Pages

Wednesday, May 16, 2007

தாங்கலடா சாமி


இடம்: கல்லூரி விடுதி
நேரம்: மாலை, 6:00 மணி
கதாபாத்திரங்கள்: ஆவி (எ) சங்கர், நெட்டை (எ) முருகேசு

ஆவி: டே நெட்டை! இங்க வாடா!
நெட்டை: என்னடா ஆவி!
(புலம்பி கொண்டே வருகிறான் நெட்டை)
நெ: என்னடா டோங்கு!
ஆ: டே மச்சான்! காதுசரியா கேட்கலடா!
நெ: எப்பபாரு பேசிட்டு இருக்க, உனக்கு வாய்பேசம போனா நல்லா இருக்கும்
ஆ: டே மாங்கா! மொக்கை போடதே. உண்மையா காது சரியா கேட்கலடா!
நெ: அதுக்கு என்ன இப்ப!
ஆ: டாக்டர்கிட்ட போகணும்.
நெ: சரி போகலாம்
ஆ: சைக்கிள் நீதாண்டா மிதிக்கணும்
நெ: அடப்பாவி! இதுக்குதான் என்னை கூப்பிட்டயா! சைக்கிளுக்கு ட்ரைவர் வச்சிட்டு இருக்கிற ஒரே ஆள் நீதாண்டா
(இருவரும் புறப்பட்டனர்)
ஆ: நல்லா மிதிடா! பாஸ்டா போடா!
நெ: நீ நல்ல நாலுபேரு சாப்பாடு சாப்பிட்டு உட்கார்ந்தா எப்படி மிதிக்கிறது. இங்க எனக்கு நுரை தள்ளிடும் போல இருக்குது. உனக்கு போய் ஆவினு பேரு வச்சான்பாரு அவனை அடிக்கனும், பார்க்கிறதுக்குதான் எலும்புகூடு மாதிரி இருக்கே, ஆனா பூதம் மாதிரி வெய்ட்டு.
ஆ: என்னடா சொன்னே. காது சரியா கேட்கலடா
நெ: இதுவேறயா! சரிதான்!
(டாக்டர் வீடு வந்ததும், சைக்கிளை நிறுத்திவிட்டு இருவரும் உள்ளே சென்றனர்)
ஆ: நெட்டை! பணம் கொண்டுவரலடா. நீ கொண்டுவந்தயா!
நெ: உன்கூட வந்தனே, என்ன!! உன்னை மாதிரி இம்சை பண்ணுறவனுகள காது ரெண்டு குபகுபனு சொல்ல குமுறுகஞ்சி காச்சணும். போ! போ! கொடுக்கிறேன். இல்லாட்டி நீ இன்னும் இம்சை கொடுப்ப!
(ஆவியும் நெட்டையும் டாக்டரின் அறை உள்ளே சென்றனர்)
டாக்டர்: உட்காருங்க!
டா: என்னப்பா பிரச்சனை!
ஆ: காது சரியா கேட்கல சார்!
டா: என்னப்பா பிரச்சனை!
ஆ: காது சரியா கேட்கல சார்!
டா: என்னப்பா பிரச்சனை! (சத்தமாக கூறுகிறார்)
ஆ: காது சரியா கேட்கல சார்!
டா: என்னப்பா பிரச்சனை! (இன்னும் சத்தமாக கூறுகிறார்)
ஆ: காது சரியா கேட்கல சார்!
டா: ஹலோ! என்னங்க பிரச்சனை! (கோபமாக)
நெ: சார்! அவனுக்கு அதுதான் பிரச்சனை! அவனுக்கு காது சரியா கேட்கல சார்!
டா: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...(ஆச்சர்யத்தில்)
டா: ஒரு சொட்டுமருந்து எழுதி தரேன். காதுல விடுங்க.
ஆ: எப்பெல்லாம் விடனும் சார்
டா: எப்ப விடனும்ங்கிறதவிட எங்க விடனும்ங்கிறதுதான் முக்கியம்
காதுல விடு (ஆவியும் நெட்டையும் தலைய சொறியராங்க) காலை 1முறை; மாலை 1முறை விடாதிங்க. நைட் மட்டும் விடுங்க போதும்.
(நம்ம மொக்கையவிட இது பெரிய மொக்கையா இருக்கும்போலனு, ஆவியும் நெட்டையும் காசு குடுத்துட்டு எஸ்கேப்!!!!!!!)

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆண்டனி: முபாரக் பாட்ஷா பாய்!!
பாட்ஷா: ஏ...ஏ...ஏ...ஆண்டவன் கெட்டவங்கல அதிகமா மொக்க போடுவான், சிரிக்க வைக்கமாட்டான்! ஆன நல்லவன்கல கொஞ்சமா மொக்கபோடுவான், சிரிக்கவச்சிடுவான்...

3 comments:

  1. ஆக்கபூர்வமான பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் வருவதில்லை என்றும் மொக்கப் பதிவுகளுக்குத்தான் அதிக அளவில் பின்னூட்டங்கள் வரும் என்பதுமான கருத்தை பொய்யாக்குவதற்கென்றே இப்பதிவுக்கு ஒரு மறு மொழி கூட யாருமே இடவில்லை.

    ReplyDelete
  2. சீனா ஐயா,

    நான் இதை எழுதும் போது தமிழ்மணத்தில் அவ்வளவாக நண்பர்கள் இல்லை!

    ReplyDelete
  3. ATHU ENNANGA MOKKAI ?

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய