Pages

Sunday, November 25, 2007

நஞ்சாவது பிஞ்சாவது

தான் வழக்கம்போல தேநீர் அருந்தும் கடைக்குச் சென்று அமர்ந்தான் கிச்சா. பொதுவுடைமை மற்றும் பெரியாரிய கருத்துகளில் அதிக ஆர்வமுடைய கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி, ஒரு தொழிற்நுட்ப மாணவன். சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டும் முற்போக்குச் சிந்தனையை நமீதாவை விரும்புவதற்கு இணையாக விரும்பினான். அம்பேத்கார் மற்றும் விவேகானந்தரின் நூல்களை சிலுவைபோல் சுமந்து திரிவான். சென்னையில் வசிக்கும் கிச்சாவிற்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு தமிழில் பதிவெழுதுவது.

இன்றும் தமிழ்மணத்தில் என்ன பதிவெழுதலாம் என சிந்தித்தவாறு, தன் வாய்நுனியில் வந்தமர்ந்த சிக்ரெட்டுக்குத் தீயிட்டான். கடையில் வேலைபார்க்கும் வேலுவிடம் தேநீர் தயாரிக்கச் சொல்லிவிட்டு மறுபடியும் யோசிக்கலானான். புகை தின்றவாறு செய்தித்தாளைப் புரட்டிய அவன் கண்களில் சிக்கியது அந்தச் செய்தி. "சிறார்கள் தொழிலில் ஈடுபடுத்துவதை எதிர்த்து மனிதசங்கிலி". கிச்சா தேடியது எதோ கிடைத்தது போலும், அப்படி ஒரு மலர்ச்சி அவன் முகத்தில். செய்தித்தாளின் வரிகளில் லயித்துவிட்ட அவனது உதடுகளின் முணுமுணுப்பு அன்று வரையப்போகும் பதிவின் தலைப்பை "நஞ்சுபட்ட பிஞ்சு உள்ளங்கள்!" என்று ஒருவாறு முடிவு செய்தது.

"அண்ணே! டீ" என்று கொண்டுவந்த தேநீரை நீட்டினான் வேலு. செய்திகளை அசைபோட்டவாறு தேநீரை வாங்கிப் பருகிய கிச்சாவின் முகத்தில் ஓராயிரம் விரிசல்கள். "என்னடா! டீ போடுரே! உங்க மாஸ்டர் எங்கடா? " என்று உருமிய கிச்சா நெற்றிக்கண் இருந்திருந்தால் வேலுவை எரித்திருப்பான். கிலியாகிப்போய், வெறித்தபடி நின்று கொண்டிருந்த வேலு மிகவும் பாவம். நான்கு நாட்களுக்கு முன் தேநீர்க்கடையில் வேலைக்கு சேர்ந்த அவனுக்கு வயது ஒன்பது தான்.

8 comments:

  1. அருமை அருமை. புதுமை புதுமை. நமீதாவுக்கு இணையாக - வாயில் வந்தமர்ந்த சிகரெட்டிற்கு தீயூட்டல் - சிலுவை போல சுமந்து செல்லுதல் - நஞ்சு பட்ட பிஞ்சு உள்ளங்கள் - உடனடித் தலைப்பு - ம்ம்ம்ம்ம்ம்

    சொல் வேறு செயல் வேறு - அறியுங்கள்

    வாழ்த்துகள்

    ReplyDelete
  2. concept old(in some films we saw). presentation style o.k

    ReplyDelete
  3. முரளி, சீனா ஐயா,

    மிக்க நன்றி!!

    ReplyDelete
  4. கதை நல்லாவே இருக்கு. அது நீங்க இல்லியே

    ReplyDelete
  5. வாங்க சின்ன அம்மணி! நான் அப்படி எல்லாம் செய்வேனா?

    ReplyDelete
  6. கதை நல்லாயிருக்கு ;))

    ReplyDelete
  7. கோபி,

    வருகைக்கு நன்றி!!

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய