Monday, February 01, 2010
நீயா நானா / கோபிநாத் / ருத்ரன்
Wednesday, November 14, 2007
ஈழமும் இந்துதேசியமும்
வரலாறு என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். வரலாறு இல்லாதவர்கள்(மறைக்கப்பட்டவர்கள்) தங்களுடைய சுயங்களை இழந்தவர்களாக காட்சிக்கு வைக்கப்படுகிறார்கள். "history must be written of, by, and for the survivors" என்ற பழமொழிக்கேற்ப வரலாறு எழுதப்படுகிறது. இதனை நாம் உணர்ந்து கொள்ளாவிடில் படித்தும் அறிவில்லாதவர்களாகவே இருக்க வேண்டி இருக்கும். சமீபத்தில் என் நண்பருடைய விவாதிக்கும்போது, ஈழப்பிரச்சனைப் பற்றியும், இந்தியாவின் இந்து-முஸ்லீம் பிரச்சனை பற்றியும் பேச்சு வந்தது. விவாதத்தின் தொகுப்பு இது தான்.
1. தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் தான் ஈழத்தமிழர்கள்?
பாண்டியர்களும், சோழர்களும் பலம் பொருந்திய அரசர்களாக இருந்த காலத்தில், இவ்வாறான குடிபெயர்தல்கள் படையெடுப்பு மூலம் நடந்தன. ஆனால் அதற்கு முன்னரே, அங்கு ஈழத்து தமிழ்குடிகள் இருந்தன. தற்போது, சிறிலங்கா அரசின் வாதமொன்றில், தமிழர்பகுதியில் காணப்படும் பௌத்த சின்னங்களைக் கொண்டு தமிழர்கள் வந்தேறிகள் என்கிறார்கள். நாம் என்ன முதலில் இருந்தே இந்துவாக இருந்தோமா? நமது ஐம்பெரும் காப்பியங்கள் அனைத்தும் சமண, பௌத்த மதம் சார்ந்தவை. தமிழகத்தில் கூட நிறைய சமண, பௌத்த சின்னகளின் மிச்சங்கள் உண்டு. இவை பெரும்பாலும் இந்துமன்னர்களால் அழிக்கப்பட்டன. திருமங்கையாழ்வார் கூட சமண மடங்களையும், சிலைகளையும் அழித்ததாக நண்பர் ஒருவர் கூறக்கேட்டேன். இவை வரலாற்றுரீதியாக உண்மை். ஆனால் அவை (சின்னங்கள்) இன்று சிங்கள அரசால் அழிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன. இவை நமது வரலாற்றை திரித்து கூறுவதற்காகவே.நம்முடைய சமண-பௌத்திற்கு முந்தைய நிலை இன்னும் தெளிவாக தெரியவில்லை. வள்ளுவரை கூட சமணர்-பௌத்தர் என வாதங்கள் உண்டு.
16-ம் நூற்றாண்டுகளில் அநுராதபுரத்திலும், கண்டியிலும் இருந்த விஜயநகர நாயக்கர்கள் கூட இன்று சிங்களவர்களாக அடையாளம் காணப்படும்போது. ஏன் 2000-2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பௌத்த தமிழர்கள் சிங்களவர்களாக அடையாளம் காணப்படக்கூடாது. (800 ஆண்டுகளுக்கு முன் நம்முடன் சேரநாட்டு தமிழர்களாக இருந்தவர்கள், இன்று மலையாளிகளாக அடையாளம் காட்டிக் கொள்ளவில்லையா?) இந்துக்களாக மாறிய பிறகு நாமே கூட பௌத்த தமிழர்களுடன் போரிட்டு இருக்கலாம். அவர்களின் விகாரைகளை உடைத்திருக்கலாம். ஆனால் சிங்களவர் சற்றும் சிந்தியாமல் 'மகாவம்சம்" போன்ற பழைய பஞ்சாங்கங்களில் வரலாற்றைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
சில தமிழக மற்றும் ஈழ தமிழர்கள் கூட நாம் பௌத்தர்களாக வாழ்ந்தோம் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். தாங்கள் ஒரு தூய இந்து பின்னனி கொண்டவராகவே பறைசாற்றிக் கொள்ள விரும்புகிறார்கள். சிறிதாவது மேல்கூறியதை சற்று சிந்திக்க வேண்டும்.
2. தமிழீழம் சிறிலங்காவின் ஐக்கியத்தை சீர்குலைகிறதா? ஐக்கிய இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தான் பிரிந்தது தவறா?
இரண்டு கேள்விக்கு பதில் ஒன்றுதான். முன்பு இந்தியா-பாக்கிஸ்தான் பிரியும் போது, முஸ்லீம்கள் மனநிலை எப்படி இருந்ததோ? அதே மனநிலையில் தான் இப்போது ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். சிறுபாண்மையினராக இருந்த முஸ்லீம்களுக்கு போதிய சலுகை வழங்கததாலும், இந்துக்கள் பெரும்பாலான வேலைகளை ஆக்கிரமித்ததாலும் தான் பிரிவு ஏற்பட்டது. முஸ்லீம் பெரும்பாண்மைப் பகுதிகள் பாக்கிஸ்தானுன் சேர்க்க முடிவெடுத்த தருவாயில், லாகூர் இந்தியாவில் சென்றுவிடுமோ என்ற எண்ணத்தில் 1000-க்கும் அதிகமான இந்துக்கள் அங்கிருந்து விரட்டப்பட்டனர்(பிரிவினையின் போது லாகூரில் இந்துக்கள் அதிகம்).அதேபோல, இந்தியாவிலும் எல்லையிலுள்ள நகரங்களில் இருந்து முஸ்லீம்கள் விரட்டப்பட்டன. பல இந்து-முஸ்லீம் உடன்பிறப்புகள் கொல்லப்பட்டனர். 15 நாட்கள் நீடித்த பிரிவினை இழுபறியால் 5000 கொலைகள் நிகழ்ந்தன. இவையெல்லாம் எவற்றால் சற்று சிந்திக்க வேண்டும். வெளியிருந்து வ்ந்த முஸ்லீம்களுக்கு எதற்கு பாக்கிஸ்தான் என்று பேசுபவர்கள் எல்லாரும் ஐக்கியம் பற்றி பேசுபவர்கள் தான். இந்தியாவிலிருந்தும் பாக்கிஸ்தானிலிருந்தும் வீடுகளையும் நிலங்களையும் பொருட்களையும் விட்டுவிட்டு வெளியேறும். அவலம் நிகழாதிருக்க முஸ்லீம்களுக்கு போதிய இடஒதுக்கீடு வழ்ங்கியிருக்க வேண்டும் அல்லது முறையாக உடனடியாக பாக்கிஸ்தானை அமைதியாக பிரித்திருக்க வேண்டும். அப்படி பிரித்திருந்தால், இன்று இந்தியாவும் பாக்கிஸ்தானும் சகோதர நாடாக இருந்திருக்கும். ஆனால் அந்த பிரிவினை பலரது குருதியின் நெடியிலேயே ஏற்பட்டது. ஒருவேளை இன்று ஐக்கிய இந்திய கோட்பாடு பேசுபவர் சொல்வது போல, இந்தியா பிரியாமல் இருந்திருந்தால், இலங்கையின் நிலைமைதான் நமக்கும் ஏற்பட்டிருக்கும்.இன்று காஷ்மீரில் நிகழும் போர், இந்தியா முழுக்க ஜிகாதியாக நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது.
நண்பர் ஒவ்வொரு கேள்விகளாக அடுக்கிச்செல்ல நானும் பொறுமையுடன் பதில் கூறினேன். அவருடைய விவாதத்தில் ஒன்று புரிந்தது, அவருக்கு தமிழரின் வரலாறு தெரியாது. இந்தியாவின் பூர்வீகம் தெரியாது. இப்படிப்பட்டவர்க்கு இலங்கை பற்றிய ஞானம் என்ன இருக்கும் என ஊகிக்க இயலவில்லை. இப்படி ஒருவர் அல்ல பலபேர் உள்ளனர் இந்தியாவில். இவர்களின் கனவு இதுதான் இந்தியா ஒரு இந்து நாடு (இதைத் தான் ஐக்கியம், வேற்றுமையில் ஒற்றுமை என்றெல்லாம் புருடா விடுவார்கள்). படத்திலுள்ள பாரதமாதா உருவத்தை முஸ்லீம் மக்கள் வழிபட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். கேட்டால் தேசியம் என்பார்கள்? இவர்கள் என்றாவது வடகிழக்கு மாகாண மக்களின் இன்னல்களையோ, காஷ்மீர மக்களின் துயர்களையோ கணக்கில் கொண்டதுண்டா? தெரியவில்லை. இவ்வளவு வாய்கிழிய மனிதவுரிமை, மக்களாட்சி, பண்பாடு பற்றி பேசும் இந்தியா கூட திபெத் பிரச்சனையில் எல்லாவற்றையும் பொத்திக்கொண்டுதான் இருக்கிறது. கேட்டால் உதைவிழும் என்ற பயம் தானே? இவர்கள் என்னடா என்றால், ஐக்கிய இந்தியா பற்றி அளந்து கொட்டுகிறார்கள். (தொடரும்)
Tuesday, May 29, 2007
அணுமின் ஓநாயின் பிடியில் இந்திய சுற்றுப்புற சூழல் -- பாகம்-2
பொதுவாக அணுசக்தி சார்ந்த ஆராய்ச்சி நிலையங்களில் தினமும் ஒவ்வொருவர் வாங்கிய கதிர்வீச்சைக்கொண்டே விபத்து அல்லது கசிவு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என கண்கானிப்பார்கள். 2003ல் நான் கல்பாக்கத்தில் என்னுடைய முதுனிலை இறுதியாண்டு படிப்பிற்காக இருக்க நேர்ந்தது. அப்போது, மேற்கூறியது போன்றதொரு விபத்தைப் அறிந்தேன். தினமும் அணு உலையின் செயல்பாடுகளின் சில பகுதிகளை கண்கானிக்கச்செல்லும் விஞ்ஞானிகள் வழக்கம்போல தங்கள் பணி முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டனர். சில மணிநேரங்களில் அவர்கள் அளவுக்கு மீறிய கதிர்வீச்சுக்குட்பட்டு இருக்கிறார்கள் என கண்டறியப்பட்டது. இதுபோன்ற சில பாதுகாப்பின்மை காரணமாக விபத்துகளும் கசிவுகளும் நடந்தவண்ணம்தான் உள்ளது. ஆனால் சுற்றுப்புறசூழல் பாதுகாப்பையும் சீர்கேட்டையும் உயிரிழப்பையும் இந்திய அணுசக்தித்துறை கருத்தில் கொள்கிறார்களா என்பது கேள்விக்கிறியே! போதிய பாதுகாப்புகள் மற்றும் வசதிகள் இல்லாமல் அணு உலைகளை இந்திய நிறுவ முயல்கிறது. இந்திய வழக்கம் போல ஆணிவேர் பிரச்சனைகளை அணுகாமல் நுனிக்கிளைகளை மக்களுக்கும் உலகுக்கும் வெளிப்படுத்தி எமாற்றுவேலை தான் செய்கிறது. அரசியல் லாபம் தனிக்கட்சி விளம்பரத்திற்காக அணுபரிசோதனை நடத்தப்பட்டது எல்லாருக்கும் தெரியும். கல்பாக்கத்தில் 20 வருடங்களாக இயங்கி வருவது வெறும் சோதனை அணு உலையே. தற்பொழுது, இந்திய அரசு கூடங்குளத்தில் அதிக உற்பத்திதிறனுடைய உலையைக் நிர்மானிக்க உள்ளது. இதிலும் போதிய பாதுகாப்பு வசதிகள் நிச்சயமாக சரிவர கையாளப்படப்போவதில்லை. இதன் விளைவு தெந்தமிழகத்தையே ஒரு சுடுகாடாக மாற்றி அமைக்கும். அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திதரப்போவதாக அரசு ஏமாற்றுவேலையில் இறங்கியுள்ளது. மேத்தாபட்கரும் இது சார்ந்த போரட்டத்தில் குதித்துள்ளார். ஆனால் அனைத்து அரசியல்வாதிகளும் தங்கள் பணப்பை நிறைந்தால் போதும் என இதுகுறித்து யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இத்தகையதொரு அணுவுலை தமிழகத்தில் அமைவது பயனைவிட பலமடங்கு விளைவுகள் மிக அதிகம். 
1. வருங்காலத்தில் அணுமின் ஆற்றல் மூலமாகவே நடைமுறையில் அதிகபட்ச ஆற்றல் உற்பத்தி செய்ய இயலும்? சரி. அவ்வாறு செய்வதெனில் போதிய பாதுகாப்பு தேவை. அததச் செய்தோமா என்றால்? இல்லை. திரு.கோபாலகிருஷ்ணன் (இவர் 1993-1996 இந்திய அணுசக்தி கண்கானிப்பகத்தின் தலைவராக பணிபுரிந்தவர்) அவர்கள் சர்வதேச அணுசக்தி கண்கானிப்பகத்தின் தரத்திற்கு இந்தியாவின் பாதுகாப்பு தரம் இல்லை என்று ‘ப்ரண்ட் லைன்’ இதழில் கூறியுள்ளார்.
2. புளுட்டொனியம் இந்தியாவே தயாரிப்பதின் மூலம் அணுஆயுத உற்பத்தியில் சுயதேவையை பூர்த்தி செய்துகொள்ளலாம்?
இந்தியாவில் பல்வேறு அடிப்படைப் பிரச்சனை இருக்கும்போது அதைவிடுத்து, ஏன் இப்படி பல கோடி பணத்தை புளுடொனியம் தயாரிப்பில் கொட்டுவது இப்போதைக்கு அவசியமற்றது. (தற்போதைய அமெரிக்காவுடனான ஒப்பந்தம் புளுடோனியம் தயாரிப்பிற்கும் ஆப்பு வைத்துவிட்டது).
பல்வேறு ஆதாரப்பிரச்சனைகளில் சிக்கித்தவிக்கும் மக்களை மீட்க முடியாத இந்திய அரசு, புளுடொனியம் தயாரிப்பு என்றும் அணுமின் உற்பத்தி என்றும் ஜல்லியடிப்பது ஏன்? மக்களின் பாதுகாப்பு பற்றி கருதாமல் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மக்களுக்காக பயன்படுத்தப்படுமா? சில முதலாளிகளின் நன்மைக்காக மக்களை இந்திய அரசு சுரண்டுகிறதா? மாற்றானை அடக்க புளுடொனியம் தயாரிக்கிறேன் என்று சொந்த மக்களையே கொல்கிறதா? இவைதான் இந்திய அணுமின் உற்பத்தியின் முன் நிற்கும் கேள்விகள். நாட்டினுடைய கௌரவத்தை உயர்த்த, நாட்டின் ஆராய்ச்சியை, நாட்டின் அறிவியலைவிட நாட்டு மக்கள் வாழ்க்கைத்தரம் முதலில் உயர வேண்டும். இந்திய அரசு இதை உணருமா ??
அணுமின் ஓநாயின் பிடியில் இந்திய சுற்றுப்புற சூழல் -- பாகம்-1
ஷெர்னொபில், த்ரிமைல் தீவு, டொகிமோரா அணுகரு விபத்துகள் எல்லோரும் அறிந்ததே! குறிப்பாக ஷர்னோபில்விபத்து உக்ரைன்(முந்தய சோவியத் ரஷ்யாவில்)1986ம் ஆண்டு 2000க்கும் மேற்ப்பட்ட மக்களை செறித்தது. இந்திய அணுசக்திப்பயணம் இது போன்ற ஓர் இலக்கு நோக்கியே செல்கிறது. எந்தவித தொழிற்சாலையானாலும் பாதுகாப்பு அவசியமானது. குறிப்பாக, அணுமின் மற்றும் அணுமின் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு மிக மிக அவசியம். ஏனென்றால், இத்தகைய அணுமின் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்து, பாரதூரமான விளைவுகளை உண்டாக்கக்கூடியவை. அடுத்த தலைமுறைகளையும் தாக்கக்கூடியவை. மரபணு சார்ந்த பிரச்சனைகளை உருவாக்கக்கூடியவை.பொதுவாக, அணுசக்தி மற்றும் அணுஆயுதங்கள் உற்பத்திக்கு முக்கியமான மூலப்பொருள் யுரேனியம், தோரியம் போன்றவற்றின் தாதுப்பொருட்களாகும். இத்தகைய தாதுக்களின் சுரங்கங்கள் மிகவும் ஆபத்தானவை. இங்கு வேலை செய்பவர்கள் அனைவரும் கதிர்வீச்சுடைய தாதுக்களின் துகள்களை சுவாசித்தபடி வேலைசெய்கிறார்கள். இதுவும் ஒரு வகை உழைக்கும் வர்க்கத்தை சுரண்டும் போக்குதான். ஆனால் மேலைநாடுகளில் இத்தகைய சுரங்கங்களுக்கு அதிகமாக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் ‘ஜடிகுடாவில் புத்தர் அழுகிறார்’ என்றொரு ஒளிப்பதிவு வெளியானது. “தி வீக்” இதழும் அதைப்பற்றி விரிவாக எழுதி இருந்தார்கள். இது போன்ற சுரங்கங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் கதிரியக்கப்பொருட்கள் மிகையாக உள்ளன. இத்தகைய கழிவுகள் போதிய அளவு சுத்திகரிப்படாமல் வெளியேற்றப்படுகின்றன. ஜடிகுடாவின் சுரங்கத்தில் தாதுபொருட்கள் தவிர்த்தவை கட்டுமான பணிகளுக்கும் சாலையிடுவதற்கும் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு செய்வதால் கதிரியக்கம் சுற்றுப்புற்ச்சூழலை வெகுவாக பாதிக்கிறது. கடந்த நூற்றாண்டில் இந்திய அணுமின் சார்ந்த நிலையங்கள் சில விபத்துக்களை சந்தித்தன.இவை மற்ற தொழிற்சாலைகளோடு ஒத்துநோக்கும் போது எண்ணிக்கை குறைவு எனினும் விளைவுகள் மிகக்கடுமையானவை. அகில உலக கதிரியக்க ஆணையத்தின் அறிக்கைப்படி 20mSv (milli Sievert) கதிர்வீச்சு ஆயிரத்தில் ஒருவருக்கு கதிரியக்க புற்றுநோயை உருவாக்கவல்லது. ஆனால் இந்தியாவின் அணுசக்தி கண்கானிப்பகம் வெளியிட்ட அறிக்கையில், 1986 முதல் 1990 வரை அணுசக்தித்துறையில் உள்ள 3-5 சதவிகித தொழிலாளர்கள் 20mSv கதிர்வீச்சைவிட அதிகமாக பெற்றுள்ளனர். அணு உலைகளில் பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் உபபொருட்கள் புளுடொனியம் (புளுடொனியம் அணுஆயுதங்கள் தயாரிப்பின் மூலப்பொருள்) தயாரிக்கப்பயன்படுகிறது. புளுடொனியம் யுரேனியத்தைவிட 30000 மடங்கு கதிர்வீச்சு கொண்டது. புளுடொனியத்தைப் பிரித்தெடுக்கும்முறை அதிக கதிர்வீச்சும் அதிக மில்லியன் பணச்செலவும் உடையது. கல்பாக்கத்தில் இப்பிரிவு kalpakkam reprocessing plant (KARP) என இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
திரு.எம்.வி.ரமணா அவர்கள் பாஸ்ட் ப்ரீட் உலைகள்(fast breed rector - FBR) குறித்து சில கட்டுரைகளை ‘தி ஹிந்து’ நாளிதழில் வெளியிட்டுள்ளார். அவர் கூறுவது என்னவெனில் FBR மிகுந்த வெப்பத்தை வெளியிடக்கூடியவை, பெரிய விபத்து ஏற்படுத்தக்கூடியவை, ஆதலின் பாதுகாப்பு மிகவும் இன்றியமையாதது. FBTR (fast breed test reactor) மற்றும் PFBR (prototype fast breed reactor) அதிக விபத்துகளை உண்டாக்கக்கூடியவை. பிரான்சில் உள்ள ஸுப்பெர்னிக்ஸ் அணுவுலை FBR வகையைச் சார்ந்தது. இது கடந்த 10 வருடத்தில் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே பயனில் இருந்து வந்துள்ளது.
பி.கு.: இந்த கட்டுரையை நான் முதலிலேயே எழுதிவிட்டேன். ஆனால் சில மொக்கை பதிவுகளால், இதனுடைய இடுகை தள்ளிப்போடப்பட்டு, இப்போது இதன் பாகம்-2-வுடன் வெளிவரும் நிலை.

