Pages

Sunday, May 20, 2007

தலைப்புச் செய்திகள்... !


விஞ்ஞான வளர்ச்சி

நஞ்சாகும் பிஞ்சுவிரல்கள்

ஆயிரம்கோடியில் அணுசோதனை

அன்னமின்றி திண்ணைவாசிகள்

மாற்றானுக்குச் சலுகைகள்

மைந்தனுக்குச் சிலுவைகள்

இயற்கையின் இறுதிநாள்

செயற்கைக்கோள் சாகசம்

வல்லரசாக நாடு

பல்லில்லாத மக்களாட்சி

உபச்சார விழாக்கள்

விபச்சார கைதிகள்

முன்னேற்றப்பாதையில் இந்தியா

முற்றுப்பெறாத மரணஓலங்களுடன்!!

5 comments:

  1. கவிதை அருமை. மறு மொழி இல்லாத காரணத்தால் கவிதை எழுதுவதை நிறுத்தி விட்டாயா அருண் சிவா. தொடரட்டும் கவிதைப் பணி. நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. குட்டி பிசாசே கவிதை அருமை கடைசி இரண்டு வரியை மாற்றிப் போட்டால் நல்லாருக்கும்.

    1.மரணத்தின் ஓலத்தில் [அழுகையில்]
    2.இந்தியாவின் முன்னேற்றப் பாதை

    ReplyDelete
  3. கண்மணி அக்கா,

    //குட்டி பிசாசே கவிதை அருமை கடைசி இரண்டு வரியை மாற்றிப் போட்டால் நல்லாருக்கும்.

    1.மரணத்தின் ஓலத்தில் [அழுகையில்]
    2.இந்தியாவின் முன்னேற்றப் பாதை//

    மாத்திட்டா போச்சு!!

    சீனா ஐயா,
    வாழ்த்துதலுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  4. ithuvum nalla irukku

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய