Pages

Wednesday, July 11, 2007

சங்கரின் அடுத்த படம் தயாராக உள்ளது

சங்கரின் அடுத்த படம் ரோபோ இல்லை என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகிறது. ஹாலிவுட்டின் வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில், 200 கோடி செலவில் ஜேம்ஸ்பாண்ட் படம் எடுத்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதையடுத்து பத்திரிகையாளர்கள் இயக்குனர் சங்கரை மொய்த்தவண்ணம் உள்ளனர். நேற்று வெண்ணெய் டிவியிலிருந்து நிருபருக்கு சங்கர் வழங்கிய பேட்டி மூலம் கிடைத்துள்ள சில தகவல்கள்.

சங்கர் இதுவரை ஜெண்டில்மேன், முதல்வன் படங்களில் தமிழகத்திற்கு மெசேஜ் சொன்னார். இந்தியன், சிவாஜி படங்களில் இந்தியாவிற்கே மெசேஜ் சொன்னார் இப்ப எடுக்கபோற படத்தில் உலகத்துக்கே மெசேஜ் சொல்லப்போராராம்.சங்கரோட படத்தில் கதையே இல்லைனு ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஜேம்ஸ்பாண்ட் கதை எல்லாருக்கும் தெரியுமே,அதனால மக்கள் இனி எதுவும் சொல்ல முடியாது என்று எண்ணி இந்த படத்தை தொடங்கியுள்ளார்.சுத்தமான தமிழில் 'கம்னாட்டி' என்று படத்திற்கு பெயர் வைத்துள்ளதால் வரிவிலக்கும் கிடைத்துவிட்டதாம். தமிழில் மட்டுமல்லாமல் அனைத்து இந்தியமொழிகளிலும், ஆங்கிலம், பிரென்சு, ஜெர்மன், மற்றும் C, C++,Java மொழிகளிலும் வெளியாக உள்ளது.

இப்படத்தின் கதையின்படி ஜேம்ஸ்பாண்ட் 'சிவாஜி' படத்தின் நாயகனைப் போன்றவர்கள் 20 வருடத்தில் 250 கோடி எப்படி சம்பாதித்தார்கள் என்பதை ஆப்ரேஷன் KAM மூலம் (KAM என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? Ketaal Adiththu Mithippen) துப்பறிந்து கண்டுபிடிக்கிறார். அவர்களுடைய தகாத செயல்களை தவிடுபொடியாக்கி, பின்னிபெடல் எடுக்கிறார். அதனால் தான் படத்தின் ஆங்கிலப்பெயர் KAM-naughty.படத்தில் பாட்டு ரொம்ப ரிச்சா இருக்கிறதாம்.

சமீபத்தில் எகிப்த்தில் பாடல் ஒன்று எடுக்கப்பட்டது. எகிப்த்திலுள்ள பிரமிட்டுகளுக்கு சிவப்பு, மஞ்சள், பச்சை என வண்ணங்கள் அடிக்கப்பட்டு 500 நடனக்கலைஞர்களுடன் ஜெனிபர் லோபஸுடன் கதாநாயகன் ஆடும் பாடல் எடுக்கப்பட்டுள்ளது. அப்பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்,

பல்லேலக்கா பல்லேலக்கா பல்லேலக்கா!

அமெரிக்கா ஆப்ரிக்கா அண்டார்டிக்கா!....

நைல்நதியோரமும் நறுமுகைப்பூவும் மறந்து போகுமா?

கிளியோபத்ராவும் கிளிகொத்தும் பழங்களும் தொலைந்து போகுமா?.....

என்று தொடங்கும் பாடலை வைரமுத்து இயற்றியுள்ளார்.

படத்தில் விறுவிறுப்பான சைக்கிள், கார் சேஸிங் காட்சிகளும் உண்டு. வீட்டிற்கு பால் கொடுக்காமல் போகும் பால்காரனுடைய சைக்கிளை காரில் சேஸ் செய்து பால் வாங்கும் காட்சி, தெருநாய் துரத்தும் போது வேகமாக சைக்கிளில் செல்லும் காட்சி என அனைத்தும் பார்ப்போரை திகைப்பில் ஆழ்த்தும்.

படத்தோட கதாநாயகி ஒரு பண்பாடுடைய தமிழ் பொண்ணா, பேவாட்ச்(ரிஸ்ட்வாட்ச் இல்ல) புகழ் பமீலா நடிக்கிறாங்க. ஏனென்றால் அவங்க தான் விலகாம இருக்க தாவணி, தொப்புள் தெரியாம இருக்க பாவடை என எதையும் போட மாட்டாங்க. உள்ளாடையோட மட்டும் வருவாங்க. படத்தோட முக்கியமான காட்சியே க்ளைமேக்ஸ் தான், ஏனென்றால் சங்கர் அங்க தான் பிறந்த இந்தியாவிற்கு மெசேஜ் சொல்லுரார். கதாநாயகன் அந்த மெசேஜை பிரதமருக்கு எப்படி சொல்லுறாருனு நீங்களே பாருங்க.

கா: இமயமலையையும், நம்ம செயிந்த் தாமஸ்மவுண்டையும் இணைக்கக் கூடிய ஒரு திட்டத்தை நான் செயல்படுத்தலாம்னு இருக்கேன். அதுக்கு உங்க உதவி தேவை.

பி: இமயமலையையும், செ.தா.மவுண்டையுமா? எப்படி?

கா: சொல்லுரேன். கங்கையையும், காவிரியையும் இணைச்சா அது தற்காலிகமாகத் தான் உதவும், பிறகு மறுபடியும் தண்ணீர் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது. அதனால கங்கை உற்பத்தியாகும் இமயமலையை தென்னிந்தியா வரை நீட்டனும்.

பி: (தலைப்பாகை கழட்டி தலைய சொறிந்து கொண்டே) இதெல்லாம் எப்படி முடியும்பா? :(

கா: முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. பொறுப்பை என்னிடத்தில் ஒப்படைங்க நான் பார்த்துக்கிரேன..ஆங்...(சொல்லிட்டு வெளியே வரார்...பின்னணி இசை முழங்க).

தில்லியிலிருந்து சென்னைக்கு கதாநாயகன் நடந்து வர, (பொதுவாக சங்கர் படத்தில் காட்டுறது போல) வடக்கில் இருந்து தெற்கு வரை இமயம் கிராபிக்ஸில் நீளுது. எங்க பார்த்தாலும் ஆறா ஓடுது. தென்னை, பனை, ஆலமரம், அரசமரம் எல்லாம் முளைக்குது. பஞ்சமெல்லாம் தீர்ந்து போகுது.

ஒரு கூடுதல் தகவல் என்னவென்றால், ஜேம்ஸ்பாண்டாக நடிக்கப்போவது நம்ம குட்டிபிசாசு தான். (சினிமாபுகழ் ச்சுப்பரமணி(கண்மணி அக்காவோட நாய்குட்டி) தான் ரெகமெண்டேசன் பண்ணி இருக்கு.)

(மீதி கப்ஸா அடுத்த வாரம் தொடரும்)

பி.கு.: இது என்னோட 51-வது இடுகையாக்கும்.

நெட்ல பமீலா ஒழுங்கா துணி அணிந்து கொண்டுள்ள புகைப்படத்தைத்தேட எவ்வளவு நேரம் ஆச்சி தெரியுமா? அப்படி தேடியும் இது தான் கிடைத்தது.

43 comments:

  1. நடந்தாலும் நடக்கலாம்

    ReplyDelete
  2. எல...குட்டி சூப்பர் பதிவு ;))

    சங்கர் இந்த பதிவை படிச்சிட்டு அதே மாதிரி பாடம் எடுத்தாலும் எடுப்பாரு

    ReplyDelete
  3. friend want to get the link of india vallarasu, that thiru thirumathi palanisamy./. salem airport...

    ReplyDelete
  4. \\நெட்ல பமீலா ஒழுங்கா துணி அணிந்து கொண்டுள்ள புகைப்படத்தைத்தேட எவ்வளவு நேரம் ஆச்சி தெரியுமா? அப்படி தேடியும் இது தான் கிடைத்தது.\\

    குட்டிபிசாசு உங்களின் விடாமுயற்சியும், கடமை உணர்வையும் நினைக்கும் போது அப்படியே புல்லரிகுது!!!

    ReplyDelete
  5. நன்றி வத்தலை முரளி!!

    ReplyDelete
  6. // கோபிநாத் said...

    எல...குட்டி சூப்பர் பதிவு ;))

    சங்கர் இந்த பதிவை படிச்சிட்டு அதே மாதிரி பாடம் எடுத்தாலும் எடுப்பாரு //

    என்னை ஹீரோவா போடுவாரா?

    ReplyDelete
  7. @சிநேகிதன்..
    ///குட்டிபிசாசு உங்களின் விடாமுயற்சியும், கடமை உணர்வையும் நினைக்கும் போது அப்படியே புல்லரிகுது!!!//

    பொதுவாழ்க்கைக்கு வந்துட்டாலே இப்படித்தான் ஒரே பிஸி!!

    ReplyDelete
  8. //முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. பொறுப்பை என்னிடத்தில் ஒப்படைங்க நான் பார்த்துக்கிரேன்னு//
    இந்த பேச்சு வார்த்தையைப் படிக்கும்போது ஏனோ கேப்டன் குரல் தான் மனசுக்குள்ள எதிரொலிக்குது.. ;-)

    ReplyDelete
  9. இப்படி தமிழ்கூறு நல்லுலகத்துக்குப் பெருந்துரோகம் பண்ணிட்டீங்களே! ரொம்ப தேடாம போட்டிருந்தா ஜூடான இடுகையில வந்திருக்கும்...

    ReplyDelete
  10. //பொன்ஸ்~~Poorna said...

    //முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. பொறுப்பை என்னிடத்தில் ஒப்படைங்க நான் பார்த்துக்கிரேன்னு//
    இந்த பேச்சு வார்த்தையைப் படிக்கும்போது ஏனோ கேப்டன் குரல் தான் மனசுக்குள்ள எதிரொலிக்குது.. ;-) //

    அக்கா,
    என்ன இது! எனக்கு போட்டியா கேப்டனை களத்தில் இறக்குரீங்க!!

    ReplyDelete
  11. //ரொம்ப தேடாம போட்டிருந்தா ஜூடான இடுகையில வந்திருக்கும்...//

    ஆகா! ரொம்ப தான் ஆசை! (என்னோட உடன்பிறப்புகளும் தாய்குலமும் வரும் இடம், பதிவில் இதெல்லாம் தணிக்கை செய்யப்பட்டே வெளிவரும்)

    ReplyDelete
  12. சூப்பரப்பு :)))

    ReplyDelete
  13. நல்ல தமாசு

    ReplyDelete
  14. ஏனிந்த விபரீத ஆசை உங்களுக்கு!

    ReplyDelete
  15. கு.பி. அடங்கவே மாட்டியா?

    ReplyDelete
  16. vegu kurugiya kaalaththileye kummi pathivugalaai poddu pon vizhaa kanda kuddi pisaasukku paasakkaara kudumbaththin vaazhthukkal..

    [en kummi weekendsle maddumthaan :(]

    ReplyDelete
  17. அருண் சூப்பரு.... சொல்ல முடியாது இதுவே அடுத்த படமா இருந்தாலும் இருக்கலாம். என்ன இமயமலைக்கு பதில் அண்டார்டிகாவுல இருக்குற ஏதாவது ஒரு மலையா இருக்கும்.

    ReplyDelete
  18. @ மைபிரண்ட்,

    வாழ்த்துக்களுக்கு நன்றி!!

    ReplyDelete
  19. ///சந்தோஷ் said...

    அருண் சூப்பரு.... சொல்ல முடியாது இதுவே அடுத்த படமா இருந்தாலும் இருக்கலாம். என்ன இமயமலைக்கு பதில் அண்டார்டிகாவுல இருக்குற ஏதாவது ஒரு மலையா இருக்கும். //

    அண்டார்டிக்கான்னா பட்ஜட் அதிகம் ஆகும். எப்படி இருந்தாலும் பாட்டுக்கும், பில்டப்க்கும் தானே அவரு செலவு செய்ய போறாரு.

    ReplyDelete
  20. //இதுவே அடுத்த படமா இருந்தாலும் இருக்கலாம்.//

    நான் ஹீரோவா நடிப்பேனா? அதைச் சொல்லுங்க!!

    ReplyDelete
  21. ஏன் இப்படி பமீலாவோட நடிக்க அலையரீங்க

    ReplyDelete
  22. ரொம்ப வழியப்பிடாது சொல்லிபுட்டேன்.

    ReplyDelete
  23. எப்ப மீதி இடுகை வரும்

    ReplyDelete
  24. அவர்களுடைய தகாத செயல்களை தவிடுபொடியாக்கி, பின்னிபெடல் எடுக்கிறார். அதனால் தான் படத்தின் ஆங்கிலப்பெயர் KAM-naughty.//

    :-)) படிச்சிட்டு சிரிப்பை அடக்க முடியலங்க... சூப்பர்ப் காமெடி போங்க, Kam-naughty = கம்னாட்டி :-PP

    ReplyDelete
  25. @ தெகா,

    வருகைக்கு மிக்க நன்றி!!

    ReplyDelete
  26. இந்த கம்மநாட்டி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்பா.

    ReplyDelete
  27. உங்கள் பதிவை ஒத்த கருத்து உடைய என்னுடைய பதிவு

    http://maruthanayagam.blogspot.com/2007/06/blog-post_18.html

    ReplyDelete
  28. //ILA(a)இளா said...

    இந்த கம்மநாட்டி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்பா. //

    வருகைக்கு நன்றி இளா!!

    ReplyDelete
  29. //மருதநாயகம் said...

    உங்கள் பதிவை ஒத்த கருத்து உடைய என்னுடைய பதிவு

    http://maruthanayagam.blogspot.com/2007/06/blog-post_18.ht//

    வருகை தந்தமைக்கு நன்றி!!

    ReplyDelete
  30. கங்கை உற்பத்தியாகும் இமயமலையை தென்னிந்தியா வரை நீட்டனும். "அதற்கு நான் ஒரு கோடி பவுண்டுகள் தருகின்றேன்." என்ற வசனத்தை விட்டு விட்டீர்களே.

    ReplyDelete
  31. // Anonymous said...

    கங்கை உற்பத்தியாகும் இமயமலையை தென்னிந்தியா வரை நீட்டனும். "அதற்கு நான் ஒரு கோடி பவுண்டுகள் தருகின்றேன்." என்ற வசனத்தை விட்டு விட்டீர்களே. //

    என்னங்க வம்புல மாட்டி விடுரீங்க.

    ReplyDelete
  32. சங்கரை இந்த பதிவை படிக்காமல் பண்ணுங்கள்..

    ReplyDelete
  33. //தூயா said...

    சங்கரை இந்த பதிவை படிக்காமல் பண்ணுங்கள்.. //

    ஏன் காப்பி அடிச்சிடுவாரா?

    ReplyDelete
  34. இங்கு தானா இருக்கின்றீர்கள்?
    பதில் அதே தான்
    ஹிஹிஹி

    ReplyDelete
  35. //தூயா said...

    இங்கு தானா இருக்கின்றீர்கள்?
    பதில் அதே தான்
    ஹிஹிஹி //

    எதுக்கும் கதைக்கு காப்பிரைட் வாங்கி வச்சிக்கணும்!!

    ReplyDelete
  36. யாருக்கு என்ன ஐடியா தோணுதோ சொல்லுங்கப்பா? இதோட பாகம் - 2-ல போடுரேன்.

    ReplyDelete
  37. @ இளா,

    வாழ்த்துக்களுக்கு நன்றி!!

    ReplyDelete
  38. குட்டிபிசாசு,

    பயர் ஃபாக்ஸிலே படிக்க முடியலை...

    சரி பண்ணுங்க.... ;)

    ReplyDelete
  39. @ ராம்,

    நானும் நெருப்புநரி தான் பயன்படுத்துகிறேன். எனக்கு நன்றாக தெரிகிறது.

    நன்றி!!

    ReplyDelete
  40. உங்களிடம் இண்டர்னெட் எக்ஸ்ப்லோரர் இல்லையா?

    ReplyDelete
  41. :)) super comedy

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய