Pages

Tuesday, September 17, 2013

அம்மா ஊறுகாய் மற்றும் சிக்கன் 65 திட்டம் முதலமைச்சர் துவங்கி வைத்தார்.

"அம்மா குடிநீர்" திட்டம் முதலமைச்சர் துவங்கி வைத்தார்.

…புரட்டு தலைவியே! டாஸ்மாக் எண்ணிக்கையைக் கூட்டி சரக்குக்கு ஏற்பாடு செஞ்சிங்க. குடிநீர் திட்டம் கொண்டுவந்து மிக்ஸிங்க்கும் ஏற்பாடு செஞ்சிட்டிங்க. அப்படியே கொஞ்சம் சைட்டிஷுக்கு "ஊறுகாய் திட்டம்" "சிக்கன் 65 திட்டம்" கொண்டுவந்திங்கன்னா புண்ணியமா போகும்.


நடிகர் பிரசன்னா தற்போது விரும்பி பார்க்கும் படம்.

என் பொண்டாட்டி நல்லவ.

மூட நம்பிக்கை ஒழிப்புக்கு, உரிய சட்டம் ஒன்றை, மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் - கலைஞர்  கருணாநிதி

ஆமா! என்னமா பீல் பண்ணுராரு. நீங்களே உங்க மஞ்சள் துண்டை ஆட்டி துவங்கி வையுங்க.

எங்கள் வீட்டில் எங்கள் அம்மா தான் பாஸ் என்று ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஸ்வின் தெரிவித்துள்ளார்.

 "ஒரு பொம்பிளேன்னா ..." தலைவரோட டயலாக் எல்லாம் சினிமாவுலத்தான்.



******************************************************

இன்றைக்கு எம்.ஆர்.ராதா பற்றி எழுதுபவர்கள் எல்லாருக்கும் அட்சய பாத்திரம் போல இருப்பது. எம்.ஆர்.ராதா அவர்கள் கொடுத்த சில பேட்டிகள் . அவற்றுள் முக்கியமான ஒன்று விந்தனின் "சிறைச்சாலை சிந்தனைகள்". இதிலிருக்கும் சில விடயங்களை எடுத்து தான் கொஞ்சம் இப்படி அப்படி இட்டுக்கட்டி எம்.ஆர்.ராதாவைப் பக்கத்திலிருந்து பார்த்தது போல பலர் இன்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சரி சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன். திரைப்படத்துறையில் வெளிப்படையான மனிதர், திறந்த புத்தகம் எனப் பொதுவாக கண்ணதாசனைச் சொல்லுவார்கள். எம்.ஆர்.ராதாவும் அப்படித்தான். மேலே சொன்ன விந்தனின் புத்தகத்தில் ஒரு இடத்தில் சொல்லுவார். ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பாலமுருகனாக, பால கிருஷ்ணனாக, பெண்வேடங்களில் நடிக்கும் பையன்களுடன் உடலுறவு கொள்ள சில பணக்கார கூட்டம் அலைந்ததையும், தானும் அதுபோல ஆண் மோகம் கொண்டு அலைந்தவர்களில் ஒருவன் என வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். இதைப் பற்றி இவர் அதிகமாக சொல்லவில்லை. இப்படிப்பட்ட  செயல்களில் ஈடுபட்டதற்கு தான் பெரும் வேதனை அடைவதாக குறிப்பிட்டிருந்தார்.   இத்தகைய வலுக்கட்டாயமான ஓரினசேர்க்கை பழக்கங்களை (Homosexual என்பதா? Pedophile என்பதா? தெரியவில்லை) வெளியில் சொல்ல அதிக தைரியம் வேண்டும். எம்.ஆர்.ராதா செய்த தவறுகளை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் எத்தனைபேர் இப்படி தவறுகளை ஒத்துக்கொள்பவர்கள் இருக்கிறார்கள்? எனக்குத் தெரிந்து யாருமில்லை.

எம்.ஜி.ஆர், சிவாஜி கூட இளம்வயதில் பெண்வேடங்களை ஏற்று நடித்தவர்கள். இவர்கள் கூட இப்படி பல போன்ற எண்ணற்ற இன்னல்களை சந்தித்துதான் வந்திருப்பார்கள் போலும்.

******************************************************

நான் பார்த்த அரசியல் என்ற நூலில் எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதியை ஒப்பிட்டு கண்ணதாசன் கூறுகிறார்.
…".....அவரைப் (கருணாநிதி) பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை. ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார். ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார். இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.(http://chakkarakatti.blogspot.de)"

கண்ணதாசன் கருணாநிதியுடன் 25 ஆண்டுகளுக்கு மேல் பழகியிருக்கிறார். அதனையொட்டியே இவ்வளவு தெளிவாக கருணாநிதி பற்றி கூறுகிறார். பாருங்க எவ்வளவு உண்மை. இன்றுவரை கருணாநிதி மாறவில்லை.  அப்படியேதான் இருக்கிறார்.

… ****************************************************
படிக்காதமேதை படத்தில் கேவி மகாதேவன் இசையமைப்பில் ஜமுனாராணி, ஏஎல் ராகவன் பாடிய பாடல். எனக்குப் பிடித்த ஒரு பாடல். உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

 

10 comments:

  1. kutti,

    டாஸ்மாக்குல எந்த தண்ணிப்பாட்டிலா இருந்தாலும் 25 ரூ, கப்பு 5 ரூ. உட்கார 5-10 ரூ, இல்லைனா கடை ஓரமா நின்னுட்டே குடிச்சிக்கனும்.

    அம்மா 10 ரூ என சொன்னாலும் டாஸ்மாக் பாருக்குள்ள வந்தால் 25 ரூவா மதிப்பு கூடிரும் அவ்வ்!

    ReplyDelete
    Replies
    1. வவ்ஸ்,

      அப்ப …குடிமகன்களுக்கு இந்த திட்டத்தால் பயனில்லையா?

      Delete
  2. //அம்மா குடிநீர் திட்டம் முதலமைச்சர் துவங்கி வைத்தார்//
    குடிநீர் திட்டம் -தண்ணீரை பாட்டில்களில் அடைத்து விற்கிறது தானே.இந்த அநியாய செய்தியை படிச்சபோ என்னாலே நம்பவே முடியல்ல மக்கள் வாழ்கைதரம் மிக உயர்ந்த நாடுகளில் கூட அரசுகள் சுத்தமான குடி நீர் வீடுகளுக்கு பைப்லயின் மூலம் மக்களுக்கு வழங்கும்போது அம்மா தண்ணீரை பாட்டில்களில் அடைத்து விற்பது கொடுமையானது.

    ReplyDelete
    Replies
    1. இது எல்லாருக்கும் இல்லை. வேண்டியவர்கள் வாங்கிக் குடிக்கலாம்.

      …//மிக உயர்ந்த நாடுகளில் கூட அரசுகள் சுத்தமான குடி நீர் வீடுகளுக்கு பைப்லயின் மூலம் மக்களுக்கு வழங்கும்போது//

      …இதெல்லாம் எந்த காலத்துல நடக்கிறது. கனவில் கூட நடக்காது.

      Delete
  3. …//மிக உயர்ந்த நாடுகளில் கூட அரசுகள் சுத்தமான குடி நீர் வீடுகளுக்கு பைப்லயின் மூலம் மக்களுக்கு வழங்கும்போது//


    appdiya? entha oorla free ya kudukuraanga?

    ReplyDelete
  4. //…//மிக உயர்ந்த நாடுகளில் கூட அரசுகள் சுத்தமான குடி நீர் வீடுகளுக்கு பைப்லயின் மூலம் மக்களுக்கு வழங்கும்போது//

    appdiya? entha oorla free ya kudukuraanga? //

    I know about Kuwait. In Kuwait, Free water to all.

    ReplyDelete
  5. //அப்படியே கொஞ்சம் சைட்டிஷுக்கு "ஊறுகாய் திட்டம்" "சிக்கன் 65 திட்டம்" கொண்டுவந்திங்கன்னா புண்ணியமா போகும்.//

    Super Thala!.....

    ReplyDelete
  6. தங்கள் பிளாக் மற்றும் செய்திகள் படிக்க--ரசிக்க--லயிக்க--நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. மிக அருமையான பல்சுவை பதிவு. எம். ஆர். ராதா இளம்பையன்களோடு உறவாடியதாக கூறினாரா? அல்லது தமது இளம் வயதில் சிலரால் உடலுறவுக்காய் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறினாரா? நானும் வாசித்துள்ளேன், மறந்துவிட்டது.. ஒன்று மட்டும் தெளிவு எல்லா அசிங்கங்களும் அந்த காலத்திலும் உண்டு, மறைத்து விட்டு பண்"பாடு" மண்ணாங்கட்டி என கதையளந்துள்ளார்கள்..

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய