Pages

Tuesday, May 29, 2007

அணுமின் ஓநாயின் பிடியில் இந்திய சுற்றுப்புற சூழல் -- பாகம்-2

பொதுவாக அணுசக்தி சார்ந்த ஆராய்ச்சி நிலையங்களில் தினமும் ஒவ்வொருவர் வாங்கிய கதிர்வீச்சைக்கொண்டே விபத்து அல்லது கசிவு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என கண்கானிப்பார்கள். 2003ல் நான் கல்பாக்கத்தில் என்னுடைய முதுனிலை இறுதியாண்டு படிப்பிற்காக இருக்க நேர்ந்தது. அப்போது, மேற்கூறியது போன்றதொரு விபத்தைப் அறிந்தேன். தினமும் அணு உலையின் செயல்பாடுகளின் சில பகுதிகளை கண்கானிக்கச்செல்லும் விஞ்ஞானிகள் வழக்கம்போல தங்கள் பணி முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டனர். சில மணிநேரங்களில் அவர்கள் அளவுக்கு மீறிய கதிர்வீச்சுக்குட்பட்டு இருக்கிறார்கள் என கண்டறியப்பட்டது. இதுபோன்ற சில பாதுகாப்பின்மை காரணமாக விபத்துகளும் கசிவுகளும் நடந்தவண்ணம்தான் உள்ளது. ஆனால் சுற்றுப்புறசூழல் பாதுகாப்பையும் சீர்கேட்டையும் உயிரிழப்பையும் இந்திய அணுசக்தித்துறை கருத்தில் கொள்கிறார்களா என்பது கேள்விக்கிறியே! போதிய பாதுகாப்புகள் மற்றும் வசதிகள் இல்லாமல் அணு உலைகளை இந்திய நிறுவ முயல்கிறது. இந்திய வழக்கம் போல ஆணிவேர் பிரச்சனைகளை அணுகாமல் நுனிக்கிளைகளை மக்களுக்கும் உலகுக்கும் வெளிப்படுத்தி எமாற்றுவேலை தான் செய்கிறது. அரசியல் லாபம் தனிக்கட்சி விளம்பரத்திற்காக அணுபரிசோதனை நடத்தப்பட்டது எல்லாருக்கும் தெரியும். கல்பாக்கத்தில் 20 வருடங்களாக இயங்கி வருவது வெறும் சோதனை அணு உலையே. தற்பொழுது, இந்திய அரசு கூடங்குளத்தில் அதிக உற்பத்திதிறனுடைய உலையைக் நிர்மானிக்க உள்ளது. இதிலும் போதிய பாதுகாப்பு வசதிகள் நிச்சயமாக சரிவர கையாளப்படப்போவதில்லை. இதன் விளைவு தெந்தமிழகத்தையே ஒரு சுடுகாடாக மாற்றி அமைக்கும். அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திதரப்போவதாக அரசு ஏமாற்றுவேலையில் இறங்கியுள்ளது. மேத்தாபட்கரும் இது சார்ந்த போரட்டத்தில் குதித்துள்ளார். ஆனால் அனைத்து அரசியல்வாதிகளும் தங்கள் பணப்பை நிறைந்தால் போதும் என இதுகுறித்து யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இத்தகையதொரு அணுவுலை தமிழகத்தில் அமைவது பயனைவிட பலமடங்கு விளைவுகள் மிக அதிகம்.

அணுவுலை இன்றியமையாமைக்கு காரணம் கூறுபவர்கள், முன்னிறுத்தும் கருத்துக்கள்:

1. வருங்காலத்தில் அணுமின் ஆற்றல் மூலமாகவே நடைமுறையில் அதிகபட்ச ஆற்றல் உற்பத்தி செய்ய இயலும்? சரி. அவ்வாறு செய்வதெனில் போதிய பாதுகாப்பு தேவை. அததச் செய்தோமா என்றால்? இல்லை. திரு.கோபாலகிருஷ்ணன் (இவர் 1993-1996 இந்திய அணுசக்தி கண்கானிப்பகத்தின் தலைவராக பணிபுரிந்தவர்) அவர்கள் சர்வதேச அணுசக்தி கண்கானிப்பகத்தின் தரத்திற்கு இந்தியாவின் பாதுகாப்பு தரம் இல்லை என்று ‘ப்ரண்ட் லைன்’ இதழில் கூறியுள்ளார்.

2. புளுட்டொனியம் இந்தியாவே தயாரிப்பதின் மூலம் அணுஆயுத உற்பத்தியில் சுயதேவையை பூர்த்தி செய்துகொள்ளலாம்?

இந்தியாவில் பல்வேறு அடிப்படைப் பிரச்சனை இருக்கும்போது அதைவிடுத்து, ஏன் இப்படி பல கோடி பணத்தை புளுடொனியம் தயாரிப்பில் கொட்டுவது இப்போதைக்கு அவசியமற்றது. (தற்போதைய அமெரிக்காவுடனான ஒப்பந்தம் புளுடோனியம் தயாரிப்பிற்கும் ஆப்பு வைத்துவிட்டது).

பல்வேறு ஆதாரப்பிரச்சனைகளில் சிக்கித்தவிக்கும் மக்களை மீட்க முடியாத இந்திய அரசு, புளுடொனியம் தயாரிப்பு என்றும் அணுமின் உற்பத்தி என்றும் ஜல்லியடிப்பது ஏன்? மக்களின் பாதுகாப்பு பற்றி கருதாமல் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மக்களுக்காக பயன்படுத்தப்படுமா? சில முதலாளிகளின் நன்மைக்காக மக்களை இந்திய அரசு சுரண்டுகிறதா? மாற்றானை அடக்க புளுடொனியம் தயாரிக்கிறேன் என்று சொந்த மக்களையே கொல்கிறதா? இவைதான் இந்திய அணுமின் உற்பத்தியின் முன் நிற்கும் கேள்விகள். நாட்டினுடைய கௌரவத்தை உயர்த்த, நாட்டின் ஆராய்ச்சியை, நாட்டின் அறிவியலைவிட நாட்டு மக்கள் வாழ்க்கைத்தரம் முதலில் உயர வேண்டும். இந்திய அரசு இதை உணருமா ??

16 comments:

  1. குட்டி பிசாசு...2பாகமும் ஒரே தடவை release பண்ணினால் எப்படி மேன்?நாங்க படிச்சு முடிக்கனும் இல்லையா? :-))

    ReplyDelete
  2. துர்கா,

    பொறுமையா படிச்சி முடிங்க!!என்ன அவசரம்!!

    ReplyDelete
  3. என்னப்பா ஆச்சு உனக்கு நல்லாத்தன இருந்த...

    ReplyDelete
  4. சும்மா மொக்கையா எழுதி போர் அடிக்குது!! ஒரு சேஞ்ச்க்கு தான் இப்படி! உடனே லூசுனு முடிவு பண்ணிடுவிங்கலா!!

    ReplyDelete
  5. //துர்கா,

    பொறுமையா படிச்சி முடிங்க!!என்ன அவசரம்!//
    i am one busy girl.kummi adipathil sema busy..ok lah...give me some time.i will read tomorrow :-)

    ReplyDelete
  6. நீங்களே இப்படி சொல்லிட்டா எவன் இதை படிப்பான்!
    நன்றி!! முதல்ல கும்மி அடிச்சி முடிங்க!!மத்ததெல்லாம் பிறகு தான்!

    ReplyDelete
  7. //மக்களின் பாதுகாப்பு பற்றி கருதாமல் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மக்களுக்காக பயன்படுத்தப்படுமா? //

    Truly unanswerable question...

    it is really confusing for both that is to the country and us to take a decision on this subject,I think...:)

    ReplyDelete
  8. வள்ளி,

    நன்றி!! நீங்களாவது படிச்சிட்டு பின்னூட்டம் போட்டிங்களே!!

    ReplyDelete
  9. நல்ல பதிவு. தேசிப்ண்டிட்டில் இணைத்துள்ளேன். நன்றி

    http://www.desipundit.com/2007/05/30/nuclear/

    ReplyDelete
  10. குட் போஸ்ட்

    நல்ல எழுத்து திறமை இருக்கு கும்மியோட சேராதிங்க

    ReplyDelete
  11. திரு.டுபுக்கு (வேறவழி..இத தான் போட்டு ஆகணும்)!!

    ஊக்கத்திற்கு நன்றி !!

    ReplyDelete
  12. மின்னல,
    என்ன? பார்க்கவே முடியல!! கும்மில பிஸியா!! ஆல் ன் ஆல்-அ இருக்கனும்!!
    அப்ப தான் நாளைக்கு யாரும் பதிவுல கும்மி அடிக்காட்டி நானே சொந்த செலவில் சுண்ணாம்பு அடிக்க முடியும்!!

    வாழ்கவளமுடன்!!

    ReplyDelete
  13. Good post.Please write about the chernobyl disaster also.It will increase the awareness about the dangers of nuclear energy.
    Raj

    ReplyDelete
  14. hey man unga article poonga vula vanthu irruku.see good posts always get good response eventhough less comment.congratulations.
    ps:i got no tamil keyboard.that is why peter viduren.dont mind it plz.

    ReplyDelete
  15. குட்டிபிசாசு அய்யா,

    எம் மக்களின் குரவளையைத்தான் எத்தனை ஓநாய்கள் கவ்வியுள்ளன.
    1) அணுமின் ஓநாய்.
    2)மறுகாலனி ஆதிக்க ஓநாய்.
    3)எம்மக்கள் கையில் மலம் தரும் திராவிட ஓநாய்.

    எம்மக்கள் நிம்மதியாக வாழும் காலம் வருமா?

    ReplyDelete
  16. துர்கா,

    தங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி!!

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய