Sunday, January 06, 2008

படம் பார்க்கலாம் வாங்க! - Hana-bi (ஜப்பானிய திரைப்படம்)

டாகேஷி கிடனோவின் எழுத்து, நடிப்பு, இயக்கம், மற்றும் தொகுப்பில் 1997-ல் வெளிவந்த Hana-bi (ஜப்பானிய மொழியில் வானவேடிக்கை) சமீபத்தில் நான் பார்த்த சிறந்த படங்களில் ஒன்று. வெனிஸ் திரைவிழாவில் Golden lion விருது பெற்று, எல்லாராலும் நல்லமுறையில் விமர்சிக்கப்பட்ட படம்.

காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ள கிடனோ, தன்னுடைய சக ஊழியருக்கு விபத்தின் காரணமாக கால்கள் ஊனமான பாதிப்பில் பதவி விலகுகிறார். லெக்குமியாவால் நோய்வாய்ப்பட்ட தன் மனைவியுடன் அதிக நேரத்தை அவளுக்காக செலவிடுகிறார். கொள்ளையில் மற்றும் கடனாக பெற்ற பணத்தால் மற்றவர்களின் தேடுதல், தன் மனைவியுடனான பயணம் என கதை நகர்கிறது. நீளமான- மெதுவான நகர்வுகள், வசனமற்ற- இயக்கமற்ற காட்சிகள் என வழக்கமான கிடனோ படம். கணவன் மனைவிக்கான உறவு, சோகத்தின் நடுவே சில புன்னகை, திடீர் அடிதடியோடு கூடிய குரூரம், கவித்துமான ஓவிய இயல்புகளோடு சஞ்சலமில்லாத ஒரு நீர் ஓடை போல திரைப்படம் பயணிக்கிறது.

படத்தில் கிடனோவின் நண்பர் ஊனமாக இருக்கும்போது வரையும் ஓவியங்கள், உண்மையாக பரலிசிஸ் காரணமாக பாதிக்கப்பட்டு் ஓய்வில் இருந்தபோது கிடனோவால் வரையப்பட்டவை. இப்படத்தைப் பார்க்கும் முன்னர் கிடனோ இயக்கத்தில் Zatoichi என்ற அதிரடி படத்தைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படத்தில் தான் கிடனோனின் இயக்கம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. உங்கள் பார்வைக்காக youtube-லிருந்து 9 பாகங்களாக இருக்கும் Hana-bi படம். பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லவும். நன்றி!!

பாகம்-1

பாகம்-2

பாகம்-3

பாகம்-4

பாகம்-5

பாகம்-6

பாகம்-7

பாகம்-8

பாகம்-9

9 comments:

  1. ஆஹா..வீடியோவும் சேர்த்து கொடுத்துட்டிங்க...கண்டிப்பாக பார்த்துடுவோம் ;)

    ReplyDelete
  2. கோபி,

    பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க!

    ReplyDelete
  3. வணக்கம்
    உங்கள் கட்டுரைகளும் ஆக்கங்களும் என்னை உங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.
    வாழ்த்துக்கள்

    முதலில் என்னை பற்றிய ஒர் சிறிய அறிமுகம்.

    எனது பெயர் இரமணன் நான் ஒரு இணைய தள வடிவமைப்பாளராக பணி புரிகிறேன். உயிர் வாழ்வதற்க்காக சொந்த மண்ணை விட்டு அந்நிய மண்ணிலே செத்துக் கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான கோழைகளில் நானும் ஒருவன்.

    நான் தற்பொழுது ஓர் சிறிய முயற்ச்சியில் இறங்கியுள்ளேன். அதை உங்களிடம் பகிர்து கொள்ள விரும்ப்புகிறேன்.

    இன்று இணையதில் நிறைய தமிழ் சார்ந்த விடயங்கள் இருக்கின்றன இது தமிழ் வளர்ச்சியில் மிகவும் வரவேற்க்க தக்கது ஆனால் இதில் வருந்த தக்க விடயம் என்ன வென்றால் இந்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் போய் சேராதது தான். இதற்க்காகவே நான் ஓர் இணைய தளத்தை ஆரம்பித்து உள்ளேன். இதில் சிதறிக்கிடக்கும் அனைத்து தமிழ் சார்ந்த தகவல்களையும் திரட்டி ஓர் இடத்தில் பதித்து வருகிறேன். இதில் உங்கள் கட்டுரைகளையும் ஆக்கங்களையும் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அதற்க்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் தகவல்கள் அனைதும் உங்கள் பெயரிலேயே பதியப்படும்.

    தமிழ் அமுதினைத் திரட்டிவரும் இந்த தேனிக்கு தங்கள் உதவியை வழங்குங்கள். நாளைய எமது தமிழ் சமுதாயம் இணையத்தில் நடை போட இது வழி சமைக்கும் என்று நம்புகிறேன்

    நன்றி
    இரமணன்
    www.thurikai.com

    ReplyDelete
  4. விமர்சனத்தோடு அரிய தகவல்களும் இலவசமாக தந்துள்ளீர்கள் அதுவும் படத்தின் சுட்டியோடு. நன்றி.

    ReplyDelete
  5. குட்டிபிசாசு சினிமா கதைப் பக்கம் போயிட்டியா?
    சரி பெஸ்ட் டேகு க்கு அழைக்கிறேன்

    http://kouthami.blogspot.com/2008/01/blog-post_12.html

    யப்பா டெம்ப் மாத்து பளீரென்று இருக்கு.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. www.foreignmoviesddl.com போயி பாருங்க

    குட்டிபிசாசு

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய