Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Friday, August 29, 2008

நரிக்கதையும் நம்ம பிரபலங்களும்

நரி மற்றும் திராட்சைக் கதை நம்ம எல்லாருக்கும் தெரியும். இதையே நம்ம பிரபலங்கள் சொல்லி இருந்தால் எப்படி இருக்கும். சும்மா!! உங்க கற்பனைக் குதிரைய தட்டிவிடுங்க!!


உலகநாயகன் கமல்ஹாசன்:
இன்று உங்களுக்கு சரித்திரத்தின் மடியில் சாகா வரம் பெற்ற ஒரு கதையைக் கூறப்போகிறேன். இது ஒரு நரிக்கதையும் கூட. 10-ம் நூற்றாண்டு. உலகத்தில் இஸ்லாத்துடன் திராட்சையும் அதிகம் விளைந்த காலம். கானகத்தின் வழியே சென்ற ஒரு நரிக்கு அங்கு கனிதிருக்கும் திராட்சைகள் ரொம்பவும் பிடித்துப் போனது. பல கோப்பை ரசம் பருகிய மதம் அதன் மனதினுள் ஏற்பட்டது. பகுத்தறிவுப் பரிணாம வளர்ச்சியடையாத நரியின் செய்கைகளும், முயற்சிகளும் திராட்சையைப் பெற்றுத் தருவதாயில்லை. எட்டியும் திராட்சை கிடைக்காமல் போனது இயற்கையின் சூழ்ச்சியும் அல்ல, கடவுளைத் துதித்தும் கிடைக்காமல் போனது நரியின் வீழ்ச்சியும் அல்ல. இது வெறும் மனித பரிமாணத்தை எட்டாத நரியின் கையறு நிலை. வாழ்க பாரதம்!! (திருவிளையாடல் தருமி: பேசும்போது அழுத்தம் திருத்தமா பேசு! படம் எடுக்கும் போது கோட்டை விட்டுடு!!!)

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்:
இப்ப ஒரு குட்டிகதை சொல்ல போரேன். ஒரு ஊர்லெ ஒரு நரி இருந்துச்சாம். அது ரொம்ப பசியில காட்டுவழியா போறப்ப, திராட்சை பலங்கலெ பார்த்துச்சு. அதெ எப்படியாவது சாப்பிடனும்னு ரொம்ப ட்ரை பண்ணுச்சு. முடியல. எவ்வளவு ட்ரை பண்ணியும் முடியல. கடசியா முயற்சி பண்ணிச்சி அப்பவும் கிடக்கல. பிறகு திராட்சைன்னாலே வெறுத்துப் போச்சி. சுத்தமா பிடிக்கல. இத நான் ஏன் சொல்லுரென்னா, "அதிகமா ஆசைபடுர நரியும், அதிகமான உயரத்தில இருக்கிற திராட்சையும் உருப்பட்டதா சரித்திரமே கிடையாது". 'கிடைக்கிரது கிடைக்கம இருக்காது; கிடைக்காதது எப்பவும் கிடைக்காது'.

கலைஞர் மு.கருணாநிதி:
உடன்பிறப்புக்குக் கடிதம். உடன்பிறப்பே கேளாய்! உலகத்தின் துயர் துடைக்க 'உளியின் ஓசை' படைத்த எனது கரங்கள், இன்று 'நரியின் ஆசை' என்றொரு மகத்தான காவியம் எழுதிவிட்டது. இக்கதையில் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் விபீடண நரியொன்று கானகத்தில் திராட்சைகளைக் கண்டு களிப்புற்றது. களிப்பின் விளிம்பில் நின்ற கபட நரியின் கோரப்பற்களுக்கு கிட்டாத திராட்சை ஒரு சீதை. தமிழினிமை கொண்ட திராட்சையை எட்டி எடுக்க முயன்ற தோற்றுப்போன நரி ஒரு குடிகார இராமன்.

வெண்ணிறாடை மூர்த்தி:
ப்ப்ப்ர்ர்ர்ர்! ப்பாப்பா! கதைய கேளு! காட்டுப் பக்கமா ஒரு கட்டுமஸ்தான நரி கமுக்கமா வந்துதான். அங்க கொலகொலயா தொங்குன திராட்சைய பார்த்து, நரியோட கால்கட்டைவிரல்ல இருந்து கபாலம் வரை கபால்னு வேர்த்துப்போச்சி. குபீர்னு கெளம்புன குஷியில குதூகலமான் நரி திராட்சைய லபக்குனு லாவனும்னு மனிஷா கணக்கா மடார்மடார்னு குதிச்சிதான். பல தடவை குதிச்சும் பழம் கிடைக்காத நரி, குப்புற விழுந்ததுல, பலான இடத்துல அடிபட்டு ப்பரபேன்னு கெளம்பிச்சாம்.

கேப்டன் விஜயகாந்த்:
ஏய்! நான் இப்ப சொல்லப்போற கதை, நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொரு தமிலனும் தெரிஞ்சிக்க வேண்டியது. ஒரு பாக்கிஸ்தான் நரி, காஸ்மீர்ல இருக்கிர திராட்சைக்கு ஆசைப்பட்டு திருட்டுதனமா வந்தது. எவ்வளவு எட்டியும் திராட்சை கிடைக்கம போக, இன்னைக்கு தீவிரவாதியா மாறிடிச்சி. (ஒரு வேளை உங்கள போல சுவத்துலயோ,மரத்துலயோ காலை வச்சி எட்டி இருந்தா நரிக்கு திராட்சை கிடைச்சி இருக்கும்னு நினைக்கிறேன்!!!) இப்படி இந்த வருசத்துல பார்டர கிராஸ் பண்ண நரிங்க 305, திருடப்பட்ட திராட்சைங்க 2077. இதுல தீவிரவாதியா மாறிப்போன நரிங்க 201. இத உடனடியா நிறுத்தனும்னா எமர்ஜன்சி கொண்டுவரனும். இந்த நிலமய மாத்த ஒவ்வொரு தமிலனும் முன்னுக்கு வரனும்.

மேஜர் சுந்தரராஜன்:
ஹா..ஹா...For past 25 years, கடந்த 25 வருஷமா இந்தக் கதைய யார்கிட்டயாவது சொல்லனும்னு துடிச்சிட்டு இருக்கேன். A Fox, ஒரு நரி காட்டுவழியா போறச்சே, grapes அதாவது திராட்சைய பார்த்துச்சாம். எவ்வளவு try பண்ணியும், sorry! அந்த திராட்சை நரியோட கைக்கு கிடைக்கல. இதுக்குக் காரணம், அந்த நரி ரொம்ப short...அதாவது ரொம்ப குட்டை.

Sunday, December 30, 2007

நச்சுனு எதோ ஒரு எழவு!!

தமிழில் வந்த பில்லா படம், ஹிந்தியில் வெளிவந்த டான் படத்தோட ரீமேக் என்பது எல்லாருக்கும் தெரியும். அதே சமயம் தெலுங்கிலும் ராமாராவ்காரு நடித்து 'யுகந்தர்' என்று வெளியானது. அதில் குத்துப்பாட்டுக்கு(தமிழில் வெத்தலய போட்டேண்டி! பாட்டு) ராமாராவ்காரு ஒரு ஆட்டம் போட்டு இருப்பாரு பாருங்க! ஏன் இந்த கொலைவெறினு கேட்கனும் போல தோணும். சரி நம்ம வினுசக்கரவர்த்தி, வெண்ணிறாடைமூர்த்தியோட சேர்ந்து நீங்களும் பாட்டை கேளுங்க!!
வினுசக்ரவர்த்தி: யோவ்! என்ன எழவுய்யா இது! கவிதை, கதை, கண்டராவி எந்த எழவை எழுதினாலும் நச்! நச்!னு நச்சரிக்கிறிங்க!
வெண்ணிறாடைமூர்த்தி: பாப்!! ப்ப்ப்ப்ப்ர்ர்ர்!! அப்பத்தான் ஒரு கிளுகிளுப்பா இருக்கும்!

வி.ச: எழவு என்னய்யா கிளிகிளுப்பை!
வெ.மூ: ஏன் இப்படி பீதிய கிளப்புரிங்க! படக்குனு பயத்துல லொடக்குனு என் வேட்டி கழண்டு போச்சி பாருங்க! கால்ல இருந்து கபாலம் வரை குஜால இருக்கிற மாதிரி ஒரு விஷயத்த விலாவரிய காட்டுரேன் வாங்க!
வி.ச: அடி செருப்பால! யோவ்வ்வ்வ்!! வீட்டுல இருந்து அருவாளை எடுத்துட்டு வந்தேன், எங்க வெட்டுவேன்னு எனக்கே தெரியாது!
வெ.மூ: அருவாளா? வெட்டுறத கைகாலோட நிறுத்திக்குங்க!!.....! ம்ம்ம்!! தலைய வெட்டிடாதிங்க! நான் ராமாராவ் பாட்டைத்தான் பார்க்கலாம்னு சொன்னேன். கை கால சொழட்டி என்னமா ஆடுராரு பாருங்க! நீங்க அந்தப்பாட்டை கேட்டிங்கன்னா தொபகட்டினு மயங்கி கீழ விழபோறிங்க!
வி.ச: சரி! அப்ப அந்த எழவு பாட்டை போடு! கருமம் பார்த்துத் தொலையரேன்!!


வி.ச: யோவ்! எழவு ரத்தகண்ணீர் எம்.ஆர்.ராதா பாட்டுக்கு ஆடினது மாதிரி என்ன கருமம்ய்யா இது!!
வெ.மூ: சரி! அப்ப இந்தப் பாட்டைப் பாருங்க!! அமிதாபச்சனோட ஜீனத் ப்ப்ப்ப்ப்பாப்பா வேற பப்பரபேன்னு ஆடுது, அதைப் பார்த்திங்கன்னா குப்புரபடுத்து குதுகலமாகிடுவிங்க!!


Tuesday, December 18, 2007

கூகிள் தளத்தில் பாவனாவையும் நமீதாவையும் தேடியது யார்?

கூகிள் தளத்தில் பாவனாவையும் நமீதவையும் தேடியது யார்? விடை கீழே உள்ளது.

கூகிள் தளத்தில் இந்தியர்கள் அப்படி என்னதான் தேடினார்கள் என்ற முடிச்சை கூகிளே அவிழ்த்துள்ளது.

கடந்த வருடத்தில் தேடலில் முதலிடம் வகிப்பது: ஆர்குட் (orkut)
அதிகமாக தேடப்படும்...விளையாட்டு நட்சத்திரம்: சானியா மிர்சா
அரசியல்வாதி: காந்தி

"Sex" என்ற வார்த்தையை அதிகமாகக் கொடுத்துத் தேடும் இணைய அன்பர்கள் உள்ள நாடுகள் முறையே எகிப்து, வியட்நாம், இந்தியா, துருக்கி (நம் ஆளுங்க அடங்க மாட்டாங்க போல!!). "Movie online" என்று தேடுபவர்கள் உலகிலேயே இந்தியர்கள் தான் அதிகம் என்பது, movie piracy அதிகமாவிட்டது! ஓசியில் படம் பார்க்க எல்லாரும் விரும்புராங்க என்பதையே குறிக்கிறது. "Kashmir" என்று தேடுபவர்கள் இந்தியர்களை விட பாக்கிஸ்தானியர்களே அதிகம்(எவ்வளவு அக்கறை பாருங்க அவங்களுக்கு, நீங்களும் இருக்கிங்களே!!). "terrorism" என்று அதிகம் தேடுபவர்களும்் பாகிஸ்தானியர்கள் தான். "USA" என்று தேடுபவர்கள் அமெரிக்கர்களுக்கு அடுத்து இந்தியர்கள் (இதிலிருந்து உங்களுக்கு என்ன புரிகிறது? USA-ஐ அமெரிக்கர்களுக்கு அடுத்து இந்தியர்கள் தான் அதிகம் நேசிக்கிறார்கள் போலும்). கூகிள் தளத்திலேயே "google" என்று தேடும் புத்திசாலி நபர்களும் அதிகம் இந்தியர்கள் தான். "Tsunami" என்று முறையே இந்தோநேசியா, மலேசியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா வாழ் இணைய அன்பர்கள் அதிகமாக தேடுகிறார்கள். "Job" என்று தேடுவதிலும் இந்தியர்களுக்குத்தான் முதலிடம்.

மேலும் ஒரு தகவல் என்னவென்றால், "periyar" என்ற தேடல் 2006-ன் தொடக்கத்திலிருந்து அதிகரித்துள்ளது. இதற்குக்காரணம், பெரியார் திரைப்படம் அல்லது பெரியார் சிலையுடைப்பு காரணமாக இருக்கலாம்.

கொசுரு செய்தி: "Bhavana" என்ற பெயரை இந்தியர்கள் தேடுவதை அடுத்து, UAE-லிருந்து தான் அதிகமாக தேடப்படுகிறது.(தம்பி உமாகதிர் UAE-ல தான் இருக்கிறார் என்பதை வாசகர்கள் மறக்கக்கூடாது :) ).

"Namitha" என்ற பெயரை இந்தியர்களுக்கு அடுத்து இலங்கையிலிருந்து தான் தேடப்படுகிறது (யாரந்த நமிதாவின் இலங்கை ரசிகர்கள்? குறிப்பாக கொழும்பில் தான்! உண்மையை நீங்களே சொல்லி விடுங்கள் :)) ).

"Sivaji" என்று இந்தியாவை விட இலங்கையிலிருந்து தான் அதிகமாக தேடப்பட்டுள்ளது. (இதுக்கு என்ன சொல்லுரிங்கோ??)

நீங்களும் சமத்தா Google trends-ல போய் தேடிப் பாருங்க.

Tuesday, November 20, 2007

பில்லிசூன்யம் வைத்துவிட்டார்கள் குமுறுகிறார் எட்டியூரப்பா - மேலும் ரஜினிகாந்த் அறிவுரை

கர்நாடகத்தின் முதலமைச்சர் பதவி பறிபோன பிறகு எட்டியூரப்பா விரக்தி விளிம்புக்கே சென்றுவிட்டார் போலும். சாத்திரலு, சம்பிரதாயலுவில் அதிக நாட்டமுள்ள எட்டியூரப்பா எண்கணிதப்படி 'எடியூரப்பா" என்ற தன் பெயரை எட்டியூரப்பா என்று மாற்றி வைத்துக்கொண்டவர். ஆனால் அதனால் ஒருபலனும் காணவில்லை. இப்படி அடிமேல் அடி வாங்கி நொந்து போன எட்டியூரப்பா, இப்போது தேடகவுடா மீது சொன்ன குற்றச்சாட்டு என்னவென்றால், "தேவகவுடாவும் அவரது மகன் குமாரசாமியும் எனக்கு பில்லிசூன்யம் வைத்துள்ளனர்" என்பதே.இதற்கு பயந்து உயில் கூட எழுதி வைத்துவிட்டதாக கூறுகிறார். தான் இறந்தால் அதற்கு கவுடாவும் குமாரசாமியும் தான் காரணம் என்று வேறு கூறியுள்ளார்.

இது பற்றி, நம்ம உட்டலக்கடி உலகநாதன் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கருத்து கேட்க விரைந்தார். போயஸ்தோட்டத்தில், தேடியும் கிடைக்காத ரஜினி சென்னையிலுள்ள பாபாஜி ஆசிரமத்தில் கிடைத்தார்.

உ.உ: கன்னடர்களை விட, பிஜேபியை அதிகம் நேசிக்கும் நீங்க இந்த பில்லிசூன்யத்தை பத்தி சொல்லவருவது என்ன?

ரஜினி: என்னை வாலவைக்காத தெய்வங்களான கன்னடமக்களுக்கு என்னோட வணக்கங்கள், சமீபத்துல எட்டியுரப்பாவுக்கு பில்லிசூன்யம் வச்சிடாங்களாம்னு கேள்விபட்டேன். அதே பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது.(தெரியாம ஏன் சாமி பேசுறே!!) கர்நாடகல நடக்குறது தான் உங்களுக்கு தெரியும்.ஆனா வட இந்தியாவே எரிஞ்சிட்டு இருக்கு. அது உங்களுக்குத் தெரியாது. இத கவுடா ஐயா சுமூகமா எல்லாரோடவும் கலந்துபேசி பில்லிசூனியம் வைக்கணும். எந்த தலைவர்னு பேதமில்லாமல் வைக்க ஏற்பாடு செய்யணும்.

உ.உ.; இத்தகைய பேச்சுக்கு உங்கள் ஒத்துழைப்பு கிடைக்குமா?

ரஜினி: முடிய வச்சு தான் பில்லி சூன்யம் வைக்க முடியுமாம். இங்க சில பேர் முடியே இல்லாத தைரியத்தில் சேது இடிக்கபோறேன்னு சொல்லிட்டு இருக்காங்க!!அவங்களுக்கும் காவிரி வேணும்னு கேட்கிறவனுக்கும், பில்லிசூன்யம் வச்சா, நான் வேணும்ன்னா என்னோட பாக்கெட்ல இருந்து ஒரு கோடி ரூபாய் தரேன்.

உ.உ: சார்! உங்க பாணில இந்த விஷயத்துக்கு ஒரு குட்டிகதை சொல்லி முடிங்க, அப்ப தான் வாசகர்கள் விரும்பி படிப்பாங்க!!

ரஜினி: ஒரு ஊருல அத்துவானினு ஒருத்தர் இருந்தார். அவர் எப்பவும் எதயாவது இடிக்கனும் இடிக்கனும்னு சுத்திகிட்டு இருப்பாரு, இப்படித்தான் இவரு சின்ன வயசுல 10-15 மசூதி, 20-30 கிழவிகளை இடிச்சி தள்ளியிருந்தாரு. இதைப்பார்த்த இவரோட அப்பா. இவரை கூட்டிக்கொண்டு போய் சேதுசமுத்திரத்தில் விட்டுட்டார். விடியவிடிய சேதுவை இடிச்சார். பிறகு அவருக்கு எதையும் அழிக்கிறது புடிக்கல. மகாவதார் பாபாவோட பக்தரா மாறிட்டார். நீங்களும் வாங்க பாபாவோட பக்தரா மாறுங்க.

உ.உ.: ஐயோ! வேணம் சாமி இந்த விளையாட்டு!! எஸ்கேப்!!

Monday, November 19, 2007

ராமர் பிறந்தநாள் கி.மு., 5114, ஜன.10 - விஜயகாந்த் என்ன சொல்லிட போறாரு?

ராமர் பிறந்தது கி.மு., 5114ம் ஆண்டு, ஜனவரி 10ம் தேதி என்று கூறியுள்ளார் தொல்லியல் மற்றும் வானியல் ஆய்வு நிபுணர் டி.கே.ஹரி.


சென்னையில் செயல்பட்டு வரும் பாரத் ஞான் என்ற அமைப்பின் நிறுவனர் டி.கே.ஹரி. தொல்லியல், வானியல் மற்றும் ஜாதக நிபுணர். ஹரி துவக்கியுள்ள அமைப்பு, இந்து புராணங்களில் கூறப்பட்டு இருப்பவற்றை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து வருகிறது.

பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள கிரகங்களின் அம்சங்கள் அடிப்படையிலும், ராமாயண இதிகாசத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளின் அடிப்படையிலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளோரின் பிறந்த தினத்தை, ஆங்கில காலண்டர் முறைப்படி இவர் கணித்துள்ளார்.இதற்கெனவே, தேதிகளை கண்டுபிடிக்கும் கம்ப்யூட்டர் மென் பொருளையும் தயாரித்துள்ளார். இதன் மூலமும், புஷ்கர் பட்நாகர் எழுதிய, "கடவுள் ராமரின் காலத்தை நாளிடுதல்"் என்ற புத்தகத்தின் அடிப்படையிலும், ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களின் அடிப்படையிலும், இந்த தேதிகளை ஹரி கண்டுபிடித்துள் ளார்.

ஹரியின் கணக்குப்படி, ராமருக்கு ஒரு நாள் பிறகு பிறந்தவர் பரதர். ஹரி கூறுகிறார். ராமர் கி.மு., 5114ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியும், பரதன் அதே ஆண்டு ஜனவரி 11ம் தேதியும் பிறந்துள்ளனர். பரதனுக்கு கி.மு. 5089ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி முடிசூட்டு விழா நடைபெற்றது. பரதனுக்கு முடிசூட்டு விழா முடிந்ததும் ராமர் தனது 25வது வயதில் மனைவி சீதாதேவி மற்றும் லட்சுமணனோடு வனவாசம் சென்றார். ராவணனுடன் போருக்கு முன்பாக, இலங்கைக்கு அனுமன் கி.மு., 5076ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி சென்று, அங்கிருந்து இரண்டு நாள் கழித்து, செப்டம்பர் 14ம் தேதி இந்தியா திரும்பி உள்ளார். (கள்ளதோணியிலா வந்தாரு, 2 நாள் ஆகுது??) இதை கண்டுபிடிப்பதற்காக, 27 நட்சத்திரங்கள் மற்றும் ஏழு கோள்களின் அமைப்புகள் ஆராயப் பட்டன. அவை இருந்த இடம், ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. ராமர் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர். நாசா மையமும் கோள்களின் அமைப்பு குறித்து விரிவாக ஆராய்ந்து வருகிறது. (இந்த தகவலை பத்தி நாசாவுக்கு தெரியுமா? ஐ!!! அமெரிக்காவில் இருக்கும் தமிழ்மண அன்பர்கள் ஜாதகம், ஜோசியம், கைரேகை எல்லாம் இனிமேல நாசாவுலயே பார்த்துகலாம்). ராமர் குறித்த எங்களது ஆராய்ச்சி, முழுக்க முழுக்க அறிவியல் அடிப்படையிலானது. இவ்வாறு ஹரி கூறினார். (நன்றி: தினமலர்).


இந்த செய்தி பத்தி நம்ம கேப்டன் என்ன சொல்லியிருப்பாருனு யோசிச்சா.....!!!????!!!!????

//நாட்டுல எவ்வளவோ ஜனங்க கஸ்டப்படும்போது, நீங்க இராமருக்கு பொறந்தநாள கண்டுபிடிச்சிட்டு இருக்கீங்க. இதெல்லாம் தெரிஞ்சிகிட்டு நாளைக்கு இராமர்க்கு காவெண்ட்ல சீட்டா வாங்க போறாரு. இந்தியாவுல மொத்தம் 2038 கடவுள் இருக்கு, அதுல பூமியில பொறந்த கடவுள் 832. சாகாத கடவுள் 543. செத்துபோன கடவுள் 113, கல்யாணம் செய்துகிட்ட கடவுள் 1002, சாமியாரா போன கடவுள் 885. இதுகெல்லாம் பிறந்தநாள் கண்டுபிடிக்கத்தான் முடியுமா? அப்படி கண்டு பிடிச்சாலும் கேக் வெட்டி கொண்டாடத்தான் முடியுமா? அவனவன் இருக்கிற கஷ்டத்துல ஏன் பொறந்தோம்னு யோசிட்டு இருக்கான். ஆனா நீங்க இராமருக்கு பிறப்புச்சான்றிதழும், நபிகள்நாயகத்துக்கு சாதிச்சான்றிதழ் கொடுத்துட்டு இருக்கீங்க. இத ஒவ்வொரு தமிலனும் யோசிக்கனும். இவங்கள அடிச்சா உத்தரபிரதேஸ்ல இருக்கிற இராமர் இல்ல, உடுமலைபேட்டை இராமர் கூட வரமாட்டான்். பாகிஸ்தான் தீவிரவாதிகளை புடிக்க என்னய பர்வேஸ்முஸ்ரப் குபுட்டு இருக்காரு. நான் வரட்டுமா? ஆங்...//

Wednesday, July 11, 2007

சங்கரின் அடுத்த படம் தயாராக உள்ளது

சங்கரின் அடுத்த படம் ரோபோ இல்லை என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகிறது. ஹாலிவுட்டின் வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில், 200 கோடி செலவில் ஜேம்ஸ்பாண்ட் படம் எடுத்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதையடுத்து பத்திரிகையாளர்கள் இயக்குனர் சங்கரை மொய்த்தவண்ணம் உள்ளனர். நேற்று வெண்ணெய் டிவியிலிருந்து நிருபருக்கு சங்கர் வழங்கிய பேட்டி மூலம் கிடைத்துள்ள சில தகவல்கள்.

சங்கர் இதுவரை ஜெண்டில்மேன், முதல்வன் படங்களில் தமிழகத்திற்கு மெசேஜ் சொன்னார். இந்தியன், சிவாஜி படங்களில் இந்தியாவிற்கே மெசேஜ் சொன்னார் இப்ப எடுக்கபோற படத்தில் உலகத்துக்கே மெசேஜ் சொல்லப்போராராம்.சங்கரோட படத்தில் கதையே இல்லைனு ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஜேம்ஸ்பாண்ட் கதை எல்லாருக்கும் தெரியுமே,அதனால மக்கள் இனி எதுவும் சொல்ல முடியாது என்று எண்ணி இந்த படத்தை தொடங்கியுள்ளார்.சுத்தமான தமிழில் 'கம்னாட்டி' என்று படத்திற்கு பெயர் வைத்துள்ளதால் வரிவிலக்கும் கிடைத்துவிட்டதாம். தமிழில் மட்டுமல்லாமல் அனைத்து இந்தியமொழிகளிலும், ஆங்கிலம், பிரென்சு, ஜெர்மன், மற்றும் C, C++,Java மொழிகளிலும் வெளியாக உள்ளது.

இப்படத்தின் கதையின்படி ஜேம்ஸ்பாண்ட் 'சிவாஜி' படத்தின் நாயகனைப் போன்றவர்கள் 20 வருடத்தில் 250 கோடி எப்படி சம்பாதித்தார்கள் என்பதை ஆப்ரேஷன் KAM மூலம் (KAM என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? Ketaal Adiththu Mithippen) துப்பறிந்து கண்டுபிடிக்கிறார். அவர்களுடைய தகாத செயல்களை தவிடுபொடியாக்கி, பின்னிபெடல் எடுக்கிறார். அதனால் தான் படத்தின் ஆங்கிலப்பெயர் KAM-naughty.படத்தில் பாட்டு ரொம்ப ரிச்சா இருக்கிறதாம்.

சமீபத்தில் எகிப்த்தில் பாடல் ஒன்று எடுக்கப்பட்டது. எகிப்த்திலுள்ள பிரமிட்டுகளுக்கு சிவப்பு, மஞ்சள், பச்சை என வண்ணங்கள் அடிக்கப்பட்டு 500 நடனக்கலைஞர்களுடன் ஜெனிபர் லோபஸுடன் கதாநாயகன் ஆடும் பாடல் எடுக்கப்பட்டுள்ளது. அப்பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்,

பல்லேலக்கா பல்லேலக்கா பல்லேலக்கா!

அமெரிக்கா ஆப்ரிக்கா அண்டார்டிக்கா!....

நைல்நதியோரமும் நறுமுகைப்பூவும் மறந்து போகுமா?

கிளியோபத்ராவும் கிளிகொத்தும் பழங்களும் தொலைந்து போகுமா?.....

என்று தொடங்கும் பாடலை வைரமுத்து இயற்றியுள்ளார்.

படத்தில் விறுவிறுப்பான சைக்கிள், கார் சேஸிங் காட்சிகளும் உண்டு. வீட்டிற்கு பால் கொடுக்காமல் போகும் பால்காரனுடைய சைக்கிளை காரில் சேஸ் செய்து பால் வாங்கும் காட்சி, தெருநாய் துரத்தும் போது வேகமாக சைக்கிளில் செல்லும் காட்சி என அனைத்தும் பார்ப்போரை திகைப்பில் ஆழ்த்தும்.

படத்தோட கதாநாயகி ஒரு பண்பாடுடைய தமிழ் பொண்ணா, பேவாட்ச்(ரிஸ்ட்வாட்ச் இல்ல) புகழ் பமீலா நடிக்கிறாங்க. ஏனென்றால் அவங்க தான் விலகாம இருக்க தாவணி, தொப்புள் தெரியாம இருக்க பாவடை என எதையும் போட மாட்டாங்க. உள்ளாடையோட மட்டும் வருவாங்க. படத்தோட முக்கியமான காட்சியே க்ளைமேக்ஸ் தான், ஏனென்றால் சங்கர் அங்க தான் பிறந்த இந்தியாவிற்கு மெசேஜ் சொல்லுரார். கதாநாயகன் அந்த மெசேஜை பிரதமருக்கு எப்படி சொல்லுறாருனு நீங்களே பாருங்க.

கா: இமயமலையையும், நம்ம செயிந்த் தாமஸ்மவுண்டையும் இணைக்கக் கூடிய ஒரு திட்டத்தை நான் செயல்படுத்தலாம்னு இருக்கேன். அதுக்கு உங்க உதவி தேவை.

பி: இமயமலையையும், செ.தா.மவுண்டையுமா? எப்படி?

கா: சொல்லுரேன். கங்கையையும், காவிரியையும் இணைச்சா அது தற்காலிகமாகத் தான் உதவும், பிறகு மறுபடியும் தண்ணீர் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது. அதனால கங்கை உற்பத்தியாகும் இமயமலையை தென்னிந்தியா வரை நீட்டனும்.

பி: (தலைப்பாகை கழட்டி தலைய சொறிந்து கொண்டே) இதெல்லாம் எப்படி முடியும்பா? :(

கா: முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. பொறுப்பை என்னிடத்தில் ஒப்படைங்க நான் பார்த்துக்கிரேன..ஆங்...(சொல்லிட்டு வெளியே வரார்...பின்னணி இசை முழங்க).

தில்லியிலிருந்து சென்னைக்கு கதாநாயகன் நடந்து வர, (பொதுவாக சங்கர் படத்தில் காட்டுறது போல) வடக்கில் இருந்து தெற்கு வரை இமயம் கிராபிக்ஸில் நீளுது. எங்க பார்த்தாலும் ஆறா ஓடுது. தென்னை, பனை, ஆலமரம், அரசமரம் எல்லாம் முளைக்குது. பஞ்சமெல்லாம் தீர்ந்து போகுது.

ஒரு கூடுதல் தகவல் என்னவென்றால், ஜேம்ஸ்பாண்டாக நடிக்கப்போவது நம்ம குட்டிபிசாசு தான். (சினிமாபுகழ் ச்சுப்பரமணி(கண்மணி அக்காவோட நாய்குட்டி) தான் ரெகமெண்டேசன் பண்ணி இருக்கு.)

(மீதி கப்ஸா அடுத்த வாரம் தொடரும்)

பி.கு.: இது என்னோட 51-வது இடுகையாக்கும்.

நெட்ல பமீலா ஒழுங்கா துணி அணிந்து கொண்டுள்ள புகைப்படத்தைத்தேட எவ்வளவு நேரம் ஆச்சி தெரியுமா? அப்படி தேடியும் இது தான் கிடைத்தது.

Friday, July 06, 2007

டெலக்ஸ் பாண்டியன் யாருணு தெரியுமா?

டெலக்ஸ் பாண்டியன் யாருணு தெரியுமா? நான் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும்போது, எங்க ரூம்மேட் ஒருத்தன். கார்த்தினு பேரு.தினமும் மூணு வேளை சாப்பிடுரானோ இல்லயோ, மேக்கப் போட்டுப்பான். பொண்ணுகளோட கடலை ரொம்ப வறுப்பான். இதைப்பார்த்தா எங்க வயறு சும்மா இருக்குமா கும்மிட்டி அடுப்பு மாதிரி எரிய ஆரம்பிச்சது. அவனை பல்ப் ஆக்க சமயம் பார்த்துட்டு இருந்தோம். வழக்கம் போல அன்னைக்கு இரவு 8:00 மணிக்கு மேக்கப் போட்டுட்டு இருந்தான். நான் "டேய் கார்த்தி மீசை உனக்கு ஏண்டா சரியா வளரல" என்று வாய கிளரினேன். "தெரியல மச்சான்! அது எப்பவும் அப்படித்தான் இருக்கு!" என்றான் கார்த்தி. இதைகேட்ட நம்ம பசங்க நான் போட்ட கோட்டுல ரோடு போட ஆரம்பிச்சாணுங்க."அசிங்கம்டா! ஒரு ஆம்பளைன்னா மீசை நல்லா இருக்கணும்!" என்று சொல்லி அவனை உசுப்பேத்தினானுங்க. அந்த அப்பாவி கார்த்தி என்ன செய்தா மீசை நல்லா வளரும்னு இந்த மடப்பசங்களையே ஐடியா கேட்டான். இவனுங்க குஷி ஆகிட்டானுங்க. "மஞ்சள் தடவினா மீசை நல்லா வரும். மீசை மழிச்சிட்டு தடவினா இன்னும் நல்லா வரும்" என்று கூட்டாளி ஒருத்தன் சொன்னான். "பாருடா நம்ம சீனியோட மீசைய கம்பிகட்டு போல, எல்லாம் மங்சளோட மகிமை" என்று இன்னொருத்தன் கொளுத்தி போட்டான். இவனுங்க அள்ளி விட்டத எல்லாம் அந்த லூசும் நம்பிட்டு இருந்தான். நிலைமை புரியாம "சரி நான் இப்பவே மீசைய மழிச்சிக்கிரேன்" என்று சொல்லிட்டு போய், மீசைய எடுத்துட்டான். மீசையில்லாத அந்த திருமுகத்த பார்த்த சிரிப்பு தாங்கம நான் வெளியே ஓடிட்டேன். கோபுரம் பூசுமஞ்சள் வாங்கி வந்து கொஞ்சம் தடவிட்டு படுத்துட்டான். எங்களுக்கு சிரிப்பு ஒரு பக்கம், பயம் ஒரு பக்கம் ( எங்க இவனுக்கு சுத்தமா மீசை வரம போயிடுமோ என்று).

மறுநாள் காலை மஞ்சள் போட்டது, முகத்தை கழுவின பிறகும் நல்லா தெரிஞ்சது. காலேஜ்க்கு போனான். இன்னைக்கு சாயுங்காலம் கொலை விழ்ப்போகுதுனு நெனச்சேன். சாயுங்காலம் எல்லாரும் அரட்டை அடிச்சிட்டு இருந்தோம். யாரோடும் பேசம இருந்தான். ஒருத்தன் ஆரம்பிச்சான் "என்ன மாமு! நம்ம கார்த்திக்கு மீசை வந்துடுமா?". சும்மா இருந்த சன்கை ஊதி கெடுத்த மாதிரி, கார்த்தி எழுந்து வந்து எல்லாரையும் சபிக்க ஆரம்பிச்சான். பொரம்போக்கு, நீங்க உறுப்படுவிங்கலா,... இப்படி அவனுக்கு தெரிந்த வார்த்தைல அர்ச்சனை செய்தான். எப்படியோ யாரையும் அடிக்கல. அப்ப 'என்னம்மா கண்ணு' படத்தில் வடிவேலு மஞ்சள் பூசினதால மீசை இல்லாம சுத்துவார். அந்த படத்தில் அவரோட பேரு "டெலக்ஸ் பாண்டியன்". இந்த பேர எங்க கார்த்திக்கு வச்சிட்டோம். பொண்ணுகளோட பேசிட்டு இருந்தா, டெலக்ஸ்்னு கூப்பிட்டா போதும், சும்மா கன்னுகுட்டி போல துள்ளி ஓடிவருவான். அப்படி ஒரு பாசம் அவனுக்கு எங்க மேல. இல்லாட்டி நாங்க பக்கத்தில் விலாவரியா சொல்லி மானத்தை வாங்குவோம். இது தான் சதாரண கார்த்தி டெலக்ஸ் பாண்டியன் ஆன கதை.

பி.கு.: இதை பார்த்து அன்பர்கள் யாரும்் மீசை எடுத்து மஞ்சள் தடவி சாருக், சல்மான் ஆக முயற்சி செய்யாதீங்க. டெலக்ஸ்க்கு மீசையெல்லாம் வந்தது, வரம போகல. இதை தெரிஞ்சி தான் இந்த விளையாட்டுல நாங்க இறங்கினோம்.

Thursday, June 21, 2007

சந்தேகத்திற்குரிய சாமியாரும் சீடனும் காந்திசிலையருகே கைது


தமிழ்மண அன்பர்களுக்காக வேண்டுகோளுகிணங்க, உலக சின்னத்திரையில் முதன்முறையாக வெண்ணெய் டிவியில் சென்னை சந்திப்பை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அழைப்பாளராக பாசக்கார குடும்ப தலைவர் தவத்திரு ஸ்ரீஅபிஅப்பா சுவாமிகள் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாசக்கார குடும்பத்தோட அடாவடி சந்திப்பு எங்கே? எங்கே? என்று எல்லாரும் கேட்கிறாங்க? ஆனால் எங்கே சந்திப்புனு இன்னும் சொல்லாம கண்மணி அக்கா ரகசியமா வச்சிட்டு இருக்காங்க. சரி அத விடுவோம்!! நமக்கு எதுக்கு மேலிடத்து பொல்லாப்பு. கண்மணி அக்கா கலந்துகிட்டா மங்கை கட்டவுட், பேனர் செலவு ஏத்துகிறதா சொல்லி இருக்காங்க. குட்டிபிசாசு சோறு ஓசில சோறு போட்டா வரேனு சொல்லி இருக்காம். அய்யனார் காந்திசிலை பக்கத்தில் சந்திப்ப வச்சிக்கலாம்னு சொல்லி இருக்கார். அதுமட்டுமில்லாமல், அங்க சந்திப்பு நடத்த பில்லா, ரங்கா படத்துல வர மாதிரி கோட்வர்ட் இருக்காம். காந்தி சிலை பக்கத்தில் போய் எட்டுகால் பூச்சிக்கு எத்தனை கால்னு கேட்கனுமாம். அதுக்கு பதிலா மத்தவங்க செருப்ப கால்ல தான் போடணும்னு சொல்லுவாங்களாம். இப்படி நிறைய பில்டப்போட சென்னை சந்திப்பு நடக்கவிருக்கிறது.

இடம்: காந்திசிலை

இம்சைகள்: பாசக்கார குடும்பம்

(சோத்துக்கு ஆசைப்பட்டு குட்டிபிசாசு இரவே வந்து பீச்சுல படுத்துட்டு, காந்திசிலை பக்கத்தில் பசியோட நின்னுட்டு, போறவன்..வரவன்..எல்லாரையும் கோட்வேர்டு சொல்லி இம்சை பன்ணிட்டு இருக்கு)

கு.பி.: எட்டுகால் பூச்சிக்கு எத்தனைகால்?

சுண்டல் விக்கிரவன்: மூஞ்ச பாரு! சாவுகிராக்கி! காலங்காத்தால ஏண்டா என் உயிர வாங்குர. போவும்போதும் வரும் போதும் சும்மா இதே கேள்விய கேட்டு கடுப்பேத்தினு கீற! மவனே இன்னோரு தபா கேட்ட, கேக்கிர வாய கீச்சி புடுவேன்!

குட்டிபிசாசு திட்டு வாங்கி முடித்த பிறகு, அந்த பக்கம் வந்த ஒரு பொண்ணப்பார்த்து குட்டிபிசாசு இதே கேள்விய கேட்க, அந்த பொண்ணு கோழிக்கு ரெண்டு கால்னு பதில் சொன்னது. யாருனு உங்களுக்கு தெரிஞ்சி இருக்குமே! சாட்ஷாத் நம்ம காயத்ரி தான்! மன்னிக்கவும்... கவிதாயினி காயத்ரி. கொஞ்சநேரத்துல பாசமலர் ஒருத்தர் வந்தாங்க. குட்டிபிசாசு உடன்பிறப்ப பார்த்து மலைத்துப்போய் நின்னுட்டு இருந்தது. நடுவுல புகுந்த காயத்ரி மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேறுவேறு பாதையில் போய்விட்டன! அவை ஒன்ரோடொன்று பார்த்துக்கொள்ளும்போது பேசமுடியவில்லையே!னு ஒரு டயலாக் விட, ஒரே ஆனந்தகண்ணீர்!! வந்தது யாருமில்ல நம்ம கண்மணி அக்கா தான்.


சிறிதுநேரம் கழித்து பஜனைப்பாட்டோட காவி தறித்து ஒரு சாமியார் வந்தார்.

கு.பி.: காசு எதுவும் இல்ல, வேற எங்கயாச்சும் போங்க!!

சாமி: குழந்தாய் குட்டி பிசாசு!

கு.பி.: என்னோட பேரு உங்களுக்கு எப்படி தெரியும்

சாமி: என்னை யாரென்று தெரியவில்லையா! நான் தான் சென்னை சந்திப்பின் சிறப்பு விருந்தினன் தவத்திரு ஸ்ரீஸ்ரீ அபிஅப்பா சுவாமிகள்

சாமி: இந்தா பிரசாதம்!!

கு.பி.: என்ன சாமி! பிரசாதம்னு சொல்லிட்டு விபூதி தரீங்க! பொங்கல், புளியோதரை எல்லாம் தர மாட்டிங்களா?

சாமி: நீ ஓசியில் உண்டகட்டி வாங்கி சாப்பிடுரன் போல, உனக்கு விபூதியே அதிகம்! பொங்கல், புளியோதரை வேண்டுமென்றால் சரவணபவனுக்கு போய் சாப்பிடு, இப்படி ஓசி சோத்துக்கு அலைவது இழுக்கு!!

அந்த சமயம் பார்த்து பாசக்கார கொலைவெறி கொள்கை வீரர்கள் கும்பலாக வந்தனர். முத்துலக்ஷ்மி, சென்ஷி, இராம், கோபி, இம்சையரசி, ஜி என எல்லோரும் வந்தனர். இந்த கூட்டத்தைப்பார்த்து எதோ உத்தரவு வாங்கம மாநாடு நடத்தப்போரங்கனு உடனே போலிஸ் வந்துவிட்டது. குட்டிபிசாசும் அபிஅப்பாவும் திருதிருவென்று விழிக்க, ரெண்டு பேரயும் சந்தேகத்தின் பேரில் போலிஸ் அழைத்துச்சென்றது. மறுநாள் காலை தினத்தந்தியில் சந்தேகத்திற்குரிய சாமியரும் சீடனும் காந்திசிலையருகே கைது என்று போடப்பட்டு, பருத்திவீரன் படத்தில் வருவதுபோல, கீழே சாமிஜியும், குட்டிபிசாசும் குத்துகால் போட்டு அமர்ந்து இருந்தனர்.

Tuesday, June 19, 2007

சாணி - ஓட்டம் - ஒரு சம்பவம் (1)

நான் சிறுவயசிலிருந்தே நல்லா ஓடுவேன், தடகள வீரன் இல்லாட்டியும் சுமாராக ஓடுவேன். ஓடுகாலி! ஓடுகாலி!னு நீங்க சொல்லுரது என்னோட காதில் கேட்குது. இதுகெல்லாம் ஒரு இடுகையானு கேட்காதீங்க! முழுசா படிச்சிட்டு சொல்லுங்க, எப்படி பாதிக்கப்பட்டு இருக்கேனு தெரியும்.

எனக்கு தெரிந்த பேராசிரியர் ஒருவர் தன்னுடைய விடுமுறை விண்ணப்பத்தை அவருடைய கல்லூரியில் கொடுத்துவிட்டு வருமாறு அனுப்பினார். நான் அங்கு சென்ற பின் தான், அன்று கல்லூரி மாணவர்கள் போராட்டம் எதோ செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. நான் கல்லூரிக்குள் நுழைய முடியாமல் வெளியே நின்றேன். மாணவர்கள் கல்லூரி அருகில் இருந்த தேசிய நெடுஞ்சாலையை தடுத்தவாறு போராட்டம் நடத்தினர். காவல்துறை வந்து மாணவர்களை விலக்கிக் கொண்டு இருந்தது. அச்சமயம் யாரோ ஒரு மாணவன் ஒரு காவல் அதிகாரி மீது கலெரிந்துவிட்டான். உடனே காவல்துறை எல்லா மாணவரையும் அடிக்க துவங்கியது. நான் அக்கல்லூரி மாணவன் இல்லையென்றாலும் கண்டிப்பாக என்னையும் அடிப்பார்கள் என்று நானும் ஓட வேண்டிய நிலை. நான் ஓடிக்கொண்டு இருக்கும் போது, ஜீப்பில் வந்த காவல்துறை என்னுடைய பின்னால் ஓடிவந்த ஒரு மாணவக்கூட்டத்தை லத்தியால் எல்லோருடைய பின்னாலும் அடித்துப் பிண்ணியது. காவலதிகாரிகள் அம்மாணவர்களை கண்டதும் மேலும் ஓடலானேன். போகும்வழியில் எந்த பேருந்தும் கைகாட்டியும் நிற்கவில்லை. கைகாட்டியதும் ஓடி ஏறமுடியாதபடி வெகுவேகமாக சென்றன. ஓடிஓடி வண்டிமாடு போல நுரை தள்ளிவிட்டது. ஓடும் வழியில் ஒரு குட்டிச்சுவரைப் பார்த்தேன்.

இனியும் இப்படியே ஓடிக்கொண்டிருந்தால் நாமும் தர்மஅடி வாங்குவோம் என முடிவு எண்ணி, வேகமாக ஓடிச்சென்று அதைத் தாண்டினேன். தாண்டிய மறுகணம் குட்டிச்சுவரின் மறுபக்கம் குவிக்கப்பட்ட சாணியில் முட்டியளவு இறங்கி இருந்தேன். பழைய சாணி போல சரியான நாற்றம், எப்படியோ கஷ்டப்பட்டு வெளியே வந்தேன். ஒரு பெண் என்னைப் பார்த்து சிரித்தபடி நின்று கொண்டிருந்தார். எப்படியோ, புண்ணியவதி ஒரு குடம் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். சாணி கழுவின பிறகும் என்னை சுற்றி அது விட்டுச்சென்ற மணத்தை என்னாலேயே தாங்க முடியவில்லை. பேருந்தில் ஏறினால் எல்லாரும் மூக்கை மூடி எனக்கு அவமானத்தை ஏற்படுத்திவிடுவார்கள் என்று முடிவு செய்து நடந்தே வீட்டுக்கு சென்றேன்.

இப்ப சொல்லுங்க! என்னோட புலம்பல் அவசியம் தானே!!

Monday, June 18, 2007

பாசக்கார குடும்பம் இணைந்து மிரட்டும் – பாசக்கார 'முதல்வன'் ரீமேக்

வெண்ணெய் டிவிக்கான டாக்குமெண்டரி எடுக்க நகராட்சில நாய் புடிக்கிரது எப்படினு நிருபர் குட்டிபிசாசு படம் எடுத்து படம் காட்டிட்டு இருக்குது. அப்ப குட்டிபிசாசு செல்போன்ல ஒரு எஸ்.எம்.எஸ். மெசேஜ் வருது. என்னனு பார்த்தா உலக பிரபலமான (தினமணில மட்டும் இல்ல? பி.பி.சி. கூட சொன்னாங்க! பார்க்கலயா நீங்க! பார்க்கட்டி நீங்க வேஸ்ட்!) பாசக்கார குடும்பத்த பத்தி டாக்குமெண்டரி எடுக்க சொல்லி வெண்ணெய் டிவில இருந்து மெசேஜ். குட்டிபிசாசு உடனே தமிழ்மணத்தில போய் பார்க்குது. சொதப்பினது யாருனு கண்மணி அக்கா போட்ட பதிவின் கும்மில கண்மணி அக்கா தான் சொதப்பினதுனும், அதுமட்டுமில்லாமல் தருமியிடம் கையூட்டு வாங்கிட்டாங்கனு யாரோ (பழனியாண்டவன் மொட்டை மேல சத்தியமா நான் கும்மியடிக்கல) அடிச்ச கும்மியால பா.கு. உறுப்பினர் மத்தியில் குடுமிப்பிடி சண்டை.

பா.கு. தீவிர உறுப்பினர் உடன்பிறப்பு மைபிரண்ட் ஹேய்! என்னை மீறி கும்மி அடிச்சிடுவிங்களா! அடிச்சி பாருங்க! தமிழ்மணமே ஸ்தம்பிச்சிடும்! ஜாக்கிரதை

பொருளாளர் அய்யனார் இதும்மா தங்கச்சி! இதெல்லாம்....”

கவிதாயினி (போதுமா!) காயத்ரி இந்த டி.ஆர் செண்டி எல்லாம் இங்க வேண்டாம்! கும்மியடிச்ச குரங்கு யாருனு தெரியனும்! கண்மணி அக்காவ திட்டின கம்மினாட்டி யாருனு தெரியனும்!

மகளிரணி சிங்கம் மங்கை மின்னல் கும்மியடிக்கிறத நிறுத்து, தமிழ்மணமே கும்மியில்லாம கிடக்கட்டும்!

கொ.ப.செ.மின்னுதுமின்னல் கும்மி இல்லாம தமிழ்மணமே கஷ்டப்பட, பா.கு. தலைவர் மட்டும் இதெல்லாம் கண்டும்காணம ஊர்ல போய் எஞ்ஞாய் பண்ணிட்டு இருக்கிறத கேள்விபட்டு குட்டிபிசாசு அவர பேட்டி எடுக்க போகுது.

இடம்: வெண்ணெய் டிவி ஆபிஸ்

இம்சைகள்: குட்டிபிசாசு, அபிஅப்பா (முதல்வன் ரகுவரன் போல பேசுனும்)

கு.பி: ஐயா! நமீதாவையும் உங்களயும் வச்சி தமிழ்மணத்துல கிசுகிசுக்கிறாங்கலே உண்மையா?

அ.அ: நாலு பேரு நாலு விதமாதான் சொல்லுவான்

கு.பி: நாலு பேரு கேட்கல நான் சும்மா கேட்டேன்! அப்ப தானே பேட்டி ஒரு கிலுகிலுப்பா இருக்கும்

அ. அ.: டேய்! கேட்க வந்தத முடிட்டு ஒழுங்கா கேளு! கண்டத கேட்டு குடும்பத்துல குண்டு போட்ட கொன்னுபுடுவேன்!

கு.பி.: சரிங்க ஐயா! பா.கு.வோட உட்கட்சி பூசல் காரணமாக தமிழ்மணத்தில் கும்மியடிக்க ஆள் இல்லயாமே!


அ.அ.: யார் சொன்னது! ஆதாரம் இல்லாம பேசாதிங்க!

(இது ரஜினி தான்! சத்தியமா அபிஅப்பாசாமி இல்ல)

கு.பி.: பா.கு.வோட மூத்த பதிவாளர் மற்றும் ஆலோசகர் தருமி ஐயாவோட சமீபத்திய இடுகையில 7 கும்மிதான் இருக்கு! கொ.ப.செ. குட்டிபிசாசுவோட நேத்து போட்ட இடுகை இன்னும் படிக்க ஆளில்லாமல் ஈயடிக்குது.

அ.அ.: கண்மணி அக்காவோட பதிவுல 40 கும்மி வந்து இருக்கு உங்களுக்கு தெரியுமா?

கு.பி.: அவங்க சொந்த காசுல வாடகைவீட்டுக்கு சுண்ணாம்பு அடிக்கிரது எல்லாருக்கும் தெரியுமே (உண்மைய சொன்னதுக்கு அக்கா மன்னிக்கவும்!)

அ.அ.: பா.கு. உறுப்பினர்கள் போன வாரம் 3 இடுகை போட்டு இருக்காங்க!

கு.பி.: வ..வா.ச. போன வாரம் 10 இடுகை போட்டு இருக்காங்க! அதுமட்டும் இல்லாம நீங்களே! யாவாரம் படுத்துகிச்சி சாமியாரா போகப்போறேனு ஒரு இடுகை போட்டீங்க!

அ.அ.: அது எவனோ என்னோட பேருல போட்ட போலி இடுகை!

அ.அ.: தம்பி! நான் 30 வருஷமா இணையத்துல கடலை போட்டவன், சும்மா கேள்வி கேட்கணும்னு எதையும் கேட்காதிங்க!

கு.பி.: ஐயா! தமிழ்மணப்பதிவாளர்கள் எல்லாரும் நிகழ்ச்சிய பார்த்துட்டு இருக்காங்க! பதில் சொல்லுங்க!

அ.அ.: தம்பி! நீ ஒருநாள் பதிவு எழுதிபாரு, அப்ப தான் இந்த பதவியோட கஷ்டம் உனக்கு புரியும்!

என்ன யோசிக்கிற! இதை தான் “பின்னூட்டம் போட்டாரே வாழ்வார் மத்தவர் பதிவு எழுதியே சாவார்்”னு ‘லொள்ளு’வர் சொல்லி இருக்கார். இப்ப புரியுதா! சொல்லுரது சுலபம்!

கு.பி.: ஐயா! நான் உங்க சவால ஏத்துக்கிறேன்!

(முதல்வன் மியுஸிக் ஸ்டார்ட்ஸ்!!!!!! முதல்வனே...வனே..வனே..வனே..வனே..முதல்வனே..அ ஆ இ ஈ உ ஊ ஐ ஒ ஓ...ஔ......அம்...அஹா)

***************************************************************

குட்டிபிசாசு இணையத்தில் இருக்கிற எல்லாத்தையும் காப்பி & பேஸ்ட் செய்து இடுகையா போட, மின்னல் கையூட்டு வாங்கிட்டு பல்வேறு பேருல கும்மியடிக்க தமிழ்மணத்தில் அண்மையில் கும்மியடிக்கப்பட்ட இடுகை முழுக்க குட்டிபிசாசுவே ஆக்கிரமிக்க.

(முதல்வன் மியுஸிக் ஸ்டார்ட்ஸ்!!!!!! முதல்வனே.... வனே..வனே.. வனே.. வனே.. வனே. முதல்வனே....அ ஆ இ ஈ உ ஊ ஐ ஒ ஓ...ஔ......அம்...அஹா)

***************************************************************

குட்டிபிசாசு: சுண்ணாம்பு சட்டிதலை மாமா!!

விஜயகுமார்: என்னோட பொண்ண பதிவு போடுர உனக்கெல்லாம் கட்டிகுடுக்க முடியாது! மின்னல் போல பின்னூட்டம் போடுரவனுக்கு தான் கட்டிகுடிப்பேன்!

குட்டிபிசாசு: என்னால பதிவ காப்பி & பேஸ்ட் தான் பண்ண முடியும்! மின்னல் போல கும்மியடிக்க முயற்சி செய்தா கும்மி அடிச்சிஅடிச்சி குஷ்டம் தான் வரும்!கிழவி மாதிரி இருக்கிற மனிஷாவ கட்டிகிறதுக்கு பதிலா, ஒரு கிழவியவே கட்டிக்கலாம்! நான் ராணி எலிசெபெத்த ட்ரை பண்ணுரேன்! வர்டாய்யா என் டுபுக்கு!

Sunday, June 17, 2007

நான் ரம் அடிக்கிற ஸ்டைல பார்த்து!!

ஒருத்தன் படிச்சத மறக்கலாம், ஆனா குடிச்சத மறக்க முடியுமா?

அதுக்குதான் இந்த இடுகை!


தண்ணியடிக்கிறது கூட ஒரு கலை தான். இதை நல்ல ஒரு குடிமகன் கண்டிப்பாக ஒத்துக்குவான். என்ன சரக்கு, எந்த காலத்துல, என்ன மிக்சிங்கோட, என்ன சைட்டிஷோட, எந்த நண்பனோட, யாரோட காசுல, எங்க அடிக்கணும்னு இந்த பட்டியல் நீளும்.நான் ஹாஸ்டல்ல இருக்கும்போது தான் இந்த பழக்கமெல்லாம் இருந்தது. இப்ப இல்ல! (உண்மையா! திருப்பதி லட்டு சத்தியமா! திருனெல்வேலி அல்வா சத்தியமா! இப்ப அடிக்கிறது இல்ல அன்பு மிக்கவரின் வேண்டுகோளுக்கினங்க விட்டுட்டேன்). ஆனா அந்த அனுபவம் ஒரு கல்வெட்டு மாதிரி.நாங்கெல்லாம் அப்ப இந்த சொல்லொன்னாகலையில் கிங். நானும் என்னோட அறைதோழன் சின்னாவும் தான் அடிப்போம்.அப்ப பீர் 60 ரூபாய். விஸ்கி பிபி கோல்ட் (இது என்னோட உள்ளங்கவர்ந்த பிராண்ட்) 80 ரூபாய் இருந்தது. பெரும்பாலும் ரம் தான், ஏனென்றால் அது புல் 120 ரூபாய் தான். இரவு 7 மணிக்கு மேல தான் சரக்கு வாங்குவோம். எங்களுக்கு தெரிஞ்ச ஒரு மிலிட்டரி மாமா, அவரிடம் தான் வாங்குரது.அவர் தேசத்துக்கு சேவை செய்தாரோ இல்லயோ எங்களுக்கு செய்தார். எங்க வார்டன்க்கு நாங்க வச்ச பேரு ஸ்கெலிட்டன் (ஆள் சும்மா கம்பிகட்டு கணக்கா இருப்பாருஅதனாலதான்). பாட்டீல் எந்த படுபாவியாவது பார்த்தால், வார்டனிடம் போட்டுகொடுத்துவிடுவான். அதனால அதை உடனே பக்கெட் போட்டு மூடி வச்சிடுவோம். ஹாஸ்டல் மெஸ் சாப்பாடு கொண்டு வந்து ரூம்ல கரெக்டா வச்சிப்போம். 10 மணி ஆன பிறகு கொஞ்சம் ஆள்நடமாட்டம் குறையும், அப்பதான் அரங்கேற்றம் வச்சிப்போம்.

எங்க அரங்கேற்றம் பத்தி ஒரு விளக்கம்:

தேவையான பொருட்கள்:

1. பக்கெட்(Bucket)

2. 2 கிளாஸ் (குடிக்கும் நபர்களைப்பொருத்து)

3. சரியான அளவு சோடா (அ) தண்ணீர் (பெப்ஸி, கோக், ஸ்ப்ரைட் வசதியகேற்றபடி)

4. 5 (அ) 6 ஊதுபத்தி (இல்லாட்டி அக்கம்பக்கம் இருக்கிரவணுங்க மோப்பம் பிடிச்சி வந்து ஒரு கிளாஸ் ஊத்த சொல்லுவான். பிறகு முதலுக்கே மோசமாகிடும்)

5. சைட்டிஷ் (இதுவும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது! நாங்க ஊறுகாய் விரும்பிகள்)

செய்முறை:

பாட்டீல் திறந்து பக்கெட்ல ஊத்தனும். பிறகு சரியான அளவு சோடா (அ) தன்ணீர் விட்டு கலக்கவும். குடிக்க சரக்கு தயார்.தயாரான சரக்கை பக்கெட்ல இருந்து கிளாஸ்ல மொண்டு குடிக்க வேண்டியதுதான். அப்ப அப்ப ஊறுகாய கொஞ்சம் சுவைக்கனும், இல்லாட்டி கிளப்பிக்கும் அப்புறம் மட்டம் ஆகுவிங்க (அ) ஆம்லேட் தான். எலுமிச்ச ஊறுகாய் இந்த விஷயங்களுக்கு உகந்தது. இப்படியே தொடர்ந்தால் நீங்க வெகுவிரைவில் சிறந்த குடிமகனாக வாய்ப்பிருக்கிறது.

இது எங்க ரம் அடிக்கிற ஸ்டைல்!!

எப்பவும் சனிக்கிழமை தான் அடிப்போம்,அப்பதான் மறுநாள் நல்லா தூங்கலாம். நாங்க குடிச்சி முடிச்ச பிறகு, உடனே தூங்க மாட்டோம். வாட்ச்மேன தாஜா பண்ணி வெளிய மேய போய்டுவோம். நல்லா சுத்திட்டு லேட்டா வந்து மெலந்துப்போம்.பிறந்தநாள் பார்ட்டில அலப்பர தாங்காது குடிச்சா பாட்டு தான், குத்தாட்டம் தான். பட்டய கிளப்புவோம்.

ஆனா இப்ப பாருங்க எல்லாம் மல ரும் நினைவுகள் ஆகிப்போச்சு!

Friday, June 15, 2007

பொன்ஸ் அக்கா - அலெக்ஸாண்டர் - மறுவெளியீடு

என்னுடைய முந்தைய பதிவில்் பொன்ஸ் அக்கா சொன்ன அறிவுரை!!!

//
பிசாசு,

நீங்க சொல்றதெல்லாம் சரிதான்.. ஆனா இந்தப் போருக்குப் பின்னால போரஸ் தன்னோட மகளையோ தங்கையையோ அலெக்ஸாண்டிருக்குக் கட்டி வைப்பாருன்னு நினைவு.. இத வச்சி உங்க தமிழைய்யா ரீமிக்ஸ் பண்ண முயன்றிருப்பாரு..

//

நம்ம திரையுலக வல்லுனர்களிடம் கிடைத்தால் எப்படி சின்னாபின்மாகி இருக்கும்! வாங்க தைரியமா பார்ப்போம்!!

(1) பி.வாசு டைரக்ஷன்-ல பாசமலர் இரண்டாம் பாகம் வெளிவருகிறது, அதுல பாசத்தை புழியமாதிரி ஒரு சீன் வச்சி இருக்காரு! தாய்க்குலம் எல்லாம் கன்ணுல தண்ணீ வச்சிக்கும். அப்படி ஒரு சீன்! நம்ம நடிகர்திலகம் தான் போரஸாக நடிச்சி இருக்கணும். அவரு இல்லாததுனால இளைய திலகம் பிரபு நடிக்கிறார். அலெக்ஸாண்டராக ‘தமிழக பெருச்சாளி’ சாரி! ‘தமிழக புரூஸ்லீ’ தனுஷ் நடிக்கிறார். (ஒரேஒரு ப்ராப்ளம் அடிக்கடி ஹெல்மெட் இறங்கி கண்ணை மூடிக்குதாம்.வேறவழியில்ல இப்ப தான் ஹெல்மெட் கட்டாயமாச்சே!!) நாயகி எதோ மும்பை நடிகையாம்.

(தாய்க்குலம் கண்ணீர் வச்சிக்கும் காட்சி)

போரஸ்: அலெகஸ்.. என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன்! அதுல ஆனந்தகண்ணீர் தான் வரணும்!

அலெக்ஸாண்டர்: மாமா! ஆனந்தகண்ணீர்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க!!

போரஸ்: எதுடா பெரிய வார்த்தை! ஆனந்தகண்ணீர் தம்மாதூண்டு வார்த்தை.

(வரலாற்றுக்காட்சிகள்)

வரலாற்றுக்காட்சிகள் நிச்சயம் இருக்கணும்னு சில காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாம்.

கல்யாணத்தில் ஓரமாக நின்று செலுகஸ்(அலெக்சாண்டரின் தளபதி) மொய் வசூலிக்க, சாண க்கியர் மொய்ப்பணம் 101 பொற்காசு!னு சாணக்கியர் க்யூவில் நிற்க, சந்திரகுப்தன் பந்தில உட்காந்து வடை பாயசத்தோட சாப்பிட்டு கைய நக்கிட்டு இருக்கிறாராம். இதைப்பார்த்த போரஸான பிரபு என்ன கொடுமை அலெக்ஸ் இது! மொய்யே எழுதாமே இந்த கட்டு கட்டுரான் என்கிறார்.

ஜீலம் கரையோரமா ஒரு குத்துப்பாட்டு வேற இருக்காம். போர்ல செத்துட்டது தன்னோட ஆட்கள்னு தெரியாம தனுஷ் சாவுக்கு ஆடுற ஆட்டம் கண்டிப்பாக ஹிட் ஆகுமாம்.

(2) விஜய டி. ராஜேந்தர் தங்கைக்கோர்கீதம்-இரண்டாம் பாகம் அஷ்டாவதானியாக டைரக்ஷன்,நடிப்பு(அடப்பாவி நடிப்பா?),இசை,ஒளிப்பதிவு,கலை,பாடல்கள்,வசனம்,திரைக்கதை அவரே!

(டிஆர் பிராண்ட் வசன்ங்கள்)

கத்திப்பேசதடா! பேசினா என் கத்தி தான் பேசும்டா!!

டேய்! அலெக்ஸு ரிலாக்ஸு இல்லாட்டி நீ க்ளோஸு பிறகு கேட்காத ப்லீஸு

யே டண்டணக்கா டணக்குணக்கா!!!

(ஒரு உருக்கமான சீன்)

டிஆர்: இதும்மாதங்கச்சி! ஒரு ஆம்பிள வாழ்க்கையில வழுக்கினால், சமையல்கட்டுல பூனை வழுக்கின மாதிரி, ஆனா ஒரு பொண்ணு வாழ்க்கையில வழுக்கினா போர்க்களத்தில யானை வழுக்கின மாதிரிம்மா…!!

இந்த கேடயத்தையும் கத்தியையும் எடைக்கு போட்டாவது, இந்த அண்ணன் உன்னோட கல்யாணத்த நடத்திவைப்பாம்மா!!

(3) சும்மா இருப்பாரா நம்ம எஸ்.ஜே.சூர்யா, candom -னு ஒரு படத்தை ரீலீஸ் பண்ணிட்டாரு!! என்ன அது அசிங்கமா காண்டம்னு கேட்டா! அது யுத்த காண்டம் சொல்லுராரு

அலெக்ஸாண்டர் தளபதியோட ஓரினசேர்க்கைல ஈடுபடுறபோல ஏகப்பட்ட கசமுசா சீனாம். இதைப்பார்த்து சென்ஸார் கத்திரிப்பாய்ச்ச, எடுத்த எல்லாம் கட்டாகி மிச்சசொச்ச பில்ம் எல்லாம் தீப்பெட்டில போட்டு குடுத்துடாங்கலாம். டென்சனான எஸ்ஜே அந்த தீப்பெட்டியால அதிகாரி மண்டைய உடைச்ச கேஸ் இன்னும் நடக்குது.

(4) மணிரத்னம் இருவர்- இரண்டாம் பாகம் எடுத்து முடிச்சிட்டார். அதுல வர 5 நிமிட போர்க்கள காட்சி ரொம்பவே பேசப்படுமாம். ஜோ-னு(சிம்ரன், த்ரிஷா-னு எல்லாம் மழை பெய்யாது) மழை பெய்யுது. இந்த பக்கம் போரஸ், அந்தபக்கம் அலெக்ஸாண்டர். மாத்திமாத்தி காட்டுராங்க! ரெண்டு பேரும் கொட்டுர மழைல பேசிக்கிறாங்க,

போரஸ்: எதுக்கு இந்த போர்!

அலெக்ஸ்: வேண்டாமா!

போரஸ்: ஆமா!!

அலெக்ஸ்: ஏன்!!

போரஸ்: நிறுத்துங்க! எல்லாத்தையும் நிறுத்துங்க!!

அலெக்ஸ்: சரி!

செலுகஸ்: யோவ்! ஒன்னுமே புரியலயா! நீங்க முதல்ல பேசுரத நிறுத்துங்கய்யா!!

(சிறப்புக்காட்சி)

அலெக்ஸாண்டர்: (போரஸ் படையைப் பார்த்து...) ஐயரே! அது என்னய்யா! கருப்பா ஒசரமா எருமைமாடு மாதிரி!

ஐயர்:அது யானை!

அலெக்ஸாண்டர்: ம்ம்ம்யானை எவ்வளவு இருக்கும்

ஐயர்: சுமார்! ஒரு 1000 பொன் இருக்கும்

அலெக்ஸாண்டர்: 10 யானை எவ்வளவு ஆகும்!

ஐயர்: 10 யானை!!!!சுமார் 10000 பொன் ஆகும்!!

அலெக்ஸ்: 1 யானை எவ்வளவு ஆகும்!

ஐயர்: 1 யானை! 1000 பொன் ஆகும்!!

அலெக்ஸ்: யானை வாயில இருக்கே! அது என்ன?

ஐயர்: கரும்பு!!

அலெக்ஸ்: அது எவ்வளவு ஆகும்!!

ஐயர்: 1 கரும்பு ! சுமார் 1/2 பொன் ஆகும்.

அலெக்ஸாண்டர்: ஆகட்டும் எவ்வளவுனா ஆகட்டும்!! வாங்குரோம்! 10 கரும்பு வாங்குரோம்! வாங்கி ஜூஸ் போட்டு குடிக்கிறோம்! அது கிரேக்கருக்கு மட்டும் தான்! வேற எவனுக்கும் இல்ல!

பின்னணி இசை ஓவென்று சத்தமெழ பாடல்

Greece சீமையிலே

Horse ஓட்டும் வீதியிலே

Force-ஆக வந்தவனே

போரஸை அடிப்பாயோ!

போரஸை அடிப்பாயோ!

பி.கு.: உப்புமா கிண்டினது போதும் போடனு எங்க கண்மணி அக்கா திட்டுர மாதிரி இருக்கு! இதுக்கு மேல போனால் எங்க பாசக்கார மகளிரணி பட்டைய கிளப்பிடும்! வரட்டா!!!

Sunday, June 03, 2007

நிறைய எழுதணுங்க!!

எங்க பாசக்கார டீம்ல: கண்மணி அக்கா போல டைமிங் காமெடி செய்து சிரிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம். அவங்க எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரமாரியாக எழுதித்தள்ளுகிறார். காயத்ரியோட கவிதைகளைப் பார்த்த பொறாமையாக இருக்கும். கருத்து மற்றும் எழுத்துநடை ரொம்ப நல்லா இருக்கும். (அவர் இயற்கை, உறவுகள் என்று எல்லையோடு நிற்க்காமல் சமூக சிந்தனைமிக்க கவிதைகளையும் எழுதவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்). மங்கை ரொம்ப நல்லா எழுதுவாங்க. ஆனா அவங்க எழுதுரது குறைவு. எங்க அபிஅப்பா எழுதினார்ன்னா நக்கல்-நையாண்டிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அவர் சாமியாராக போனதில் இருந்து எழுதுரது குறைந்துவிட்டது. அய்யனார் சாதாரண விஷயத்தக்கூட அழகாக சொல்லக்கூடியவர். மொழியைப் பயன்படுத்தும் லாவகம் அலாதியானது. மைபிரண்டும் கண்மணி அக்கா போல காமெடிப் பதிவில் கில்லாடி. மின்னுதுமின்னல் பதிவ விட பின்னூட்டம் நல்லா எழுதுவார்( மின்னல் கோபிக்காதே! சும்மா தான் சொன்னேன். நீங்க எழுதுன மொக்கைகவிதை ஒன்று போதும் உங்களுடைய திறமையைக் கூற! ஆனால் தொடர்ந்து எழுதுங்க!).

எல்லாரபத்தியும் சொல்லிட்டு என்னை விட்டுடமாட்டேன். வழக்கம்போல நம்ம கமலஹாசன் பாணியில் ஒரு கவிதை, ஒரு மொக்கை, ஒரு திரைபார்வை, ஒரு ஆக்கம் என்று வரிசைபடி இடுகையிட்டு வருகிறேன். (கவிதை பற்றி சொல்லவே தேவை இல்லை. யாரும் படிக்காவிடிணும், என்னோட பதிவுக்கு த்ருஷ்டி கழிச்சதுபோல எப்போதாவது ஒன்று எழுதிவிடுவேன். ஏன்னய்யா உனக்கு இந்த வேண்டாத வேலை என்று கேட்டால், “நான் முடிவுபண்ணிட்டா! என் பேச்ச நா..னே.. கேக்க மாட்டேன்!” விஜய் ஸ்டைல்ல டயலாக் அடிப்பேன். எனக்கு இனிமேல கொலை வெறியோட பின்னூட்டம் போட்டு திட்டினாலும், நிறுத்துறது கஷ்டம் தான்.) பின்னவீனத்துவம்னு நான் எதுவும் தெரியாம அகலக்கால் வைக்கிறது இல்லை. சாதாரணமாக ஆக்கமான இடுகைகளை விட மொக்கைக்கு தான் ஒத்துழைப்பு அதிகம் உண்டு. அதிலும் என்னுடைய சில ஆக்கமான இடுகைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும் போதிய பின்னூட்டம் இல்லாததால், வகையான இடுகைகளை எழுதுவதைத் தவிர்த்தேன். ஏனென்றால் பின்னூட்டம் இருந்தால்தான் இடுகை போதியநேரம் தமிழ்மணத்தில் தெரிகிறது, இல்லாவிடில் மறைந்துவிடுகிறது. இவற்றால் நொந்துபோன நான் மொக்கைபதிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டேன். எங்க பாசக்கார குடும்ப ஆலோசகர் ‘தருமி’ ஐயா சொன்னதுபோல பின்னூட்டமும், ஆக்கமும் தொடர்பில்லாத இருவேறு விஷயங்கள. அவருடைய அறிவுரைக்கு செவிசாய்த்து என்னுடைய பாதையை மறுபடியும் தொடர முடிவு செய்துவிட்டேன். இத்தகைய நிலை எனக்கு மட்டும் இல்லை, நிறைய தமிழ்மண அன்பர்களுக்கு நிகழ்ந்திருக்கும். தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும்.அறிவுரையும் சொல்லலாம்.

எப்படியோ வெற்றிகரமாக 25 பதிவுகளைத்தாண்டி ஆச்சு!! இதுக்கு முக்கிய காரணம் தமிழ்மண ஜாம்பவான்கள் தான். என்னோட எழுதனும் என்கிற நெருப்புக்கு எண்ணெய் வார்த்தவர்கள். இவர்களுடைய பதிவுகள்தான் எனக்கு ஊக்க மருந்தாக அமைந்தது. நான் இன்னும் நிறைய படிக்கணும்...மேலும் மேலும் எழுதணும்... தங்கள் வாழ்த்துக்களுடன்...

பி.கு.:

தமிழ்மணமே! என்னோட கண்ணான பாசக்கார குடும்பத்தை உன்னிடம் ஒப்படைச்சிட்டு போரேன். அதில் ஆனந்தகண்ணீரத்தான் நான் பார்க்கனும்!! ஐயோ!!!ஊருக்குத்தான் போரேனுங்க...! ஒரேடியா போகலை..!!

Sunday, May 27, 2007

கம்மங்கூழு with கவுண்டமணி -- குட்டிபிசாசு

என்னோட பேட்டிக்கு “கேப்பகஞ்சி with கவிதா” புகழ் கவிதா அக்காவ தான் முதல்ல கேட்டேன். அவங்க ரொம்ப பிஸினு சொல்லிடாங்க! அதுமட்டும் இல்லாம என்னை பேட்டி எடுக்க சுடுகாட்டுக்கு எல்லாம் வரமுடியாதுனு வேற சொல்லிடாங்க!

இப்படியே விட்டுட்டா, பிறகு எப்படி என்னோட உலகத்தரம் வாய்ந்த உப்புமாக்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க முடியும். நம்ம கண்மணி அக்காவ இந்த ப்ரொகிராம் செய்ய சொன்னேன். அவங்களும் டைம் இல்ல, எக்ஸாமுக்கு படிக்கனும்னு சொல்லிடாங்க!

ஜாக்ஸன் பேட்டி கொடுக்க மறுத்த போது, கட்டபொம்முக்கு இருந்த கோபம் எனக்கும் வந்துவிட்டது (கற்றுக் கொடுக்கும் இனம் தமிழ் இனம்). உடனே இந்த ப்ரோகிராம் செய்ய நம்ம கவுண்டமணி அண்ணனுக்கு ஒரு போன்கால் செய்தேன்! அவரும் வேற வேலை இல்லாததுனால ஓகேனு சொல்லிட்டார். எங்க ப்ரொகிராம் வச்சிகலாம்னு கேட்டார். ஓட்டல் லீ மெரிடின்ல தான் வைக்கலாம்னு நெனச்சோம், பணம் ரொம்ப அதிகம்! அதனால அதுக்கு பக்கத்தில் இருக்கும் ப்ளாட்பாரத்தில வச்சிடோம்.

இடம்: ஓட்டல் லீ மெரிடின் பக்கத்தில் இருக்கும் ப்ளாட்பாரம்

இம்சைகள்: கவுண்டமணி, குட்டிபிசாசு

(ப்ளாட்பாரத்துல குட்டிபிசாசுவ கவுண்டமணி தேடிட்டு இருக்கார்)

கவுண்டமணி: டேய் குட்டிபிசாசு! குட்டிபிசாசு!

நான் இங்க கோடையிடியா குமுரிக்கிட்டு இருக்கேன், இந்த கூறுக்கெட்ட குட்டிபிசாசு எங்க போய்ட்டான்! இங்க தானே வரசொன்னான்.

(ரோட்டு ஓரமா ஒருத்தன் ஒக்காந்து இருக்கான், அவனை கேட்கிறார்)

டேய் தம்பி! இந்த பக்கமாக குரங்கு மாதிரி ஒருத்தன பார்த்தயா?

(அது வேற யாருமில்ல, நம்ம குட்டிபிசாசு தான்)

டேய் பிசாசு மண்டையா! இங்க என்னடா செய்யற!

குட்டிபிசாசு: ஒன்னும் இல்லனே மைக் ஒர்க் ஆகுதானு ஓரமா ஒக்காந்து செக் பண்ணிட்டு இருந்தேன்

கவுண்டமணி: நான் எவனோ சிட்டுகுருவி லேகியம் விக்குரவனு நெனச்சேன்

குட்டிபிசாசு: சரி அப்ப பேட்டி எடுக்கலாமா அண்ணே!

கவுண்டமணி: நான் மட்டும் வயத்துல இருந்து போட்டி எடுக்கலாம்னா சொன்னேன்!

(இரண்டு பேரும் ப்ளாட்பாரத்துல ஒரு துணி போட்டு, அதுமேல ஒக்காந்து பேட்டிய ஆரம்பிக்கிராங்க! காபி, ஜூஸ் என எதுவும் இல்லாததுனால, சட்டில கொஞ்சம் கம்ம்ங்கூழும் ஊறுகாயோட, கவுண்டமணி அவரோட ஸ்டைல பேட்டி எடுக்கிறார்)

கவுண்டமணி: நீ ஏன் குட்டிபிசாசுனு பேரு வச்சே?

குட்டிபிசாசு: ‘அர்னால்ட்’ அதான் ஹாலிவுட் அக்டர்! அவரோட அம்மா அவரை செல்லம்மா குட்டிபிசாசுனு தான் கூப்பிடுவாங்கலாம்

கவுண்டமணி: அர்னால்ட்...குட்டிபிசாசு...

குட்டிபிசாசு: ஆமாங்கண்ணே!

கவுண்டமணி: (டென்சன் பண்ணரானே) அடங்கொக்கமாக்கா! உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லயாடா! சிங்கில் டீக்கு டிங்கி அடிக்கிற மொன்னநாய் என்ன பேச்சு பேசுது பார்! ஒழுங்கா மரியாதையா உண்மைய சொல்லிடு! (குட்டிபிசாசுவை அடிக்க மைக் எடுக்கிறார்)

குட்டிபிசாசு: (தயங்கியபடி) அண்ணே! ஒரு விளம்பரத்துக்கு தான் குட்டிபிசாசுனு வச்சேன்!

கவுண்டமணி: விளம்பரமா? விளக்குமாருக்கு என்னடா விளம்பரம்! ஏன் குட்டிபிசாசுனு வச்சே, குட்டிசுவர்னு வச்சுக்கேன், இன்னும் விளம்பரம் அதிகமா இருக்கும்.

(அடுத்த கேள்வி)

சரி! இன்னைக்கு நியுஸ்பேப்பர்ல என்ன படிச்சே?

குட்டிபிசாசு: வாலிப வயோதிக அன்பர்களே...

கவுண்டமணி: டேய் பேரிக்கா தலையா! நிறுத்துடா! நான் என்ன இங்க “புதிரா?புனிதமா?” நடத்தவந்து இருக்கேன்! நியுஸ்பேப்பர்ல என்ன படிச்சேனு தான் கேட்டேன்!


குட்டிபிசாசு: எலிசாமி சித்தரோட ராஜவைத்தியம் பத்தி படிச்சேன்


கவுண்டமணி: நீ என்ன வந்ததில் இருந்து வெவகார பேசிட்டு இருக்கியே! இதெல்லாம் நல்லது இல்லயே! நான் பொல்லாதவன்..கெட்டவன்.. ஒழுங்கா கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு!! ஓவரா எதாவது லந்து பண்ண மைக்காலயே அடிப்பேன்!

(அடுத்த கேள்வி)

கவுண்டமணி: சரி அடுத்த கேள்வி! மைபிரண்டையும் மங்கையையும் காளான்னு சொன்னயாமே!

குட்டிபிசாசு: காளான் தான் ரொம்ப காஸ்ட்லியான காய்கறி! அவங்கள புகழத்தான் அப்படி சொன்னேன்! ஆனா அவங்க தப்பா நெனச்சிட்டு ரவுண்டு கட்டி என்னை அடிச்சிட்டாங்க!

கவுண்டமணி: அடியும் வாங்கிட்டு வெட்கம் இல்லாம சொல்லிட்டு வேற திரியற! இதெல்லாம் ஒரு பொழப்பு!

(அடுத்த கேள்வி)

நீ என்னமோ கவிதையெல்லாம் எழுதரயாமே!

குட்டிபிசாசு: ஆமாண்ணே!


கவுண்டமணி: ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலை! அதைதான் எவனும் படிக்கிறது இல்லயே, பிறகு ஏன் நீ எழுதிட்டு இருக்கே! தெரிஞ்சத எழுதுங்கடா! தமிழ்மணத்துல இருக்கிறவங்கல இப்படி கொடுமைபடுத்த எத்தனை பேருடா கெளம்பி இருக்கீங்க!

(அடுத்த கேள்வி)

கவுண்டமணி: உனக்கு “காக்கா புடிக்கிறதுல மன்னன்”னு பட்டம் குடுத்து இருக்காங்கலாம்!

குட்டிபிசாசு: Actually..(ரோட்டுல போற ஒரு பொண்ண பார்த்த உடனே நம்ம குட்டிபிசாசு கஷ்டப்பட்டு (வராத) இங்கிலீஷ்ல பேச முயற்சி பண்ணுது!!)

கவுண்டமணி: டேய் தேங்கா தலையா! இவ்வளவு நேரம் தமிழ்ல தானே பேசிட்டு இருந்தே! வேண்டாம் மகனே! நீ எந்தெந்த சமயத்துக்கு எப்பயெல்லாம் பேச்ச மாத்துவேனு எனக்கு தெரியும்! அடங்கு! மரியாதையா தமிழ்ல பேசு!

குட்டிபிசாசு: “காக்கா புடிக்கிறதுல மன்னன்”, அதாவது நான் ‘வானளவுக்கு உயர்ந்தவன்’ அப்படினு சொல்ல வராங்க!

கவுண்டமணி: உண்மைய சொல்லிடு! என்னை கொலைகாரன் ஆக்காதே!

குட்டிபிசாசு: சொல்லுரேனண்ணே! பயமறியா பாவையர் சங்க மாநாட்டுக்கு “காக்கா பிரியாணி” வேணும்னு கண்மணி டீச்சர் கேட்டாங்க! நான்தான் தேடி புடிச்சி வாங்கி வந்தேன்! அதனால தான் அந்த பட்டம் குடுத்தாங்க!

கவுண்டமணி: “காக்கா பிரியாணி” வாங்கிட்டு வர கம்மிநாட்டி, உனக்கெல்லாம் ஒரு பேட்டி! அதுக்கு ஒரு மைக்செட்டு!

(கவுண்டமணி மைக் எடுத்து குட்டிபிசாசு மேலே அடிக்கிறார், குட்டிபிசாசு எஸ்கேபாகி துண்டைகாணோம்துணியைகாணோம்னு ஓட...)

கவுண்டமணி: ஒங்கப்பன் மகனே! நீ எங்க போனாலும் விடமாட்டண்டா! டேய்!!!!!!

(கவுண்டமணியும் கோபமாக அடிக்கத் துறத்துகிறார்)


பி.கு.:

1. நம்ம குட்டிபிசாசுவே இதோட கலாய்த்து விட்டுவிடக்கூடாது! தொடர்ந்து எல்லோரும் வரும் வாரங்களில் குட்டிபிசாசுவை கஞ்சி காய்ச்சப்போவதை இப்போதே அறிவிக்கிறேன்!!

கேப்பசீனு with கண்மணி டீச்சர் -- குட்டிபிசாசு

தர்பூசனி ஜூஸ் with தருமி சார் -- குட்டிபிசாசு

ஹார்லிக்ஸ் with அபி அப்பா -- குட்டிபிசாசு

ஆப்பிள் ஜூஸ் with அய்யனார் -- குட்டிபிசாசு

மால்டோவா with மைபிரண்ட் -- குட்டிபிசாசு

மிக்ஸட் ஜூஸ் with மின்னல் -- குட்டிபிசாசு

ராகிமால்ட் with ராம் -- குட்டிபிசாசு

பாசக்கார குடும்ப சுற்றுலா தொடர் - நன்றி

பாசக்காரகுடும்பத்துக்கு,
கண்மணி டீச்சர் ஆரம்பிச்ச சுற்றுலாத்தொடர் நல்லபடியாக முடிந்தது!!

இந்தத்தொடர் முழுக்க(வேறவழி இல்லம) படித்த பாசக்காரகுடும்பத்துக்கும், மற்ற தமிழ்மண அன்பர்களுக்கும் நன்றி!!

தண்டரில் பாசக்கார குடும்பம் - 1-
பாகம்
நொந்துபோன கண்மணி டீச்சரின் [து]இன்பச் சுற்றுலா அறிக்கை - 2-
பாகம்
பாசக்கார படையே! ஆணி பிடுங்கியதுபோதும் அணி திரள்வீர் - 3-
பாகம்
டூர் திலகத்திற்கு - 4-
பாகம்
சுற்றுலா சென்று வந்த சுனாமி (அ) வானரங்களால் வேதனைப்பட்ட வாத்தியாரம்மா - 5-
பாகம்

வாழ்த்துக்கள்!!