(இடம்: டீக்கடை இம்சைகள்: வெண்ணிறாடை மூர்த்தி, வினுசக்ரவ்ர்த்தி, விஜயகாந்த்)
வெண்ணிறாடை மூர்த்தி: ப்ர்ர்ர்! குஜால இருந்த ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் ஐஸ் கோயில் பிரச்சனை. அதோட தீர்வுக்காக நம்ம கலைஞர் கபாலத்தில் இருந்து கலக்கலா ஒரு ஐடியாவ தட்டி விட்டாராமே?
வினுசக்ரவர்த்தி: என்னத்த எழவு சொல்லி இருப்பாரு! "சிவன் ஒரு கஞ்சாகுடி; ஆனால் அவர் எனக்கு எதிரியுமல்ல"னு சொல்லி மத்தவன் தலையையும் அவரோட தலை மாதிரி ஆக பிச்சிக்க வைப்பாரு!!
வெ.மூ: ஒலிம்பிக் போட்டியில அஞ்சு பாப்பா, அபாரமா ஆடும்னு பார்த்தா. இப்படி மண் தாண்டுரேனு தொபகட்டீர்னு உழுந்து மண்ணை கவ்விடுச்சே!
வி.ச: அடி செருப்பால! அது என்னய்யா அஞ்சு மேல மட்டும் அப்படி ஒரு அக்கரை. ஒருத்தனைத் தவிர போன இந்தியன் எல்லாரும்தான் மெடலும் வாங்கம கொடலு தள்ள வரப்போறானுவ!பிறகு என்னதுக்கு அந்த கருமம்!
வெ.மூ: சரி அது இருக்கட்டும்! உலகநாயகன் உருவாக்குர மர்மயோகி படத்தில நடிக்க நக்கல் நாயகன் சத்யராஜை கூப்பிட்டாங்களாமே! நெசமாவா?
வி.ச: என்னது உலகநாயகனா? அறுவாளை எடுத்தேன் கொலை விழுகும். முதல்ல தமிழ்நாட்டுக்கு படம் எடுக்கட்டும் அப்புறம் உலகம் அண்டம் பத்தி பேசலாம். வாழும்பெரியாரை கூப்பிட்டு நெப்போலியன் வந்தது போல இரண்டு சீன் நடிக்க சொன்னா எப்படி நடிப்பாரு!நமீதா கூட குத்தாட்டம் போடும்படி ஒரு சீன் வச்சா சரினு சொல்லுவாரு!!
உனக்கும் எதாவது தமிழ் வாத்தியாரு ரோல் இருக்கானு கேட்டியா? அப்படியே எனக்கும் 'எழவு' 'நாசமா போவ' அப்படினு சொல்லுற மாதிரி ஒரு ரோல் கிடைக்குமானு பாரு!
வெ.மூ: இப்படி குபீர்னு கோபம்பட்டா, கொடக்கு இருக்குற என்னோட வேட்டி லொடக்குனு கழண்டுக்கும். கத்தாதிங்க! அமைதியா அடுத்த சேதிய கேளுங்க!
வி.ச: யோவ்! சரிய்யா! அடுத்த எழவை படி!
வெ.மூ: தமிழ்மணத்தில் யாரைப் பார்த்தாலும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை தாருமாரா வையராங்களாமே?
வி.ச: பானையில தண்ணி வச்சி குடிக்க சொல்லு, வயித்தெரிச்சல் கொறயும்!
(விஜயகாந்த் டீக்கடைக்கு வேகமா வந்துட்டு இருக்கார்)
வெ.மூ: என்ன புரச்சி கலஞரே! டீசர்ட்டுல வரீங்க!
வி.கா: நான் வெள்ளையும்ஜொள்ளையுமா வந்தேனா... சட்டசபை போறேனு அர்த்தம். காக்கிசட்டையில வந்தேனா... படத்துல நடிக்க போறேனு அர்த்தம். டீசர்ட்டுல வந்தேனா... டீ சாப்பிட போறேனு அர்த்தம்.
வி.ச: என்ன எழவுயா இது! ஒரு கேள்வி கேட்டதுக்கு மூணு பதில் வருது! இவரு எப்பவுமே இப்படித்தான் பேசுவாரா?
வெ.மூ: படத்துல படப்படனு Dialogue பகிரங்கமா பப்பரபேனு பேசி இப்படி ஆகிட்டாரு! இவருக்கு Accroto Dialogomania-னு ஒரு வியாதி. அது இருந்தா இப்படித்தான். கண்டமேனிக்கு உளருவாங்க!
வி.கா: தமிழனுக்கு ஒரு டீ போடுப்பா! ஆங்ங்ங்!!
(வெ.மூ-வைப் பார்த்து) நியுஸ்பேப்பர்ல பாக்கிஸ்தான் திவிரவாதிகளைப் பத்தி எதாவது போட்டு இருக்கா?
வி.ச: என்னைய்யா? வந்ததும்வராதுமா தீவிரவாதிய பத்தி கேக்குராரு!
வெ.மூ: இவருக்கு இன்னோரு வியாதியும் இருக்கு! Terroristophilia-னு சொல்லுவாங்க!
வி.ச: அது சரி!
வெ.மூ: தீவிரவாதிகளைப் பத்தி திவ்யமா ஒன்னும் இல்லையே!
வி.கா: என்னது ஒன்னும் இல்லையா? இந்தியாவில மொத்தம் 2500 தீவிரவாதிங்க இருக்காங்க. மணிரத்னம் படத்தில் வர தீவிரவாதிங்க 1008. அர்ஜுன் படத்துல வரவங்க 90. என்னோட படத்தில் வரவங்க 1402. திருந்துர தீவிரவாதிங்க 2000. திருந்தாம சாவரங்க 500. Climax-ல itemsong பார்க்கிற தீவிரவாதிங்க 2300. பார்க்கதவங்க 200. நான் ஆச்சிக்கு வந்தேனா, தீவிரவாதிகள முமைத்கான் டான்ஸ் பார்க்கும் கொண்டிருக்கும்போது கண்டிப்பா பிடிச்சிக்காட்டுவேன்.
இப்படித்தான் 1942-ல காமராஜர் கால்ல முள்ளு குத்தினது. அதுக்கு காரணம் இந்தக் கருணாநிதி. 1980-ல் மவுண்ட் ரோட்டில் ஒரு நாய் கொலைச்சது. அதுக்கு காரணம், ஜெயலலிதா. ஆனா நான் ஆச்சிக்கு வந்தேனா எம்ஜிஆர் ஆச்சிய கொடுப்பேன்.
வெ.மூ: (வினுசக்ரவர்த்தியைப் பார்த்து) இதுக்குமேல இங்க நாம இருந்த கபாலம் வெடிச்சி கட்டெரும்பு வெளியவந்துடும். வா! கபால்னு கழண்டுக்குவோம்.
(இரண்டு பேரும் துண்டைக்காணோம், துணியைகாணோம்னு எஸ்கேப்ப்ப்ப்ப்...!! ஆனா இன்னும் நம்ம கேப்டன் நிறுத்தினபாடில்ல)
//படத்துல படப்படனு Dialogue பகிரங்கமா பப்பரபேனு பேசி இப்படி ஆகிட்டாரு! இவருக்கு Accroto Dialogomania-னு ஒரு வியாதி. அது இருந்தா இப்படித்தான்.//
ReplyDelete//இவருக்கு இன்னோரு வியாதியும் இருக்கு! Terroristophilia-னு சொல்லுவாங்க!//
ஹா ஹா ஹா
//உலருவாங்க - உளருவாங்க//
பதிவு சூப்பரு... இந்த மாதிரி அப்பப்ப போஸ்ட் போடுங்க கு.பி :)
ReplyDeleteவடகரை வேலன்,
ReplyDeleteநன்றி!
உங்க கரெக்ஷன் ஏற்றுக்கொள்ளப்பட்டது!
//வெட்டிப்பயல் said...
ReplyDeleteபதிவு சூப்பரு... இந்த மாதிரி அப்பப்ப போஸ்ட் போடுங்க கு.பி :)//
வெட்டியண்ணே,
வருகைக்கு நன்றி!
மாதம் இரண்டு பதிவு போடவாவது முயற்ச்சிக்கிறேன்!
யோவ் குபி
ReplyDeleteகுபீர்ன்னு சிரிச்சதுல எழவு பல்லு எசகுபிசகா சுளுக்கிடுச்சு. நல்லா இருங்கடே!!
ஆசிப் அண்ணாச்சி,
ReplyDeleteகுபீர்னு சிரிச்சி குதுகலமா இருங்க!!
சூப்பர்!
ReplyDeleteஅனானி ஐயா,
ReplyDeleteநன்றி!
ungalukkum comedy varumaa?
ReplyDelete-Seeman
nanba, super
ReplyDeleteநீண்ட நாள் கழித்து பார்முக்கு வந்திருக்கீங்க. கடைசியா ரோபோ கதை காமெடியா எழுதினீங்க
ReplyDeleteமுரளி,
ReplyDeleteவருகைக்கு நன்றி!!
நல்ல காமெடியா இருந்தது... கலக்குங்க...
ReplyDelete//வி.கா: என்னது ஒன்னும் இல்லையா? இந்தியாவில மொத்தம் 2500 தீவிரவாதிங்க இருக்காங்க. மணிரத்னம் படத்தில் வர தீவிரவாதிங்க 1008. அர்ஜுன் படத்துல வரவங்க 90. என்னோட படத்தில் வரவங்க 1402. திருந்துர தீவிரவாதிங்க 2000. திருந்தாம சாவரங்க 500. Climax-ல itemsong பார்க்கிற தீவிரவாதிங்க 2300. பார்க்கதவங்க 200. நான் ஆச்சிக்கு வந்தேனா, தீவிரவாதிகள முமைத்கான் டான்ஸ் பார்க்கும் கொண்டிருக்கும்போது கண்டிப்பா பிடிச்சிக்காட்டுவேன்.//
ReplyDeleteஹா ஹா ஹா ஹா! ரொம்ப நல்லா இருக்கு!
//சரவணகுமரன் said...
ReplyDeleteநல்ல காமெடியா இருந்தது... கலக்குங்க...//
சரவணகுமரன்,
நன்றி!
// செல்வ கருப்பையா said...
ReplyDelete//வி.கா: என்னது ஒன்னும் இல்லையா? இந்தியாவில மொத்தம் 2500 தீவிரவாதிங்க இருக்காங்க. மணிரத்னம் படத்தில் வர தீவிரவாதிங்க 1008. அர்ஜுன் படத்துல வரவங்க 90. என்னோட படத்தில் வரவங்க 1402. திருந்துர தீவிரவாதிங்க 2000. திருந்தாம சாவரங்க 500. Climax-ல itemsong பார்க்கிற தீவிரவாதிங்க 2300. பார்க்கதவங்க 200. நான் ஆச்சிக்கு வந்தேனா, தீவிரவாதிகள முமைத்கான் டான்ஸ் பார்க்கும் கொண்டிருக்கும்போது கண்டிப்பா பிடிச்சிக்காட்டுவேன்.//
ஹா ஹா ஹா ஹா! ரொம்ப நல்லா இருக்கு!//
கருப்பையா சார்...
நன்றி!
கலக்கல்!
ReplyDeleteஆகா அருமையா இருக்கு ,....
ReplyDeleteகு பி ..அவர்களே ...
நல்ல காமெடி ...
//Vishnu... said...
ReplyDeleteஆகா அருமையா இருக்கு ,....
கு பி ..அவர்களே ...
நல்ல காமெடி ...//
நன்றி!
dai kamminaati.... captain pathi thappa pesatha da baadu.......
ReplyDelete