துருக்கியில் ஸ்மைர்னா
என்றொரு இடம் கடலோரத்தில் உள்ளது. பழங்காலந்தொட்டே அவ்விடம் வாணிபம், போக்குவரத்து
முதலியனவற்றுக்கு பிரிசித்தி பெற்றது. ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு கடற்பாதை கண்டுபிடிக்கும்
முன், ஆசியாவிற்கு வரவிரும்புவர்கள், துருக்கியைக் கடந்து பாரசீகம் வழியாக சீனாவிற்கோ, இந்தியாவிற்கோ செல்வதுண்டு.
ஆதலால் ஸ்மைர்னாவில் பல்வேறு தரப்பட்ட, பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் வசித்து வந்தார்கள்.
சுமார் 500 ஆண்டுகளுக்கு
முன் ஸ்மைர்னாவில் ஒரு யூத வணிகர் வசித்து வந்தார். அவர் அவ்வூரில் புகழ்பெற்ற செல்வந்தர்களில்
ஒருவராகத் திகழ்ந்தார். அவ்வூரின் பஷாவுக்கு (Pasha; துருக்கியில் நகரஆளுநரை, தளபதிகளை,
உயர்ந்த பதவியில் உள்ளவர்களை பஷா எனச் சொல்வதுண்டு) யூத வணிகரின் மீது மிகுந்த பொறாமை.
யூத வணிகரின் செல்வங்களை எப்படியாவது அபகரிக்க ஒரு சந்தர்ப்பம் தேடி வந்தார். ஒரு நாள்
யூத வணிகர் பஷாவை ஒரு அலுவலாக சந்திக்க வேண்டி வந்தது. துருக்கி அதிகாரிகள் பலர் சூழ்ந்துள்ள
நிலையில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பஷா யூத வணிகரை ஒரு கேள்வி கேட்டார். „உலகில்
எந்த மதம் உண்மையானது, இஸ்லாமா? யூதமதமா? கிருத்துவமா?“. இந்த கேள்விக்கு வணிகர் யூதமதம்
அல்லது கிருத்துவம் உண்மையானது என்றால், „அப்போது இஸ்லாம் பொய்யானதா?“ எனக்கேட்டு வணிகரைச்
சிறையிலிட்டு அவரது செல்வங்களை எடுத்துக் கொள்ளலாம். இல்லாவிடில் இஸ்லாம் உண்மையானது என்றால், வணிகரை
மதம்மாறச்சொல்லி கட்டாயப்படுத்தலாம் என பஷா நினைத்தார். ஆனால் அவர் நினைத்தது அன்று
நடக்கவில்லை.
பஷா கேட்ட கேள்விக்கு வணிகர் ஒரு குட்டிக்கதையைச் சொன்னார் „ ஒரு ஊரில் ஒரு வயதான பெரியவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள். அவரிடம் இருந்த செல்வம் போக ஒரு விலைமதிப்பில்லா வைரக்கல் இருந்தது. அது அவருடைய பரம்பரைச் சொத்து. அந்த வைரத்தை வைத்திருக்கும் பெருமையை மூன்று மகன்களும் அடைய ஆசைப்பட்டனர். பெரியவர் தன் மகன்களின் இத்தகைய மனநிலையை நன்கு அறிவார். அவர் தான் இறந்த பிறகு தன்னுடைய மகன்கள் ஒருவரைஒருவர் வைரத்திற்காக அடித்துக் கொள்ளக்கூடாது என நினைத்தார். அதன்படி அவர் உண்மையான வைரத்தைப்போல அச்சுஅசலாக இன்னும் இரண்டு வைரக்கற்களை ரகசியமாக செய்துவைத்துக் கொண்டார். அப்பெரியவர் இறக்கும் தருவாயில், தன் மகன்களை தனித்தனியாக சந்திக்க எண்ணி அழைத்தார். ஒவ்வொருவரிடமும் மூன்று வைரக்கற்களில் ஒன்றைக் கொடுத்து, „இது தான் உண்மையான வைரம், ஆகவே இதை நீ வைத்துக்கொள்! மற்ற வைரங்கள் போலியானவை, இதை நீ யாரிடமும் சொல்லதே!“ என்றார். அவருடைய மகன்களும் தத்தமது வைரங்களை உண்மையானவை என இருந்தார்கள். இக்கதையைக் கூறி முடித்த வணிகர் „பஷா அவர்களே! இப்போது கூறுங்கள், யாரிடம் உண்மையான வைரம் உள்ளது! யாருக்கு உண்மையான வைரம் எது என்பது தெரியும்!“ என்றார். அதற்கு பஷா „உண்மையான வைரம் எது என்பது மகன்களுக்குத் தெரியாது. தந்தைக்கு மட்டுமே தெரியும்“ என்று கூறினார். உடனே வணிகர் „ஆம்! உண்மையான மதமும் நமக்குத் தெரியாது. அதைக் கொடுத்த இறைவனுக்கு மட்டுமே தெரியும்“ என்றார். தன் தவற்றை உணர்ந்த பஷா வணிகரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அனுப்பி வைத்தார்.
பஷா கேட்ட கேள்விக்கு வணிகர் ஒரு குட்டிக்கதையைச் சொன்னார் „ ஒரு ஊரில் ஒரு வயதான பெரியவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள். அவரிடம் இருந்த செல்வம் போக ஒரு விலைமதிப்பில்லா வைரக்கல் இருந்தது. அது அவருடைய பரம்பரைச் சொத்து. அந்த வைரத்தை வைத்திருக்கும் பெருமையை மூன்று மகன்களும் அடைய ஆசைப்பட்டனர். பெரியவர் தன் மகன்களின் இத்தகைய மனநிலையை நன்கு அறிவார். அவர் தான் இறந்த பிறகு தன்னுடைய மகன்கள் ஒருவரைஒருவர் வைரத்திற்காக அடித்துக் கொள்ளக்கூடாது என நினைத்தார். அதன்படி அவர் உண்மையான வைரத்தைப்போல அச்சுஅசலாக இன்னும் இரண்டு வைரக்கற்களை ரகசியமாக செய்துவைத்துக் கொண்டார். அப்பெரியவர் இறக்கும் தருவாயில், தன் மகன்களை தனித்தனியாக சந்திக்க எண்ணி அழைத்தார். ஒவ்வொருவரிடமும் மூன்று வைரக்கற்களில் ஒன்றைக் கொடுத்து, „இது தான் உண்மையான வைரம், ஆகவே இதை நீ வைத்துக்கொள்! மற்ற வைரங்கள் போலியானவை, இதை நீ யாரிடமும் சொல்லதே!“ என்றார். அவருடைய மகன்களும் தத்தமது வைரங்களை உண்மையானவை என இருந்தார்கள். இக்கதையைக் கூறி முடித்த வணிகர் „பஷா அவர்களே! இப்போது கூறுங்கள், யாரிடம் உண்மையான வைரம் உள்ளது! யாருக்கு உண்மையான வைரம் எது என்பது தெரியும்!“ என்றார். அதற்கு பஷா „உண்மையான வைரம் எது என்பது மகன்களுக்குத் தெரியாது. தந்தைக்கு மட்டுமே தெரியும்“ என்று கூறினார். உடனே வணிகர் „ஆம்! உண்மையான மதமும் நமக்குத் தெரியாது. அதைக் கொடுத்த இறைவனுக்கு மட்டுமே தெரியும்“ என்றார். தன் தவற்றை உணர்ந்த பஷா வணிகரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அனுப்பி வைத்தார்.
இக்கதையில் கவனிக்க
வேண்டிய ஒரு விஷயம் அடங்கி உள்ளது. அது என்னவென்றால் தந்தை மகன்களுக்கு கூறிய வசனத்தில்
(இது தான் உண்மையான வைரம், ஆகவே இதை நீ வைத்துக்கொள்!
மற்ற வைரங்கள் போலியானவை, இதை நீ யாரிடமும் சொல்லதே!) இதை நீ யாரிடமும் சொல்லதே என்பதை மட்டும் கவனியுங்கள். ஒருவேளை மகன்களில்
ஒருவன் „என்னுடைய வைரம் தான் உண்மையானது, மற்றவருடையது பொய்யானது“ எனக்கூறத் தொடங்கினால்,
மூவருக்குள் சண்டைச்சச்சரவு கட்டாயம் வந்தே தீரும். இன்று நடக்கும் மதச்சண்டைகளை கவனித்தால்
உங்களுக்குப் புரியும், இவை எல்லாம் எதனால் என்று. என் மதம் உண்மையானது, உன் மதம் பொய்யானது எனும் வெட்டிவிவாதத்தினால் வருவது.
//தன் தவற்றை உணர்ந்த பஷா வணிகரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அனுப்பி வைத்தார்.//
ReplyDeleteபஷா பாய் உண்மையான முமினா என சந்தேகமே வருகிறது. உண்மையான மார்க்கபந்து இப்படி வெகுளியாக இருக்கிறாரே? நம்ம பதிவுலக முமின்களிடம் டிரெனிங் கோர்ஸ் வரவேண்டிய பரிதாப நிலையில் இருந்திருக்கிறார்.
இவரு நல்லவரு போல.
Deleteஏய் பிசாசு,
ReplyDeleteஎன்ன Tamil Manam ஓட்டுப் பட்டை வேலை செய்யக் காணோம்? ஒரு வேலை பண்ணு, இந்த லிங்க் பாரு, அதுல சொன்ன மாதிரி செய், ஈசியா சரியாயிடும். ரெண்டு நாள் முன்னாடி தான் நானும் சரி பண்ணினேன். [உபயம்:கந்தசாமி ஐயா!!]
http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html
நமக்கு எதுக்குங்க ஓட்டு தேர்தல் எல்லாம், உங்களுக்காக வேண்டுமானாலும் போட்டுவைக்கிறேன்.
Delete\\ துருக்கியில் ஸ்மைர்னா என்றொரு இடம் கடலோரத்தில் உள்ளது. பழங்காலந்தொட்டே அவ்விடம் வாணிபம், போக்குவரத்து முதலியனவற்றுக்கு பிரிசித்தி பெற்றது. ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு கடற்பாதை கண்டுபிடிக்கும் முன், ஆசியாவிற்கு வரவிரும்புவர்கள், துருக்கியைக் கடந்து பாரசீகம் வழியாக சீனாவிற்கோ, இந்தியாவிற்கோ செல்வதுண்டு. ஆதலால் ஸ்மைர்னாவில் பல்வேறு தரப்பட்ட, பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் வசித்து வந்தார்கள். \\ இதுக்கு ஒரு map போட்டிருந்த ஈசியா புரியும்.
ReplyDeleteசேர்க்கிறேன்
Delete\\என் மதம் உண்மையானது, உன் மதம் பொய்யானது\\ அடடடா.......... சண்டை வரக்கூடாதுன்னு எப்படியெல்லாம் யோசிக்கிராயிங்க!! அடுத்தவன் மதத்தை விடுங்க, நமக்குன்னு ஒரு வழி வேண்டாமா?
ReplyDelete//நமக்குன்னு ஒரு வழி வேண்டாமா?//
Deleteநமக்குனு ஒரு வழி இருந்தா, அது தான் உண்மையான வழினு நம்புவோம். பிறகு சண்டை. இதெல்லாம் தேவையா?
யூதர்களுக்கு மாபெரும் சதிக்காரர்களாக இருப்பார்கள் போலும். உண்மையான வைரம் யாரிடம் இருக்கு என்று மறைப்பதற்கு ஒரு கட்டுகதை. அது கடைசி மகனிடம்தான் உள்ளது என்ற உண்மையை மறைக்க பொய்களை பரப்பி சதி செய்கிறார்கள். அந்த யூத அப்பாவே கடைசி மகனிடம் சொல்லியுள்ளார், மற்றவர்கள் அதை ஏற்க மறுக்கின்றனர். கடைசி மகனிடம் தான் உண்மையான வைரம் உள்ளது என்று அனைவரும் நம்ப வேண்டும்.
ReplyDeleteகருத்துக்கு நன்றி
Deleteவணக்கம் சகோ நல்ல பதிவு.
ReplyDeleteயூதர் தன் தலை காக்க விவரமில்லா மூமினிடம் உருவக கதை கூறித் தப்பித்தார். வாயுள்ள பிள்ளை பிழைக்கும், பிழைத்துக் கொண்டே இருக்கிறது.
கதையில் மூவருக்கும் வைரம்(வேதம்) கொடுத்து இதுவும் வைரமே என்று மட்டும் கூறீருந்தால் அல்லது அனைவரிடமும் வைரமே உள்ளது என்க்கூறி இருப்பின் நல்ல கடவுள்.
ஆனால் இப்படி சதி செய்யும் கடவுள் யார் என்பது எனக்கும் சகோ நரேனுக்கும் நன்கு தெரியும்.
முதலில் வைரம் கொடுப்பார்,பின்னால் சைத்தானை விட்டு வைரத்தை எடுத்து விட்டு கூழாங்கல்லை வைத்து விடுவார்[ ஏன் என்றால் நாடியதை செய்வார் கேள்வி கேட்டால் நரகம் ஒப்புக் கொடுத்தால் குஜால் சுவனம்!! ]. கடைசி ஆளிடம் மட்டும் வைரம் இருப்பதாக ஒப்புக் கொடுத்த பலர் சத்தமாக கூவுகிறார்கள்.
எனக்கு என்னமோ சதிகார கடவுள் கடைசி ஆளுக்கும் அல்வா கொடுத்த மாதிரித்தான் தெரியுது!!!ஏன் எனில் அறிந்து 3 மகன்கள் அறியாமல் எத்தனை
எண்ண வேண்டாமா???
சிந்திக்க மாட்டீர்களா!!!!!!!!!
டிஸ்கி
மேலே சொன்ன கருத்துக்கள் யாரையும்,எந்த கொள்கையையும் குறிப்பிடவில்லை.அப்படி தோன்றினால் மனப் பிராந்தி(இது வேற ஹி ஹி!!!) என்னும் விபத்தே
//முதலில் வைரம் கொடுப்பார்,பின்னால் சைத்தானை விட்டு வைரத்தை எடுத்து விட்டு கூழாங்கல்லை வைத்து விடுவார்//
Delete:)))
எனக்குத் தமிழெல்லாம் ரொம்பத் தெரியாது! தலைப்பு?? "இதை நீ யாரிடமும் சொல்லதே" னு வரனுமா?? இல்லை "இதை நீ யாரிடமும் சொல்லாதே!" வரனுமா?
ReplyDeleteசரி, ஒருவர் தான் பிறந்த, தன் மதத்தை மிகவும் குறையுள்ளதுனு ஏற்றுக்கொண்டால், அவரை சும்மா விட்டுறீங்களா, என்ன?
அப்படி திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டவனையும், அவன் இன்னொரு மதத்தை நல்ல மதம்னு சொல்றான்னு போட்டு கவுத்துறீங்க?
நம்ம சும்மா இப்படி கதை சொல்லிக்கிட்டே திரிய வேண்டியதுதான்!
//சரி, ஒருவர் தான் பிறந்த, தன் மதத்தை மிகவும் குறையுள்ளதுனு ஏற்றுக்கொண்டால்//
Deleteநானும் அப்படித்தாங்க. கடவுளை வழிபடுவதில்லை. சரி, வருங்காலத்துல எங்க கோவிலுக்கு போக வேண்டி வருமோனு கடவுள் நம்பிக்கை இல்லாத பொண்ண தான் கட்டினேன்.
//அப்படி திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டவனையும், அவன் இன்னொரு மதத்தை நல்ல மதம்னு சொல்றான்னு போட்டு கவுத்துறீங்க?//
நான் என் மதத்தில் நடக்கும் பைத்தியக்காரத்தனங்களை வெறுக்கிறேனோ, அதே அளவு மற்ற மதங்களில் நடக்கும் கிறுக்குத்தனங்களையும் வெறுக்கிறேன். ஆனால் அது நான் கருத்து கூறும் இடத்தைப் பொறுத்து மற்றவர்களின் என்னைப் பற்றிய ஊகம் மாறும். நம்ம சுபி அவர்கள் சாகிர் இப்னுவை எப்படி இந்துத்வா எனச் சொல்கிறாரோ, அது போலத்தான் உங்களை சிலர் முஸ்லீம் எனச் சொல்வதும்.
அப்புறம், எழுத்துப்பிழை கண்டு பிடிச்சு குறை சொல்ல வந்துட்டான்னு சொல்லாதீங்க.
ReplyDelete"நன்றி" சரி செய்துவிடுகிறேன். இல்லைனா "நீங்க சொல்றது தப்பு"னு சொல்லி முற்றுப்புள்ளி வைக்க கத்துக்கோங்க.
அப்புறம்..ஜால்ரா பின்னூட்டங்களை விட மாற்றுக் கருத்துப் பின்னூட்டங்களே ஒரு தளத்திற்கு அவசியம்.
ஆனால்.. எழுத்துப்பிழை விட்டதால நீங்க குறைவானவர் என்றோ, அதை நான் கண்டுபிடிச்சுச் சொன்னதால நான் பெரிய ஆள் என்றோ எதுவும் இல்லை. அது மாதிரி "தியரைஸ்" பண்ணுறவன் முட்டாள்! உங்களுக்கு நீங்க தான் உயர்வு! :) நல்லாயிருங்க!
//"நன்றி" சரி செய்துவிடுகிறேன்//
Delete***நம்ம சுபி அவர்கள் சாகிர் இப்னுவை எப்படி இந்துத்வா எனச் சொல்கிறாரோ, அது போலத்தான் உங்களை சிலர் முஸ்லீம் எனச் சொல்வதும். ***
ReplyDeleteநான் என்னைப் பத்தி சொல்லலைங்க.. என்னை முஸ்லிம்னு மட்டுமல்ல "பார்ப்பனர்" "சிங்களவர்" "இவன் ஒரு பொண்ணூ ஆண் மாதிரி எழுதுறான்" "இவன் ஒரு ஆண் பெண்ணாவும் எழுதுறான்" இப்படி பலவிதமா சொல்லத்தான் செய்றாங்க. I care less about that! :) Part of the problem is me. I mean, I don't reveal my identity to anybody properly. So, I wont blame anybody for that. I was talking in general like EVR or Kamalhassan or Salman Rushdi or people like that! :)
In that case try to ignore it
Delete