Pages
▼
Friday, March 09, 2012
என் உயிர் தோழன்
எனது இந்தியா என்றொரு தொடரை எஸ். ராமகிருஷ்ணன் எழுதுவதாக கூறி, இணையத்தில் யாரோ ஒரு நண்பர் கட் & பேஸ்ட் செய்து இருந்தார். அதில் தாஜ்மகால் பற்றி கூறும் போது மும்தாஜ் பற்றி யாருக்கும் தெரிவதில்லை, அவருக்கு எத்தனை பிள்ளைகள் என்று யாருக்கும் தெரிவதில்லை, மும்தாஜ் ஏன் செத்தார் என்று யாருக்கும் தெரிவதில்லை என்று ரொம்ப அளந்துகொட்டி இருந்தார். சரி! ஜனங்க இதெல்லாம் தெரிஞ்சி என்ன செய்யப் போறாங்க. உலக இலக்கியத்தையும், உலக சினிமாவையும் பொளபொளனு பொளந்துகட்டுரவருக்கு எதுக்கு இந்த பிரசங்கம். ஐயா நீங்க படிச்சதெல்லாம் வெளியே கக்கினால், கோடம்பாக்கமும் ரஜினி, சங்கர் போன்றவர்களுக்கு அமுதமாக இருக்கலாம். எதோ மேட்டரை சொன்னொமா போனோமானு இல்லாம.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கொஞ்சநாள் முதல் என் உயிர் தொழன் படம் பார்த்தேன். அந்தப் படத்துல பாபுவோட நடிப்பு நல்லா இருக்கும். எனக்குத் தெரிந்து சினிமாவில் ஒரு கதாநாயகன் சென்னை தமிழை அவ்வளவு அழகாக, நேர்த்தியாக பேசுவது பாபுவாகத் தான் இருக்கும். அவ்வளவு பக்கவாக இருக்கும். இந்தப் படத்தை ஏன் யாரும் இன்னும் ரீமேக் செய்யவில்லை.
நாக்கைப் பயன்படுத்தாமல் வார்த்தைகளை சொல்லுரது சென்னைத்தமிழில் இருக்குனு படவா கோபி ஒரு காமெடி ப்ரொகிராம்ல சொன்னார். ஆமாம் என்று சொல்லுவதை அஃகாங் என்று சொல்லுவது. எல்லாம் தலைவிதி என்பதை உஃஙு என்பது.
நான் காலேஜ் படிக்கும் போது ஊட்டாட்டண்ட போயிட்டு வரேனு சொல்லுவேன். என்னோட நண்பன் இதை சொல்லி என்னை கிண்டல் செய்வான். வீட்டு + அண்டை தான் ஊட்டாண்ட என்று மாறிடுச்சினு சொல்லுவேன்.

மனதில் தோன்றியவை 9.3
நான் காவல்கோட்டம் நாவலைப் படிக்கவில்லை. அந்த நாவலின் சிறுபகுதியைத் தழுவி எடுக்கப்பட்ட அரவான் படத்தைப் பார்த்தேன். படம் பார்த்த பிறகு, சில கேள்விகள் பொதுவாக தோன்றுகிறது. படத்தில் கள்ளர் கூட்டம் இருக்கும் இடத்தைத் தவிர, பசுபதி & கோ சுற்றித் திரியும் மற்ற இடங்கள் வெகு பசுமையாக இருக்கின்றன. அவர்களால் அந்த இடத்தில் வாழ இயலாதா? படத்தின் துவக்கம் எதோ 18ம் நூற்றண்டின் மிஷன் இம்பாஸிபல் போல இருந்தது. தமிழ்நாட்டின் பாரம்பரிய முறையான (?) திருட்டை ரசித்து ரசித்து உருவாக்கியுள்ளார் இயக்குனர் வசந்தபாலன். அடடா என்ன ஒரு உழைப்பு, அர்பணிப்பு. கொள்ளை தவிர்த்து மற்றபடி டூயட் பாட்டுகள், சண்டை, பொண்டாட்டி புள்ள செண்டிமென்ட் என்று டி.ராஜேந்தர் பட ரேஞ்சிற்கு எல்லாம் இருக்கிறது. ஒன்னு கிளாசிகலா எடுத்திருக்கலாம், இல்லாட்டி கமர்சியலா எடுத்திருக்கனும், இரண்டுமே இல்லாம ரெண்டுங்கெட்டானாக இருக்கிறது திரைக்கதை. சரி! காமசூத்ராவும் வரலாற்றுப் படம் தானே! அரவானைவிட சொல்ல வந்த கருத்தைத் தெளிவாக சொன்ன படம் ஆச்சே ?
படத்தைத் தவிர்த்து சில புரிதல்கள் (கேள்விகளும் கூட. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ) சங்க இலக்கியத்தில் பாலை நிலத்தில் வாழ்ந்த மக்கள் களவுத் தொழில் செய்தார்கள் என உள்ளது. அவர்களும் , இக்கதையில் வரும் கள்ளர்குடியும் ஒன்றா? அப்படி இருப்பின் தென் தமிழகத்தில் மட்டும் கள்ளர் சாதி மக்கள் இருப்பது ஏன்? வடதமிழகத்தில் களவுத்தொழிலைக் கொண்ட சாதி ஏதும் இல்லாமல் இருப்பதேன்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மௌனகுரு படத்தை டிவிடியில் பார்த்தேன். தமிழில் சொல்லும்படியான நல்லதொரு திரில்லர்வகைப் படம். படத்தின் வேகத்திற்கு தடையாக பாடல்கள் வருவதில்லை. இணையத்தில் நிறையபேர் வில்லன் நடிப்பைப் புகழ்ந்தார்கள். எனக்கு அந்த பிரின்சிபலாக வரும் பெரியவருடைய நடிப்பு பிடித்திருந்தது. பெண்போலிஸ் கேரக்டருக்கு உமாரியாஸ் சரியான தேர்வு.
வித்தியாசமான கேமிரா ஆங்கிள்
வைக்கிறேன் பேர்வழினு சொல்லிட்டு தூக்குல தொங்குறவளை தலைகீழாக காட்டினது ,
அமீர் ஆடும் குத்தாட்டம் போன்ற யுத்தம்செய் படத்தின் அபத்தங்கள் இதில்
இல்லை. (மிஷ்கின் புதுமையாக கால்கள் மட்டுமே காண்பித்து கதையை விளக்குகிறார் என்று பலர் புல்லாரித்தார்கள். மனோன்மணியம் என்றொரு படம் , பியு. சின்னப்பா நடித்த படம். அதில் முதல் காட்சியே நடிகர்களின் கால்களைகே காட்டித்தான் நகர்த்தப்படும்) .
மணிரத்னம் அல்லது பாலா இயக்கியிருந்தால் முன்னணி நடிகர்கள் நடித்திருப்பார்கள் என இப்படத்தின் இயக்குனர் சாந்தகுமார் கூறியிருந்தார். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் மணிரத்னம் , பாலா, சங்கர், கவுதம் மேனன் இவர்கள் இயக்கியிருந்தால் இந்தக்கதை எப்பாடியெல்லாம் மாறி இருக்குமென்று.
% மணிரத்னம்
வில்லன்கள் நான்குபேரில் குறைந்தது ரெண்டுபேர் முஸ்லிம்களாக இருப்பார்கள். கதாநாயக நடிகர் நிச்சயமாக ஐயர்வாள்தான்.
% பாலா
கதாநாயகனுக்கு கண்கள் பூனைக்கண்களாக இருக்கும். நாயோட சாயல்ல இருப்பார். கிளைமேக்சில் வில்லனை கடிச்சித்தான் கொல்வார்.
% சங்கர்
பெரிய வில்லன்கள் வெள்ளையாக இருப்பார்கள். கதாநயாகனிடம் அடிவாங்கும் கீழ்மட்ட வில்லன்கள் கருப்பாக இருப்பார்கள். இடஒதுக்கீடு தேவையில்லை எல்லாருக்கும் சமமான வாய்ப்பு தரணும் என்று ஒரு நாலு இடத்துல வரணும். 60 வயது கிழவனை கதாநாயகனாகவும், 15 வயசுப்பயனை அந்த பிரின்சிபல் வேஷத்துலயும்மேக்கப்போட்டு கிராப்பிக்ஸ் செய்து நடிக்க வைக்கணும்.
% கவுதம் மேனன்
போலிஸுங்கதான் படத்தோட கதாநாயகர்கள். கருணாகரன் தான் இப்ப வில்லன். தூக்குரண்டா தூக்குரண்டா சொல்லிகிட்டு சுத்திக்கொண்டு திரிவார். படம் இங்க ஓடுதோ இல்லயோ, ஹிந்தியில் பிலாப் ஆகிடும்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&