Pages

Thursday, July 05, 2007

திரையுலக வித்தகர் அகிரோகுரோசவா


ஜப்பானிய இயக்குனர் அகிரோகுரோசவா திரையுலகில் மறக்கமுடியாத மந்திரம்.உலகத்திரையுலகிற்கு புதியபிம்பத்தைக் கொடுத்தவர். 'எண்டெர்டெயின்மெண்ட் வீக்லி' வரிசைப்படுத்திய தலைசிறந்த 50 இயக்குனர்களில் இருந்த ஒரேயொரு ஆசிய இயக்குனர். அதில் 6வது இடம் இவர். இவர் இந்தியாவின் சத்யஜித்ரேவின் ரசிகரும் கூட. ஐம்பதுகளில் இவர் இயக்கிய படங்கள் விதைத்துச் சென்ற புதுமை ஏராளம். இவர் இயக்கிய ரோஷமொன் படத்தின் அடினாதம் சிவாஜி நடித்து வெளிவந்த அந்தநாள் முதல் விருமாண்டி என்கிற சண்டியர் வரை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. திரைப்பட தொழில்நுட்பத்தில் உலகை உலுக்கிக்கொண்டு இருந்த மேற்குலகை திகைக்க வைத்தவர்.

1954-ல் வெளியான செவன்சாமுராய் ஹாலிவுட்டில் மெக்னிபிசந்த் செவன் என தயாரிக்கப்பட்டு பெரும்வெற்றி பெற்றது. பாலிவுட்டின் சோலே,சைனாகேட் கூட இதனுடைய தழுவல் தான். 1961-ல் இவர் இயக்கிய யொஜிம்போ, ஹாலிவுட்டில் செர்ஜியோலியோன் இயக்கத்தில் பிஸ்ட் புல்லாப் டாலர்ஸ் என்ற லத்தின் அமெரிக்க படமாக வெளியானது. கிலிண்ட் ஈஸ்ட்வுட் இப்படத்தில் நடித்து தான் புகழின் உச்சத்திற்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அகிரோகுரோசவா சிறந்த ஓவியர். காட்சியமைப்பை தன் மனம் ஏற்கும் வரை விடாப்பிடியாக எடுப்பதால் ஊடகங்களால் சர்வாதிகாரியாக சித்தரிக்கப்பட்டார். செவன்சாமுராய் படத்தின் இறுதிக்காட்சிகளில் ஒன்றிற்கு மேற்பட்ட கேமிராக்களைப் பயன்படுத்தி அற்புதமான போர்காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். சண்டைக்காட்சிகளில் கத்தியால் வெட்டும் காட்சிகளில் மாமிசங்கள் வெட்டப்பட்டு ஒலிப்பதிவு அமைக்கப்பட்டதாம்.

அகிரோகுரோசவாவின் படங்களில் மழைக்காட்சி இருக்கும். மேற்கத்திய திரையுலகின் மேதை ஜான் போர்டு அகிரோகுரோசவாவை சந்தித்தபோது "மழை உங்களுக்கு மிகவும் பிடிக்குமா?" என்று கேட்டார். "என்னுடைய படங்களை உண்மையில் அதிக கவனத்துடன் பார்க்கிறீர்" என்று பதிலளித்தார் அகிரோ.

அகிரோ நேர்த்தியாகவும், யதார்த்தமாகவும் காட்சியமைப்பதில் வல்லவர். நடிகர்களுக்கான உடையை ஒருவாரத்திற்கு முன்பே கொடுத்து உடுத்தச் சொல்லி, அந்த பாத்திரத்துடன் ஒன்றச்செய்து விடுவார். 1700-ல் ஜப்பானில் நிலவிய நிலப்பிரபுத்துவ கோட்பாட்டில் சாமுராய் மற்றும் வேளாளர்களின் வாழ்க்கைமுறையை பிரதிபலிக்கும்படி கதைகளனாக அமைத்து வெகுவான படங்களை இயக்கினார்.

டெர்ஸு உஸலா என்ற திரைப்படம் வேற்றுமொழிக்கான ஆஸ்கார் விருதினை இவருக்கு 1975-ல் வாங்கித்தந்தது (இப்படம் ஜப்பானிய மொழியில் எடுக்கப்படவில்லை! ரஷிய மொழியில் எடுக்கப்பட்டதாகும்). ரேன்(1985) திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனராக ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார். திரையுலகின் ஜாம்பவானாக வலம்வந்த இவர் 1998-ல மறைந்தார்.

4 comments:

  1. நல்ல கட்டுரை, திறமையான இயக்குனர்,

    செவன் சாமுராய் குறித்த என் பதிவு

    http://kanapraba.blogspot.com/2005_12_01_archive.html

    ReplyDelete
  2. நிறைய சொல்லுவீங்கன்னு வந்தா அப்படியே சட்னு முடிச்சுட்டீங்களே. :( நின்னு நின்னு விலாவாரியா சொல்லியிருக்கலாமே. எல்லாம் ஒரு ஆதங்கம்தான். இவரோட ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு காட்சியையும் நிதானமா பேசிட்டே இருக்கலாம்ல? இவரோட ட்ரீம்ஸ் பாத்திருக்கீங்களா? ஒவ்வொரு காட்சியும் இவருக்கு ஓவியங்களின் மேல் இருக்கும் பிரியத்தைச் சொல்லும் இல்ல. ஒரு காட்சில வான் கோ-வாக மார்ட்டீன் ஸ்கொர்செசேயின் வருவார்.

    இவருடைய படத்தில் வர்ர மழைக்காட்சிகள். எல்லாப் படத்திலயும் ஒரு மழைக்காட்சி வந்திருதில்ல? மழைக்காட்சிகள் பற்றியே தனியா உக்காந்து பேசலாம். நீங்க எழுதுங்க. அரட்டை அடிக்க வர்ரேன். ;)

    -மதி

    ReplyDelete
  3. @கானா பிரபா,

    நன்றி!!

    ReplyDelete
  4. மதிகந்தசாமி,
    கண்டிப்பா எழுதுரேன்!! (விவரமாக)

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய