Pages

Friday, August 17, 2012

நரிக்கதையும் நம்ம பிரபலங்களும்

நரி மற்றும் திராட்சைக் கதை நம்ம எல்லாருக்கும் தெரியும். இதையே நம்ம பிரபலங்கள் சொல்லி இருந்தால் எப்படி இருக்கும். சும்மா!! உங்க கற்பனைக் குதிரைய தட்டிவிடுங்க!!


உலகநாயகன் கமல்ஹாசன்:
இன்று உங்களுக்கு சரித்திரத்தின் மடியில் சாகா வரம் பெற்ற ஒரு கதையைக் கூறப்போகிறேன். இது ஒரு நரிக்கதையும் கூட. 10-ம் நூற்றாண்டு. உலகத்தில் இஸ்லாத்துடன் திராட்சையும் அதிகம் விளைந்த காலம். கானகத்தின் வழியே சென்ற ஒரு நரிக்கு அங்கு கனிதிருக்கும் திராட்சைகள் ரொம்பவும் பிடித்துப் போனது. பல கோப்பை ரசம் பருகிய மதம் அதன் மனதினுள் ஏற்பட்டது. பகுத்தறிவுப் பரிணாம வளர்ச்சியடையாத நரியின் செய்கைகளும், முயற்சிகளும் திராட்சையைப் பெற்றுத் தருவதாயில்லை. எட்டியும் திராட்சை கிடைக்காமல் போனது இயற்கையின் சூழ்ச்சியும் அல்ல, கடவுளைத் துதித்தும் கிடைக்காமல் போனது நரியின் வீழ்ச்சியும் அல்ல. இது வெறும் மனித பரிமாணத்தை எட்டாத நரியின் கையறு நிலை. வாழ்க பாரதம்!! (திருவிளையாடல் தருமி: பேசும்போது அழுத்தம் திருத்தமா பேசு! படம் எடுக்கும் போது கோட்டை விட்டுடு!!!)

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்:
இப்ப ஒரு குட்டிகதை சொல்ல போரேன். ஒரு ஊர்லெ ஒரு நரி இருந்துச்சாம். அது ரொம்ப பசியில காட்டுவழியா போறப்ப, திராட்சை பலங்கலெ பார்த்துச்சு. அதெ எப்படியாவது சாப்பிடனும்னு ரொம்ப ட்ரை பண்ணுச்சு. முடியல. எவ்வளவு ட்ரை பண்ணியும் முடியல. கடசியா முயற்சி பண்ணிச்சி அப்பவும் கிடக்கல. பிறகு திராட்சைன்னாலே வெறுத்துப் போச்சி. சுத்தமா பிடிக்கல. இத நான் ஏன் சொல்லுரென்னா, "அதிகமா ஆசைபடுர நரியும், அதிகமான உயரத்தில இருக்கிற திராட்சையும் உருப்பட்டதா சரித்திரமே கிடையாது". 'கிடைக்கிரது கிடைக்கம இருக்காது; கிடைக்காதது எப்பவும் கிடைக்காது'.

கலைஞர் மு.கருணாநிதி:
உடன்பிறப்புக்குக் கடிதம். உடன்பிறப்பே கேளாய்! உலகத்தின் துயர் துடைக்க 'உளியின் ஓசை' படைத்த எனது கரங்கள், இன்று 'நரியின் ஆசை' என்றொரு மகத்தான காவியம் எழுதிவிட்டது. இக்கதையில் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் விபீடண நரியொன்று கானகத்தில் திராட்சைகளைக் கண்டு களிப்புற்றது. களிப்பின் விளிம்பில் நின்ற கபட நரியின் கோரப்பற்களுக்கு கிட்டாத திராட்சை ஒரு சீதை. தமிழினிமை கொண்ட திராட்சையை எட்டி எடுக்க முயன்ற தோற்றுப்போன நரி ஒரு குடிகார இராமன்.

வெண்ணிறாடை மூர்த்தி:
ப்ப்ப்ர்ர்ர்ர்! ப்பாப்பா! கதைய கேளு! காட்டுப் பக்கமா ஒரு கட்டுமஸ்தான நரி கமுக்கமா வந்துதான். அங்க கொலகொலயா தொங்குன திராட்சைய பார்த்து, நரியோட கால்கட்டைவிரல்ல இருந்து கபாலம் வரை கபால்னு வேர்த்துப்போச்சி. குபீர்னு கெளம்புன குஷியில குதூகலமான் நரி திராட்சைய லபக்குனு லாவனும்னு மனிஷா கணக்கா மடார்மடார்னு குதிச்சிதான். பல தடவை குதிச்சும் பழம் கிடைக்காத நரி, குப்புற விழுந்ததுல, பலான இடத்துல அடிபட்டு ப்பரபேன்னு கெளம்பிச்சாம்.

கேப்டன் விஜயகாந்த்:
ஏய்! நான் இப்ப சொல்லப்போற கதை, நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொரு தமிலனும் தெரிஞ்சிக்க வேண்டியது. ஒரு பாக்கிஸ்தான் நரி, காஸ்மீர்ல இருக்கிர திராட்சைக்கு ஆசைப்பட்டு திருட்டுதனமா வந்தது. எவ்வளவு எட்டியும் திராட்சை கிடைக்கம போக, இன்னைக்கு தீவிரவாதியா மாறிடிச்சி. (ஒரு வேளை உங்கள போல சுவத்துலயோ,மரத்துலயோ காலை வச்சி எட்டி இருந்தா நரிக்கு திராட்சை கிடைச்சி இருக்கும்னு நினைக்கிறேன்!!!) இப்படி இந்த வருசத்துல பார்டர கிராஸ் பண்ண நரிங்க 305, திருடப்பட்ட திராட்சைங்க 2077. இதுல தீவிரவாதியா மாறிப்போன நரிங்க 201. இத உடனடியா நிறுத்தனும்னா எமர்ஜன்சி கொண்டுவரனும். இந்த நிலமய மாத்த ஒவ்வொரு தமிலனும் முன்னுக்கு வரனும்.

மேஜர் சுந்தரராஜன்:
ஹா..ஹா...For past 25 years, கடந்த 25 வருஷமா இந்தக் கதைய யார்கிட்டயாவது சொல்லனும்னு துடிச்சிட்டு இருக்கேன். A Fox, ஒரு நரி காட்டுவழியா போறச்சே, grapes அதாவது திராட்சைய பார்த்துச்சாம். எவ்வளவு try பண்ணியும், sorry! அந்த திராட்சை நரியோட கைக்கு கிடைக்கல. இதுக்குக் காரணம், அந்த நரி ரொம்ப short...I mean ரொம்ப குட்டை.

7 comments:

  1. இதுவே மணிரத்னம் சொன்னால் ?
    காடு,
    காக்கா ,
    வடை ,
    நரி
    இத்துடன் கதை சரி

    ReplyDelete
  2. தெரிந்து கொண்டேன்

    ReplyDelete
  3. குட்டிப்பிசாசு,

    நிறைய பிரபலங்களை நல்லா கவனிச்சு இருக்கீங்க போல, லோகநாயகர் கதை தான் செம :-))

    பாரதிராஜா கதை சொல்லுவதாகவும் முயற்சித்து இருக்கலாம்.

    ReplyDelete
  4. ஆமா! பிறகு செய்கிறேன்!

    ReplyDelete
  5. ரூம் போட்டு யோசிப்பீங்களோ!! அவங்கவங்க வாசல இமேஜின் பண்ணிப் பார்த்தா ஓஹோன்னு இருக்கு......!! மேஜர் வாய்ஸ்ல ஒரு திருத்தம், அதாவது...... வார்த்தை எடுத்திடனும், பதிலா I mean போடணும்..!!

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய