Pages

Wednesday, May 23, 2007

பாசக்கார படையே! ஆணி பிடுங்கியதுபோதும் அணி திரள்வீர்!!!

தலைப்புச்செய்திகள் வாசிப்பது சரோஜ்முனிசாமி.........
கண்மணி டீச்சர் அவர்களின் வெள்ளை அறிக்கையை எதிர்த்து தமிழகமெங்கும் பாசக்கார படையின் கண்டன ஆர்பாட்டங்கள் நடந்தேறிய வண்ணம் உள்ளது! 3 பீடிகளும், 4 சிகரெட்களும், 5 தீக்குச்சிகளும் கொளுத்தப்பட்டுள்ளதாக சம்பவம் நடந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது!!!
(ஆளவிடுங்கடா சாமி!!...)


இடம்: பொதுக்கூட்டம், பாசக்காரகுடும்ப பயன்படா கழகம், கட்சி அலுவலகம், அண்ணாசாலை, சென்னை - 007
இம்சைகள்: அபிஅப்பா, கோபி, அய்யனார், மைபிரண்ட், குட்டிபிசாசு, மின்னுதுமின்னல் மற்றும் பாசக்கார உறுப்பினர்கள்!!

போஸ்டர்களில்: அண்ணன் அழைக்கிறார்!! அம்மா அழைக்கிறார்!! தாத்தா அழைகிறார்!!
அபி அப்பா: நாம் நடாத்திவந்த ஆணிபிடுங்கும்அலுவலை எல்லாம் விட்டுவிட்டு குழுமியிறுக்கிறோம் என்றால் காரணம் இருக்கிறது!! பாசக்கார குடும்பத்தைப் பற்றி அவதூறாக வெள்ளை அறிக்கை வெளியிட்ட “பாசிச” கண்மணி டீச்சர் அவர்கள் அதற்கான ஆதாரங்களை நிருபிக்கவேண்டும்!! இல்லாவிடில் உச்சநீதிமன்றம் முதல் ஐநா சபை வரை செல்வோம்!!கண்மணி டீச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கு முதலாவதாக கண்டனம் தெரிவிக்க பாசகாரகுடும்பத்தின் கொள்கை பரப்பு செயலாளர் குட்டிபிசாசு வருகிறது!!

கோபி: இவனையா பேச சொன்ன!! இவன் மைக்க கண்டா விடமாட்டானே! பேசியே கூட்டதை கலச்சிடுவான்பா!! கஷ்டப்பட்டு பிரியானி, கட்டிங் (என்னனு தெரியும்னு நெனைகிறேன்) எல்லாம் வாங்கி கொடுத்து கூட்டத கூட்டிவந்து இருக்கேன்பா!!

அபி அப்பா: இவன் நல்லா பேசுரானோ இல்லயோ!! நல்லா உதைய தாங்குவான்!! பாசக்காரகுடும்ப மகளிர் அணி செம டென்சன்ல இருக்காங்க! இன்னைக்கு குட்டிபிசாச கஞ்சி காச்ச போராங்க!! நாம எதுக்கும் ஓடிப்போக தயாரா இருப்போம்!!

(குட்டி பிசாசு பேசுது...)

என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!! பாசக்கார படையே!!

குட்டிபிசாசு: சோடா குடுப்பா!!!
மின்னல்: என்னடா பேசிட்டே, உனக்கு சோடா! இன்னும் நீ பேசவே இல்ல!
குட்டிபிசாசு: கலைஞர் மாதிரி (தொண்டை கட்டின மாதிரி) பேச முயற்சி பண்ணிரேன்! அதுதான் தாகமா இருக்குது!!
அபி அப்பா: கட்சிநிதி எல்லாம் சோடா குடிச்சே காலி பன்ணிடுவான் போல!!

(குட்டி பிசாசு மறுபடியும் பேசுது...)

எங்களுடைய எதிர்ப்பை அமெரிக்க ஏகதிபத்தியதிற்கும், ரஷ்யகம்யுனிசத்திற்கும், இந்திய துணைக்கண்டத்திற்கும், தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்!!

எங்கள் இயக்கத்தின் மூத்த தோழர் (அவர் பேரு என்னபா!!...அபிஅப்பா...) அபி அப்பா அவர்களைப்பற்றி தவறான வதந்திகள்(இரண்டு இட்லி...இரண்டு சட்டி சாம்பார்) கூறியது முதல் குற்றம்!! மூன்று வருடம் 9 வகுப்பிலேயே படித்தார்! எதற்காக! பாடங்கள் சுலபமாக இருக்கிறது என்றா? இல்லை மேற்கொண்டு படிக்க நல்ல அடித்தளம் வேண்டுமென்று, இது குற்றமா?

அபி அப்பா: இன்னும் விலாவரியா சொல்லி என்னோட மானத்த வாங்குடா! டேய்! பேசி முடிடா!!

எங்கள் கொள்கைவீரர் கோபியைமேல் கொடுமையான பழிசுமத்தியது இரண்டாவது குற்றம்!! ஜொள்ளூ, லொள்ளூ என ஏளனமாக பேசியிருக்கிறார்!!
எங்கள் கூர்முனைப்போர்வாள் மின்னலை ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளிக்கு அனுப்பி எங்கள் இயக்கத்தை பலகீனம் அடையச்செய்யப்பார்க்கிறார்!!
மின்னல்: இங்கிருந்து எஸ்ஸாகிரதுக்கு நல்ல சான்ஸ் அதையும் கெடுத்துடுவான்போல இருக்குதே!!

எங்கள் அஞ்சநெஞ்சன் அய்யனார்மீது அனியாயமாக புரளி கூறுகிறார்!! அவர் கவிதைனடைமேல் ஏற்ப்பட்ட பொறாமை காரணமாக!!

அய்யனார்: நான் என்ன எழுதுரேன்னு எனக்கே தெரியல; அவங்களுக்கு இதபார்த்து பொறாமையா!!

ஒன்றும் அறியாத அப்பாவி இளைஞன் குட்டிபிசாசுவை, வால் என்னும் வரலாற்றுப்பொய் கூறி கிண்டலடித்துள்ளார்!!
வீரசாகசங்கள் புரிந்த எங்கள் பாசக்காரபடையைக் கண்டித்துவிட்டு, ‘தேமே’ என்று நின்றவர்களுக்குத் தேவாரம் பாடுகிறார்!!

மைபிரண்ட்: இவன பேசவிட்ட போதுமே! மைக்க முழுங்கிடுவான்! சும்மாவா பேரு வச்சாங்க, பிசாசுனு!! சாவுகிராக்கி!!
டென்சன் ஆகாத மங்கை (டென்சன் ஆகி): கண்மணி டீச்சர திட்டுர இவன் கைய ஒடிக்கனும்!!
மைபிரண்ட்: டேய்!! பேசினது போதும் மேடையவிட்டு இறங்குடா மாங்கா!!

(குட்டி பிசாசு மறுபடியும் பேசுது...)
மகளிர் அணியில் முளைத்திருக்கும் சில காளான்கள் கண்மணி டீச்சருக்கு கவரி வீச புரப்பட்டு இருக்கிறார்கள்!! இதனால்தான் கேட்கிறேன்...!

மேலும் டென்சன் ஆன பாசக்கார குடும்ப மகளிரணி மேடைக்கு வந்து... குட்டிபிசாசுக்கு தர்ம அடி குடுத்து பின்னி எடுக்க...
அடுத்த அடி நமக்குதான்னு மத்த பாசக்கார உறுப்பினர்கள் எஸ்கேபாகி ஓட...
பாசக்காரகுடும்ப பயன்படா கழக அலுவலகம் கலவரபூமி ஆகிறது!!!)

26 comments:

  1. ஒக்காந்து ஓசிப்பாய்ங்களோ:-))

    எப்டிய்யா ராசா எப்டி! கொஞ்சம் கிட்ட வா, ஒரு முத்தா கொடுக்கறேன் வந்து வாங்கிட்டு போய்யா ராசா:-)))

    ReplyDelete
  2. அட பிசாசே அடங்க மாட்டியே நீயி
    :))))

    ஜீப்பரப்பு!!!

    ReplyDelete
  3. அபிஅப்பாவுக்கு,

    இந்த கண்டனம் போதும்னு னெனக்கிறேன்!!நன்றி!!

    ReplyDelete
  4. அப்பு எப்டி இப்டியெல்லாம்
    கலக்குற போ

    ReplyDelete
  5. அடுத்த அடி நமக்குதான்னு மத்த பாசக்கார உறுப்பினர்கள் எஸ்கேபாகி



    பின்னுட்டம் போட

    ஓட..

    :)

    ReplyDelete
  6. எங்கள் கூர்முனைப்போர்வாள் மின்னலை ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளிக்கு அனுப்பி எங்கள் இயக்கத்தை பலகீனம் அடையச்செய்யப்பார்க்கிறார்!!
    ////


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  7. மின்னுது மின்னல்,

    நன்றி!!டீச்சர் என்ன சொல்ல போராங்கனு பார்ப்போம்!!

    ReplyDelete
  8. ///
    (குட்டி பிசாசு மறுபடியும் பேசுது...)
    மகளிர் அணியில் முளைத்திருக்கும் சில காளான்கள் கண்மணி டீச்சருக்கு கவரி வீச புரப்பட்டு இருக்கிறார்கள்!! இதனால்தான் கேட்கிறேன்...!
    //

    ஆஹா நாக்குல சனிங்குறது இதுதானா....:)

    ReplyDelete
  9. இனியொரு விதி செய்வோம் !
    அதை எந்தநாளும் காப்போம்

    ///

    கண்மணி டிச்சர்கிட்ட இருந்து எஸ்கேப்பாவுரத தானே சொல்லுற

    :P

    ReplyDelete
  10. ஹஹஹ...ஹஹஹ...

    ReplyDelete
  11. அடேய் பிசாசா கண்மணி டீச்சர் கிளாஸில் ரெண்டு நாள் ஆஜரானதுக்கே இந்தப் போடு போடுறியே.ஒழுங்க நல்ல புள்ளையா படிச்சா அடுத்த 'கலாம்' நீ தாண்டா செல்வமே [அப்டின்னு உங்கம்மா போன்ல எங்கிட்ட சொன்னாங்க]
    கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்.
    டீச்சரோட ஸ்டூடண்ட்டும் காமெடி பண்ணும்.இது தெரியாத மக்குகளோட உனக்கென்ன வேலை 'கா'வுட்டுடு.
    எனக்கு எதிர் வாரிசு ரெடி பண்ணும் 'மூத்த குடிமகன்'களுக்கு எச்சரிக்கை.மகளிர் சக்தி தெரியாமல் மோதி மண்டை உடைய வேண்டாம்.
    மை பிரண்ட் வாடிம்மா எங்க போயிட்ட தனியா பயமாக்கீதுல்ல.[மங்கையும் காணோம்] அவந்தி நீயாச்சும் வாயேன்.

    ReplyDelete
  12. அய்யனார் கவிதையப் பார்த்து பொறாமைன்னு சொன்னியே அதைத்தான் தாங்க முடியல...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    அவருக்கே புரியலைன்னு ஒத்துக்கிட்டாரு ஜென்டில் மேன்.

    ReplyDelete
  13. வந்துட்டேன் அக்கா...

    //மகளிர் சக்தி தெரியாமல் மோதி மண்டை உடைய வேண்டாம்///

    Yes i repeat it..:-)

    ReplyDelete
  14. கண்மணி அக்கா,
    நான் உன்னோட தம்பி!!உங்களுக்கு எதிரா போவேனா!!கடைசில அடி கூட நான் தான் வாங்கினேன்!! பின்னி பெடல் எடுத்துடாங்க!!

    நன்றி!!(கோவிச்சுகாதீங்க!!)

    ReplyDelete
  15. அவந்திகா,

    பின்னூட்டத்திற்கு நன்றி!!

    ReplyDelete
  16. அடப்பாவி மக்கா, இப்படி யாரும் கும்மி அடிக்கம சொந்த காசுல சுண்ணாம்பு அடிக்க வச்சிபிட்டங்கலே!!

    ReplyDelete
  17. சூப்பர் குடும்பப்பதிவு. பாசக்காரக்குடும்பம் எப்படி சந்தோஷப்படுது பாருங்க‌

    ReplyDelete
  18. சின்ன அம்மணி,

    நான் அடிவாங்கினால் எல்லாருக்கும் சந்தோசம் போல!!சரி என் கடன் உதை வாங்கி கிடப்பதே!!வாழ்க பாசக்காரகுடும்பம்!!

    நன்றி!!மீண்டும் வருக!!

    ReplyDelete
  19. நன்றி டெல்பின் அவர்களே!!

    ReplyDelete
  20. பேய்,
    என்னை வெறுப்பேத்த இப்படி பேரு போட்டிங்க போல!!நல்லா இருங்க
    !!

    ReplyDelete
  21. //ஒன்றும் அறியாத அப்பாவி இளைஞன் குட்டிபிசாசுவை,//

    இந்த அநியாயத்த கேக்க யாருமே இல்லையா?

    ReplyDelete
  22. காயத்ரி,

    நீங்க இருக்கீங்களே!! நீங்களே அநியாயத்தை தட்டி கேளுங்க!!

    நன்றி!!

    ReplyDelete
  23. வாவ்.. பிசாசு.. இது ரியலி சூப்பர். :-)))

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய