Pages

Friday, June 22, 2007

எனக்கு எட்டிய - எட்டாத எட்டு

முதலில் எட்டு விளையாட்டுனு என்னை போட்டுக்கொடுத்த கவிதாயினி காயத்ரியை வன்மையாக கண்டிக்கிறேன். டூவிலர் லைசென்ஸ் எடுக்கத்தான் 8 போட சொல்லுவாங்க. இந்த எட்டு எதுக்குனு தெரியல. என்னையும் ஆட்டத்தில் சேர்த்து விளையாட்ட விபரீதம் ஆக்குரீங்க.

1. என்னோட கண்ணாடி கனவில் புள்டவுசர் விட்டு ஏத்தினது அம்மாவை இழந்த சம்பவம். எனக்கு வாழ்க்கையைக் காட்டிய விரல்கள் கைவிட்டுப்போன பிறகு என்னொட பாதையும், பயணமும் மாறிப்போனது.

2. இரவு முழுக்க படிச்சி எக்ஸாம் எழுதிட்டு, பஸ்ல தூங்கிட்டு போய் காஞ்சிபுரத்தில் இறங்கினதும், அங்க பேருந்துநிலையத்தில் எல்லாரிடமும் 2 ரூபாய் சேகரிச்சு ஊர் வந்து சேர்ந்ததும் மறக்கவே முடியாது.

3. நான் என்னோட கோபத்தால நண்பர்களை இழந்ததில்லை. எனக்கு பிடிக்காத விஷயத்தை யாரவது செய்தால் அங்கிருந்து முதல்ல விலகிடுவேன். அதையே நண்பர்கள் செய்தால், கடுமையாக எடுத்துச் சொல்லுவேன். என்னோட ப்ளஸ் இதுதான். இருப்பினும் கோபம் காரணமாக சில பள்ளி தோழர்களை இழந்தது. பிறகு கோபத்தில் யாரையாவது நோகடித்துவிட்டால், அதிகமாக நொந்துகொள்வேன். மன்னிப்பு கேட்கவும் தயங்கமாட்டேன்.



4. எல்லாக்குழந்தைகள் போல வரட்டு கடவுள்நம்பிக்கையோடு தான் வளர்ந்தேன். காலப்போக்கில் தெளிந்து கடவுள்மறுப்புக் கொள்கையில் அதிக ஈடுபாடு வந்துவிட்டது.பிறகு எந்த கஷ்டம் வந்தாலும் கடவுளை துணைக்கழைப்பதில்லை. வரலாற்று சுற்றுப்பயணம் காரணமாக அல்லாமல், கோவிலுக்கு போவதில்லை.

5. என்னைச்சுற்றி இருக்கும் எல்லாரையும் சிரிக்கவைக்க முயற்சி செய்வேன். எப்பவும் அது நடக்கிறது இல்ல. சில சமயம் சரியான லூசுபயல்னு நினைக்கத்தோணும். (நீங்க அப்படி நினைக்கமாட்டீங்கனு எனக்கு தெரியும்). பேராசிரியர் பெருமையா நகைச்சுவைமன்னன் சொல்லி பேசச்சொல்ல, நான் என்னோட கல்லூரி பிரிவு உபச்சாரவிழாவில் சொன்ன ஜோக்கக்கு ஒரு பயலும் சிரிக்கல. ரொம்ப அவமானமாக போச்சிப்பா!!

6. வாழ்க்கையில் இதுவரை லட்சியம், சாதனை என்று எதுவும் இல்ல. என்னால் முடிந்தவரை வறுமையில் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்யனும். இதுதான் என்னோட லட்சியமாக மற்றும் சாதனையாக இருக்கும். வருங்காலத்தில், எனக்கு மேலும் நல்லதொரு பொருளாதார நிலை அமைந்தால் மேலும் நிறைய உதவி செய்வேன். சுயநலவாதியாகவும், சந்தர்ப்பவாதியாகவும் இருப்பதை வெட்கக்கேடாக நினைக்கிறேன். நான் 1000 ரூபாய் வருமானத்தில் குடும்பம் நடத்தும் மனிதர்கள் இருக்கும் இந்தியாவில், 2000 ரூபாய் கொடுத்து சிவாஜி படம் பார்ப்பவன் அல்ல. 1 ரூபாய் (அ) 50 காசுக்கு கீரைக்காரியிடம் குடுமிப்பிடி சண்டை போடுபவனும் அல்ல.

7. என்னுடைய உடன்பிறந்தவர் அண்ணன் மட்டும்தான். முதல்ல அக்கா, தங்கை இல்லயேனு ரொம்ப ஆதங்கப்படுவேன். ஆனால் தமிழ்மணத்திற்கு வந்தபிறகு கண்மணி அக்கா, காயத்ரி, கவிதா, மைபிரண்ட், துர்கா என்று பாசமழைக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.

8. ஹிந்தியே சரியா பேசத்தெரியாம, ட்ரெயின்ல அதுவும் அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட்ல டெராடூன் வரை தனியாக போனது. அங்க போயும் குசும்பு அடங்காம ஹரித்வார் போனது. எல்லாம் என்னோட சரித்திர சாதனைகள்.

எப்படி என்னோட வயதெறிச்சல கொட்டிகிட்டீங்க!! நானும் இப்ப அடுத்தவங்க வயதெறிச்சல கொட்டிக்கிறேன்.

விடாதுகருப்பு

அசுரன்

கண்மணி அக்கா

ஆசிப்மீரான் அண்ணாச்சி

சந்தோஷ்

சதுர்வேதி

கண்ணபிரான் ரவிசங்கர்

அணில் மற்றும் கவிதா (முடிந்தால் பீட்டர் தாத்ஸ்யையும் கூட்டிவாங்க)

இதுபோல ஒரு கலவைய யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டீங்கனு நினைக்கிறேன்.

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

25 comments:

  1. முதல் நெம்பர்லயே கண்ணு கலங்க வச்சிட்டியே குட்டி பிசாசு.
    அம்மா போல இல்லைன்னாலும் அன்பான சகோதரிகள் இருக்கோம்னு சந்தோஷப்படு.

    ReplyDelete
  2. கண்மணி அக்கா,

    நன்றி!!

    ReplyDelete
  3. //அதையே நண்பர்கள் செய்தால், கடுமையாக எடுத்துச் சொல்லுவேன்.//
    எத்தனை பேர் உங்க கிட்ட அடி வாங்கி இருக்காங்க அருண்சிவா? :-)
    பயமா இருக்கே! :-))

    //பிறகு எந்த கஷ்டம் வந்தாலும் கடவுளை துணைக்கழைப்பதில்லை//
    இவுங்களைத் தான் அவருக்கு ரொம்ப பிடிக்குமாம்! அவர் பாரத்தைத் தாங்கி வேலையக் குறைக்கறீங்கல்ல? :-)

    உங்க அழைப்புக்கு நன்றி அருண். இன்னும் சில அன்பர்களும் அழைச்சிருக்காங்க! விரைவில் இடுகிறேன்!

    ReplyDelete
  4. @ கண்ணபிரான் ரவிசங்கர்,

    ///எத்தனை பேர் உங்க கிட்ட அடி வாங்கி இருக்காங்க அருண்சிவா? :-)
    பயமா இருக்கே! :-))///

    ஐய்யோ! அடிக்கமாட்டேங்க!! கடுமையாக வார்த்தையால் எடுத்துச் சொல்லுவேன்

    ///இவுங்களைத் தான் அவருக்கு ரொம்ப பிடிக்குமாம்! அவர் பாரத்தைத் தாங்கி வேலையக் குறைக்கறீங்கல்ல? :-)///

    நல்ல நகைச்சுவையுணர்வு!! உங்களைப்போன்ற சில ஆன்மீகவாதிகளால் தான் சச்சரவு குறைவாக உள்ளது!!

    ReplyDelete
  5. நான் இன்று எழுதுகிறேன் பிசாசு சார். அழைத்ததற்கு ரொம்ப நன்றி.

    ReplyDelete
  6. //பிறகு எந்த கஷ்டம் வந்தாலும் கடவுளை துணைக்கழைப்பதில்லை. வரலாற்று சுற்றுப்பயணம் காரணமாக அல்லாமல், கோவிலுக்கு போவதில்லை.//

    ஏனுங்கோ குட்டிப்பிசாசு... துர்கா பூஜை பதிவு நீங்க எழுதுனதுங்களா?

    ReplyDelete
  7. ///சதுர்வேதி said...

    நான் இன்று எழுதுகிறேன் பிசாசு சார். அழைத்ததற்கு ரொம்ப நன்றி. ///

    நன்றி!!

    ReplyDelete
  8. @ காட்டாறு,

    //ஏனுங்கோ குட்டிப்பிசாசு... துர்கா பூஜை பதிவு நீங்க எழுதுனதுங்களா?//

    கடவுளுக்காக அல்ல!! மேற்குவங்க கலாச்சாரத்தை எடுத்துக்காட்ட் துர்கா பூஜை இடுகை!!

    ReplyDelete
  9. கடவுள் மறுப்பு கொள்கையும் துர்கா பூஜையும் எப்படி இணைந்தது? மற்றபடி எட்டும் எட்டிய கனியாக இனித்தது. பிசாசே!! உனக்கு இன்னுமொரு சகோதரியும் இருக்கிறேன்!

    ReplyDelete
  10. நனானி அக்காவிற்கு,

    என்னுடைய மனமார்ந்த நன்றி!!

    ReplyDelete
  11. என்ன ஒரு சுறுசுறுப்பு!!

    ReplyDelete
  12. @ நானாசி அக்கா,

    //என்ன ஒரு சுறுசுறுப்பு!!//

    இது தான் ஒன்பதாவது தகவல்!!

    ReplyDelete
  13. அந்த மன்னிப்பு கேட்கும் குணம் என்கிட்டேயும் உண்டு...அதுக்கு சிறிதும் யோசிக்க மாட்டேன்...

    கண்மணி சொன்னது போல் இங்கு சகோதர சகோதரிகளுக்கு பஞ்சம் இல்லை...

    ReplyDelete
  14. @ மங்கை,

    இப்படி எல்லாரும் சேர்ந்து பாசமழை பொழியிரிங்க!! காய்ச்சல் வந்துடும் போல!! நன்றி!!

    ReplyDelete
  15. (நீங்க அப்படி நினைக்கமாட்டீங்கனு எனக்கு தெரியும்)
    ///

    நீங்களா சொல்லிகிட்டா எப்படி நாங்கதான் சொல்லனும்

    நாங்க அப்படிதான் நினைப்போம் கலாய்போம்... :)

    ReplyDelete
  16. நீங்களா சொல்லிகிட்டா எப்படி நாங்கதான் சொல்லனும்

    நாங்க அப்படிதான் நினைப்போம் கலாய்போம்... :)////

    குசும்பு பிடிச்ச மின்னலு!!

    ReplyDelete
  17. எட்டும் சுவையாக இருந்தது. அதைவிட உங்க வலைப்பூ அமைப்பு ரொம்ப அழகா இருக்கு. கீழே இருக்கும் அந்த பட்டாம்பூச்சி அற்புதம்.

    ReplyDelete
  18. @ஜெசிலா,

    மிக்க நன்றி!!

    ReplyDelete
  19. குட்டி பிசாசு 8 அருமையாக உள்ளது...

    ReplyDelete
  20. குசும்பன்,

    மிக்க நன்றி!!

    ReplyDelete
  21. போட்டு விட்டேன் தலை!

    ReplyDelete
  22. அம்மாவின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. அம்மா போல நினைச்சுக்கோங்கனு வேணா சொல்லலாம்.
    குட்டிபிசாசு, ரொம்பவே நல்லா எழுதறீங்க.

    இனிமே எல்லாம்நல்லபடியா நடக்கட்டும்.

    ReplyDelete
  23. @ நாச்சியார் வல்லி அம்மா,

    ஊக்கத்திற்கும் உண்ர்வுகளுக்கும் நன்றி!!

    ReplyDelete
  24. பிசாசு, ( அருண் - உண்மைப் பெயரா ?) எட்டுமே அருமை. தாயை நினைத்து எழுதிய ஆரம்பம் பாராட்டத்தக்கது. வலைப்பதிவர்களை சகோதரிகளாக, பாசத்துடன் நினைத்தது நல்ல செயல். கடவுளின் வேலைப் பளுவைக் குறைத்ததும், நகைச்சுவை மன்னனாக முயற்சித்ததும், அடுத்தவர்க்கு உதவும் எண்ணம் இருப்பதும் அரிய செய்லகள் தானே

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய