Pages

Tuesday, November 20, 2007

பில்லிசூன்யம் வைத்துவிட்டார்கள் குமுறுகிறார் எட்டியூரப்பா - மேலும் ரஜினிகாந்த் அறிவுரை

கர்நாடகத்தின் முதலமைச்சர் பதவி பறிபோன பிறகு எட்டியூரப்பா விரக்தி விளிம்புக்கே சென்றுவிட்டார் போலும். சாத்திரலு, சம்பிரதாயலுவில் அதிக நாட்டமுள்ள எட்டியூரப்பா எண்கணிதப்படி 'எடியூரப்பா" என்ற தன் பெயரை எட்டியூரப்பா என்று மாற்றி வைத்துக்கொண்டவர். ஆனால் அதனால் ஒருபலனும் காணவில்லை. இப்படி அடிமேல் அடி வாங்கி நொந்து போன எட்டியூரப்பா, இப்போது தேடகவுடா மீது சொன்ன குற்றச்சாட்டு என்னவென்றால், "தேவகவுடாவும் அவரது மகன் குமாரசாமியும் எனக்கு பில்லிசூன்யம் வைத்துள்ளனர்" என்பதே.இதற்கு பயந்து உயில் கூட எழுதி வைத்துவிட்டதாக கூறுகிறார். தான் இறந்தால் அதற்கு கவுடாவும் குமாரசாமியும் தான் காரணம் என்று வேறு கூறியுள்ளார்.

இது பற்றி, நம்ம உட்டலக்கடி உலகநாதன் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கருத்து கேட்க விரைந்தார். போயஸ்தோட்டத்தில், தேடியும் கிடைக்காத ரஜினி சென்னையிலுள்ள பாபாஜி ஆசிரமத்தில் கிடைத்தார்.

உ.உ: கன்னடர்களை விட, பிஜேபியை அதிகம் நேசிக்கும் நீங்க இந்த பில்லிசூன்யத்தை பத்தி சொல்லவருவது என்ன?

ரஜினி: என்னை வாலவைக்காத தெய்வங்களான கன்னடமக்களுக்கு என்னோட வணக்கங்கள், சமீபத்துல எட்டியுரப்பாவுக்கு பில்லிசூன்யம் வச்சிடாங்களாம்னு கேள்விபட்டேன். அதே பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது.(தெரியாம ஏன் சாமி பேசுறே!!) கர்நாடகல நடக்குறது தான் உங்களுக்கு தெரியும்.ஆனா வட இந்தியாவே எரிஞ்சிட்டு இருக்கு. அது உங்களுக்குத் தெரியாது. இத கவுடா ஐயா சுமூகமா எல்லாரோடவும் கலந்துபேசி பில்லிசூனியம் வைக்கணும். எந்த தலைவர்னு பேதமில்லாமல் வைக்க ஏற்பாடு செய்யணும்.

உ.உ.; இத்தகைய பேச்சுக்கு உங்கள் ஒத்துழைப்பு கிடைக்குமா?

ரஜினி: முடிய வச்சு தான் பில்லி சூன்யம் வைக்க முடியுமாம். இங்க சில பேர் முடியே இல்லாத தைரியத்தில் சேது இடிக்கபோறேன்னு சொல்லிட்டு இருக்காங்க!!அவங்களுக்கும் காவிரி வேணும்னு கேட்கிறவனுக்கும், பில்லிசூன்யம் வச்சா, நான் வேணும்ன்னா என்னோட பாக்கெட்ல இருந்து ஒரு கோடி ரூபாய் தரேன்.

உ.உ: சார்! உங்க பாணில இந்த விஷயத்துக்கு ஒரு குட்டிகதை சொல்லி முடிங்க, அப்ப தான் வாசகர்கள் விரும்பி படிப்பாங்க!!

ரஜினி: ஒரு ஊருல அத்துவானினு ஒருத்தர் இருந்தார். அவர் எப்பவும் எதயாவது இடிக்கனும் இடிக்கனும்னு சுத்திகிட்டு இருப்பாரு, இப்படித்தான் இவரு சின்ன வயசுல 10-15 மசூதி, 20-30 கிழவிகளை இடிச்சி தள்ளியிருந்தாரு. இதைப்பார்த்த இவரோட அப்பா. இவரை கூட்டிக்கொண்டு போய் சேதுசமுத்திரத்தில் விட்டுட்டார். விடியவிடிய சேதுவை இடிச்சார். பிறகு அவருக்கு எதையும் அழிக்கிறது புடிக்கல. மகாவதார் பாபாவோட பக்தரா மாறிட்டார். நீங்களும் வாங்க பாபாவோட பக்தரா மாறுங்க.

உ.உ.: ஐயோ! வேணம் சாமி இந்த விளையாட்டு!! எஸ்கேப்!!

15 comments:

  1. சின்ன துனுக்காக இருந்தாலும் நக்கல் தூக்கலாக இருக்கு !

    :)

    ReplyDelete
  2. இனி பொறுப்பதில்லை! எறிதழல் கொண்டு வா!!

    its eRithazal... chinna ri... sariya...

    ReplyDelete
  3. // இசை said...

    இனி பொறுப்பதில்லை! எறிதழல் கொண்டு வா!!
    //

    நெற்றிக்கண்ணைத் திறப்பினும்குற்றம் குற்றமே என்று என்னுடைய பிழையை சுட்டிக்காட்டிய இசையே வாழ்க உன் தமிழ் தொண்டு! வளர்க உனது புகழ்!!

    ReplyDelete
  4. He should have changed his name as Yeddykanth (in the row of rajnikanth, vijayakanth...virucchikanth)...

    Atleast namma raja rajan kitt idea kettu irukkalam...paavam yeddy

    ReplyDelete
  5. பில்லிசூன்யம் வைத்துவிட்டார்கள் குமுறுகிறார் எட்டியூரப்பா -

    I didnot see this anywhere other than Thatstamil. Hope you think thatstamil is the only one in the world who talks about the reality.....


    Thamasthan

    ReplyDelete
  6. நாங்களும் கிளப்புவோமில்ல பீதிய.... இதப் படிங்க

    ReplyDelete
  7. நாங்களும் ஆட்டத்துக்கு வந்துட்டோம்ல. http://iimsai.blogspot.com/2007/11/100_20.html

    ReplyDelete
  8. படிக்காதவர்களின் நாடு இந்தியா!

    உலகிலேயே இந்தியாவில்தான் படிக்காதவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்கிறது அண்மையில் வெளிவந்த ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பொன்று. இந்தத் தகவலை மத்திய அரசு இராஜ்ய சபையில் இன்று தெரிவித்தது.2006க்கான மனிதவள மேம்பாட்டு அறிக்கையின்படி இந்தியா 177நாடுகள் கொண்ட பட்டியலில் மனித வள மேம்பாட்டில் 126வது இடத்தில் உள்ளது என அத்துறையின் மத்திய மந்திரி புரெந்தேஸ்வரி தெரிவித்தார்

    தொகுப்பாளர்: சற்றுமுன் |

    நன்றி!

    ReplyDelete
  9. இம்சை,

    ஆளாளுக்கு அடிச்சா கிழிஞ்சிடும் போல....!!

    ReplyDelete
  10. //'எடியூரப்பா" என்ற தன் பெயரை எட்டியூரப்பா என்று மாற்றி வைத்துக்கொண்டவர். ஆனால் அதனால் ஒருபலனும் காணவில்லை//

    எப்படி சொல்றீங்க? இப்போ ஆட்சி கவிழ்ந்தாலும் மக்கள் ஆதரவு கட்டாயம் கூடும் அல்லவா (அனுதாப அலை). ஸோ, நீங்க சொல்றது தான் தப்பு.

    பி.கு: எனக்கு பில்லி சூன்யத்தில் நம்பிக்கை இல்லை.

    ReplyDelete
  11. சீனு,

    எலக்ஷன் வந்தா தானே தெரியும்!பொறுத்து தான் பார்க்கனும்!

    ReplyDelete
  12. நானும் இங்கே ஒரு எண்ணாலஜி...ஒரு பேராலஜி...மூக்காலஜி கண்ணாலஜின்னு நிறைய பேரை எட்டியூரப்பா சார்பில் விசாரிச்சேன்...அவர் தன்னோட பேரை "ஒட்டியூரப்பா "ன்னு மாத்தினா அடுத்தவினாடியே அவருக்கு வெற்றியெல்லாம் ஒட்டு ஒட்டுன்னு ஒட்டுமாம் ...ட்ரை பண்ணச்சொல்லுங்கள்..[குட்டி பிசாசு சொன்னாதான் கேட்பார்

    ReplyDelete
  13. பில்லியாவது சூன்யமாவது.
    சூன்யத்தைக் கண்டு பிடிச்சவர் பிறந்த நாட்டில் இப்படியும் நிறைய சூனியங்கள்.வருத்தப் பட வேண்டிய விஷயம்

    ReplyDelete
  14. // goma said...

    பில்லியாவது சூன்யமாவது.
    சூன்யத்தைக் கண்டு பிடிச்சவர் பிறந்த நாட்டில் இப்படியும் நிறைய சூனியங்கள்.வருத்தப் பட வேண்டிய விஷயம்//

    சரியா சொன்னீங்க!! நன்றி!!

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய