Pages

Saturday, May 19, 2007

தேவதாசிமுறை - ஒரு கண்ணோட்டம்

சில மாதங்களுக்கு முன் பத்திரிகையாளர் ஞாநி அவர்கள் ஒரு மும்பை விலைமகளிரிடம் கேட்ட கேள்வி "இந்த விபச்சாரம் இழிவாக தோன்றவில்லையா?". அதற்கு அந்த பெண் "அனைவரும் எதாவது ஒரு உடலுறுப்பை பயன்படுத்தித்தான் சம்பாதிக்கிறார்கள். நாங்களும் மற்றவர் கண்களுக்கு தெரியாத சில உறுப்புகளை பயன்படுத்தி சம்பாதிக்கிறோம்" என்றாராம்.முதலில் ஞாநி கேட்ட கேள்வியே சரியில்லை என்பேன். வாழ்க்கைச்சூழலும் வறுமையும் விரக்தியும் அவர்களை எப்படியொரு பதிலுக்கு ஆட்படுத்திருக்கிறது எந்த பகுத்தறிவுடைய பெண்ணும் (இன்றைய உலகில் சுகபோகமாக வாழவேண்டி சிலர் விபச்சாரம் செய்கிறார்கள், ஆதலால் தான் பகுத்தறிவுடைய பெண் என்று கூறுகிறேன்) வேண்டும் என்று விபசாரம் செய்யமாட்டாள். இன்றும் பம்பாய், கொல்கத்தா, ஹைத்ராபாத் போன்ற பல நகரங்களில் தெரிந்தே விபச்சாரம் நடக்கிறது. அரசுநிறுவனங்கள் எல்லாம் தெரிந்தும் வேடிக்கை பார்ப்பது ஏன் என்று புரியவில்லை. சமுதாயம் பொருளாதாரரீதியாக பெண்களை புறந்தள்ளுவதால் தான் பெரும்பாலும் இத்தகைய அவலநிலை. இதைவிட கொடுமையானது தேவதாசிமுறை. நான் இப்படி கூறக்கூடாது! தூக்கு போட்டு சாவது கொடுமையானதா? விஷம்குடிப்பது கொடுமையானதா? என்றால் தற்கொலையே கொடுமையானது என்று தான் கூறவேண்டி இருக்கும்.
பண்டைய காலங்களில் சில சமுதாயத்தினர் மட்டும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் தேவதாசிமுறை பற்றி விக்கிபீடியாவில் கொடுக்கப்பட்டிருந்த புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது என்னால் நம்பமுடியாமல் இருந்தது. எடுத்துக்காட்டாக ஆந்திரமாநிலத்தில் சுமார் 16000 என்றும், கர்நாடகாவில் சுமார் 22000 என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. என்ன அநீதி? அக்கிரமம்? இந்துகடவுளுக்கு அர்ப்பணிக்கப்ப்ட்டவர்களாக கூறி நடனமங்கைகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய சூழலில் வாழ்பவர்கள் மேல்தட்டுசாதியினரால் உரிமையும் மானத்தையும் இழந்தவர்களாக வாழ்ந்துள்ளனர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களே இத்தகைய இழினிலைக்கு ஆளாகியுள்ளனர். எடுத்துக்காட்டாக கர்நாடகத்தில் உள்ள தேவதாசிகள் எல்லம்மா என்னும் பெண்கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களாக உள்ளார்கள். இந்தியாவில் உள்ள தேவதாசிகள் அனைவரும் மதத்தின் பெயரால் விபச்சாரத்திற்குள்ளாக்கப்பட்டவர்கள். இந்துமதத்தின் பழம்பெருமை பேசும் பலர், இந்த இழினிலையை உணர்ந்தால் நிச்சயம் தலைகுனிவர். இதற்கு எந்தவித காரணங்கள் கூறியும் ஜல்லியடிக்க முடியாது. மத அடிப்படையில் விபச்சாரம் சகிக்க முடியாதது. இது நடந்த, நடக்கின்ற அநீதி. வேதகாலம் சங்ககாலம் தொட்டே இந்நிலை இந்தியாவில் தொடர்ந்து வந்துள்ளது. இப்போதும் நடந்துகொண்டுதான் உள்ளது. எனவே இந்துமத காப்பாளர்கள் தேவதாசிமுறை போன்ற விஷச்செடிகளை மத அடிப்படையிலிருந்து வேரோடு பிடுங்கவேண்டும்.

மனிதாவலம் நீங்கவேண்டும்; பெண்ணடிமை ஒழியவேண்டும்.

18 comments:

  1. இந்த விடயம் தொடர்பான என்னுடைய பார்வையை இந்தப்பதிவில் வெளிப்படுத்தியிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பார்வையிடுங்கள்.

    ReplyDelete
  2. கொல்கத்தாவில் பாலியல் தொழிலாளர்கள் ஒரு அறிக்கை விட்டுறுந்தாங்க.. எங்களை இப்படியே விட்டுறுங்க..மாற்று தொழில் செய்யச் சொல்றவுங்க அலோசனை குடுக்குறதோட நிறுத்திக்குறாங்க,, அதற்கு அப்புறம் எந்த வித உதவியும் இல்ல...அதனால நாங்க இப்படியே இருந்துட்டு போறோம்...

    நீங்க சொன்ன மாதிரி ஞானியின் கேள்வியே தவறு... அத்தனை எளிதாக பதில் சொல்ல கூடிய விஷயம் இல்லை...

    உங்க பதிவுகள் சில தலைப்பு மட்டும் பார்த்தேன்...ஆர்வத்த தூண்டுற விஷயங்களா இருக்கு...
    நன்றி

    ReplyDelete
  3. மங்கை,
    தங்கள் பின்னூட்டத்திற்கும் உக்கத்திற்கும் நன்றி.

    இந்திய விலைமகளிர் விரக்தியின் விளிம்பில் இருப்பவர்கள். அவர்கள் இந்த தொழிலை விட்டாலும், அவர்களை சமூகம் துன்புறுத்தாமல் இருக்குமா என்பது கேள்விக்குறியே?

    ReplyDelete
  4. குட்டிபிசாசு உங்க கருத்து சரியானது.இது பற்றி என் கருத்தை பிறகு சொல்கிறேன் இப்ப ஒரு அட்டெண்டென்ஸ் போட்டுக்கிறேன்.

    ReplyDelete
  5. கண்மணி அக்கா,

    தங்கள் பின்னூட்டத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  6. நண்பரே... உங்களது பதிவினைப் பார்த்தேன் அதனை வாசிக்கும் பொழுதே சமூகத்தின் மீது எரிச்சலாக வருகின்றது. எவருக்கும் இந் நிலை வரக் கூடாது. மூட வழக்கங்களும்... அடிமைத் தனமும்... மதத்தின் பெயரால் நடத்தப்படும் கொடுமைகளும்... இவற்றிற்கு முடிவு என்பது... நாம் மட்டும் பேசி எடுத்தால் காணாது... ஆனால் இந்த மதவாதிகள் எனும் பாசுத் தோல் போர்த்திய காண்டா மிருகங்களையும்... அரசியல் வாதிகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும்... மற்றும் இவ்வாறான மக்களின் "அறியாமையைப்" போக்க வேண்டும்.

    நல்ல ஒரு பதிவு.

    ReplyDelete
  7. திரு.ஹரன்,

    தங்கள் பின்னூட்டத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  8. சமூக அக்கறை கொண்ட நல்ல பதிவு.

    விபச்சாரமாம் விபச்சாரம். ஆதிக்க சாதியினராம். தாழ்ந்த சாதியினராம். எல்லாம் ஒருவரை ஒருவர் தொடுகிற வரைக்கும் தானய்யா. மனிதர்கள் பிறந்த மேனியுடன் அம்மணம் ஆன பிறகு சாதியாவது மதமாவது.

    இன்றைக்கும் இதே பழக்கம் தொடர்ந்து நடந்து வந்துகொண்டுதான் இருக்கிறது. அன்று மதம் சாதிகள் பெயரில் நடந்து வந்த கூத்துகள் இன்று பணத்திமிரால் சாதித்து பார்க்க முடிகிறது.

    அன்றும் இன்றும் இனி என்றுமே மாறாத காட்டுமிராண்டி உலகம்.

    ReplyDelete
  9. திரு.மாசிலா,

    தங்கள் பின்னூட்டத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  10. சிறந்த பதிவு! பாராட்டு!!

    ReplyDelete
  11. நல்ல எழுதுரிங்க...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. வெறும் 30% தேவதாசிகள் செய்யும் தவறுக்கு அந்த முறையையெ குற்றம் சொல்வது தவறு. தேவதாசிகள் பிரமசாரிகளாகச் இருக்க வேண்டியவர்கள். இப்போது தேவதாசி முறை எண்ணும் பெயரில் நிகழும் கேலிக்கூத்து நிச்சயமாக அழிக்கப்படவேண்டியதே. அனால் இதற்காக இந்த தேவதாசி முறை தோன்றவில்லை, அது கலைகளை வளர்க்க ஏற்பட்டது. மேலும் இலங்கையில் பிக்கு அர்ப்பண்ம் என்னும் பெயரில் வருடாவருடம் 25,000 மேற்பட்ட பச்சிளம் சிறுவர்கள் விகாரைகளுக்கு அர்ப்பண்ம் ஆவதை பற்றி உங்கள் கருத்து?

    ஐயா முறையில் எந்த பிழையும் இல்லை, அதை நடாத்தும்/இடூபடும் 30% பிழை/கொடுமைகளுக்காக அந்த முறையையே குறைசொல்வது மிக பிழை.

    ReplyDelete
  13. முதலாளித்துவம் உயிரோடு உள்ளவரை விபச்சாரமும் உயிரோடு இருக்கும். சாதாரண மக்களை ஓட்டாண்டிகளாக்கி விபச்சாரத்தின் எல்லைக்கே தள்ளி விடுகிறது. இந்து சனாதனவாதமும், நிலப்பிரபுத்துவ சக்திகளும் கடவுளின் பெயரால் பெண்களை தங்களது போக வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இத்தகைய தேவதாசி முறை இன்றைக்கும் தமிழகத்தில் நிலவுவதாக கூறப்படுகிறது. பிரஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹிகோவின், ஏழை படும் பாடு நாவலைப் படிக்கும் எவருக்கும் விபச்சாரம் எப்படி உருவாகிறது. அதற்கு இந்த முதலாளித்துவ சமூகம் எத்தகைய பங்களிப்பை ஆற்றுகிறது என்பதை மிக அற்புதமாக விளக்கியிருப்பார். தங்களது இந்தக் கட்டுரை சுருக்கமாகவும், நச்சென்றும் உள்ளது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. There were seven types of Devadasis as per Hindu tradition.

    Datta -- self-dedicated, or given to deity
    Vikrita -- Purchased or self-sold to God,
    Bhritya -- servant for supporting family
    Bhakta devotee -- Devadasi
    Abducted and deserted at the temple
    Alankara--donated by kings or nobles to their family deity
    Rudra Ganika or Gopika--appointed by the temple for specific services

    ReplyDelete
  15. சந்திப்பு,

    நன்றி.உலக அளவில் விபச்சாரம் என்பது பொருளாதாரரீதியாகத்தான் புகுத்தப்படுகிறது.ஆனால் இந்தியாவிலோ அதையும்தாண்டி மதத்தை பயன்படுத்தி பெண்கள் சுரண்டப்படுகிறார்கள்!!அதைத்தான் கூறவந்தேன்!!

    ஐயா அனானி,
    மனிதனுக்கு மனிதம் தான் முதல். பிறகு தான் இந்த வெங்காயக்கலை எல்லாம்.

    ReplyDelete
  16. உலகில் பிறந்தவர்கள் யாரும் யாருக்கும் அடிமை இல்லை!!மனிதம் தான் வாழ்க்கை, அதனால்தான் எல்லாவகை இன்னல் கடந்து மனிதன் வாழ்கிறான்!!மனிதனேயம் இல்லயேல் பூமிப்பந்தின் அழிவு வெகுதொலைவில்யில்லை என்று அர்த்தம்!!

    ReplyDelete
  17. நல்ல பதிவு. //மனிதாவலம் நீங்கவேண்டும்; பெண்ணடிமை ஒழியவேண்டும்.// எதிர்பார்ப்போம். நன்றி.

    ReplyDelete
  18. ஜெஸிலா அவர்களே,

    தங்கள் ஊக்கத்திற்கு நன்றி!!

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய