Pages

Wednesday, December 19, 2007

"பில்லா" நல்லா தானே இருக்கு!!

பில்லா கதை எல்லோருக்கும் தெரியும். நான் கூறத்தேவையில்லை. தமிழ்மணத்தில் சில பேர் சமீபத்திய பில்லா (2007) படம் சரியில்லை என்று குறிப்பிட்டிருந்தார்கள். அவர்கள் ஒன்று தமிழ்படத்தை தொடர்ந்து பார்க்காதவர்களாகவோஅல்லது ஹாலிவுட் படங்களோடு தமிழக படங்களை ஒப்பீடு செய்து ரத்தக்கண்ணீர் வடிப்பவர்களாகவோ இருக்கவேண்டும். நமக்குள்ள குறைந்த பட்ஜெட்டில் இப்படி எல்லாம் ஒரு படம் வருவது பாராட்ட வேண்டியதே!! பில்லா திரைப்படத்திற்கு கொஞ்சம் கதை, திரைக்கதை போன்றவற்றில் மெனகெட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மற்றபடி, தமிழ்த்திரை ரசிகர்களுக்கு இது நல்ல காலம் போல, மசாலா படம் கூட அருமையாகத் தான் எடுக்கப்படுகிறது.

இதுக்கு முதல் இப்படி ஒரு அஜித் படத்தை அவருடைய ரசிகமணி பார்த்திருக்கவே முடியாது. படத்தில் அஜித் அட்டகாசம் செய்கிறார். அப்படி ஒரு Majestic look. வசனத்தை மெறுகேற்ற இன்னும் கொஞ்சம் முயற்சித்து இருக்கலாம். தொழிற்நுட்பரீதியாக பில்லா மலையளவு உயர்ந்து நிற்கிறது. பாடல்களிலும், பின்னணியிலும் யுவன்சங்கர்ராஜா கலக்கி இருக்கிறார். பாடல்கள் நேர்த்தியாகவும் படமாக்கப்
பட்டிருக்கிறது. நமீதாவையும், நயந்தாராவையும் கவர்ச்சிக்குப் பதில் கொஞ்சம் நடிக்கவும் வைத்து இருக்கலாம் (இந்த அம்மணிகள் வர கோலத்தை சிலுக்கு பார்த்தால், அவருக்கே வெட்கம் வந்துடும்). அவர்கள் வரும் காட்சிகள் அனாவசியமாகவும் செயற்கையாகவும் உள்ளது போல தோன்றும் அளவிற்கு, கவர்ச்சி ஆடையில் வளையவந்து வெறுப்பேற்றுகிறார்கள். சங்கர் படத்தில் பாடலில் மட்டும் காணப்படும் ரிச்னெஸ் படம் முழுக்க அனுபவிக்க முடிகிறது.

படத்தோட பெரிய ப்ளஸ் பாயிண்டே அஜித் தான். சுருங்கச் சொன்னால் "Simple but powerful". (இனிமேலாவது அதிகமா சீன் போடாம நல்ல படமா நடிக்க வாழ்த்துக்கள்!!) பழைய பில்லா படத்தை எந்த இடத்திலும் ஞாபகம் படுத்தாமல் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. ரஜினியோட ஹிட் படத்தை கெடுத்துவிட்டார்கள் என்று யாரோ புலம்பிய ஞாபகம். அப்படி ஒன்றும் ஆகவில்லை. இந்த படத்தை ரஜினி நிச்சயமாக மனதார பாராட்டி இருப்பார். பில்லா (2007) படத்தில் ரஜினியைத் தேடாமல் படத்தை மட்டும் பாருங்கள். போழுதுபோக்கான நல்ல படம். தாராளமாக பார்க்கலாம்.

அடி செருப்பால! யோவ்! பில்லா படம் நல்லா தானே இருக்கு, எழவு சிவாஜி படத்தை நல்லா இருக்குணு எழுதுரானுங்க! இந்த படத்துக்கு அப்படி என்னய்யா குறைச்சல்!! யோவ் அஜித்து !!எழவுரொம்ப நாளை பிறகு இப்ப தான்ய்யா நீ ஒரு நல்ல படமா நடிச்சி இருக்கே! நல்லா இருய்யா!

23 comments:

  1. ரசிக்கும் படியான பதிவு. :-) வினுவின் Comment அருமை...

    ReplyDelete
  2. ரொம்ப நன்றிங்க !
    பில்லா படம் ரஜினி படம் ரீமேக் என்பதற்காக, பழைய பில்லா, ஒரு classic எனவும், இந்த பில்லா பார்க்க கூட லாயக்கு இல்லை என்பது போலவும் பதிவுகள் வந்தன.

    உங்களது பதிவு நல்ல ஆறுதல்.

    படத்தை காட்டமாக விமர்சனம் செய்யவேண்டும் என்ற ஒரே நோக்குடன் எழுதுபவர்களின் மத்தியில், கொஞ்சம் மனசாட்சியுடன் எழுதும் உங்களைப்போல் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்

    மிக்க நன்றி

    ReplyDelete
  3. அனானி, முரளி கண்ணன்,

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!

    ReplyDelete
  4. பழைய பில்லாவில் ஒரு சூப்பரான திருப்பம்! சுடும்போது சாகாத பில்லா, கூவத்தில் குதிச்ச பிறகு தான் செத்து போவார்.

    ReplyDelete
  5. OK பாத்திருவோம்.

    நல்லா எழுதியிருந்தீங்க!!

    ReplyDelete
  6. இந்தி டான் படம் கூட ரொம்ப நன்றாகவே வந்திருந்தது ஒரிஜினல் டானை விட. அஜீத் நன்றாகவே பண்ணி இருக்கனும். எதுக்கும் பார்த்துடே விமர்சனம் சொல்வோம்

    ReplyDelete
  7. ஹிந்தி டான் அதிக செலவு செய்யப்பட்ட படம், இந்த கம்பேரிசன் எல்லாம் தேவை இல்லை. ஆனால் எல்லாவற்றையும் விட அஜித் தான் படத்தோட பலம்.

    ReplyDelete
  8. இந்தி டான் சுமான் 30 கோடிகளுக்கும் மேலாக செலவு மட்டும் செய்து (நடிகர் சம்பளங்கள் இல்லாமல்) எடுக்கப்பட்ட படம். இந்தி படங்களின் சந்தையும் அதிகம். அங்கு இது போன்ற முயற்ச்சிக்கு மிகுந்த பொருள் செலவழிப்பு சகஜம். ஆனால், புது பில்லாவில், அவ்வளவு செலவு இல்லாமல் அந்த பிரம்மாண்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுவும் காட்சிகள் மிகைப்படுத்தப்படாமல்.

    உதாரணமாக, இரண்டாவது பாத்திரம் தப்பிச்செல்வது. இந்தி டானில் அதை, ஹெலிகாப்டர் அது இது என்று மிரட்டியிருப்பார்கள்.

    ஆனால் பில்லாவில், ஒரு வேனில் எடுத்தது கூட அதைவிட நன்றாக இருந்தது.

    ReplyDelete
  9. அனானி,
    எதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை!

    ReplyDelete
  10. ///(இனிமேலாவது அதிகமா சீன் போடாம நல்ல படமா நடிக்க வாழ்த்துக்கள்!!) ///

    சரிதான்... படம் நல்லாதான் இருக்கு...

    ReplyDelete
  11. தொழில் நுட்பத்தில் பழைய பில்லா இதன் அருகில் கூட வர முடியாது!

    2007 பில்லா நல்லாவேதான் இருக்கு!

    ரஜினி ரசிகனான எனக்கு இந்தப் படம் பிடித்திருந்தது.

    நல்ல 'நச்' விமரிசனம்.

    ReplyDelete
  12. //பில்லா திரைப்படத்திற்கு கொஞ்சம் கதை, திரைக்கதை போன்றவற்றில் மெனகெட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்//

    நான் படம் பார்க்கவில்லை. கேள்வி பட்டதிலிருந்து இதைதான் சொல்கிறார்கள்.

    நம்மூர் பட்ஜெட் என்று சொல்லியிருக்கிறீர்களே?

    14 கோடியில் தயாராகியிருக்கிறது படம். 26 கோடிக்கு சாய்மீராவுக்கு விற்றிருக்கிறார்கள். படம் பற்றி விமர்சனம் இருந்தாலும் இப்போதும் கலெக்ஷன் அள்ளீக்கொண்டிருக்கிறது. சென்னையில் திங்கட்கிழமை வரை டிக்கெட் புல்.

    ReplyDelete
  13. //பில்லா படம் ரஜினி படம் ரீமேக் என்பதற்காக, பழைய பில்லா, ஒரு classic எனவும், இந்த பில்லா பார்க்க கூட லாயக்கு இல்லை என்பது போலவும் பதிவுகள் வந்தன.//

    அதாங்க இப்போ தமிழ்மணத்துல லேட்டஸ்ட் ட்ரென்ட் ;)

    ReplyDelete
  14. நானும் ரசிச்சது அண்ணன் வினுசக்கரவர்த்தி(யாக) எழுதியதுதான்.
    :)

    ReplyDelete
  15. இன்னும் பார்க்கலை.நீ சொன்னா சரிதான் பாத்துடுவோம்.
    வினு கமெண்ட் க்ளாஸ்...குட்டி

    ReplyDelete
  16. சீனு ஐயா,

    //அதாங்க இப்போ தமிழ்மணத்துல லேட்டஸ்ட் ட்ரென்ட் ;)//

    சரியா சொன்னிங்க!!

    ReplyDelete
  17. கோவி.கண்ணன்,

    // நானும் ரசிச்சது அண்ணன் வினுசக்கரவர்த்தி(யாக) எழுதியதுதான்.
    :)//

    மிக்க நன்றி!

    ReplyDelete
  18. கண்மணி அக்கா,

    //இன்னும் பார்க்கலை.நீ சொன்னா சரிதான் பாத்துடுவோம்.
    வினு கமெண்ட் க்ளாஸ்...குட்டி//

    ரொம்ப நாள் கழிச்சி வந்து இருக்கிங்க! வாங்க!! கருத்துக்கு மிக்க நன்றி!!

    ReplyDelete
  19. sivajiyai vida billa nallathaan irukku.

    ReplyDelete
  20. வினு சகவர்த்தின்னா பிசாசுக்கு ரொம்ப இஷ்டம்போல !!

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய