பனி முட்டைகளாய்
முற்றத்தில் வீழ்ந்தபோது
வினைப் பின்னமில்லா
விடலைப் பருவத்திலே
முத்துக்களாய் சேகரித்தேன்!
சன்னலில் சாறலாய்
முத்தங்கள் பதித்தபோது
உடைந்த துளிகள்
உலர் உள்ளத்தை
நனைத்தது உணர்ச்சியால்!
தோட்டத்தில் தூறலாய்
பூவிதழில் பொதிந்தபோது
தழுவாத தருணங்கள்
எண்ணிய தவிப்புகளெத்தனை!
சாப்ளின் சொன்னதுபோல்
உன்னோடு உறவாடும்போது
உப்புநீர் உமிழும்
என்றும் என் கண்ணோடு!
மழைக்கும் உங்களுக்கும் உள்ள உறவு இனிக்கவல்லவா வேண்டும்:)
ReplyDeleteவெகு நாட்களுக்குப் பிறகு இங்க வருவதில் எனக்கு மகிழ்ச்சி குட்டி.பி.
வல்லியம்மா,
ReplyDeleteவருகைக்கு நன்றி!
ithu kuda nalla irukke
ReplyDeleteஅச்சச்சோ.... மழை அழ வைக்குமா?
ReplyDeleteஅன்புடன் அருணா
அருணா,
ReplyDeleteஇது ஆனந்தக் கண்ணீர்!
வருகைக்கு நன்றி!
கவிதைப் பிசாசாய் மாறிவிட்டீர்கள்
ReplyDeleteமு.க (முரளிகண்ணன்),
ReplyDeleteகவிதை என்ன அவ்வளவு கண்டராவியாவா இருக்கு!!