Showing posts with label பாசக்காரகுடும்பம். Show all posts
Showing posts with label பாசக்காரகுடும்பம். Show all posts

Tuesday, December 18, 2007

கூகிள் தளத்தில் பாவனாவையும் நமீதாவையும் தேடியது யார்?

கூகிள் தளத்தில் பாவனாவையும் நமீதவையும் தேடியது யார்? விடை கீழே உள்ளது.

கூகிள் தளத்தில் இந்தியர்கள் அப்படி என்னதான் தேடினார்கள் என்ற முடிச்சை கூகிளே அவிழ்த்துள்ளது.

கடந்த வருடத்தில் தேடலில் முதலிடம் வகிப்பது: ஆர்குட் (orkut)
அதிகமாக தேடப்படும்...விளையாட்டு நட்சத்திரம்: சானியா மிர்சா
அரசியல்வாதி: காந்தி

"Sex" என்ற வார்த்தையை அதிகமாகக் கொடுத்துத் தேடும் இணைய அன்பர்கள் உள்ள நாடுகள் முறையே எகிப்து, வியட்நாம், இந்தியா, துருக்கி (நம் ஆளுங்க அடங்க மாட்டாங்க போல!!). "Movie online" என்று தேடுபவர்கள் உலகிலேயே இந்தியர்கள் தான் அதிகம் என்பது, movie piracy அதிகமாவிட்டது! ஓசியில் படம் பார்க்க எல்லாரும் விரும்புராங்க என்பதையே குறிக்கிறது. "Kashmir" என்று தேடுபவர்கள் இந்தியர்களை விட பாக்கிஸ்தானியர்களே அதிகம்(எவ்வளவு அக்கறை பாருங்க அவங்களுக்கு, நீங்களும் இருக்கிங்களே!!). "terrorism" என்று அதிகம் தேடுபவர்களும்் பாகிஸ்தானியர்கள் தான். "USA" என்று தேடுபவர்கள் அமெரிக்கர்களுக்கு அடுத்து இந்தியர்கள் (இதிலிருந்து உங்களுக்கு என்ன புரிகிறது? USA-ஐ அமெரிக்கர்களுக்கு அடுத்து இந்தியர்கள் தான் அதிகம் நேசிக்கிறார்கள் போலும்). கூகிள் தளத்திலேயே "google" என்று தேடும் புத்திசாலி நபர்களும் அதிகம் இந்தியர்கள் தான். "Tsunami" என்று முறையே இந்தோநேசியா, மலேசியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா வாழ் இணைய அன்பர்கள் அதிகமாக தேடுகிறார்கள். "Job" என்று தேடுவதிலும் இந்தியர்களுக்குத்தான் முதலிடம்.

மேலும் ஒரு தகவல் என்னவென்றால், "periyar" என்ற தேடல் 2006-ன் தொடக்கத்திலிருந்து அதிகரித்துள்ளது. இதற்குக்காரணம், பெரியார் திரைப்படம் அல்லது பெரியார் சிலையுடைப்பு காரணமாக இருக்கலாம்.

கொசுரு செய்தி: "Bhavana" என்ற பெயரை இந்தியர்கள் தேடுவதை அடுத்து, UAE-லிருந்து தான் அதிகமாக தேடப்படுகிறது.(தம்பி உமாகதிர் UAE-ல தான் இருக்கிறார் என்பதை வாசகர்கள் மறக்கக்கூடாது :) ).

"Namitha" என்ற பெயரை இந்தியர்களுக்கு அடுத்து இலங்கையிலிருந்து தான் தேடப்படுகிறது (யாரந்த நமிதாவின் இலங்கை ரசிகர்கள்? குறிப்பாக கொழும்பில் தான்! உண்மையை நீங்களே சொல்லி விடுங்கள் :)) ).

"Sivaji" என்று இந்தியாவை விட இலங்கையிலிருந்து தான் அதிகமாக தேடப்பட்டுள்ளது. (இதுக்கு என்ன சொல்லுரிங்கோ??)

நீங்களும் சமத்தா Google trends-ல போய் தேடிப் பாருங்க.

Sunday, July 08, 2007

பிறந்தநாள் காணும் உடன்பிறப்பிற்கு வாழ்த்துக்கள்!!

பிறந்தநாள் காணும் பாசக்கார குடும்ப உறுப்பினர் மற்றும்் என்னுடைய உடன்பிறப்பு 'கவிதாயினி காயத்ரி'க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

Wednesday, May 23, 2007

பாசக்கார படையே! ஆணி பிடுங்கியதுபோதும் அணி திரள்வீர்!!!

தலைப்புச்செய்திகள் வாசிப்பது சரோஜ்முனிசாமி.........
கண்மணி டீச்சர் அவர்களின் வெள்ளை அறிக்கையை எதிர்த்து தமிழகமெங்கும் பாசக்கார படையின் கண்டன ஆர்பாட்டங்கள் நடந்தேறிய வண்ணம் உள்ளது! 3 பீடிகளும், 4 சிகரெட்களும், 5 தீக்குச்சிகளும் கொளுத்தப்பட்டுள்ளதாக சம்பவம் நடந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது!!!
(ஆளவிடுங்கடா சாமி!!...)


இடம்: பொதுக்கூட்டம், பாசக்காரகுடும்ப பயன்படா கழகம், கட்சி அலுவலகம், அண்ணாசாலை, சென்னை - 007
இம்சைகள்: அபிஅப்பா, கோபி, அய்யனார், மைபிரண்ட், குட்டிபிசாசு, மின்னுதுமின்னல் மற்றும் பாசக்கார உறுப்பினர்கள்!!

போஸ்டர்களில்: அண்ணன் அழைக்கிறார்!! அம்மா அழைக்கிறார்!! தாத்தா அழைகிறார்!!
அபி அப்பா: நாம் நடாத்திவந்த ஆணிபிடுங்கும்அலுவலை எல்லாம் விட்டுவிட்டு குழுமியிறுக்கிறோம் என்றால் காரணம் இருக்கிறது!! பாசக்கார குடும்பத்தைப் பற்றி அவதூறாக வெள்ளை அறிக்கை வெளியிட்ட “பாசிச” கண்மணி டீச்சர் அவர்கள் அதற்கான ஆதாரங்களை நிருபிக்கவேண்டும்!! இல்லாவிடில் உச்சநீதிமன்றம் முதல் ஐநா சபை வரை செல்வோம்!!கண்மணி டீச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கு முதலாவதாக கண்டனம் தெரிவிக்க பாசகாரகுடும்பத்தின் கொள்கை பரப்பு செயலாளர் குட்டிபிசாசு வருகிறது!!

கோபி: இவனையா பேச சொன்ன!! இவன் மைக்க கண்டா விடமாட்டானே! பேசியே கூட்டதை கலச்சிடுவான்பா!! கஷ்டப்பட்டு பிரியானி, கட்டிங் (என்னனு தெரியும்னு நெனைகிறேன்) எல்லாம் வாங்கி கொடுத்து கூட்டத கூட்டிவந்து இருக்கேன்பா!!

அபி அப்பா: இவன் நல்லா பேசுரானோ இல்லயோ!! நல்லா உதைய தாங்குவான்!! பாசக்காரகுடும்ப மகளிர் அணி செம டென்சன்ல இருக்காங்க! இன்னைக்கு குட்டிபிசாச கஞ்சி காச்ச போராங்க!! நாம எதுக்கும் ஓடிப்போக தயாரா இருப்போம்!!

(குட்டி பிசாசு பேசுது...)

என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!! பாசக்கார படையே!!

குட்டிபிசாசு: சோடா குடுப்பா!!!
மின்னல்: என்னடா பேசிட்டே, உனக்கு சோடா! இன்னும் நீ பேசவே இல்ல!
குட்டிபிசாசு: கலைஞர் மாதிரி (தொண்டை கட்டின மாதிரி) பேச முயற்சி பண்ணிரேன்! அதுதான் தாகமா இருக்குது!!
அபி அப்பா: கட்சிநிதி எல்லாம் சோடா குடிச்சே காலி பன்ணிடுவான் போல!!

(குட்டி பிசாசு மறுபடியும் பேசுது...)

எங்களுடைய எதிர்ப்பை அமெரிக்க ஏகதிபத்தியதிற்கும், ரஷ்யகம்யுனிசத்திற்கும், இந்திய துணைக்கண்டத்திற்கும், தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்!!

எங்கள் இயக்கத்தின் மூத்த தோழர் (அவர் பேரு என்னபா!!...அபிஅப்பா...) அபி அப்பா அவர்களைப்பற்றி தவறான வதந்திகள்(இரண்டு இட்லி...இரண்டு சட்டி சாம்பார்) கூறியது முதல் குற்றம்!! மூன்று வருடம் 9 வகுப்பிலேயே படித்தார்! எதற்காக! பாடங்கள் சுலபமாக இருக்கிறது என்றா? இல்லை மேற்கொண்டு படிக்க நல்ல அடித்தளம் வேண்டுமென்று, இது குற்றமா?

அபி அப்பா: இன்னும் விலாவரியா சொல்லி என்னோட மானத்த வாங்குடா! டேய்! பேசி முடிடா!!

எங்கள் கொள்கைவீரர் கோபியைமேல் கொடுமையான பழிசுமத்தியது இரண்டாவது குற்றம்!! ஜொள்ளூ, லொள்ளூ என ஏளனமாக பேசியிருக்கிறார்!!
எங்கள் கூர்முனைப்போர்வாள் மின்னலை ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளிக்கு அனுப்பி எங்கள் இயக்கத்தை பலகீனம் அடையச்செய்யப்பார்க்கிறார்!!
மின்னல்: இங்கிருந்து எஸ்ஸாகிரதுக்கு நல்ல சான்ஸ் அதையும் கெடுத்துடுவான்போல இருக்குதே!!

எங்கள் அஞ்சநெஞ்சன் அய்யனார்மீது அனியாயமாக புரளி கூறுகிறார்!! அவர் கவிதைனடைமேல் ஏற்ப்பட்ட பொறாமை காரணமாக!!

அய்யனார்: நான் என்ன எழுதுரேன்னு எனக்கே தெரியல; அவங்களுக்கு இதபார்த்து பொறாமையா!!

ஒன்றும் அறியாத அப்பாவி இளைஞன் குட்டிபிசாசுவை, வால் என்னும் வரலாற்றுப்பொய் கூறி கிண்டலடித்துள்ளார்!!
வீரசாகசங்கள் புரிந்த எங்கள் பாசக்காரபடையைக் கண்டித்துவிட்டு, ‘தேமே’ என்று நின்றவர்களுக்குத் தேவாரம் பாடுகிறார்!!

மைபிரண்ட்: இவன பேசவிட்ட போதுமே! மைக்க முழுங்கிடுவான்! சும்மாவா பேரு வச்சாங்க, பிசாசுனு!! சாவுகிராக்கி!!
டென்சன் ஆகாத மங்கை (டென்சன் ஆகி): கண்மணி டீச்சர திட்டுர இவன் கைய ஒடிக்கனும்!!
மைபிரண்ட்: டேய்!! பேசினது போதும் மேடையவிட்டு இறங்குடா மாங்கா!!

(குட்டி பிசாசு மறுபடியும் பேசுது...)
மகளிர் அணியில் முளைத்திருக்கும் சில காளான்கள் கண்மணி டீச்சருக்கு கவரி வீச புரப்பட்டு இருக்கிறார்கள்!! இதனால்தான் கேட்கிறேன்...!

மேலும் டென்சன் ஆன பாசக்கார குடும்ப மகளிரணி மேடைக்கு வந்து... குட்டிபிசாசுக்கு தர்ம அடி குடுத்து பின்னி எடுக்க...
அடுத்த அடி நமக்குதான்னு மத்த பாசக்கார உறுப்பினர்கள் எஸ்கேபாகி ஓட...
பாசக்காரகுடும்ப பயன்படா கழக அலுவலகம் கலவரபூமி ஆகிறது!!!)