Pages

Sunday, May 13, 2007

தமிழன் அசுரனா?


மதச்சாக்கடையில் அடைகாக்கப்படும்
புராணபுளுகுகள் எரியும்வரை

சாதிபுகட்டும் சாத்தானின்
அமிலக்கொங்கைகள் அருபடும்வரை

அறிவியல் அன்னை
தமிழ்மொழியை தத்தெடுக்கும்வரை

வெற்றிக்கு வித்திடும்
மானமும் ஞானமும் பெறும்வரை

வரலாற்று பிணங்கள்
அறுவைக்கு உட்படும்வரை

தந்திரமும் மடமந்திரமும்
தன்னுளிருந்து உமிழும்வரை

தமிழன் அசுரன் தான்!

3 comments:

  1. எழுது ராசா நல்லா எழுது.படிக்கறதையும்
    உட்டுடாதே.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஆமாம்
    ஆமாம்.

    -
    ஞாயிறு அசுரன்

    ReplyDelete
  3. ஞாயிறு,
    தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய