Pages

Tuesday, November 27, 2007

விஜய்க்கு வலைசரப்புலி நாகை சிவாவுடைய பதில் என்ன?

(இடம்: ஆலமரத்தடி ;; இம்சைகள்: அண்டு & சிண்டு)

அண்டு: இந்த வாரம் எதாவது சூடான செய்தி இருக்காண்ணே!

சிண்டு: இருக்குடா! விஜய்க்கு இது போறாத காலம் போல, போனவாரம் அவரது ரசிகமணிகள் வைத்த கட்டவுட்டில் விஜயின் காலருகே புலி இருக்க, தெந்தமிழகத்தின் சாதிபுலிகள் பாய்ந்து குதித்துள்ளனர். கிலியான ரசிகர்கள் கட்டவுட்டை அகற்றியதாக கேள்வி.

அண்டு: எப்படியோ மேட்டர் நம்ம நாகைசிவாவுக்குத் தெரியல!! தெரிஞ்சி இருந்தா என்ன செய்து இருப்பாரு!!

சிண்டு: என்னவா? "புலியொன்று புறப்பட்டதே!!"னு ஒரு பதிவு போட்டு இருப்பாரு.

சிண்டு: அடேய்! இந்த வாரம் என்ன நடந்தது தெரியுமா? மத்திய அமைச்சர் அன்புமணி ஒரு விழாவில், "ரஜினிகாந்த் சினிமாவில் தம் அடிப்பது போன்ற காட்சிகளில் நடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு நான் தனிப்பட்ட முறையில் கடுதாசி் எழுதியதை தொடர்ந்து அவர் படங்களில் தம் அடிப்பதை நிறுத்திக் கொண்டார் நடிகர் விஜயிடமும் தம் அடிப்பது போல நடிப்பதை தவிர்க்கும்படி கேட்டுகிறேன்" என்று ஒரு போடுபோட்டார்.

அண்டு: ரஜினி, விஜய் புகை பிடிப்பதை நிறுத்துவது இருக்கட்டும், இவரு அடம்பிடிக்கிறதை எப்ப நிறுத்தப் போறாரு. இந்தியாவில் ஒரு கோடி பேருக்குக்கிட்ட புகைக்கிறார்களாம். இவர்கள் எல்லாம் ரஜினி, விஜய் படம் பார்த்து கெட்டுப்போனவங்களா? முதல்ல அவரோட கட்சியில யாரும் பிடிக்கிறது இல்லயா?

சிண்டு: அதிகமா பேசுரே! அம்புடுதேன்! விஜயே இதை கண்டுக்கல நீ ஏன் ஓவரா ஊளைஉடுரே!!

அண்டு: கண்டுக்கலயா?

சிண்டு: ஆமாண்டா!! அமைச்சரின் இந்த வேண்டுகோள் குறித்து விஜயிடம் கேட்கப்பட்டபோது, "நானும் அமைச்சர் பேசியதை செய்தித்தாள்களில் படித்தேன். இனிமேல் என்னுடைய படங்களில் தம் அடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்" என்று அநியாயத்துக்கு சோமர்சால்ட் அடிச்சார்.

அண்டு: விஜய்ங்ண்ணா!! உங்க படத்தில் இருக்கக்கூடிய யதார்த்தமான ஒரே விடயம் இதுதாங்கண்ணா! அதையும் தூக்கிட்டால் பிறகு இந்தியாவிலே கதை நடக்கிற மாதிரியே இருக்காதுங்கண்ணா!!

சிண்டு: டேய்! என்ன விஜய்ய கலாய்க்கறயா?

அண்டு: சும்மா மிமிக்ரி செய்தண்ணே!!

அண்டு: ஆமா! இதுக்கு மாலடிமை என்ன சொல்லுரார்?

சிண்டு: 2012-ல் பாமக ஆட்சினு சொல்லுரார்!

அண்டு: அப்ப ரஜினி?

சிண்டு: ம்ம்ம்!!! 2012-ல் பாபா ஆட்சினு சொல்லுவார்!! மூடிட்டு அடுத்த கேள்விய கேளு!

அண்டு: ஆமா! சமீபத்தில பொல்லாதவன் படத்தில் வர வசனத்துக்கு தனுஷ், தயாரிப்பாளர் மேல தியாராயர் கல்லூரி நஷ்டஈடு கேட்டுகிறாங்களாமே!

சிண்டு: ஆமாண்டா! தனுஷ் அவரோட அப்பாவ பார்த்து "என்னை ஒரு டாக்டருக்கு படிக்க வைச்சியா, தியாராயர் கல்லூரியில் பி.ஏ. தானே படிக்க வச்சே!!" என்று கேட்பாரே அதனாலயா!!

அண்டு: ஆமாண்ணே!!

அண்டு: ஏனண்ணே! பேசுற படம் எடுத்தால் தானே பிரச்சனை! பேசாம ஊமை எடுத்தா எதுவும் சொல்ல மாட்டாங்க தானே!!

சிண்டு: டேய்! பேசினாலே தப்ப எடுத்துக்கிறானுங்க, பேசாமல் சைகை செய்தால், இரட்டை அர்த்தத்தில் எதாவது விரல்ல காட்டினே, நாக்க நீட்டினே, மூக்க காட்டினே என்று கொலைவெறியோட கொளுத்திடுவானுங்கடா!!

சிண்டு: சரி இதுக்கு மேல பேசினால் நம்ம டப்பா டான்ஸ் ஆடிடும்!! அப்பாலிக்கா அடுத்த வாரம் பார்க்கலாம்!! எஸ்கேப்!!

குறிப்பு: நாகை சிவா அண்ணே! கோபம் படாதிங்க! "பூனை மீது புலி பாய்வது முறையாகுமா?" இந்தவார வலைச்சரப்புலி நீங்க!! சின்னப்பயபுள்ள எதோ உங்க பேரை கொஞ்சம் யுஸ் பண்ணிக்கிறேன்!! மன்னிக்கவும்.

நன்றி: தமிழ்சினிமா.காம்

17 comments:

  1. ///விஜய்ங்ண்ணா!! உங்க படத்தில் இருக்கக்கூடிய யதார்த்தமான ஒரே விடயம் இதுதாங்கண்ணா! அதையும் தூக்கிட்டால் பிறகு இந்தியாவிலே கதை நடக்கிற மாதிரியே இருக்காதுங்கண்ணா!!///

    :))))

    ரீப்பீட்டேய்

    ReplyDelete
  2. rajini thanush photo nalla comedy

    :)

    ReplyDelete
  3. //விஜய்ங்ண்ணா!! உங்க படத்தில் இருக்கக்கூடிய யதார்த்தமான ஒரே விடயம் இதுதாங்கண்ணா! அதையும் தூக்கிட்டால் பிறகு இந்தியாவிலே கதை நடக்கிற மாதிரியே இருக்காதுங்கண்ணா!!//

    சூப்பருங்கண்ணாவ்... :)

    ReplyDelete
  4. ராம்,

    வருகைக்கு நன்றி!!

    ReplyDelete
  5. தனுஷ், ரஜினி பட வசனம் சூப்பர் ....;)

    ReplyDelete
  6. கோபி,

    வருகைக்கு நன்றி!!

    ReplyDelete
  7. //நாகை சிவா அண்ணே! கோபம் படாதிங்க!//

    கோவப்படுவதா? விளம்பரம் கொடுத்து இருக்கீங்க. சந்தோஷம் தான் படனும் :)

    அப்புறம் விஜய் பதில்

    அவரு டாக்டர் பட்டம் வாங்கும் போது இளைஞர்கள் வெளிநாட்டில் வேலைக்கு போகாமல் இங்கே வேலை பாக்கனும் என்று புத்திமதி சொன்னார். அதுக்கு என் கமெண்ட்

    புத்தி சொல்லுறாராம். அட போப்பா (கவுண்டர் ஸ்டைலில் படிக்கவும்)

    அப்படி புத்திமதி சொல்லுறவர்கிட்ட நாம் என்னத்தண்ணா சொல்லுறது. விடு கழுத னு போக வேண்டியது தான்.

    உங்க கமெண்ட் எல்லாம் சூப்பர். அதிலும் சொந்தமா பண்ணுறது இது ஒன்னு தான் அருமை. :)

    கூட ஒரு தகவல். புலி இன்று புறப்பட்டதே பதிவு போட்டது G3. ஆட்டோ, சுமோக்கள் அனுப்பவதாக இருந்தால் அவரை அனுகவும்.

    ReplyDelete
  8. //
    கோவப்படுவதா? விளம்பரம் கொடுத்து இருக்கீங்க. சந்தோஷம் தான் படனும் :)//

    என்னே ஒரு பெருந்தன்மை!!(உள்குத்தில்லை. உன்மைதான்)

    //அவரு டாக்டர் பட்டம் வாங்கும் போது இளைஞர்கள் வெளிநாட்டில் வேலைக்கு போகாமல் இங்கே வேலை பாக்கனும் என்று புத்திமதி சொன்னார். //

    அவரு போல படிக்காம டாக்டர் ஆன யாரும் வெளிநாடு போக தேவையில்லை.

    //புலி இன்று புறப்பட்டதே பதிவு போட்டது G3.//
    G3 எழுதினாலும், உங்க டைட்டில் சாங் தானே!!

    ReplyDelete
  9. நாட்டுல எவளவோ பிரச்சனை இருக்கு!!!,... விஜய் 'தம்' அடிக்கிறாரா,...இல்லையான்னு,..ஒரு பெரிய அலசல்,..தேவையே இல்லாதது!!

    ReplyDelete
  10. // கார்த்திக் said...

    நாட்டுல எவளவோ பிரச்சனை இருக்கு!!!,... விஜய் 'தம்' அடிக்கிறாரா,...இல்லையான்னு,..ஒரு பெரிய அலசல்,..தேவையே இல்லாதது!!//

    இதை நீங்க அன்புமணிக்கு சொன்னால்...

    பதில்: அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பொறந்து இருக்கார்!

    இதை எனக்கு சொல்லி இருந்தால்...

    பதில்: நான் நாட்டைப்பத்தி எழுதும் போது, கமெண்ட் போடாத நீங்க இதுக்கு தான் போட்டு இருக்கிங்க!! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  11. இந்த comment,..உங்களுக்கு தான்!!,.. அன்புமணி சொல்றது நியாயம்,...அதை விஜய் ஏத்துக்கிட்டதும், பாராட்டக்கூடியது!,..ஆனா அதை ஒரு பெரிய விசயமாக அலசியதை தான் சொன்னேன்!!,.. நீங்க நாட்டை பத்தி எழுதுனத நான் இன்னும் படிக்கல,..but எழுதுனதுக்காக என் வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  12. // கார்த்திக் said...

    இந்த comment,..உங்களுக்கு தான்!!,.. அன்புமணி சொல்றது நியாயம்,...அதை விஜய் ஏத்துக்கிட்டதும், பாராட்டக்கூடியது!,//

    நீங்க சொன்னது போல இரண்டும் நல்ல விஷயம் தான். ஆனால் அன்புமணியும், ராமதாசும் இன்னும் எத்தனை நாளைக்கு நடிகர்களை மட்டும் கேட்கபோறாங்க! அவங்க கட்சியில யாரிம் தம் அடிக்கலயா? அதைத்தான் கேட்டேன். இது அலசல் பதிவு இல்லை.

    //..ஆனா அதை ஒரு பெரிய விசயமாக அலசியதை தான் சொன்னேன்!!..!!///

    தலைவா! கோவிக்காதிங்க! இது சும்மா மொக்கைப்பதிவு தான், சீரியச் இல்லை. எல்லாம் ஒரு பதிவு விளம்பரம் தான்.

    //,.. நீங்க நாட்டை பத்தி எழுதுனத நான் இன்னும் படிக்கல,..but எழுதுனதுக்காக என் வாழ்த்துக்கள்//

    நன்றிங்க!! (ஊனமுற்றவர்கள் வேலைவாய்ப்பு பற்றி எழுதினேன், 2 கமெண்ட் தான்!)

    ReplyDelete
  13. நான் கோவிச்சுகல boss!!!,..என்னோட கருத்த சொன்னேன்.. 'ராமதாஸ் , அவரு தொண்டர்கள் கிட்ட இத சொன்னா,..பேப்பர்ல news வருமா?,.. இல்ல நாம இத பத்தி இவ்வளோ எழுதிருப்போமா?? .. நிங்க சொன்னது போல்,.. பதிவு விளம்பரத்துக்கும்,..கட்சி விளம்பரத்துக்கும், நிறையே பேர் ரஜினியையும்,..விஜய்யையும்,..Use பண்றாங்க!!!!

    ReplyDelete
  14. // கார்த்திக் said...

    நான் கோவிச்சுகல boss!!!,..என்னோட கருத்த சொன்னேன்.. 'ராமதாஸ் , அவரு தொண்டர்கள் கிட்ட இத சொன்னா,..பேப்பர்ல news வருமா?,.. இல்ல நாம இத பத்தி இவ்வளோ எழுதிருப்போமா?? .. நிங்க சொன்னது போல்,.. பதிவு விளம்பரத்துக்கும்,..கட்சி விளம்பரத்துக்கும், நிறையே பேர் ரஜினியையும்,..விஜய்யையும்,..Use பண்றாங்க!!!!//

    தோழரே,

    உண்மை தான்! எல்லாருக்கும் இதுல ஒரு விளம்பரம் தான்! சும்மா நையாண்டிக்கு எழுதுரது தானே! நான் கொஞ்சம் மிமிக்ரி செய்வேன். அதோட விளைவுதான் இது. நீங்க தான் சகிச்சிகணும். வருகைக்கும் ஆக்கப்பூர்வமான கருத்துக்கும் நன்றி!!

    ReplyDelete
  15. கண்டிப்பா சகிச்சிகிறேன் தோழரே!!,..தொடர்ந்து எழுத்துங்க!!,,..

    ReplyDelete
  16. திரைப் படங்கள் பார்த்து புகை பிடிப்பவர்கள் விழுக்காடு குறைவு தான். அமைச்சர் உண்மையிலேயே புகைப் பழக்கத்தை நிறுத்த வேண்டுமெனில் தயாரிப்பையே தடை செய்ய முயற்சிக்கலாமே

    மாமா மருமகன் காமெடி சூப்பர்

    ReplyDelete
  17. சீனா ஐயா,

    நீங்க சொல்லுரதும் வாஸ்தவம் தான். மிக்க நன்றி!!

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய