Pages

Saturday, May 10, 2008

கமலின் தசாவதாரம், இளையராஜா மற்றும் கொஞ்சம் ஹாலிவுட்

கமலோட ரசிகனான எனக்கு எப்பவும் ஒரு பயம் உண்டு. மிகவும் ஆர்பாட்டமாக வந்த சமீபத்திய கமலுடைய படங்கள் அவ்வளவு சொல்லும்படியாக இருந்ததில்லை. உதாரணம் சொல்லவே தேவையில்லை. ஆளவந்தான், விருமாண்டி அந்த வகையைச் சேர்ந்ததுதான். அன்பேசிவம் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வந்து மனதில் நிலைத்துவிட்டது. எப்போதும் வித்தியாசமாக முயற்சி செய்யும் கமல், தற்போது தசாவதாரத்திலும் முயற்சி செய்துள்ளார் என்பது என் எண்ணம். அந்த முயற்சி எந்த அளவிற்கு சிறந்ததாக இருக்கும் என்பது படம் திரைக்கு வந்த பிறகே சொல்ல இயலும். ஏனென்றால் பெரியளவிலான விளம்பரத்தைப் பார்த்தால் அப்படித் தோன்றுகிறது. ஆளவந்தான் படத்தில் வந்ததுபோல இங்கொன்றும் அங்கொன்றுமாக பிரம்மாண்ட காட்சிகள் வந்துபோகுமோ என்று தோன்றுகிறது.

கமல் பத்து வேடத்தில் நடிப்பது, நம்ம இளையராஜாவோட திருவாசகம் சிம்போனி மாதிரி தான். யாரும் நம்மை கண்டுகொள்ளாவிட்டால், எதாவது செய்து ஒரு கவனயீர்ப்பு முயற்சி. இளையராஜா ஜீனியஸ் தான். ஆனால் திருவாசக சிம்போனி பொதுவாக யாரையும் கவரவில்லை என்றே நினைக்கிறேன். உதாரணத்திற்கு 60களில் வெளிவந்த The good, the bad, and the ugly படத்திற்கு Ectasy of gold என்றொரு BGM, Enniomorricone இசையமைப்பில் இருக்கும், Hollywood-ல் இன்றும் இப்படம் மைல்கல்லாக இருப்பது அதனுடைய இயக்கம் தவிர்த்து இசையும் ஒரு முக்கியமான காரணம். ஒரு western மசாலா படத்திற்கு போடப்பட்ட இசையின் தாக்கம் கூட திருவாசக சிம்போனியில் இல்லை என்பதே நான் சொல்ல வருவது.




தசாவதாரம் படத்தில் "உலகநாயகனே!" என்றொரு பாடல். உலகநாயகன், ஆஸ்கார்நாயகன், உலகஞானி என்றெல்லாம் புகழ்வது ஒருபக்கம் இருந்தாலும், ஆஸ்கார் விருது ஒன்றும் நம்ம ஊரு தேசியவிருது போல பாரபட்சம் பார்த்துகொடுப்பது போல தோன்றவில்லை. பிதாமகன் படத்திற்கு விக்ரமிற்கு தேசியவிருது கொடுப்பதற்கு முதல் 'கொய் மில் கயா' படத்தில் ஹிர்த்திக்ரோஷனுக்கு கொடுக்க இருந்தார்களாம். தேர்வுக்குழுவில் சிலருடைய கடுமையான முயற்சியால் தான் விக்ரமிற்கு விருது கிடைத்தது. தகுதியானவர்களுக்கே கொடுக்கப்படுவதாக நினைக்கிறேன். அப்படி life achievement award எதாவது கமலுக்கு கிடைக்குமா என்றால் அதுவும் சந்தேககேஸ் தான். கமல் அதற்குண்டான பாதையில் தான் பயணிக்கிறாரா என்பதே யோசிக்கவேண்டிய விஷயம். இதற்கு பதில் தசாவதாரம் வெளிவந்த உடனே தெரிந்துவிடும்.

Castaway படத்திற்கு Tom hanks ஆஸ்கார்விருதிற்காக வெறும் முன்மொழியப்பட்டார். Americanhistory X படத்திற்கு Edward norton-னும் முன்மொழியப்பட்டார். The machinist படத்திற்காக Christian bale-வுக்கு (Batman begins படத்தில் நடித்தவர்) அந்த பாக்கியமும் கிடைக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க, சிவாஜிக்கு தேசியவிருது கிடைக்கவில்லை! இளையராஜாவிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை! என்று சொல்லுவது வருத்ததில் சொல்லுவது. ஆனால் கமலுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை! என்பது அர்த்தமே இல்லாத ஒன்று.

14 comments:

  1. உங்களின் வாதமும் உதாரணமும் சரியேன்றே நினைக்கிறேன்

    ReplyDelete
  2. எனக்கு இன்று வரை புரியாதது அனைவரும் ஏன் ஆஸ்கார் விருதை உயர்த்தி கூறுகிறார்கள் என்று!! அந்த விருதும் நம் நாட்டில் கொடுக்கப்படும் தேசிய விருதை போன்றே அந்த நாட்டில் கொடுக்கப்படும் ஒரு விருது. இதை என்னவோ உலக விருதை போல் கொண்டாடுவது ஏன் என்று தெரியவில்லை? இதில் கமல் பெயர் ஒவ்வொரு முறையும் அடிபடுவது நினைத்தால் பாவமாக உள்ளது. என்னை பொறுத்தவரை சிவாஜி மற்றும் கமலின் நடிப்பை விட அவர்கள் சிறப்பாக ஒன்றும் நடித்து விட வில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. கமலின் அன்பே சிவம் மற்றும் மஹாநதி நடிப்பை யாரும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

    நம்மவர்கள் தேவை இல்லாமல் ஆஸ்காருக்கு முக்கியத்துவம் கொடுத்து நம்மை தாழ்த்தி கொள்கிறார்கள்.

    ReplyDelete
  3. //ஒரு western மசாலா படத்திற்கு போடப்பட்ட இசையின் தாக்கம் கூட திருவாசக சிம்போனியில் இல்லை என்பதே நான் சொல்ல வருவது.//

    உண்மைதான்:)

    ReplyDelete
  4. அதுசரி நண்பரே.. அதெப்படி பின்னூட்டப் பொட்டியை பதிவின் பக்கத்திலேயே கொண்டு வந்திருக்கிங்க?:!!!

    ReplyDelete
  5. பொடகுடியன், கிரி, ரசிகன்...

    வருகைக்கு நன்றி!!

    ReplyDelete
  6. ரசிகன்,

    தீபா அவர்கள் பக்கத்திற்கு சென்று பார்க்கவும்.
    http://thoduvanamnamullathil.blogspot.com/

    ReplyDelete
  7. //ஆஸ்கார் விருது ஒன்றும் நம்ம ஊரு தேசியவிருது போல பாரபட்சம் பார்த்துகொடுப்பது போல தோன்றவில்லை.// நல்லாச்சொல்லியிருக்கீங்க. ஆனா ஆஸ்கர் கிடைச்சா உலக அளவுல ஒரு ரெகக்னிஷன் கிடைக்கும். அது நம்ம தமிழ் சினிமாவுக்கு நல்லதுதானே

    ReplyDelete
  8. \\ஆனால் திருவாசக சிம்போனி பொதுவாக யாரையும் கவரவில்லை என்றே நினைக்கிறேன்.\\\

    ராஜாவின் முந்தைய படைப்பில் இருந்து பார்க்கும் போது திருவாசகம் நிறைய ரசிகனின் முழு எதிர்பார்ப்பை புர்த்தி செய்யவில்லை தான். ஆனால் எல்லோர் மனதிலும் உள்ள எதிர்பார்ப்புகளை யாராலும் புர்த்தி செய்ய இயலாத ஒன்று.

    \\ஒரு western மசாலா படத்திற்கு போடப்பட்ட இசையின் தாக்கம் கூட திருவாசக சிம்போனியில் இல்லை என்பதே நான் சொல்ல வருவது. \\

    ஒவ்வொரு படைப்புக்கும் ஒவ்வொரு தனிதன்மை இருக்கிறது என்பது என் கருத்து. இப்படி ஒப்பிட்டு பார்ப்பது சரியானது என்று எனக்கு படவில்லை.

    \\ஆனால் கமலுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை! என்பது அர்த்தமே இல்லாத ஒன்று. \\

    நன்றாக சொன்னிர்கள்...தசாவதாரத்தில் அந்த பாடலை கேட்டு எனக்கும் இப்படி தான் தோன்றியது...அதுவும் விஷயம் தெரிந்த வைரமுத்துவும், கமலும் கூட இந்த வரிகளை அனுமதித்திருப்பதை நினைக்கும் போது சிரிப்பு தான் வருகிறது.

    ReplyDelete
  9. \\மிகவும் ஆர்பாட்டமாக வந்த சமீபத்திய கமலுடைய படங்கள் \\
    100% சரி. ஆனால் தற்போது initial opening முக்கியமாக இருப்பதால் இது மாதிரி gimmicks செய்ய வேண்டிஉள்ளது. மேலும் இப்போதைய பதின்ம வயதினரில் கமல் ரசிகர்கள் மிக குறைவு. அவர்களை தியேட்டருக்கு இழுக்க இவை தேவை. ஆஸ்கர் பாடல் தீவிர ரசிகனான எனக்கே குமட்டியது

    ReplyDelete
  10. \\மிகவும் ஆர்பாட்டமாக வந்த சமீபத்திய கமலுடைய படங்கள் \\
    100% சரி. ஆனால் தற்போது initial opening முக்கியமாக இருப்பதால் இது மாதிரி gimmicks செய்ய வேண்டிஉள்ளது. மேலும் இப்போதைய பதின்ம வயதினரில் கமல் ரசிகர்கள் மிக குறைவு. அவர்களை தியேட்டருக்கு இழுக்க இவை தேவை. ஆஸ்கர் பாடல் தீவிர ரசிகனான எனக்கே குமட்டியது

    என் id யில் இருந்து போட்டால் publish ஆகவில்லை. எனவே அணாணி கமெண்ட்
    முரளிகண்ணன்

    ReplyDelete
  11. என்னை பொருத்தவரையில் "சிம்போனியில் திருவாசகம்" ஒரு அரிய படைப்பாகவே கருதுகிறேன்.
    அது போல் கமலின் ஹே ராமையும் குறிப்பிட வேண்டும்! ஹே ராம் அன்பே சிவத்தை விட தரம் உள்ள படம்.

    ReplyDelete
  12. //உலகநாயகனே//
    இதெல்லாம் தேவையா கமல்
    இப்படிக்கு

    ReplyDelete
  13. //உலகநாயகனே//
    இதெல்லாம் தேவையா கமல்
    இப்படிக்கு
    jaisankar jaganathan

    ReplyDelete
  14. ஆனால் கமலுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை! என்பது அர்த்தமே இல்லாத ஒன்று. \\ Exactly. First thing, his stories are not original, stolen from world movies, that itself is a big disqualification. Next Oscar is only for English movies. But there is a foreign language category, but story should be original!!

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய