Showing posts with label நான். Show all posts
Showing posts with label நான். Show all posts

Wednesday, February 17, 2010

தோழன் அன்பரசுவிற்கு




தோழன் அன்பரசுவிற்கு,

வங்காளத்தில் முதன்முதலாய் அறிமுகமானவன் நீ தான். கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் என்னோடு இருந்ததை விட உன்னோடு தான் அதிகம் இருந்திருப்பேன். கடந்த 25 ஆண்டுகளில் நான் விரும்பிய நட்பு உன்னிடம் தான் கிடைத்தது. நாம் கல்லூரி விட்டுச் செல்லும்போது நான் அழுதுகொண்டிருந்தேன். ‘இது என்ன நிரந்தரப் பிரிவா? பிறகு பார்க்கத்தானே போகிறோம்’ என்றாய். சமாதனப்படுத்தினாய். இப்போது அந்தப் பிரிவு நிரந்தரமாகிவிட்டது. வாழ்க்கை எத்தனை நிலையாமை கொண்டது. என் தாயை இழந்த போது இருந்த அதே வலி. இப்போது நண்பனை இழக்கும்போதும். நீ இறந்தபோன செய்தி பொய்த்துப் போய்விடாதா? வேனில்கால மழையாய் என் வாழ்வில் வந்து போய்விட்டாயே. இனி நான் எங்கு காண்பேன் உன்னை. 

என்றும் உன்னுடன் 
அருண்

Friday, June 22, 2007

எனக்கு எட்டிய - எட்டாத எட்டு

முதலில் எட்டு விளையாட்டுனு என்னை போட்டுக்கொடுத்த கவிதாயினி காயத்ரியை வன்மையாக கண்டிக்கிறேன். டூவிலர் லைசென்ஸ் எடுக்கத்தான் ‘8’ போட சொல்லுவாங்க. இந்த எட்டு எதுக்குனு தெரியல. என்னையும் ஆட்டத்தில் சேர்த்து விளையாட்ட விபரீதம் ஆக்குரீங்க.

1. என்னோட கண்ணாடி கனவில் புள்டவுசர் விட்டு ஏத்தினது அம்மாவை இழந்த சம்பவம். எனக்கு வாழ்க்கையைக் காட்டிய விரல்கள் கைவிட்டுப்போன பிறகு என்னொட பாதையும், பயணமும் மாறிப்போனது.

2. இரவு முழுக்க படிச்சி எக்ஸாம் எழுதிட்டு, பஸ்ல தூங்கிட்டு போய் காஞ்சிபுரத்தில் இறங்கினதும், அங்க பேருந்துநிலையத்தில் எல்லாரிடமும் 2 ரூபாய் சேகரிச்சு ஊர் வந்து சேர்ந்ததும் மறக்கவே முடியாது.

3. நான் என்னோட கோபத்தால நண்பர்களை இழந்ததில்லை. எனக்கு பிடிக்காத விஷயத்தை யாரவது செய்தால் அங்கிருந்து முதல்ல விலகிடுவேன். அதையே நண்பர்கள் செய்தால், கடுமையாக எடுத்துச் சொல்லுவேன். என்னோட ப்ளஸ் இதுதான். இருப்பினும் கோபம் காரணமாக சில பள்ளி தோழர்களை இழந்தது. பிறகு கோபத்தில் யாரையாவது நோகடித்துவிட்டால், அதிகமாக நொந்துகொள்வேன். மன்னிப்பு கேட்கவும் தயங்கமாட்டேன்.



4. எல்லாக்குழந்தைகள் போல வரட்டு கடவுள்நம்பிக்கையோடு தான் வளர்ந்தேன். காலப்போக்கில் தெளிந்து கடவுள்மறுப்புக் கொள்கையில் அதிக ஈடுபாடு வந்துவிட்டது.பிறகு எந்த கஷ்டம் வந்தாலும் கடவுளை துணைக்கழைப்பதில்லை. வரலாற்று சுற்றுப்பயணம் காரணமாக அல்லாமல், கோவிலுக்கு போவதில்லை.

5. என்னைச்சுற்றி இருக்கும் எல்லாரையும் சிரிக்கவைக்க முயற்சி செய்வேன். எப்பவும் அது நடக்கிறது இல்ல. சில சமயம் சரியான லூசுபயல்னு நினைக்கத்தோணும். (நீங்க அப்படி நினைக்கமாட்டீங்கனு எனக்கு தெரியும்). பேராசிரியர் பெருமையா நகைச்சுவைமன்னன் சொல்லி பேசச்சொல்ல, நான் என்னோட கல்லூரி பிரிவு உபச்சாரவிழாவில் சொன்ன ஜோக்கக்கு ஒரு பயலும் சிரிக்கல. ரொம்ப அவமானமாக போச்சிப்பா!!

6. வாழ்க்கையில் இதுவரை லட்சியம், சாதனை என்று எதுவும் இல்ல. என்னால் முடிந்தவரை வறுமையில் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்யனும். இதுதான் என்னோட லட்சியமாக மற்றும் சாதனையாக இருக்கும். வருங்காலத்தில், எனக்கு மேலும் நல்லதொரு பொருளாதார நிலை அமைந்தால் மேலும் நிறைய உதவி செய்வேன். சுயநலவாதியாகவும், சந்தர்ப்பவாதியாகவும் இருப்பதை வெட்கக்கேடாக நினைக்கிறேன். நான் 1000 ரூபாய் வருமானத்தில் குடும்பம் நடத்தும் மனிதர்கள் இருக்கும் இந்தியாவில், 2000 ரூபாய் கொடுத்து சிவாஜி படம் பார்ப்பவன் அல்ல. 1 ரூபாய் (அ) 50 காசுக்கு கீரைக்காரியிடம் குடுமிப்பிடி சண்டை போடுபவனும் அல்ல.

7. என்னுடைய உடன்பிறந்தவர் அண்ணன் மட்டும்தான். முதல்ல அக்கா, தங்கை இல்லயேனு ரொம்ப ஆதங்கப்படுவேன். ஆனால் தமிழ்மணத்திற்கு வந்தபிறகு கண்மணி அக்கா, காயத்ரி, கவிதா, மைபிரண்ட், துர்கா என்று பாசமழைக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.

8. ஹிந்தியே சரியா பேசத்தெரியாம, ட்ரெயின்ல அதுவும் அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட்ல டெராடூன் வரை தனியாக போனது. அங்க போயும் குசும்பு அடங்காம ஹரித்வார் போனது. எல்லாம் என்னோட சரித்திர சாதனைகள்.

எப்படி என்னோட வயதெறிச்சல கொட்டிகிட்டீங்க!! நானும் இப்ப அடுத்தவங்க வயதெறிச்சல கொட்டிக்கிறேன்.

விடாதுகருப்பு

அசுரன்

கண்மணி அக்கா

ஆசிப்மீரான் அண்ணாச்சி

சந்தோஷ்

சதுர்வேதி

கண்ணபிரான் ரவிசங்கர்

அணில் மற்றும் கவிதா (முடிந்தால் பீட்டர் தாத்ஸ்யையும் கூட்டிவாங்க)

இதுபோல ஒரு கலவைய யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டீங்கனு நினைக்கிறேன்.

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

Sunday, June 03, 2007

நிறைய எழுதணுங்க!!

எங்க பாசக்கார டீம்ல: கண்மணி அக்கா போல டைமிங் காமெடி செய்து சிரிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம். அவங்க எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரமாரியாக எழுதித்தள்ளுகிறார். காயத்ரியோட கவிதைகளைப் பார்த்த பொறாமையாக இருக்கும். கருத்து மற்றும் எழுத்துநடை ரொம்ப நல்லா இருக்கும். (அவர் இயற்கை, உறவுகள் என்று எல்லையோடு நிற்க்காமல் சமூக சிந்தனைமிக்க கவிதைகளையும் எழுதவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்). மங்கை ரொம்ப நல்லா எழுதுவாங்க. ஆனா அவங்க எழுதுரது குறைவு. எங்க அபிஅப்பா எழுதினார்ன்னா நக்கல்-நையாண்டிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அவர் சாமியாராக போனதில் இருந்து எழுதுரது குறைந்துவிட்டது. அய்யனார் சாதாரண விஷயத்தக்கூட அழகாக சொல்லக்கூடியவர். மொழியைப் பயன்படுத்தும் லாவகம் அலாதியானது. மைபிரண்டும் கண்மணி அக்கா போல காமெடிப் பதிவில் கில்லாடி. மின்னுதுமின்னல் பதிவ விட பின்னூட்டம் நல்லா எழுதுவார்( மின்னல் கோபிக்காதே! சும்மா தான் சொன்னேன். நீங்க எழுதுன மொக்கைகவிதை ஒன்று போதும் உங்களுடைய திறமையைக் கூற! ஆனால் தொடர்ந்து எழுதுங்க!).

எல்லாரபத்தியும் சொல்லிட்டு என்னை விட்டுடமாட்டேன். வழக்கம்போல நம்ம கமலஹாசன் பாணியில் ஒரு கவிதை, ஒரு மொக்கை, ஒரு திரைபார்வை, ஒரு ஆக்கம் என்று வரிசைபடி இடுகையிட்டு வருகிறேன். (கவிதை பற்றி சொல்லவே தேவை இல்லை. யாரும் படிக்காவிடிணும், என்னோட பதிவுக்கு த்ருஷ்டி கழிச்சதுபோல எப்போதாவது ஒன்று எழுதிவிடுவேன். ஏன்னய்யா உனக்கு இந்த வேண்டாத வேலை என்று கேட்டால், “நான் முடிவுபண்ணிட்டா! என் பேச்ச நா..னே.. கேக்க மாட்டேன்!” விஜய் ஸ்டைல்ல டயலாக் அடிப்பேன். எனக்கு இனிமேல கொலை வெறியோட பின்னூட்டம் போட்டு திட்டினாலும், நிறுத்துறது கஷ்டம் தான்.) பின்னவீனத்துவம்னு நான் எதுவும் தெரியாம அகலக்கால் வைக்கிறது இல்லை. சாதாரணமாக ஆக்கமான இடுகைகளை விட மொக்கைக்கு தான் ஒத்துழைப்பு அதிகம் உண்டு. அதிலும் என்னுடைய சில ஆக்கமான இடுகைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும் போதிய பின்னூட்டம் இல்லாததால், வகையான இடுகைகளை எழுதுவதைத் தவிர்த்தேன். ஏனென்றால் பின்னூட்டம் இருந்தால்தான் இடுகை போதியநேரம் தமிழ்மணத்தில் தெரிகிறது, இல்லாவிடில் மறைந்துவிடுகிறது. இவற்றால் நொந்துபோன நான் மொக்கைபதிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டேன். எங்க பாசக்கார குடும்ப ஆலோசகர் ‘தருமி’ ஐயா சொன்னதுபோல பின்னூட்டமும், ஆக்கமும் தொடர்பில்லாத இருவேறு விஷயங்கள். அவருடைய அறிவுரைக்கு செவிசாய்த்து என்னுடைய பாதையை மறுபடியும் தொடர முடிவு செய்துவிட்டேன். இத்தகைய நிலை எனக்கு மட்டும் இல்லை, நிறைய தமிழ்மண அன்பர்களுக்கு நிகழ்ந்திருக்கும். தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும்.அறிவுரையும் சொல்லலாம்.

எப்படியோ வெற்றிகரமாக 25 பதிவுகளைத்தாண்டி ஆச்சு!! இதுக்கு முக்கிய காரணம் தமிழ்மண ஜாம்பவான்கள் தான். என்னோட எழுதனும் என்கிற நெருப்புக்கு எண்ணெய் வார்த்தவர்கள். இவர்களுடைய பதிவுகள்தான் எனக்கு ஊக்க மருந்தாக அமைந்தது. நான் இன்னும் நிறைய படிக்கணும்...மேலும் மேலும் எழுதணும்... தங்கள் வாழ்த்துக்களுடன்...

பி.கு.:

தமிழ்மணமே! என்னோட கண்ணான பாசக்கார குடும்பத்தை உன்னிடம் ஒப்படைச்சிட்டு போரேன். அதில் ஆனந்தகண்ணீரத்தான் நான் பார்க்கனும்!! ஐயோ!!!ஊருக்குத்தான் போரேனுங்க...! ஒரேடியா போகலை..!!