Sunday, March 21, 2010

இதில் என்ன வேறுபாடு

நாத்திகம் என்றால் கடவுள், கடவுள் சார்ந்த மதங்கள், கடவுள் சார்ந்த மூட நம்பிக்கைகளை எதிர்ப்பது. அதோடு நின்றுவிடுகிறது அதன் வேலை. பகுத்தறிவு என்பது அதனையும் கடந்தது. மதம் மட்டுமல்லாமல், சாதி, பழக்கவழக்கங்கள், உணவு, உடை என பல்வேறு பரிமாண மாற்றங்களை உள்வாங்கியது. காலத்திற்கு, சூழ்நிலைக்கேற்ற மாற்றங்களை, கருத்துகளை ஏற்றுக்கொள்வது.

பெரியார் இதைத்தான் திரும்ப திரும்ப சொல்லிவிட்டு சென்றார். ஆனால் அவரின் கொள்கைக் காவலர்களாக இன்று வலம்வருபவர்கள், இதை சுத்தமாக மறந்துவிட்டார்கள். ஒருகாலத்தில் பெரியார் பிராமணர்களை பார்ப்பான் என்று சொன்னார். அதையே இவர்கள் பிடித்துக் கொண்டு வம்பளப்பது ஏன்னென்று தெரியவில்லை. இன்று பூணூல் போட்டவர்களை விட பூணூல் போடாத பார்ப்பான்கள் தான் மிகமிக அதிகம். அம்பேத்கார் புத்தமதத்திற்கு மாறினார் என்று புத்தமதத்திற்கு ஓடுபவர்கள், பெரியார் இஸ்லாத்திற்கு போகச் சொன்னார் என்று இஸ்லாத்தின் பெருமை பற்றி பேசுபவர்கள் எல்லாரும் ஆட்டுமந்தைகளே. ஒருவேளை தானாக யோசித்து அந்த முடிவை எடுப்பாராகில் சரி.

ஒழுக்கம் என்பது மதத்தால் வருவது அல்ல. தனிமனிதனின் சூழ்நிலை, மனநிலையைப் பொருத்தது. ராஜபக்சே, பொன்சேகா போன்ற கொலைகாரர்கள் புத்தமதத்தில் இருப்பதால், அம்பேத்காரிய பெரியாரியவாதிகள் புத்தமதத்தைப் பற்றி விமர்சனம் செய்தார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அடுத்தவனை பார்ப்பான் என்று திட்டிவிட்டு தன் சாதி பெருமை பேசும் பல பெரியாரிஸ்ட்களைப் பார்த்திருக்கிறேன்.

இது இப்படியென்றால், இன்னுமொரு பக்கம் கடவுளால் மொத்தமாக கைவிடப்பட்டாலும், ஈழத்தமிழர்கள் மதப்பற்றிலும், கடவுள் பற்றிலும் ஊறித்திளைக்கிறார்கள். போரினால் பெரிதாக பாதிக்கப்பட்டதாக் சொன்னாலும், சகோதரர்கள் வேலிக்குள் முடங்கிக் கிடந்தாலும்  ஈழத்தமிழர்கள் கோவிலில் பாலபிஷேகம் செய்வதும், தேங்காய் உடைப்பதும் குறைந்தபாடில்லை. ஒரு மதம் தன்னைச் சார்ந்தவனை பண்படுத்த தவறினால், பிறகெதற்கு அதனுடைய கட்டுப்பாடுகள். மனிதர்கள் தங்களுக்கு தேவையான, வசதியான விடயங்களை வைத்துக் கொண்டு இயலாதவற்றை, வெறுப்பனவற்றை எதாவது காரணம் சொல்லித் தட்டிகழித்துக் கொள்வதே மதங்களின் நிலை. நிறுவனமயமாகிவிட்ட மதங்களில் இது சிறந்தது, இது தாழ்ந்தது என்ற ஐயமே தேவையற்றது. இந்துமதம் கூவம் நம்பர் 1 என்றால், இஸ்லாம் கூவம் நம்பர் 2. இதில் என்ன வேறுபாடு. 

9 comments:

  1. //ஒழுக்கம் என்பது மதத்தால் வருவது அல்ல. தனிமனிதனின் சூழ்நிலை, மனநிலையைப் பொருத்தது//
    அனால் மதத்தை சரியாக புரிந்துகொண்டால் ஒழுக்கம் தானாக வரும் அல்லவா?

    ReplyDelete
  2. நல்ல கட்டுரை.
    //ஒழுக்கம் என்பது மதத்தால் வருவது அல்ல.//
    முன்பு அமெரிக்காவில் குழந்தைகளின் தொடக்கக் கல்விக்கு மதம்சார்ந்த புத்தகங்கள்தான் பாவிக்கப்பட்டன. 1880க்கு பின்னரே நன்னெறிகளைச் சொல்ல சிவப்புக்கோழி (http://en.wikipedia.org/wiki/The_Little_Red_Hen) போன்ற நாட்டுப் புறகதைகள் பயன்படுத்தப்பட்டன என்று படித்திருக்கிறேன். இன்றும் அரசு பள்ளிகளில் இதுவே நடைமுறையில் உள்ளது.

    //மனிதர்கள் தங்களுக்கு தேவையான, வசதியான விடயங்களை வைத்துக் கொண்டு இயலாதவற்றை, வெறுப்பனவற்றை எதாவது காரணம் சொல்லித் தட்டிகழித்துக் கொள்வதே மதங்களின் நிலை.//

    இந்த வரி புரியவில்லை. விளக்குவீர்களா?

    ReplyDelete
  3. சகோதர்9:30 AM, March 22, 2010

    ஓன்னுமே புரியல...!

    ReplyDelete
  4. ////மனிதர்கள் தங்களுக்கு தேவையான, வசதியான விடயங்களை வைத்துக் கொண்டு இயலாதவற்றை, வெறுப்பனவற்றை எதாவது காரணம் சொல்லித் தட்டிகழித்துக் கொள்வதே மதங்களின் நிலை.//

    இந்த வரி புரியவில்லை. விளக்குவீர்களா//

    மதங்களில் அத்திப்பூத்தது போல ஏதாவது ஒன்றிரண்டு நல்ல விடயத்தை சொல்லியிருந்தால் அதனை விட்டுவிட்டு தேவையற்ற பழக்கவழக்கங்க்களை கைகொள்வது மதவாதிகளின் பொதுவான நிலைமை.

    ReplyDelete
  5. //ஒழுக்கம் என்பது மதத்தால் வருவது அல்ல. தனிமனிதனின் சூழ்நிலை, மனநிலையைப் பொருத்தது//
    அனால் மதத்தை சரியாக புரிந்துகொண்டால் ஒழுக்கம் தானாக வரும் அல்லவா//

    நீச்சல்,
    வீட்டில் எலி செத்து கிடந்தால், அதனை வெளியே வீசி எறிவது தான் நல்லது. அதை விடுத்து வாசனை போட்டால் சரியாகிவிடும், துர்நாற்றம் வராது என்பது எப்படி சரியான வழிமுறை இல்லையோ, அப்படித்தான் இதுவும்.

    ReplyDelete
  6. உங்கள் சிறகடிக்கும் சிந்தனைகள் சிந்திக்கவைக்கின்றன.....................

    ReplyDelete
  7. "நாத்திகம் என்றால் கடவுள், கடவுள் சார்ந்த மதங்கள், கடவுள் சார்ந்த மூட நம்பிக்கைகளை எதிர்ப்பது."

    நாத்திகம் என்பதற்கு நீங்கள் சொன்னபடி அர்த்தம் கொள்பவர்கள் இருக்கிறார்கள் என்றாலும் அப்படி நினைப்பவர்கள் வெகு சிலரே என்று தான் தோன்றுகிறது.. நீங்கள் நாத்திகர்கள் என்று அழைக்கும் பெரும்பாலனவர்கள் அர்த்தம் கொள்வதோ 'அன்பே சிவம்..' :) அந்த படம் பாக்கலையா நீங்க..? :-)

    "நான் கடவுள் இல்லைன்னு சொல்லல.. இருந்தா நல்ல இருக்கும்னு தான் சொல்றேன்.." இது கமல் சொன்னது. அத தாங்க பெரும்பாலும் நாத்திகர்கள் என்று மக்கள் அழைப்பவர்கள் சொல்கிறார்கள்.. என்ன! அவர்கள் சொல்வது மனித கடவுள்களை..

    ReplyDelete
  8. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  9. ஒருமுறை பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் இத்தஹைய குழப்பங்களுக்கு விளக்கமளித்திருக்கிறார்.
    நாம் சந்தைக்கு தொலைவில் இருந்து சந்தையை நோக்கி செல்லும்போது அங்கு நடக்கும் சம்பாஷனைகள் நமக்கு தெளிவாக கேட்பதில்லை, ஹோ என்ற இரைச்சல் மட்டுமே கேட்கும், பக்கத்தில் சென்றால் யார் யார் பேசுகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம், இன்னும் அருஹில் சென்றால் அவர்களின் சம்பாஷனை என்ன என்பதையும் புரிந்துகொள்ளலாம், அத்தனை இரைச்சல்களுக்கும் நடுவே.

    ஆம் அறியாமல் என்ன பேசி என்ன பயன்?

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய