Pages

Sunday, June 03, 2007

நிறைய எழுதணுங்க!!

எங்க பாசக்கார டீம்ல: கண்மணி அக்கா போல டைமிங் காமெடி செய்து சிரிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம். அவங்க எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரமாரியாக எழுதித்தள்ளுகிறார். காயத்ரியோட கவிதைகளைப் பார்த்த பொறாமையாக இருக்கும். கருத்து மற்றும் எழுத்துநடை ரொம்ப நல்லா இருக்கும். (அவர் இயற்கை, உறவுகள் என்று எல்லையோடு நிற்க்காமல் சமூக சிந்தனைமிக்க கவிதைகளையும் எழுதவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்). மங்கை ரொம்ப நல்லா எழுதுவாங்க. ஆனா அவங்க எழுதுரது குறைவு. எங்க அபிஅப்பா எழுதினார்ன்னா நக்கல்-நையாண்டிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அவர் சாமியாராக போனதில் இருந்து எழுதுரது குறைந்துவிட்டது. அய்யனார் சாதாரண விஷயத்தக்கூட அழகாக சொல்லக்கூடியவர். மொழியைப் பயன்படுத்தும் லாவகம் அலாதியானது. மைபிரண்டும் கண்மணி அக்கா போல காமெடிப் பதிவில் கில்லாடி. மின்னுதுமின்னல் பதிவ விட பின்னூட்டம் நல்லா எழுதுவார்( மின்னல் கோபிக்காதே! சும்மா தான் சொன்னேன். நீங்க எழுதுன மொக்கைகவிதை ஒன்று போதும் உங்களுடைய திறமையைக் கூற! ஆனால் தொடர்ந்து எழுதுங்க!).

எல்லாரபத்தியும் சொல்லிட்டு என்னை விட்டுடமாட்டேன். வழக்கம்போல நம்ம கமலஹாசன் பாணியில் ஒரு கவிதை, ஒரு மொக்கை, ஒரு திரைபார்வை, ஒரு ஆக்கம் என்று வரிசைபடி இடுகையிட்டு வருகிறேன். (கவிதை பற்றி சொல்லவே தேவை இல்லை. யாரும் படிக்காவிடிணும், என்னோட பதிவுக்கு த்ருஷ்டி கழிச்சதுபோல எப்போதாவது ஒன்று எழுதிவிடுவேன். ஏன்னய்யா உனக்கு இந்த வேண்டாத வேலை என்று கேட்டால், “நான் முடிவுபண்ணிட்டா! என் பேச்ச நா..னே.. கேக்க மாட்டேன்!” விஜய் ஸ்டைல்ல டயலாக் அடிப்பேன். எனக்கு இனிமேல கொலை வெறியோட பின்னூட்டம் போட்டு திட்டினாலும், நிறுத்துறது கஷ்டம் தான்.) பின்னவீனத்துவம்னு நான் எதுவும் தெரியாம அகலக்கால் வைக்கிறது இல்லை. சாதாரணமாக ஆக்கமான இடுகைகளை விட மொக்கைக்கு தான் ஒத்துழைப்பு அதிகம் உண்டு. அதிலும் என்னுடைய சில ஆக்கமான இடுகைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும் போதிய பின்னூட்டம் இல்லாததால், வகையான இடுகைகளை எழுதுவதைத் தவிர்த்தேன். ஏனென்றால் பின்னூட்டம் இருந்தால்தான் இடுகை போதியநேரம் தமிழ்மணத்தில் தெரிகிறது, இல்லாவிடில் மறைந்துவிடுகிறது. இவற்றால் நொந்துபோன நான் மொக்கைபதிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டேன். எங்க பாசக்கார குடும்ப ஆலோசகர் ‘தருமி’ ஐயா சொன்னதுபோல பின்னூட்டமும், ஆக்கமும் தொடர்பில்லாத இருவேறு விஷயங்கள. அவருடைய அறிவுரைக்கு செவிசாய்த்து என்னுடைய பாதையை மறுபடியும் தொடர முடிவு செய்துவிட்டேன். இத்தகைய நிலை எனக்கு மட்டும் இல்லை, நிறைய தமிழ்மண அன்பர்களுக்கு நிகழ்ந்திருக்கும். தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும்.அறிவுரையும் சொல்லலாம்.

எப்படியோ வெற்றிகரமாக 25 பதிவுகளைத்தாண்டி ஆச்சு!! இதுக்கு முக்கிய காரணம் தமிழ்மண ஜாம்பவான்கள் தான். என்னோட எழுதனும் என்கிற நெருப்புக்கு எண்ணெய் வார்த்தவர்கள். இவர்களுடைய பதிவுகள்தான் எனக்கு ஊக்க மருந்தாக அமைந்தது. நான் இன்னும் நிறைய படிக்கணும்...மேலும் மேலும் எழுதணும்... தங்கள் வாழ்த்துக்களுடன்...

பி.கு.:

தமிழ்மணமே! என்னோட கண்ணான பாசக்கார குடும்பத்தை உன்னிடம் ஒப்படைச்சிட்டு போரேன். அதில் ஆனந்தகண்ணீரத்தான் நான் பார்க்கனும்!! ஐயோ!!!ஊருக்குத்தான் போரேனுங்க...! ஒரேடியா போகலை..!!

19 comments:

  1. தருமி சொன்னது சரிதான்.உங்க பதிவை படித்தேன்.ஆனால் மறுமொழி இட வில்லை.அதற்கு காரணம்...நல்ல பதிவுக்கு எல்லாம் கும்மி அடிக்க மனசு வராது.எனக்கு கும்மி அடிக்கதான் பிடிக்கும்.இப்படி எல்லாம் feel பண்ணுவீங்கன்னு தெரிந்தால் அப்பொழுதே போட்டு இருப்பேன்.தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //காயத்ரியோட கவிதைகளைப் பார்த்த பொறாமையாக இருக்கும். கருத்து மற்றும் எழுத்துநடை ரொம்ப நல்லா இருக்கும்//

    இது நான் தானா? சொல்றது நீங்க தானா? நம்பவே முடியலயே!! உங்க வேண்டுகோளை நிறைவேற்ற முயற்சி பண்றேன்..

    (ஹை! குட்டிபிசாசு ஊருக்கு போய்டுச்சு!!)

    ReplyDelete
  3. //மைபிரண்டும் கண்மணி அக்கா போல காமெடிப் பதிவில் கில்லாடி.//

    அய்யோ! நான் குட்டிபிசாசுக்கு எந்த சூட்கேஸும் அனுப்பவே இல்லை.. நம்புங்க..

    ஆனாலும் கு.பி.. அவ்வ்வ்வ்வ்... எழுதவே தெரியாம முளிச்சிட்டிருக்குற என்னை பத்தி இவ்வளவு பெருசா நெனச்சிட்டு இருக்கீங்களே.

    ReplyDelete
  4. //எப்படியோ வெற்றிகரமாக 25 பதிவுகளைத்தாண்டி ஆச்சு!! //

    ஆஹா.. வாழ்த்துக்கள் நண்பா! :-D

    ReplyDelete
  5. //தமிழ்மணமே! என்னோட கண்ணான பாசக்கார குடும்பத்தை உன்னிடம் ஒப்படைச்சிட்டு போரேன். அதில் ஆனந்தகண்ணீரத்தான் நான் பார்க்கனும்!! //

    தமிழ்மணம் எங்களை வெங்காயம் உரிக்க சொல்லிடுச்சு.. கண்ணுல கண்ணீரா ஊத்துது பிசாசு. :-(

    //ஐயோ!!!ஊருக்குத்தான் போரேனுங்க...! ஒரேடியா போகலை..!!//

    ஹஹாஹா.. நல்ல படியா ஊருக்கு போய்.. புள்ள குட்டிகளை பார்த்து எஞ்சாய் பண்ணிட்டு, எனெர்ஜாடிக்கா வாங்கோ! :-D

    ReplyDelete
  6. //(ஹை! குட்டிபிசாசு ஊருக்கு போய்டுச்சு!!)//

    ரொம்ப சந்தோசப்படாதீங்க!! இப்ப வந்துட்டேன்!

    ReplyDelete
  7. /// .:: மை ஃபிரண்ட் ::. said...

    //எப்படியோ வெற்றிகரமாக 25 பதிவுகளைத்தாண்டி ஆச்சு!! //

    ஆஹா.. வாழ்த்துக்கள் நண்பா! :-D //

    நன்றி!!

    ReplyDelete
  8. //புள்ள குட்டிகளை பார்த்து எஞ்சாய் பண்ணிட்டு,//

    ஐய்யோ!! இன்னும் திருமணம் ஆகவில்லை!

    ReplyDelete
  9. துர்கா|†hµrgåh said...
    " மறுமொழி இட வில்லை.அதற்கு காரணம்...நல்ல பதிவுக்கு எல்லாம் கும்மி அடிக்க மனசு வராது."
    டேய் குசும்பா உன் பதிவையும் படிச்சு நாலு பேர் கமெண்ட் போட்டுட்டாங்க அப்படின்னு
    காலர கெத்தா தூக்கிவிட்டுகிட்டு "பருத்திவீரன்" கார்த்தி மாதிரி அலைஞ்ச இப்ப துர்க்கா
    உண்மைய போட்டு உடைச்சதும் மூலையில் உக்காந்து அழுவுற
    போடா போய் நல்ல பதிவா போடுற வழிய பாரு...
    ம்ம்ம்ம்ம் .ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  10. "பின்னூட்டமும், ஆக்கமும் தொடர்பில்லாத இருவேறு விஷயங்கள்"

    பின்னூட்டம் என்கிறது பதிவரை பாராட்டும் விசயம்,நான் blog இப்பொழுதுதான்
    ஆரம்பித்து இருக்கிறேன் என்றாலும் தமிழ் மணத்தில் வாசகராக இரண்டு வருடம்
    இருந்த பொழுது நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டம் போடாமல் இருந்தது இல்லை...நான் எதற்க்காக போட்டேன் என்று தெரியாது..இப்பொழுது பதிவு போட ஆரம்பித்த
    பிறகு யாரேனும் நாலு பேரு பதிவ பார்த்த பிறகு நல்லா இருக்கு என்றால் ஜிவ்வ்வ்வ் என்று இருக்கிறது...

    ReplyDelete
  11. வெற்றிகரமாக ஊருக்குச் சென்று திரும்பி தமிழ்மணக்க வந்திருக்கும் குட்டிப்பிசாசே வருக வருக
    மணத்தில் உம் பணி தொடர வாழ்த்தும் அக்கா கண்மணி மற்றும் பாசக்கார குடும்பம்.

    [கத்திபோயி வாலு வந்தது டும் டும்....]

    ஏன் இந்தப் பழமொழி சொல்றேன்னு சரியா யூகிச்சா அவங்களைப் புகழ்ந்து 'கும்மி'யில் ஒரு தனிப் பதிவு போடப்படும்...டும்..டும்ம்...டும்

    ReplyDelete
  12. கண்மணி அக்காவிற்கு,

    நன்றி!

    //கத்திபோயி வாலு வந்தது டும் டும்....//
    அபிஅப்பாவ தானே சொன்னீங்க!

    ReplyDelete
  13. குசும்பன்,

    கலாய்க்கிர மாதிரி தெரியலயே! கர்வமா பேசுர மாதிரியில்ல இருக்கு...நீங்க எதுக்கும் கொஞ்சம் அடக்கி வாசிங்க!!இல்லாட்டி பாகில் பிகில் வூதும்!!வர்ட்டா...!

    ReplyDelete
  14. "ம்ம்ம்ம்ம் .ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்ம் "ன்னுஉக்காந்து அழுவுறேன்
    நான் அது உங்களுக்கு
    கர்வமா பேசுற மாதிரி இருக்கா...அதுக்காக
    ஒரு பச்ச மண்ண "இல்லாட்டி பாகில் பிகில் வூதும்!!" இப்படி மிரட்டலாமா?

    ReplyDelete
  15. குசும்பன்,
    சரி, மன்னிக்கவும்! கர்வமா பேசாட்டி கவலைப்படாதீங்க!!

    ReplyDelete
  16. பதிவை பயர்பாக்ஸில் படிக்க முடியவில்லை.பின்னூட்டங்கள் மட்டும் சரியாக தெரிகிறது.
    சற்று பாருங்கள்.
    பார்க்கமுடியுமில்ல?:-))(குட்டி பிசாசா இருக்கீங்களே!!)

    ReplyDelete
  17. வடுவூர்குமார்,

    எனக்கு நல்லாதான் தெரியுது! நீங்க எதுக்கும் இந்த லிங்க் பாருங்க!

    ReplyDelete
  18. நான் பயர்பாக்ஸ் தான் பயன் படுத்துரேன்.

    ReplyDelete
  19. அருண், இதே நிலைமை தான் எனக்கும். என்னுடைய பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் குறைவு. தமிழ் மணத்தில் காணாமல் போய்விடும். இப்போதெல்லாம் பின்னூட்டம் மட்டுமே இடுகிறேன். பதிவை நிறுத்தி வைத்திருக்கிறேன். தருமி சொன்னதைக் கடைப்பிடிக்க வேண்டும். எனக்கு மொக்கப் பதிவு போட வராது. ஆனா மொக்கப் பின்னூட்டம் எழுதுவேன்.
    நானும் இன்னும் நெரெய எழுதணும் - ஆசை இருக்கு - சரக்கு ( ரம் இல்லப்பா) இருக்கு - எழுதலாம். எஸ்.வி.சுப்பையா பத்தி பதிவேப் பாத்த உடனே வயசான ஆளுன்னு நினைச்சேன். ஆனா அருண் வயசு ப் புள்ளேன்னு இப்பத்தான் தெரியுது.

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய