Pages

Friday, April 12, 2013

பதினாறு வயசு வந்த மயிலே

சில்க் ஸ்மிதாவை பிடிக்காத தமிழ் திரைப்பட ரசிகர்களே இருக்க முடியாது. அப்படி ஒரு அழகியல் எளிமை. ஆடி ரசிகர்களை மகிழ்வித்தாலும், சினிமாவுலகில் அனாதையாக விடப்பட்டு கஷ்டத்தை மட்டுமே அனுபவித்த ஜீவன். அவரைப் போற்றிப் புகழ்ந்து திருவாளர் கங்கையமரன் தன்னுடைய  "செண்பகமே!செண்பகமே! படத்தில் இசைஞானியின் இசையில் ஒரு பாட்டு வைத்திருக்கிறார். இப்பாடல் ராமராஜன், செந்தில், எஸ்.எஸ். சந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி என சும்மா களைகட்டும். சரக்குடன் ப்ரேக் டான்ஸ் வேறு.
 #பதினாறு வயசு வந்த மயிலே மயிலே எங்களை பாடபடுத்தடி மயிலே மயிலே
……#அடக்கி வச்சா சொன்னபடிதான் கேக்க மறுக்குது; அதுக்கு மட்டும் நாளுகிழமை பாக்க மறுக்குது.
…எல்லாம் கங்கையமரனின் வரிகள்.

…சரி பின்னாடி யார் ஆடுவது என்று பார்த்தால், சட்டான்பிள்ளை வெங்கட்ராமனும் (தாடி வைத்திருப்பவர்)  பக்கிரிசாமியும் (சிவப்பு சட்டை,இடுப்பில் துண்டு அணிந்திருப்பவர்). இவர்கள் இருவரும் பழைய தமிழ்த் திரைப்பட மற்றும் நாடக நடிகர்கள். கங்கையமரன் இயக்கிய சில படங்களிலும் நடித்துள்ளார்கள். 60களின் நகைச்சுவை நடிகர்கள். அதிர்ஷ்டம் இருந்திருந்தால் பலரும் நினைவுகூறக்கூடிய அளவிற்கு சிறந்த நடிகர்களாக வந்திருப்பார்கள். இவர்களில் சட்டான்பிள்ளை வெங்கட்ராமன் தூக்குத்தூக்கி படத்தில் சிவாஜிகணேசனுடன் நடித்திருக்கிறார். இப்படத்தில் தான் இவருடன் சட்டான்பிள்ளை என்ற அடைமொழி ஒட்டிக்கொண்டது. (குருகுலம், திண்ணைப்பள்ளி இருந்த காலங்களில் வகுப்பின் தலைமைமாணவனாக விளங்குபவரை சட்டான்பிள்ளை என்பார்கள். அதாவது Class leader.) "குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்" பாடலில் சிவாஜிகணேசனுடன் நடிப்பது இவர்தான். சட்டான்பிள்ளை வெங்கட்ராமனும் பக்கிரிசாமியும் இணைந்து நடித்த இன்னொரு பிரபலமான படம் "அடுத்தவீட்டுப் பெண்". இப்படத்தில் டி.ஆர்.ராமசந்திரனுடைய தோழர்களில் ஒருவராக வருவார். பக்கிரிசாமி அங்சலிதேவியின் பாடுவாத்தியார்."கண்களும் கவிபாடுதே" பாடலில் அருமோனியத்துடன் அட்டகாசம் செய்வார். இவருக்கு திருச்சி லோகநாதன் பின்னணி பாடியிருப்பார். டி.ஆர்.ராமசந்திரனுக்கு சீர்காழி கோவிந்தராஜன். இதுபோன்ற ஒரு நுட்பமான போட்டிப்பாடல் மிகவும் அரிது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

4 comments:

  1. குட்டிப்பிசாசு,

    என்ன ஒரே மலரும் நினைவுகளா ஓடுது :-))

    16 வயது வந்து மயிலே மயிலே பாட்டுக்கேட்டிருக்கேன் , இப்போ தான் காட்சியா பார்க்கிறேன்.

    அப்போ நிறைய கிராமராஜன் படங்களில் பாடல்கள் பட்டைய கிளப்பி இருக்கும், கிராமத்து மோகன் ,ராமராஜன் :-))

    ---------

    அடுத்த வீட்டுப்பெண் படமும் நல்லா இருக்கும், இதில தான் "கண்ணாலே பேசிப்பேசிக்கொல்லாத காதல் தெய்வீக ராணி ..." என்ற பாட்டும் இருக்கு.

    நான் பாட்டெல்லாம் ஆடியோவா கேட்கவே விரும்புவேன். பெரும்பாலான பழைய பாட்டுக்கள் ஆடியோவா இருக்கு.

    ஒரு காலத்தில் யாஹூ சாட்டில் பாட்டா போட்டு கொலையா கொல்வோம், நெரைய பேரு லைவ் ஆ சாட்டில் பாடவும் செய்வாங்க,கரோகே மியூசிக் எல்லாம் உண்டு. நேயர் விருப்பம் போல பாட்டுக்கேட்டுக்கிட்டே இருப்பாங்க,கச்சேரி பாட்டுக்கு ஓடும்.

    ReplyDelete
    Replies
    1. வவ்வால்,

      …எனக்கும் கிராமராஜன் படப்பாடல்கள் விருப்பம்.

      …அடுத்தவீட்டுப்பென் படத்தில் எல்லாப்பாடல்களுமே நன்றாக இருக்கும். கேட்டுப்பாருங்க. "மாலையில் மலர்ச்சோலயில்" என்று பி.பி.சீனிவாஸ் பாடிய பாடலும் அருமையானது.

      Delete
  2. வணக்கம்... அருமையான பாடல்கள்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_4319.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தனபாலன்,

      …தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      Delete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய