Friday, June 15, 2007

பொன்ஸ் அக்கா - அலெக்ஸாண்டர் - மறுவெளியீடு

என்னுடைய முந்தைய பதிவில்் பொன்ஸ் அக்கா சொன்ன அறிவுரை!!!

//
பிசாசு,

நீங்க சொல்றதெல்லாம் சரிதான்.. ஆனா இந்தப் போருக்குப் பின்னால போரஸ் தன்னோட மகளையோ தங்கையையோ அலெக்ஸாண்டிருக்குக் கட்டி வைப்பாருன்னு நினைவு.. இத வச்சி உங்க தமிழைய்யா ரீமிக்ஸ் பண்ண முயன்றிருப்பாரு..

//

நம்ம திரையுலக வல்லுனர்களிடம் கிடைத்தால் எப்படி சின்னாபின்மாகி இருக்கும்! வாங்க தைரியமா பார்ப்போம்!!

(1) பி.வாசு டைரக்ஷன்-ல பாசமலர் இரண்டாம் பாகம் வெளிவருகிறது, அதுல பாசத்தை புழியமாதிரி ஒரு சீன் வச்சி இருக்காரு! தாய்க்குலம் எல்லாம் கன்ணுல தண்ணீ வச்சிக்கும். அப்படி ஒரு சீன்! நம்ம நடிகர்திலகம் தான் போரஸாக நடிச்சி இருக்கணும். அவரு இல்லாததுனால இளைய திலகம் பிரபு நடிக்கிறார். அலெக்ஸாண்டராக ‘தமிழக பெருச்சாளி’ சாரி! ‘தமிழக புரூஸ்லீ’ தனுஷ் நடிக்கிறார். (ஒரேஒரு ப்ராப்ளம் அடிக்கடி ஹெல்மெட் இறங்கி கண்ணை மூடிக்குதாம்.வேறவழியில்ல இப்ப தான் ஹெல்மெட் கட்டாயமாச்சே!!) நாயகி எதோ மும்பை நடிகையாம்.

(தாய்க்குலம் கண்ணீர் வச்சிக்கும் காட்சி)

போரஸ்: அலெகஸ்.. என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன்! அதுல ஆனந்தகண்ணீர் தான் வரணும்!

அலெக்ஸாண்டர்: மாமா! ஆனந்தகண்ணீர்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க!!

போரஸ்: எதுடா பெரிய வார்த்தை! ஆனந்தகண்ணீர் தம்மாதூண்டு வார்த்தை.

(வரலாற்றுக்காட்சிகள்)

வரலாற்றுக்காட்சிகள் நிச்சயம் இருக்கணும்னு சில காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாம்.

கல்யாணத்தில் ஓரமாக நின்று செலுகஸ்(அலெக்சாண்டரின் தளபதி) மொய் வசூலிக்க, சாண க்கியர் மொய்ப்பணம் 101 பொற்காசு!னு சாணக்கியர் க்யூவில் நிற்க, சந்திரகுப்தன் பந்தில உட்காந்து வடை பாயசத்தோட சாப்பிட்டு கைய நக்கிட்டு இருக்கிறாராம். இதைப்பார்த்த போரஸான பிரபு என்ன கொடுமை அலெக்ஸ் இது! மொய்யே எழுதாமே இந்த கட்டு கட்டுரான் என்கிறார்.

ஜீலம் கரையோரமா ஒரு குத்துப்பாட்டு வேற இருக்காம். போர்ல செத்துட்டது தன்னோட ஆட்கள்னு தெரியாம தனுஷ் சாவுக்கு ஆடுற ஆட்டம் கண்டிப்பாக ஹிட் ஆகுமாம்.

(2) விஜய டி. ராஜேந்தர் தங்கைக்கோர்கீதம்-இரண்டாம் பாகம் அஷ்டாவதானியாக டைரக்ஷன்,நடிப்பு(அடப்பாவி நடிப்பா?),இசை,ஒளிப்பதிவு,கலை,பாடல்கள்,வசனம்,திரைக்கதை அவரே!

(டிஆர் பிராண்ட் வசன்ங்கள்)

கத்திப்பேசதடா! பேசினா என் கத்தி தான் பேசும்டா!!

டேய்! அலெக்ஸு ரிலாக்ஸு இல்லாட்டி நீ க்ளோஸு பிறகு கேட்காத ப்லீஸு

யே டண்டணக்கா டணக்குணக்கா!!!

(ஒரு உருக்கமான சீன்)

டிஆர்: இதும்மாதங்கச்சி! ஒரு ஆம்பிள வாழ்க்கையில வழுக்கினால், சமையல்கட்டுல பூனை வழுக்கின மாதிரி, ஆனா ஒரு பொண்ணு வாழ்க்கையில வழுக்கினா போர்க்களத்தில யானை வழுக்கின மாதிரிம்மா…!!

இந்த கேடயத்தையும் கத்தியையும் எடைக்கு போட்டாவது, இந்த அண்ணன் உன்னோட கல்யாணத்த நடத்திவைப்பாம்மா!!

(3) சும்மா இருப்பாரா நம்ம எஸ்.ஜே.சூர்யா, candom -னு ஒரு படத்தை ரீலீஸ் பண்ணிட்டாரு!! என்ன அது அசிங்கமா காண்டம்னு கேட்டா! அது யுத்த காண்டம் சொல்லுராரு

அலெக்ஸாண்டர் தளபதியோட ஓரினசேர்க்கைல ஈடுபடுறபோல ஏகப்பட்ட கசமுசா சீனாம். இதைப்பார்த்து சென்ஸார் கத்திரிப்பாய்ச்ச, எடுத்த எல்லாம் கட்டாகி மிச்சசொச்ச பில்ம் எல்லாம் தீப்பெட்டில போட்டு குடுத்துடாங்கலாம். டென்சனான எஸ்ஜே அந்த தீப்பெட்டியால அதிகாரி மண்டைய உடைச்ச கேஸ் இன்னும் நடக்குது.

(4) மணிரத்னம் இருவர்- இரண்டாம் பாகம் எடுத்து முடிச்சிட்டார். அதுல வர 5 நிமிட போர்க்கள காட்சி ரொம்பவே பேசப்படுமாம். ஜோ-னு(சிம்ரன், த்ரிஷா-னு எல்லாம் மழை பெய்யாது) மழை பெய்யுது. இந்த பக்கம் போரஸ், அந்தபக்கம் அலெக்ஸாண்டர். மாத்திமாத்தி காட்டுராங்க! ரெண்டு பேரும் கொட்டுர மழைல பேசிக்கிறாங்க,

போரஸ்: எதுக்கு இந்த போர்!

அலெக்ஸ்: வேண்டாமா!

போரஸ்: ஆமா!!

அலெக்ஸ்: ஏன்!!

போரஸ்: நிறுத்துங்க! எல்லாத்தையும் நிறுத்துங்க!!

அலெக்ஸ்: சரி!

செலுகஸ்: யோவ்! ஒன்னுமே புரியலயா! நீங்க முதல்ல பேசுரத நிறுத்துங்கய்யா!!

(சிறப்புக்காட்சி)

அலெக்ஸாண்டர்: (போரஸ் படையைப் பார்த்து...) ஐயரே! அது என்னய்யா! கருப்பா ஒசரமா எருமைமாடு மாதிரி!

ஐயர்:அது யானை!

அலெக்ஸாண்டர்: ம்ம்ம்யானை எவ்வளவு இருக்கும்

ஐயர்: சுமார்! ஒரு 1000 பொன் இருக்கும்

அலெக்ஸாண்டர்: 10 யானை எவ்வளவு ஆகும்!

ஐயர்: 10 யானை!!!!சுமார் 10000 பொன் ஆகும்!!

அலெக்ஸ்: 1 யானை எவ்வளவு ஆகும்!

ஐயர்: 1 யானை! 1000 பொன் ஆகும்!!

அலெக்ஸ்: யானை வாயில இருக்கே! அது என்ன?

ஐயர்: கரும்பு!!

அலெக்ஸ்: அது எவ்வளவு ஆகும்!!

ஐயர்: 1 கரும்பு ! சுமார் 1/2 பொன் ஆகும்.

அலெக்ஸாண்டர்: ஆகட்டும் எவ்வளவுனா ஆகட்டும்!! வாங்குரோம்! 10 கரும்பு வாங்குரோம்! வாங்கி ஜூஸ் போட்டு குடிக்கிறோம்! அது கிரேக்கருக்கு மட்டும் தான்! வேற எவனுக்கும் இல்ல!

பின்னணி இசை ஓவென்று சத்தமெழ பாடல்

Greece சீமையிலே

Horse ஓட்டும் வீதியிலே

Force-ஆக வந்தவனே

போரஸை அடிப்பாயோ!

போரஸை அடிப்பாயோ!

பி.கு.: உப்புமா கிண்டினது போதும் போடனு எங்க கண்மணி அக்கா திட்டுர மாதிரி இருக்கு! இதுக்கு மேல போனால் எங்க பாசக்கார மகளிரணி பட்டைய கிளப்பிடும்! வரட்டா!!!

எங்க வாத்தியார் சொன்ன வரலாறு

என்னுடைய பள்ளிபருவத்தில், தன்னுடைய சொற்பொழிவைப் பற்றி தானே பெருமையாக சொல்லிக் கொள்ள(கொல்ல) கூடிய ஒருவர் எனக்கு தமிழாசிரியராக இருந்தார். அவர் ஒருநாள் எங்கள் வகுப்பில் தன்னுடைய மகாபாரத சொற்பொழிவை கேட்க பலர் வருவதாகவும், தான் வருணிப்பதைக் கண்டு அனைவரும் மெய்மறப்பதாகவும் நாங்களும் அதை கண்டு களிக்க வேண்டும் என்று கூறினார். அன்று மாலை என்னுடைய நண்பன் ஒருவன் என்னுடைய வீட்டிற்கு வந்து “டேய்! நம்ம தமிழ் வாத்தி கோவிலில் சொற்பொழிவு ஆத்துராரு! போலாம்டா... நமக்கும் டைம் பாஸ் ஆன மாதிரி இருக்கும். அவருக்கும் சோப்பு போட்ட மாதிரியும் இருக்கும்” என்று சொன்னான். நானும் சரியென்று அவனுடன் கிள்ம்பினேன்.

அங்கு சொற்பொழிவில் கேட்க ஆளில்லாமல் ஈ அடித்துக்கொண்டு இருந்தது. ஐந்தாறு வயதானவர்களும் நாலைந்து வாண்டுகளையும் தவிர யாரும் இல்லை. அன்று எங்கள் தமிழ் ஆசான் வாலிவதைப் படலத்தை வருணித்து எல்லோரையும் வதைத்துக்கொண்டு இருந்தார். கோவிலில் சுண்டல் வாங்கிய களைப்பு தீர நாங்களும் சற்று அமர்ந்தோம். சற்றுநேரம் கழித்து வாலிவதைப் படலத்தோடு தொடர்பு படுத்தி தனக்குத் தெரிந்த அலெக்ஸாண்டர் கதையையும் அவிழ்த்துவிட்டார். வரலாறா? இல்லை தெலுங்கு மாசாலாபடமா? என்று சொல்லும் அளவிற்கு அப்படி ஒரு கதை! ஆனால் இதே கதையை அடிப்படையாகக் கொண்டு ஹிந்தியில் பழைய திரைப்படம் ஒன்று உண்டு. அப்படத்தில் தாராசிங் அலெக்ஸாண்டராகவும் ப்ரித்விராஜ்கபூர் (ராஜ்கபூரின் தந்தை) போரஸாகவும் சாய்ராபானு அலெக்ஸாண்டரின் மனைவியாகவும் நடித்திருந்தார்கள். அக்கதை என்னவென்றால் அலெக்ஸாண்டருக்கும் போரஸுக்கும் போர் மூள்கிறது. போரில் போரஸின் கை ஓங்கி இருக்கும் சமயம், அலெக்ஸாண்டரின் மனைவி போரஸின் கூடாரத்திற்குச் சென்று, தன் கணவரைக் கொல்ல வேண்டாம் என்று வரம் (யோவ்! எத்தனை நாளைக்கு இப்படி ஏமாத்துவீங்க) கேட்கிறாள்.

வரம் கேட்டவளை தன்னுடைய உடன்பிறப்பாக பாவித்து, போரஸும் மறுநாள் அலெக்ஸாண்டரை கொல்லாமல் விடுகிறான். முடிவு, போரஸ் போரில் தோற்கிறான். பிறகு வருவன எல்லோருக்கும் தெரியும். போரஸ் தன்னை ஒரு மன்னனைப்போல் நடத்த வேண்டும் என முழங்க, அலெக்ஸாண்டரும் போரஸின் போர்வீரத்தையும் துணிச்சலையும் மெச்சி அவனுடைய தேசத்தை அவனுக்கே திருப்பி அளிக்கிறான். இவ்வாறாக அலெக்ஸாண்டர் கதையைக்கூறியபடி தமிழ் ஆசான் தன்னுடைய வதைப்படலத்தைத் தொடர்ந்தார். மறுநாள் காலை எங்களுடைய வரலாற்று ஆசிரியர் வகுப்பில் நுழைந்ததும், தவறான வரலாற்றைக்கூறி ஒரு தமிழாசிரியர் சொற்பொழிவாற்றியதாக பொரிந்து கொண்டிருந்தார். நானும் என் நண்பனும் விஷயம் புரிந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். அன்று எனக்கு எழுந்த கேள்வி இன்றும் எனக்கு உண்டு. அந்தக்கதை ஒரு வரலாற்றுப் பொய்யா? இதன் விடை ஆம்.
அலெக்ஸாண்டர் வெறும் போர்வீரன் மட்டும் அல்ல. கி.மு.333-ல் ஒரு பெரிய மேற்கு- கிழக்குலக கலாசார புரட்சிக்கு வித்திட்டவன். தன்னுடைய 33 வயதில் அறிந்த உலகில் பெரும்பாலான பகுதியை வென்றவன். அலெக்ஸாண்டரின் படை வெறும் 40000 வீரர்களைக் கொண்டிருந்தாலும், அவனுடைய போர் வியூகங்களும் கட்டுக் கோப்பான படையும் (நீளமான ஈட்டிகளையுடைய கட்டுக்கோப்பான காலாட்படை பலமான தடுப்புசக்தியை உடையது) பாரசீக மன்னன் மூன்றாம் டாரீயஸின் ஒன்றரை லட்சம் பேர் கொண்ட படையை சிதறியோடச் செய்து மாபெரும் வெற்றியை ஈட்டித்தந்தன.
இரண்டு வருடத்திற்கு முன் வெளிவந்த ‘அலெக்ஸாண்டர்’ எனும் ஆங்கில திரைப்படத்தில், இது குறித்த சில காட்சிகளும் உண்டு. அஃதாவது பொதுவாக மன்னன் இறந்தாலோ போரைவிட்டு ஓடினாலோ படை நெகிழ்வதையே பாரசீக படை பலவீனமாக கொண்டிருந்தது (இது போன்ற திருப்பங்களை இந்திய போர்வரலாற்றிலும் காணலாம்!). அலெக்ஸாண்டர் மற்றும் போரஸிடையே ஜீலம் நதிக்கரையில் கி.மு.326-ல் நடைபெற்ற போர் (Battle of hydaspes) அலெக்ஸாண்டருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது என்னமோ உண்மை. குறிப்பாக, அலெக்ஸாண்டர் தன் இந்திய பயணத்தை முடித்துக்கொண்டதற்கு முக்கிய காரணங்களாக வரலாற்றாசிரியர்கள் அடுக்குவது:
(1) நாட்டைவிட்டு வெகுகாலம் பிரிந்த படையினரது மனநிலை மற்றும் அழுத்தம், (2) சிற்றரசன் போரஸிடம் 500 யானைகள் இருந்ததைக் கண்டு மிரண்ட கிரேக்கப்படை; ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட யானைகளுள்ள படையைக்கொண்ட கங்கைச்சமவெளியில் அமைந்துள்ள நந்த பேரரசின் பாரிய படையை எதிர்கொள்ள வேண்டிய சூழல்.

ஆனால் எங்க தமிழ் வாத்தியார் சொன்ன ‘தாலி செண்டிமெண்ட்’ கதை சும்மா டுபாக்கூர்தான். இதற்கு ஒரு வரலாற்று தடயமுமோ அல்லது கணிப்போ இல்லை. வரலாறு தெரிந்தால் சொல்லுணும்! இல்லாட்டி சும்மா இருக்கணும்!

Sunday, June 03, 2007

நிறைய எழுதணுங்க!!

எங்க பாசக்கார டீம்ல: கண்மணி அக்கா போல டைமிங் காமெடி செய்து சிரிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம். அவங்க எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரமாரியாக எழுதித்தள்ளுகிறார். காயத்ரியோட கவிதைகளைப் பார்த்த பொறாமையாக இருக்கும். கருத்து மற்றும் எழுத்துநடை ரொம்ப நல்லா இருக்கும். (அவர் இயற்கை, உறவுகள் என்று எல்லையோடு நிற்க்காமல் சமூக சிந்தனைமிக்க கவிதைகளையும் எழுதவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்). மங்கை ரொம்ப நல்லா எழுதுவாங்க. ஆனா அவங்க எழுதுரது குறைவு. எங்க அபிஅப்பா எழுதினார்ன்னா நக்கல்-நையாண்டிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அவர் சாமியாராக போனதில் இருந்து எழுதுரது குறைந்துவிட்டது. அய்யனார் சாதாரண விஷயத்தக்கூட அழகாக சொல்லக்கூடியவர். மொழியைப் பயன்படுத்தும் லாவகம் அலாதியானது. மைபிரண்டும் கண்மணி அக்கா போல காமெடிப் பதிவில் கில்லாடி. மின்னுதுமின்னல் பதிவ விட பின்னூட்டம் நல்லா எழுதுவார்( மின்னல் கோபிக்காதே! சும்மா தான் சொன்னேன். நீங்க எழுதுன மொக்கைகவிதை ஒன்று போதும் உங்களுடைய திறமையைக் கூற! ஆனால் தொடர்ந்து எழுதுங்க!).

எல்லாரபத்தியும் சொல்லிட்டு என்னை விட்டுடமாட்டேன். வழக்கம்போல நம்ம கமலஹாசன் பாணியில் ஒரு கவிதை, ஒரு மொக்கை, ஒரு திரைபார்வை, ஒரு ஆக்கம் என்று வரிசைபடி இடுகையிட்டு வருகிறேன். (கவிதை பற்றி சொல்லவே தேவை இல்லை. யாரும் படிக்காவிடிணும், என்னோட பதிவுக்கு த்ருஷ்டி கழிச்சதுபோல எப்போதாவது ஒன்று எழுதிவிடுவேன். ஏன்னய்யா உனக்கு இந்த வேண்டாத வேலை என்று கேட்டால், “நான் முடிவுபண்ணிட்டா! என் பேச்ச நா..னே.. கேக்க மாட்டேன்!” விஜய் ஸ்டைல்ல டயலாக் அடிப்பேன். எனக்கு இனிமேல கொலை வெறியோட பின்னூட்டம் போட்டு திட்டினாலும், நிறுத்துறது கஷ்டம் தான்.) பின்னவீனத்துவம்னு நான் எதுவும் தெரியாம அகலக்கால் வைக்கிறது இல்லை. சாதாரணமாக ஆக்கமான இடுகைகளை விட மொக்கைக்கு தான் ஒத்துழைப்பு அதிகம் உண்டு. அதிலும் என்னுடைய சில ஆக்கமான இடுகைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும் போதிய பின்னூட்டம் இல்லாததால், வகையான இடுகைகளை எழுதுவதைத் தவிர்த்தேன். ஏனென்றால் பின்னூட்டம் இருந்தால்தான் இடுகை போதியநேரம் தமிழ்மணத்தில் தெரிகிறது, இல்லாவிடில் மறைந்துவிடுகிறது. இவற்றால் நொந்துபோன நான் மொக்கைபதிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டேன். எங்க பாசக்கார குடும்ப ஆலோசகர் ‘தருமி’ ஐயா சொன்னதுபோல பின்னூட்டமும், ஆக்கமும் தொடர்பில்லாத இருவேறு விஷயங்கள. அவருடைய அறிவுரைக்கு செவிசாய்த்து என்னுடைய பாதையை மறுபடியும் தொடர முடிவு செய்துவிட்டேன். இத்தகைய நிலை எனக்கு மட்டும் இல்லை, நிறைய தமிழ்மண அன்பர்களுக்கு நிகழ்ந்திருக்கும். தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும்.அறிவுரையும் சொல்லலாம்.

எப்படியோ வெற்றிகரமாக 25 பதிவுகளைத்தாண்டி ஆச்சு!! இதுக்கு முக்கிய காரணம் தமிழ்மண ஜாம்பவான்கள் தான். என்னோட எழுதனும் என்கிற நெருப்புக்கு எண்ணெய் வார்த்தவர்கள். இவர்களுடைய பதிவுகள்தான் எனக்கு ஊக்க மருந்தாக அமைந்தது. நான் இன்னும் நிறைய படிக்கணும்...மேலும் மேலும் எழுதணும்... தங்கள் வாழ்த்துக்களுடன்...

பி.கு.:

தமிழ்மணமே! என்னோட கண்ணான பாசக்கார குடும்பத்தை உன்னிடம் ஒப்படைச்சிட்டு போரேன். அதில் ஆனந்தகண்ணீரத்தான் நான் பார்க்கனும்!! ஐயோ!!!ஊருக்குத்தான் போரேனுங்க...! ஒரேடியா போகலை..!!