சென்னை குண்டுவெடிப்பில் ஈடுபட்டோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - இல.கணேசன்
நரேந்திரமோடி நேற்று நெல்லூர், குண்டூர், விசாகப்பட்டினத்தில் பிரசாரம் 
செய்ய இருக்கிறார். எனவே அவரை மையமாக வைத்து இந்த சதி செயலை திட்டமிட்டு 
செய்து இருக்கிறார்கள் - பொன்.ராதாகிஷ்ணன்
#
 இவங்கெல்லாம் யாரு, தமிழகத்தில் இத்தனைநாள் இவர்கள் என்ன செய்து 
கொண்டிருந்தார்கள். தேர்தல் கூட முடிந்துவிட்டதே, பிறகு எதற்கு 
இவ்வறிக்கை. இலவு காத்த கணேசனும், போனியாகாத ரா.கியும் தேமுதிக மீது சவாரி செய்தாவது வெற்றிபெற பார்க்கிறார்கள். மே 16 தெரியும் இவங்க வண்டவாளம். 
நான் பிற்படுத்தப்பட்டவன், ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவர்கள் என்னை  இது போன்று வசைபாடுகின்றனர் - மோடி
# பரவாயில்லை நல்லா முயற்சி செய்ராப்ள! ஆனா கலைஞர் அளவுக்கு இல்லை.  
இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று, 16 தமிழ் அமைப்புகள் மற்றும் அதன் 
ஆதரவாளர்கள் 424 பேருக்கு இந்தியா தடை விதித்துள்ளதற்கு திமுக தலைவர் 
கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தாமதப்படுத்தவே உள்நோக்கத்துடன் 
வரிசை வரிசையாக வாய்தாக்கள் பெறப் பட்டன என்று கருணாநிதி கூறியுள்ளார். 
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தலைவர் கருணாநிதி 
சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவின் மீதான 
விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
# ஆகா! எவ்வளவு நல்ல உருப்படியான காரியங்கள் நம்ம தலைவர் செய்து வருகிறார்.  இதுவே ஆட்சியில் இருந்தால்...
இப்படி
 எதாவது ஒரு படத்தின் துவக்க விழா, நூறாவது நாள் விழா, படப்பிடிப்பு, பாடாவதி வசனம் 
என்றோ, கமலின் மொக்கைப் படத்தைப் பார்த்தோ, ரஜினியின் அட்டுப் படத்தை 
ரசித்தோ பொழுதைப் போக்கி இருப்பார். 
‘ஜெயலலிதா
 மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு தொடர் கதை’  என குறிப்பிட்டுள்ள 
தி.மு.க. தலைவர் கருணாநிதி, அது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். -
 See more at: 
http://newsalai.com/news1/2014/05/8874.html#sthash.qAqYMtcZ.dpuf
என்ன கலைஞரையே குறை சொல்கிறீர்கள். ஜெவைப் பற்றி எதுவும் சொல்வதில்லை
 என்று சிலர் ஆதங்கப்படுகின்றனர். நான் என்னங்க பண்ணட்டும், அந்தம்மா 
கோட்டைக்கு வந்தால் தானே, செய்தித்தாளில் எதாவது போடுவாங்க. கொடாநாட்டிலேயே
 இருக்காங்க. ஒரு மாசம் தேர்தல் பிரசாரம் செய்துவிட்டு, ஓர் ஆண்டு ஓய்வில் 
இருப்பாங்க போல. 
மறுபடியும் செய்வீர்களா! செய்வீர்களா! 
*********************************************************************************
உத்திரபிரதேசம், பீகாரில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டுசெல்லும் ஊழியர்கள் (நன்றி: தினமலர்)
# நான் எதோ ஊருக்கு போறாங்கனு இல்ல நெனச்சேன்
# பாவம் ரொம்ப ஏழைங்க!
*********************************************************************************
புனைப்பெயரில் எழுதுபவர்களாக இருப்பின் 
சில நன்மைகள் உண்டு. நாம் நினைப்பதை பேதம் 
பார்க்காமல் வெளிப்படையாக சொல்லலாம். ஆனால் முகமூடி இல்லாமல் எழுதும்போது 
இச்சுதந்திரம் இருப்பதில்லை. பதிவிடும்போது கூட பார்த்து பார்த்துதான் போட 
வேண்டும். யார் மனதாவது புண்படுமோ, யாராவது கோபிப்பார்களோ என்றெல்லாம் 
பார்க்கவேண்டும்.  
பதிவுலகில் அனானிகளால் தொல்லை என்று சிலர்
 அங்கலாய்ப்பது உண்டு. என்னைப் பொருத்தவரை அனானிகளில் பலர் தொல்லை தருபவர்களாக இருப்பதில்லை. ஆக்கப்பூர்வமான கருத்துக்களை சொல்பவர்கள் உண்டு. 
முன்பு அனானிகளாக இருந்த பலர் இன்று சொந்தமாக பதிவுகள் தொடங்கி 
பதிவிடுகிறார்கள். நானும் அனானியாகவே தொடங்கினேன் (9 வருடங்களுக்கு முன்). 
பதிவர்களுடன் அதிகம் பழக்கமில்லை. பதிவர்கள் சந்திப்பிற்கு ஓரிருமுறை போய் 
இருக்கிறேன். யாரிடமும் நான் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதில்லை. 
ஒரு சில பதிவர்களுக்கு மட்டும் என்னை தனிப்பட்ட முறையில் தெரியும். அப்போது 
பரபரப்பாக பதிவெழுதியவர்கள், இப்போது எழுதுவதில்லை. 
ஆனால் இன்று அப்படியில்லை, கூகில் ப்ளஸ் வந்துவிட்டது. ஜிமெயில் ஐடி இருந்தால் போதும், அனானியாக இல்லாமல் பெயருடன் பின்னூட்டமிடலாம்.
அப்படி என்ன பிரச்சனை அனானிகளால். ஒரு சிலர் அனானியாக கிடைக்கும் கருத்து 
சுதந்திரத்தை அடுத்தவனை அல்லது மாற்றுக் கருத்து கொண்டோரை வைவதற்கு நன்றாக 
பயன்படுத்திக் கொள்கிறார்கள். இன்னும் ஒரு சில பதிவர்கள் வேறு பெயரில் 
வந்து தருமாறாக பேசுவார்கள். உதாரணமாக, நமக்கு அறிமுகமான பதிவரே தங்களுடைய 
பெயரில் கருத்துக்களை சொல்ல பயந்து அல்லது கூச்சப்பட்டு வேறு பெயரில் வந்து வயது வித்யாசமில்லாமல் தகாத வார்த்தைகளைச் சொல்வார்கள் அல்லது 
திட்டுவார்கள். ஆனால் அப்படி பின்னூட்டமிடும்போது பலரால் வேறு பெயருக்கேற்ப தங்களுடைய எழுதும் முறையை 
மாற்றிக் கொள்ள இயலுவதில்லை. வடிவேலு போல கொண்டையை மறைக்காமல் 
விட்டுவிடுவார்கள். ஏற்கனவே அப்படி சிலர் சிக்கியும் இருக்கிறார்கள்.
விருப்பம் இருந்தால் நாம் அனானிகளை அனுமதிக்கலாம். இல்லாவிடில் அந்த ஆப்சனை தூக்கிவிடலாம். Name/Url
 ஆப்சன் கொடுத்தால் சிலர் அதை பயன்படுத்தி வேறொருவர் பெயரில் 
பின்னூட்டமிட வாய்ப்பு உண்டு. ஆனால் அப்படி பின்னூட்டமிட்டாலும், முயற்சி செய்தால் அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் இவர்கள்
 கம்ப்யுட்டர் ஐபியையும் பெறமுடியும். 
‘ஜெயலலிதா
 மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு தொடர் கதை’  என குறிப்பிட்டுள்ள 
தி.மு.க. தலைவர் கருணாநிதி, அது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். -
 See more at: 
http://newsalai.com/news1/2014/05/8874.html#sthash.qAqYMtcZ.dpuf
‘ஜெயலலிதா
 மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு தொடர் கதை’  என குறிப்பிட்டுள்ள 
தி.மு.க. தலைவர் கருணாநிதி, அது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். -
 See more at: 
http://newsalai.com/news1/2014/05/8874.html#sthash.qAqYMtcZ.dpuf








சகோ கு.பி நலமா???
ReplyDeleteநல்ல கலவைப் பதிவு.அருமை!!!
1. பாஜகவின் அதிக பட்ச முயற்சி இத்தேர்தல். தமிழகத்தில் குறைந்த பட்சம் 5 ஆவது வெல்வார்கள் என கணிக்கலாம். கணிப்பு தவறானால் மகிழ்ச்சி.குண்டு வெடித்தது உண்மை. வைத்தவனை எந்தக் காலத்தில் கண்டு பிடித்தார்?
2.மோடிக்கும் கலைஞருக்கும் அரசியல் வரலாற்றில் பல ஒற்றுமை உண்டு. பல மூத்த தலைகளை குப்புறத் தள்ளி காணாமல் போக செய்தே வளர்ந்தவர்கள். மோடி இந்துத்வா என்றால் கலைஞர் திராவிடத்வா( ஒரு சமயம் நாடு கூட கேட்டாங்க).சமயம் வந்தால் கொள்கைகளை ஊத்தி மூடுவார்.விமர்சித்தால் ஏழை,பிற்பட்டவன் என கதை விடுவார்கள்.
3. திமுக நல்ல எதிர்க்கட்சி.மோசமான ஆளும் கட்சி என்பதே வரலாறு.ஆகவே திமுக ஆளும் கட்சி ஆகவே கூடாது.ஆனால் மானாட மயி_டதான். ஹி ஹி.அம்மாதான் ஆள வேண்டும்,அய்யா இப்படியே காலத்தை ஓட்ட வேண்டும்.
4. பாருங்கள் அம்மா மக்களுக்கு தொல்லை கொடுக்காமல் ஊருக்கு போய் ஓய்வு எடுக்கிறார்.(திமுகவால்) இருண்ட தமிழகத்தை ஒளியேற்றுவது பற்றி சிந்திக்கவே ஓய்வுஎன்பதை சிந்திக்க மாட்டீர்களா???.
பதிவுலக முரண் தவிர்ப்போம், ஆக்கபூர்வ கருத்து பரிமாற்றம் செய்வோம்!!
பதிவுலகில் அமைதி உண்டாகட்டும்!!!
நன்றி!!
சார்வாகன்,
Deleteநலம். நலம் அறிய ஆவல்.
//பாஜகவின் அதிக பட்ச முயற்சி இத்தேர்தல். தமிழகத்தில் குறைந்த பட்சம் 5 ஆவது வெல்வார்கள் என கணிக்கலாம்.//
பாஜக கூட்டணி 5 இடங்களில் ஜெயிக்கலாம். பாஜக 1 இல்லாட்டி அதிகபட்சம் 2. அவ்வளவுதான்.
//பதிவுலக முரண் தவிர்ப்போம், ஆக்கபூர்வ கருத்து பரிமாற்றம் செய்வோம்!!
பதிவுலகில் அமைதி உண்டாகட்டும்!!!//
எல்லாம்வல்ல இறைவனால் எங்கும் மையான அமைதி நிலவட்டும். :)
இவர்கள் எல்லாம் ஏழைங்கன்னு பக்கத்து வீட்டுல இருக்கற பால் குடிக்கற பாப்பாகிட்ட சொன்னாக் கூட நம்பாது. நான்கூட ஒரு கட்டத்துல இன்னொரு அவதாரம் (வெற பேர்ல) எடுக்கலாமான்னு யோசிச்சதுண்டு. ஆனா இந்தக் கொண்டையை மறைக்கிற சாமர்த்தியம் பத்தாதுன்றதால அந்த ஐடியாவை கை விட்டுட்டேன் கு.பி.
ReplyDelete//நான்கூட ஒரு கட்டத்துல இன்னொரு அவதாரம் (வெற பேர்ல) எடுக்கலாமான்னு யோசிச்சதுண்டு. ஆனா இந்தக் கொண்டையை மறைக்கிற சாமர்த்தியம் பத்தாதுன்றதால அந்த ஐடியாவை கை விட்டுட்டேன் //
Deleteஐய்யோ! வாட் எ பிட்டி.
ஆட்சியில் இருந்தபோது மஞ்சள் துண்டு மக்களுக்காக உழைச்ச படங்கள் கண்ணில் நீரை வரவழைத்தது. வாரிசுகளுக்கு மந்திரி பதவி வாங்க வீல் சேரில் டெல்லி வரை போகும் மஞ்சள் துண்டு, மாநிலப் பிரச்சினைகளுக்கான முதல்வர் மாநாட்டுக்கு லீவு போட்டுட்டு உள்ளூரில் முக்கியமான வேலை பார்க்கும். என்ன தெரியுமா? நடிகை ரம்பாவின் திருமண வரவேற்பு...........!! [வடிவேலு ஸ்டைலில்] ஐயோ ...........ஐயோ ...........
ReplyDeleteகு.பி,
ReplyDeleteநல்லக்கலவை!
# மஞ்சத்துண்டு "கலைஞர்"யா அதான் "கலைச்சேவைக்கே முக்கியம் கொடுக்கார் அதைப்போய் குறை சொல்லும் நீர் தோட்டத்து ஆளா? அவ்வ்!
# கழுதை மேல எல்லாம் இந்திய சனநாயகம் பயணம் போகுது,அதாவது எலக்ஷன் மெசின் அப்படி போற படம் போட்டிருக்காங்க, நீர் போட்ட படத்துல "ரொம்ப நவீன வசதிகள்' உள்ள இடத்து காட்சியா இருக்கு அவ்வ்!
நன்றி!
Delete//கழுதை மேல எல்லாம் இந்திய சனநாயகம் பயணம் போகுது,அதாவது எலக்ஷன் மெசின் அப்படி போற படம் போட்டிருக்காங்க, நீர் போட்ட படத்துல "ரொம்ப நவீன வசதிகள்' உள்ள இடத்து காட்சியா இருக்கு அவ்வ்!//
ஆமா! கோவேறு கழுதை மேலனு நினைக்கிறேன்.
//குறை சொல்லும் நீர் தோட்டத்து ஆளா?//
Deleteபூந்தோட்ட காவல்காரன் :)