோது அவர் தன்னை அறிமுகபடுத்திக்கொண்டபோது தனக்கு தெரியவில்லை என்று கூறியதாக படித்ததாக நினைவு
ReplyDeleteகாலத்தால் மறையாத ஒரு புதிய தாக்கத்தை தமிழ்த்திரையுலகில் ஏற்ப்படுத்தியவர் அவர். இதை மறுப்பவர் யாரும் இருக்க இயலாது என்றே நினைக்கிறேன். \\ 100 % correct!!
ReplyDelete1941-ல் ரஷியாவைச் சார்ந்த ஜெரசிமொவ் என்ற ஆராய்ச்சியாளர், தைமூரின் கல்லறையைத் தனது ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். தைமூரின் உயரம், தோற்ற அமைப்பு, மன்கோலிய அடையாளம் அனைத்தையும் உறுதிபடுத்தினார். அதேசமயம் ரஷியாவில் நாசிகளின் தாக்குதல் நடந்தது. 1942-ல் தைமூரின் உடல் மறுபடியும் அடக்கம் செய்யப்பட்டவுடன், அன்றைய தினமே, ரஷியா ஸ்டாலின்கிரெட்டில் மாபெரும் வெற்றியை ஈட்டியது.\\ என்ன பிசாசு சேம் சைடு கோலா?