Pages

Friday, March 09, 2012

என் உயிர் தோழன்

 எனது இந்தியா என்றொரு தொடரை எஸ். ராமகிருஷ்ணன் எழுதுவதாக கூறி, இணையத்தில் யாரோ ஒரு நண்பர் கட் & பேஸ்ட் செய்து இருந்தார். அதில் தாஜ்மகால் பற்றி கூறும் போது மும்தாஜ் பற்றி யாருக்கும் தெரிவதில்லை, அவருக்கு எத்தனை பிள்ளைகள் என்று யாருக்கும் தெரிவதில்லை, மும்தாஜ் ஏன் செத்தார் என்று யாருக்கும் தெரிவதில்லை என்று ரொம்ப அளந்துகொட்டி இருந்தார். சரி! ஜனங்க இதெல்லாம் தெரிஞ்சி என்ன செய்யப் போறாங்க. உலக இலக்கியத்தையும், உலக சினிமாவையும் பொளபொளனு பொளந்துகட்டுரவருக்கு எதுக்கு இந்த பிரசங்கம். ஐயா நீங்க படிச்சதெல்லாம் வெளியே கக்கினால், கோடம்பாக்கமும் ரஜினி, சங்கர் போன்றவர்களுக்கு அமுதமாக இருக்கலாம். எதோ மேட்டரை சொன்னொமா போனோமானு இல்லாம.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கொஞ்சநாள் முதல் என் உயிர் தொழன் படம் பார்த்தேன். அந்தப் படத்துல பாபுவோட நடிப்பு நல்லா இருக்கும். எனக்குத் தெரிந்து சினிமாவில் ஒரு கதாநாயகன் சென்னை தமிழை அவ்வளவு அழகாக, நேர்த்தியாக  பேசுவது பாபுவாகத் தான் இருக்கும். அவ்வளவு பக்கவாக இருக்கும். இந்தப் படத்தை ஏன் யாரும் இன்னும் ரீமேக்  செய்யவில்லை.

நாக்கைப் பயன்படுத்தாமல் வார்த்தைகளை சொல்லுரது சென்னைத்தமிழில் இருக்குனு படவா கோபி  ஒரு காமெடி ப்ரொகிராம்ல சொன்னார். ஆமாம் என்று சொல்லுவதை அஃகாங் என்று சொல்லுவது. எல்லாம் தலைவிதி  என்பதை உஃஙு என்பது.

நான் காலேஜ் படிக்கும் போது ஊட்டாட்டண்ட போயிட்டு வரேனு சொல்லுவேன். என்னோட நண்பன் இதை சொல்லி என்னை கிண்டல் செய்வான். வீட்டு + அண்டை  தான் ஊட்டாண்ட என்று மாறிடுச்சினு சொல்லுவேன்.

2 comments:

  1. \\எனக்குத் தெரிந்து சினிமாவில் ஒரு கதாநாயகன் சென்னை தமிழை அவ்வளவு அழகாக, நேர்த்தியாக பேசுவது பாபுவாகத் தான் இருக்கும். அவ்வளவு பக்கவாக இருக்கும். இந்தப் படத்தை ஏன் யாரும் இன்னும் ரீமேக் செய்யவில்லை.\\ சென்னைத் தமிழ் பெசுரதுக்கேல்லாம் ஒரு படத்தை ரெமேக் பண்ண ஆரம்பிச்சா நாடு தாங்காது ராசா........ படம் ஆஹா ஓஹோன்னு ஓடி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனா மட்டுமே ரெமேக் செய்யுறாங்க..........முதல் தடவையே அந்தப் படம் பயங்கரமா ஊத்திகிச்சு, இதில ரீமேக்குக்கு எங்க போறது?

    ReplyDelete
    Replies
    1. //முதல் தடவையே அந்தப் படம் பயங்கரமா ஊத்திகிச்சு//
      ஒருவேளை பாரதிராஜா எடுத்ததால ஊத்திகிட்டு இருக்கும். அவருக்கும் மெட்ராசுக்கும் என்ன சம்பந்தம். அவருக்கு தேனி, மதுரை தான் சரிபட்டு வரும்.

      Delete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய