Sunday, January 17, 2010

ஆயிரத்தில் வேறொருவன்


இத்திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனையே! சோழ பாண்டிய வரலாற்றுக்கும் இத்திரைப்படத்திற்கும் எந்தவிததொடர்பும் இல்லை என்ற disclaimer-உடன் தொடங்குகிறது. இதன்பிறகும் படத்தில் வரலாற்றை தேடுவது தேவையில்லாத விடயம். சோழ பாண்டிய போரில் தப்பித்த சோழவம்சத்தின் கடைசி வாரிசைத் தேடி பயணிக்கிறது ஒரு குழு. பாண்டியர்கள் வராமலிருக்க சோழர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த 7 பொறிகளைத் தாண்டி செல்வதுதான் கதையின் முதல்பாதி. படத்தின் இரண்டாவதுபாதி சோழர்கள் வாழும் குகையில் நடக்கிறது.

படத்தின் முதல்பாதியில் கார்த்தி பேசும் போதெல்லாம் ரசிகர்களின் கைத்தட்டல்களை அள்ளிச் செல்கிறார். இரண்டாவது படத்திலேயே கார்த்தியின் இந்த முன்னேற்றம் பெரிய விடயம். போகப்போக இரண்டாம் பாதியில் மனிதர் சீரியஸாகிவிடுகிறார்.

ரீமாசென் படத்தின் முக்கிய கதாபாத்திரம். அவர் தான் வில்லி. சந்திரமுகி ஜோதிகா போல இருக்கிறார். பார்த்திபனை மிரட்டுகிறார். என்னதான் ரீமாசென் காலை அகல விரித்து நடித்தாலும், இரண்டாம் பாதியில் நம் மனதில் நிற்பவர் பார்த்திபன். பார்த்திபன் அறிமுகக் காட்சி அருமை. படத்தின் முடிவில் சோழமக்கள் சித்திரவதை செய்யப்படும்போதும், பார்த்திபன் இறக்கும்போதும் மனதில் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்திச் செல்கிறது. படத்தின் இறுதிக் காட்சிகள் ஈழத்தமிழரை மட்டுமல்ல, வல்லாதிக்கத்தால் நசுக்கப்படும் எந்தவொரு இனமும் அமைப்பும் சந்திக்கும் நிலைமைதான். அது ஈழமாகவோ, காஷ்மீராகவோ, வடகிழக்கிந்தியாவாகவோ, இராக்காகவோ இருக்கலாம், ஆனால் மக்கள் மீதான அடக்குமுறை இப்படித்தான் இருக்கும். வல்லாதிக்கத்தின் வேட்டைநாய்களான ராணுவத்தின் யோக்கியதை அவ்வளவுதான்.

கலை இயக்குனர் சந்தானம் பாரட்டப்படவேண்டிய அளவைவிட அதிகமாக பங்காற்றியுள்ளார். பல வித்யாசமான, ஆச்சர்யமான விடயங்களை நம் கண்முன்னே உண்மைபோல் நிறுத்துகிறார். அவற்றை ராம்ஜி ஒளிப்பதிவு செய்தவிதம் பிரமாதம்.

ஜிவிபிரகாஷின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை மேலும் அதிகரிக்கிறது. The king arrives, celebration of life போன்ற இசைகள் காட்சிகளுடன் அலட்சியமாகப் பொருந்துவது மிகஅழகு.

தாய் தின்ற மண்ணே… பாடலிலாவது தமிழர் சோகத்தைப் பதிவு செய்த வைரமுத்துவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

படைப்பற்றி பாடமெடுக்கும் கமல் குழியிலிருந்து அடியேன் ராமானுஜதாசன் என்று எகிறிகுதித்ததை பார்த்து தலையில் அடித்துக்கொண்டவர்களுக்கு இப்படம் பெரிய ஆறுதல். ஒரு நல்ல, தரமான பழந்தமிழரின் வாழ்வியலைக் கூறும் ஒரு வரலாற்றுப் படம் தமிழில் இதுவரை வரவில்லை. இப்படம் அதுபற்றி கூறவில்லை என்றாலும், அந்த ஆர்வத்திற்கான முதல்கல்லாக ஏற்கலாம்.

7 விதமான பொறிகளின் கிராபிக்ஸ் காட்சிகளின் தரம் குறைவுதான். இருப்பினும் இதுவரை தமிழில் வெறும் பாடல்காட்சிகளில் மொக்கையாக பயன்படுத்தப்பட்டு வந்த கிராபிக்ஸ் தொழிற்நுட்பம் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. Gladiator வகை சண்டை காட்சி கூட தமிழுக்கு புதுசு. புதைகுழிப் பகுதியில் வரும் நடராஜர் நிழல் காட்சி அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது.

The mummy, McKhennas gold, 300, Apocalyptos படங்களின் சாயல் இருப்பினும்,படத்தில் எதுவும் அரைத்தமாவு இல்லை. 100 கோடியில் லஞ்சலாவண்யம் பற்றி மயிருபிளக்கும் சங்கர், மேடைக்கு மேடை வார்த்தைக்கு வார்த்தை புதுமை பற்றி அறிவுரையாற்றிவிட்டு பொறுமையை சோதிக்கும் படங்களை தற்போது கொடுத்துக்கொண்டுவரும் கமல் என ஹைபட்ஜட்டில் பழைய பக்கோடா விற்கும் இவர்கள் செய்யாததை செல்வராகவன் இந்தப்படம் மூலமாக செய்துவிட்டதாக நினைக்கிறேன்.

Apocalypto, Passion ofchrist படங்களில் மொழியே தெரியாமல் சப்டைட்டில் பார்த்து மட்டுமே ஓரளவு புரிந்துகொண்ட படத்தைப் பற்றி பேசி சிலிர்ப்பவர்கள். இந்தப் படத்தில் வரும் 15 அ 20 நிமிட தமிழ் புரியவில்லை என்று சில தமிழ் பதிவர்கள் அங்கலாய்கிறார்கள்.லாஜிக் மீறல் என்றொரு குற்றம். எல்லா mystery, fantasy படங்களிலும் லாஜிக் புஜ்ஜியம் தான்.
 
In overall, A New dish with a different taste.
 
*****************************************************************************

தான் ரசித்ததை தன் குருநாதர்களிடம் மடலனுப்பி கேட்கும் படவா ரசிககண்மணிகள் என்றுதான் திருந்துவார்களோ தெரியாது. கூடிய சீக்கிரத்தில் அதிமேதாவி சாருவிடமோ, சகலகலா ஜெயமோகனிடமோ கருத்துக்கணிப்பு நடக்கும் பாருங்கள். அவர்களும் தன் பங்கிற்கு இரண்டு, மூன்று உலகப்படங்களையோ, மலையாளப் படத்தையோ சொல்லி, பொருத்தம் பார்த்து புடுங்காசூரர்களாகக் காட்டிக்கொள்வார்கள்.

10 comments:

  1. என்ன குட்டிப்பிசாசு சவுக்கியமா?செல்வாவின் உழைப்பை பாராட்டியமைக்கு நன்றி.

    இரண்டாம் முறை படம் பார்க்கும் போது தூய தெள்ளு தமிழ்வசனங்கள் புரிந்தன.

    சாரு,ஜெமோ வகையறாக்களையும் ஒரு ஓட்டு ஓட்டியுள்ளீர்கள்.

    ReplyDelete
  2. one of the best film in tamil.

    the whole film you can see hard work by each technician and hard work by all artist .

    good back ground music in second half.


    selvaragan thanks


    good movie.worth watching..

    ReplyDelete
  3. கலக்கலா எழுதி இருக்கீங்க.

    வரலாற்றை திரித்து விட்டார்களாம். லாஜிக் இல்லையாம். உலகப்படங்களை சுட்டுட்டாங்களாம்.
    இந்த அளவுக்கு கூட இப்போ தமிழ் சினிமாவில் யாரும் படம் எடுக்க முன் வராத போது, செல்வா தைரியமா எடுத்திருக்கிறாரே என்பதை கூட பாராட்ட முடியாத அறிவுஜீவிகள் இங்கே அதிகமாக இருக்கிறார்கள்.
    என்ன கொடும சார் இது.

    நானும் இப்படத்தை பற்றி எழுதி இருக்கேன்.

    http://msk-cinema.blogspot.com/2010/01/blog-post.html

    ReplyDelete
  4. One of the worst movie in Tamil... I didn't like it at all (especially the second half). Climax was the worst part of the film.

    I've travelled 100 kms and paid 12 euros to watch this movie. Completely disappointed.

    ReplyDelete
  5. //One of the worst movie in Tamil... I didn't like it at all (especially the second half). Climax was the worst part of the film.

    I've travelled 100 kms and paid 12 euros to watch this movie. Completely disappointed.//

    தல,

    எல்லாருடைய ரசனையும் ஒரே மாதிரி இருக்காது என்பதை ஒத்துக் கொள்கிறேன். விஜய் படமெல்லாம் வெளிநாடுகளில் நன்றாக ஓடுகிறதாம். ஓரே ஒரு விஜய் படத்தை வேற்று நாட்டவரிடம் காட்டுங்கள் பார்க்கலாம். அவர்கள் இந்தியர்களை உண்மையில் ஒரு ஜோக்கரைப் போல சொல்வார்கள். ஆனால் நீங்கள் எவ்வளவு குறை இருப்பினும் இந்தப் படத்தை தைரியமாக அவர்களிடம் காட்டலாம். pirates of caribbean படத்தில் உலகம் தட்டையாகத் தான் காண்பிக்கிறார்கள். இத்தனைக்கும் அந்தக் கதை 1700-1800களில் நடக்கிறது. இதை யாராவது லாஜிக் ஓட்டை என்று சொல்வார்களா? தமிழ்படத்தில் தான் சொல்வார்கள். ஏன் என்றால் நமக்கு புதுமைகள் உடனே பிடிப்பதில்லை. நிதானமாகத் தான் ஏற்றுக் கொள்வோம்.

    ReplyDelete
  6. நல்ல விரிவான விமர்சனம்.

    இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்தேன், எனக்கு "ஆயிரத்தில் ஒருவன்" பிடித்திருந்தது.

    சில குறைகள் இருந்தாலும், ஒரு முறை பார்க்கலாம் என்று சொல்லுவேன்.

    ReplyDelete
  7. Really a good review.
    I liked the movie very much.
    Ending could have been modified. But still this is a wonderful moview to watch.
    i am really not sure why some amount of people are saying this is not good. 3 and half hour movie went like half an hour. that itself says about the movie.

    ReplyDelete
  8. Ennaya Puriyala Makkaluku.....
    Moopoar --- Vayasu Kooda...
    Agam - Manasu...
    Vilaikiraen---Virumbukiraen...

    antha periyavar erakum poathu solluvaaru

    " Ellarum Sinthathirayaga poaagungal... Thanjai adainthavudan emmmai oru vinadi ninaiyungoal" oru Historic Movie ippdi edutha thaan azhagu... atha vittutu ...

    Ellarum Tanjore ponnaela Missed call Kudungana solla mudiyum... oru visayam kastapattu kondu vantha encourage pannungapa...

    Selva'ku enna Kadhal kondaen mathuri kathaya illa....

    ReplyDelete
  9. //ஏன் என்றால் நமக்கு புதுமைகள் உடனே பிடிப்பதில்லை. //

    மேலும் வெளிநாட்டுக்காரன் செய்தால் வியந்தோதும் நாம் நமது ஆட்கள் செய்தால் நிந்திப்பதே வழக்கம்.

    ReplyDelete
  10. Selvaraghavan is a psycho .....:((

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய