Pages

Friday, October 12, 2012

FREAK SHOW



Freaks திரைப்படம் 1932ல் எம்.ஜி.எம் தயாரிப்பில் வெளிவந்தது. இப்படத்தின் இயக்குனர் டோட் ப்ரவ்னிங் (Tod Browning). படம் முழுக்க முக்கியமான கதாபாத்திரங்கள் யாவும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் குன்றியவர்களைக் கொண்டே உருவாக்கப்பட்டன. சர்க்கஸில் வேலைசெய்யும் Freakகளை சுற்றி நடக்கும் திரைக்கதை. Freaks படம் எக்ஸ்ப்ளாய்டேஷன் (Exploitation) வகைப்படமாக இருந்தாலும், படத்தில் அழகானவர்கள் வில்லன்களாகவும், ஊனமுற்றவர்கள் கதை நாயகர்களாகவும் நல்லவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். கதையின் நாயகன் ஒரு குள்ளன், பெயர் ஹன்ஸ். அவனை கிளிபட்ரா என்பவள் சொத்திற்காக திருமணம் செய்து கொள்கிறாள். ஆனால் அதே சர்க்கஸில் இருக்கும் ஹெர்குலிஸை காதலிக்கிறாள். கிளியோபட்ரா கொடுத்த விஷத்தால் ஹன்ஸ் நோய்வாய்ப்படுகிறான். கிளியோபட்ராவின் காதல் தொடர்பை நண்பர்கள் மூலம் தெரிந்தும் தெரியாவன் போல இருக்கிறான் ஹன்ஸ். முடிவில் ஹன்ஸுக்கு ஏற்பட்ட நிலைமைக்காக, அவனுடைய நண்பர்கள் கிளியோபட்ராவையும் ஹெர்குலிஸையும் பழிவாங்குகிறார்கள்.



படத்தின் சோதனையோட்டத்தைப் பார்த்தபின் பல காட்சிகள் வெட்டப்பட்டன. பார்த்தவர்கள் முகம் சுளித்தார்கள். இயக்குனர் டோட்டுக்கு பிறகு வாய்ப்புகள் சரியாக கிடைக்கவில்லை. இப்படம் UKயில் 30 ஆண்டுகள் தடைசெய்யப்பட்டது. தற்போது Freaks உலகின் சிறந்த படங்களுள் ஒன்றாக கருதப்பட்டாலும், வெளிவந்த காலத்தில் விமர்சகர்களால் பெரிதும் புறகணிக்கப்பட்டது. பல ஆண்டுகழித்து 70, 80களில் இப்படத்திற்கான அங்கீகாரம் கிடைக்கத் துவங்கிவிட்டது. தற்போது இப்படத்திற்கென்றே பெரும் ரசிகர்கூட்டம் உள்ளது.



நான் கடவுள் திரைப்படம் வந்தபோது, அதில் வந்த மாற்றுத்திறனாளிகளின் நடிப்பை பலர் புகழ்ந்து பேசினாலும், திரைப்படத்தை சிலரே புகழ்ந்து பேசினர், பலர் அருவருப்படைந்தார்கள். நான் கடவுள் படத்தில் வலிய திணிக்கப்பட்ட சில பாத்திரங்கள். காட்சிகள் தனிதனியாக தொங்கிறதே தவிர முடிவில் ஒரு முழுமையில்லை. இளையராஜாவின் பின்னணி இசை அற்புதமாக இருந்தது. தாண்டவனைக் காட்டும் போது வரும் உடுக்கை ஒலியும், ருத்ரனையும் காண்பிக்கும்போது ஒலிக்கும் வீணையும் ஒருவித சொல்லொண்ணா உணர்வை ஏற்படுத்தக் கூடியவை. காதல் கத்திரிக்காய் இல்லாத படம் அதற்காக வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் மெச்சிக்கலாம்.
 
Freak show என்பது உடல்ஊனமுற்ற, வித்யாசமான உடலமைப்பு கொண்டவர்களை ஊர்ஊராக கொண்டுசென்று காட்டி பணம் வசூலிப்பது. ஒரு காலத்தில் இக்காட்சிகள் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பிரபலமாக இருந்தது. பிறகு சர்க்கஸ் போன்றவற்றிலும் இத்தகைய வேடிக்கைகள் நடைபெற்றன. 

ஜார்ஜ் கர்லின் அமெரிக்கா பற்றி குறிப்பிடும் போது அடிக்கடி கூறும் வாக்கியம்.
When you're born, you get a ticket to the freak show. When you're born in America, you get a front-row seat.
எதையாவது செய்து பிரபலமாகத் துடிப்பவர்களை Freak எனக் குறிப்பிடுகிறார். இவர்களைப் பார்த்து நாம் ஆவேசமோ, கோபமோ படக்கூடாது. மாறாக அவர்களின் செய்கைகளை, அசுவாசமாக ரசிக்க வேண்டும் என்பார். அது தான் freak show. 

பதிவுலகில் கூட கர்லின் குறிப்பிட்ட freak showகள் உண்டு. இத்தகைய freak showவின் நடுவே நாம் விவாதமோ கருத்துகளோ சொல்லக்கூடாது. நாமும் அதை சுவாரசியமாக ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு பதிவர் ‘பதிவுலகின் freakஎனப் பதிவிடுவதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் “சென்று நீங்க சொன்ன freak யார்?” என்று கேட்டால், உடனே அவர் “நான் தான் அந்த freak” என்பார். நீங்களும் மண்டையை சொறிந்துகொண்டு வருவீர்கள். ஆதலால் freak show பார்த்தால் ரசிக்கணும் கேள்வி கேட்டக் கூடாது. கேட்டால் பின்னவீநத்துவ நான்லீனியர் வசவுகள் தான் கிடைக்கும். 

3 comments:

  1. பிசாசு அந்த இங்கிலீஸ் படம் பார்க்க நல்லாயிருக்கா? அந்தப் படத்தை ஏத்துக்க படம் எடுத்தவன் கொள்ளு பேரன் காலமாயிடுச்சு....!! தமாஷாகீதுபா......

    ReplyDelete
    Replies
    1. ஒரு வித்யாசமான படம். அவ்வளவு பேரயும் பேசவச்சி நடிக்கவச்ச டைரக்டரையும் கொஞ்சம் ஞாபகம் வச்சிகணும் இல்லையா?

      Delete
  2. thamiyil elutha mudiyavillai sorry. neenga sollurathu sari thaan. thamizmanaththil niraiya nattu kazanda keesukal irukku.

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய