Pages

Saturday, May 12, 2007

திருனங்கைகள்...

எனக்கும் திருநங்கைகள் பற்றி முதலில் ஓர் அவநம்பிக்கை இருந்தது. அது என்னுடைய நண்பர்கள் கூறுவதாலும், நான் தொடர்வண்டியில் சந்தித்த சில திருநங்கைகளாலும் ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் ஒருமுறை நான் தொடர்வண்டியில் பயணிக்கும்போது ஒரு ந்பர் என் அருகில் வந்து அமர்ந்தார். நான் நிமிர்ந்து பார்த்தேன். அவர் ஒரு திருநங்கை. பொதுவாக திருந்ங்கைகள் வருகை கைத்தடல்களோடு இருக்கும். அவர் என்னை பார்த்து கொஞ்சம் பணம் கேட்டார். நான் இல்லை என்று கூறினேன். அதற்கு அவர் “அப்படி எல்லாம் கூறாதே! நாங்கள் ஊனமுற்றவர்கள்! உதவி செய்யுங்கள்” என்றார். பிறகு நான் என்னால் முடிந்தவற்றை கொடுத்து உதவினேன். அந்த சம்பவத்திற்கு பிறகு, திருநங்கைகள் பற்றிய என்னுடைய மாயை விலகியது.

பின்னொரு சந்தர்ப்பம், ‘நவரசா’ என்ற படத்தைப்பார்க்க நேர்ந்தது. அப்படத்தில் ஒரு திருநங்கை “கூண், குருடு, செவிடு, பேடு” என்று அவ்வையார் கூறிய வார்த்தையை நினைவு படுத்துவார். “பேடு என்பது ஒரு உடல் ஊனமே தவிர, கேளி மற்றும் அறுவருப்புக்கும் உரிய நிலை அல்ல” என்றும் கூறுவார். “இந்தியாவின் பல்வேறு மூலைகளில் திருநங்கைகள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். ஏன் இந்த இழிசெயல்? அவர்களை காக்க வேண்டிய சமூகம், ஏன் அவர்களை அந்நியப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் அவமானப்படுத்துகிறது?” என்ற கேள்வியுடன் அந்த படத்தை பார்த்து முடித்தேன். நம்மக்களும் அரசும் உணராதவரை இந்த கொடூரம் தொடரும். அவர்கள் நம்மிடம் கேட்கும் ஒரே வேண்டுகோள் "அந்நியப்படுத்ததே!!"...

வாழ் வாழவிடு...

15 comments:

  1. திருநங்கைகள் குறித்த தங்களின் புரிதலுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!

    ReplyDelete
  2. தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.

    ReplyDelete
  3. நம்முடைய திரைப்படங்களில் அவர்களை தொடர்ந்து தவறாக சித்தரிப்பதால் இது அடுத்த தலைமுறை வரை பாதிக்கும். கமலின் வேட்டையாடு விளையாடு கூட இந்த தவறை செய்துள்ளது

    ReplyDelete
  4. avargal oonamutravargal yendru kooruvathu thappu...orvan uyaramaga irunthal athai oonam yendru solvoma, oruvar heart attack yendral oonamutravargal yendru solvoma...athey pol avargalai pirithu parka vendam..avargal third gender yendru kooruvathu sala poruthamaga irukkum yendru ninaikiren..

    ReplyDelete
  5. எனக்கும் ஆரம்பத்தில் உங்களை போல் நெருடல்கள் இருந்தன காரணம் சமூகம் தான். எப்படி பார்த்து வளர்கிறோமோ அப்படியே ஈரமண்ணில் பதிந்து விடுகிறது. தெளிவடையும் வயதில் புரிதல் வந்தது இவர்கள் குறித்து. மற்றவர்களும் புரிந்துக் கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

    ReplyDelete
  6. // vathilai murali said...

    நம்முடைய திரைப்படங்களில் அவர்களை தொடர்ந்து தவறாக சித்தரிப்பதால் இது அடுத்த தலைமுறை வரை பாதிக்கும். கமலின் வேட்டையாடு விளையாடு கூட இந்த தவறை செய்துள்ளது //

    உண்மை தான் முரளி. வருகௌக்கு நன்றி!!

    ReplyDelete
  7. //ஜெஸிலா said...

    எனக்கும் ஆரம்பத்தில் உங்களை போல் நெருடல்கள் இருந்தன காரணம் சமூகம் தான். எப்படி பார்த்து வளர்கிறோமோ அப்படியே ஈரமண்ணில் பதிந்து விடுகிறது. தெளிவடையும் வயதில் புரிதல் வந்தது இவர்கள் குறித்து. மற்றவர்களும் புரிந்துக் கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ///

    நல்ல புரிதல். வருகைக்கு நன்றி!!

    ReplyDelete
  8. //athey pol avargalai pirithu parka vendam.//

    நான் அப்படி கூறவில்லை. ஊனமுற்றவரை நாம் ஒன்றும் பிரித்துப்பார்ப்பதில்லையே. மேலும் சில உதவிகள் செய்யத்தானே செய்கிறோம்.

    ReplyDelete
  9. உண்மைதான் குட்டிப்பிசாசு. கூன் குருடு செவிடு மாதிரி ஒன்னுதான் பேடு. ஆனா அதை நம்மாளுங்க பிடிச்சுக்கிட்டு தொங்குறதிருக்கே. ஐயோ! தாங்க முடியலை. திருநங்கைகளுக்கும் சமத்துவமாக வாழ வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளி குறையும்.

    ReplyDelete
  10. @ராகவன்,
    வருகைக்கு நன்றி!!

    ReplyDelete
  11. //நான் அப்படி கூறவில்லை. ஊனமுற்றவரை நாம் ஒன்றும் பிரித்துப்பார்ப்பதில்லையே. மேலும் சில உதவிகள் செய்யத்தானே செய்கிறோம்//

    avargal kooda athai virumbuvathillai...athavathu..suayamaga sontha kaliley nirpavargal virumbuvathillai..athai..pilaipuku karanamaga kolbavargal athai yethirparkiragal...(thirnangaigal anaivarumey valvirku atai seivathilai...)

    ReplyDelete
  12. //avargal kooda athai virumbuvathillai...athavathu..suayamaga sontha kaliley nirpavargal virumbuvathillai..athai..pilaipuku karanamaga kolbavargal athai yethirparkiragal...(thirnangaigal anaivarumey valvirku atai seivathilai...)//

    உண்மை தான்!! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  13. in fact once I was coming from Mumabi to Bangalore..and I was in Sleeper Coach..all of a sudden a bunch of them boarded and started teasing me..i got scared and went to A/C coach and converted my ticket..after I started reading blogs especially living smile my thoughts towards them has now changed...Now if I see anyone, I treat them like how i treat others....Aruvaruppo kolvathillai..To me this is one good change that has happened after I have frequented blogs.....
    in India, they dont have proper rights or place in the public life or even application forms...

    I heard in Malaysia they dont have any problems in getting ID cards..they are given on the basis of their original gender...somecan write abt that...in that case it makes it easy... any thoughts on that...

    ReplyDelete
  14. //in India, they dont have proper rights or place in the public life or even application forms...//

    நல்ல புரிதல். உண்மை.

    நாம் மூன்றாம் பாலினத்தை சமுதாயத்தில் ஏற்க்க வேண்டும்.

    ReplyDelete
  15. இரண்டாவது பதிவு சமூக அக்கறையுடன் கூடியதாக இருக்கிறது. திருநங்கைகள் பற்றிய புரிந்துணர்வு மக்களிடையே இன்னும் பரவலாக இல்லை. கேலிக்குரியவர்களாகத்தான் அவர்களை இன்னும் பார்க்கிறோம். என்ன செய்வது.

    லிவிங் ஸ்மைலின் இடுகைக்குச் சென்று பார்க்கலாமே அருண்

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய