பொதுவாக மனிதர்களிடையே தெய்வ நம்பிக்கையோ, ஜோதிட நம்பிக்கையோ, பேய்பிசாசு நம்பிக்கையோ, மற்ற மூட நம்பிக்கையோ இருந்துகொண்டுதான் இருக்கிறது. படித்தவர்களில் பலர் இந்த நம்பிக்கைகள் இல்லாமல் இருப்பது போல காட்டிக் கொண்டாலும், நம்பிக்கையுடையவர்களாகத் தான் இருப்பார்கள். இவற்றில் எந்த நம்பிக்கையும் மற்றவர்களை (அதாவது இந்த மற்றவர்கள் சகோதரர்களாக, பிள்ளைகளாக, கணவன்/மனைவியாக கூட இருக்கலாம்) சுரண்டாத, ஒடுக்காத வரையில் பரவாயில்லை.
அமானுஷ்ய விசயங்கள் உண்மையா பொய்யா என்பது பற்றி விஜய்டீவியின் நீயா நானா-வில் சென்ற ஆண்டில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. மனநலமருத்துவர் ருத்ரன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வீற்றிருந்தார். மக்கள் அமானுஷ்ய விசயங்களை எப்படி அணுகலாம் என்ற கேள்விக்கு ருத்ரனின் பதில் „உங்களுக்கு பயப்படும் போல் ஒரு சம்பவம் நடக்கிறதா பயப்படுங்கள். அது இயல்பு. பிறகு அதையே நினைத்துக்கொண்டு மற்றவர்களிடம் எமாறாதீர்கள்“.
நிகழ்ச்சியின் ஹைலைட்டான விசயம் என்னவென்றால், கனவுகள் நிஜசம்பவங்களாக நடப்பதாக ஒருவர் கூறினார். அடுத்தவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கூட என்னால் கூறமுடியும் என்று சொன்னார். கோபிநாத்தும் ‚நடந்தது என்ன’ நிகழ்ச்சியில் நாங்களும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளோம் என்று சான்றிதழ் கொடுத்தார். பிறகு ருத்ரன் கேள்வி கேட்க ஆரம்பித்ததும். மேற்சொன்ன நபர் முதலில் நண்பனிடம் போன் செய்து கனவு பற்றி விசாரித்தேன் என்றார். பிறகு வேறொரு நண்பர் மூலம் விசாரித்தேன் என்று தடுமாறினார். பிறகு அந்த நண்பர் தான் தன்னை அணுகி தான் டீவியில் செய்த நிகழ்ச்சி பார்த்ததாகவும், தற்போது எதாவது கனவு வந்ததா என்று கேட்டதாக புதிதாக ஒன்றை சொன்னார். இப்படியாக டாக்டர் ருத்ரன் அந்த நபரிடம் இருந்து போலித்தனத்தை வெளியே கொண்டுவந்ததும் கோபிநாத்திற்கு ஷாக் அடித்தது போல் இருந்திருக்கும், ஏனென்றால் நடந்தது என்ன என்று நிகழ்ச்சியின் மூலம் அவர் கொடுத்த சான்றிதழ் கிழிந்துவிட்டது.
அடுத்ததாக அமானுஷ்ய விசயங்கள் சுவாரசியமானவை, பொழுதுபோக்கானவை என்று ஒரு குண்டு போட்டார் கோபி. அதற்கும் சுவாரசியம் என்றால் உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள் பொதுவில் வந்து மக்களை முட்டாளாக்கத் தேவையில்லை என்று ருத்ரனிடம் இருந்து வந்த பதில் வந்தது. டாக்டர் ருத்ரன் தன் பதிலில் இந்த கார்போரேட் சமாசாரங்களின் சிந்தனை, அறிவு சாயத்தை வெளிக்கொண்டு வந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. இந்த பதிலும் நிச்சயம் கோபிநாத்திற்கு சுருக்கென்று இருந்திருக்கும். இவர் நடத்தும் ‚நடந்தது என்ன’ என்ற நிகழ்ச்சியில் மக்களுக்கு ஏமாற்றும் விசயங்களை புரியவைப்பதை விட்டுவிட்டு, சுவாரசியமான விசயங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். பேசாமல் கோபி சாருவை கூப்பிட்டு இருக்கலாம். தன்னோட பங்குக்கு சாயிபாபா படத்தில் இருந்து குங்குமம், அரிசி, பருப்பு, புளி கொட்டுகிற கதையெல்லாம் சொல்லி சுவாரசியமாக்கி இருப்பார். அமானுஷ்ய விசயத்தை நம்பாதவராக மருத்துவப் பெண்மணி ஒருவர் தன்னுடைய அனுபவத்தையும், கருத்தையும் பகிர்ந்து கொண்டார். அமானுஷ்ய சக்தியில் நம்பிக்கை இல்லாதவர்களிலிருந்து வந்த கருத்துகள் நிகழ்ச்சியில் காண்பிக்கப்படவில்லை. நிகழ்ச்சியின் முடிவில் கோபிநாத் அமானுஷ்ய சக்தியை நம்பும் ஒரு பெண் மாபெரும் கருத்தைக் கூறிவிட்டதாகப் பரிசளித்து திருப்தியடைந்தார்.
உபரிதகவல்:
நீயா நானா சிகழ்ச்சியில் பெண்ணிற்கு தாலி புனிதமானதா? இல்லையா? என்ற விவாதம் செம்மையாக வெளிவருவது போல, பர்தா தேவையா? இல்லையா? என்ற விவாதம் வெளிவராமலே இருப்பது மிகவும் சிறப்பான விசயம்.
பற்றியும் குறிப்பிட்டதால் இதை பதிவு செய்கிறேன். அன்று நடந்த நிகழ்ச்சியில் இன்னும் சில பேசப்பட்டன, அவை நீக்கப்படும் விட்டன. பரபரப்புக்காகவே அன்றி இதில் எவ்வித உண்மை தேடும் முயற்சியும் இல்லை என்பதே என் வருத்தம்.
ReplyDeleteடாக்டர் ருத்ரன்,
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
நானும் அந்த நிகழ்ச்சி பார்த்தேன்.. கொஞ்சமாய் அமானுஷ்யம் பக்கம் சாய்ந்த மாதிரிதான் எனக்கும் தோணியது.. ஒருவேளை அப்படி தோணினதே ஏதோ அமானுஷ்யம்னாலதானோ??
ReplyDeleteஉங்க பேர் வேற பிசாசுன்னு இருக்கு :))
புபட்டியன்,
ReplyDeleteநன்றி!
Dr. Rudhran (vanakkam) and others, as one of the participants on the other side (non-believers) I regret that all our comments were edited out. I offered them many comments in course of discussion but unfortunately none came out. I completely agree with Dr. Rudhran's judgement that it is sensation that prevails and not reasoning and analysis.
ReplyDeleteநன்றி!
Deleteஏற்கனவே பில்லி, சூனியம் என்பது உண்மையா என்ற தலைப்பில் நீயா நானா நிகழ்ச்சி நடந்தது.. அதில் ஒருவர் பில்லி சூனியம் உண்மை என்றும் அதை வைக்கும் முறை தனக்குத் தெரியும் என்றும் கூறி அதை மறுத்த ஒரு முக்கிய விருந்தினர் (அவர் பெயர் சாலமன் என்று நினைக்கிறேன்..) ஒருவருக்கு 48 நாட்களில் பில்லி சூனியம் வைப்பதாகச் சவால் விடுத்தார்.. அதை அந்த முக்கிய விருந்தினர் (Chief Guest )ம் ஏற்றுக் கொண்டார். 48 நாட்கள் கழித்து இருவரும் விஜய் தொலைக்காட்சியில் சந்திப்பதாகக் கூறினர்.. அந்த சவால் என்னவாயிற்று?.. சவால் ஜெயித்ததா இல்லையா?.. அந்த நிகழ்ச்சியைப்பற்றி எந்தத் தகவலும் இல்லையே?..
ReplyDeleteநன்றி!
ReplyDeleteஎனக்கு சுவராஸ்யமான பொழுது போக்கு நிகழ்ச்சி நீயா நானா......... ஆனால், இதில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவார்கள் அடுத்த விளம்பரதாரர் நிகழ்ச்சி, ராசிக்கல், ஏன் கணிதம் வாசதி என்று இரவு முழுவதும் ஓடும்.......... கஷ்ட காலம்டா சாமி..........
ReplyDelete