Monday, October 15, 2012

மொகலாய கிசுகிசு - இரண்டு



மொகலாயர் காலத்தில் யாராவது பதவிக்கு போட்டியாக இருப்பவர்கள் இறந்தால், கட்டாயம் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பது அன்றைய வரலாற்றாசிரியர்களின் பரவலான கருத்து. ஆட்சிக்கு இடையூறாக இருப்பவர்கள், ஆட்சியில் உரிமையுடையவர்கள், போட்டியாக இருப்பவர்கள் என பலரை விஷம் வைத்துக் கொல்லும் பழக்கம் இருந்தது. இதனால் நன்றாக ஆரோக்கியமாக இருந்தவர்கள் கூட திடீரென உடல்நலம்குன்றி இறந்துவிடுவார்கள். ஒருமுறை அக்பர் வேட்டைக்கு சென்றபோது பாம்பு ஒன்றை அம்பெய்து கொன்றார். அதே அம்பை எடுத்து தன்னைத் தாக்க வந்த ஒரு பெரிய மானின் மீது தற்செயலாக எய்துவிட்டார். மான் அம்பு பாய்ந்தவுடனே இறந்து போனது. அக்பர் காரணம் என்னவென்று விசாரித்தார். அம்புபட்டு இறந்த பாம்பின் கொடிய விஷத்தைப் பற்றி வேடுவர்கள் கூற, உடனே இறந்த பாம்பிலிருந்து விஷம் தயாரிக்க கண்ணாடி சாடிக்குள் போட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதுபோன்று விஷம் தயாரிக்கும் ஆர்வம் மொகலாய மன்னர்களிடம் இருந்தது. ஔரங்கசீப் வேட்டையாடிய புலிகளின் மீசைகள் கத்திரிக்கப்படும். அவ்வாறு சேகரிக்கப்பட்ட புலிமீசை பொடியாக தூளாக்கப்பட்டு கொல்லவேண்டியவர்களின் உணவில் கலக்கப்படும்.
இவ்வாறான விஷங்கள் உண்மையா?

ஒரு அல்கெமி தளத்தில் A Thick Sparkling Poison, The Tiger-bite Poison எனக் கொடுக்கப்பட்டிருந்தது.
4 parts tiger whisker/ground glass, 2 parts honey comb
A dangerous venom, the dramatically named 'tiger-bite poison' is so called for the traditional main component -- ground tiger whiskers. Combined with the Alchemist's magic, the tiny, hard 'grains' work like glass as they rip their victims to shreds...from the inside.
It is applied to weapons. Important note! Actual ground glass can be substituted for tiger whiskers. (காத்தாடி நூலுக்கு மாஞ்சா பூசவது போல பூசுவார்கள் என நினைக்கிறேன்).

தில்லியில் இரண்டு வகை பக்கிரிகள் இருந்துள்ளார்கள். முதலாமவர்கள் சுதந்திரமானவர்கள் என சொல்லிக் கொள்பவர்கள். அவர்கள் யார் வீட்டிலும் நுழைவார்கள், ஏழ்ழை பணக்காரன் என பாராமல் மரியாதையற்ற வார்த்தைகளில் ஏசுவார்கள். இவர்கள் எதாவது சாபமிட்டுவிடுவார்கள் எனப் பயந்து செல்வந்தர்கள் பணிவிடை செய்வார்கள். விரும்புவதைக் கொடுப்பார்கள். இரண்டாமவர்கள் பயமற்றவர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள். பிச்சை கொடுக்காவிட்டால் இவர்கள் தங்களைத்தாங்களே கத்தியால் கிழித்துக்கொள்வார்கள். கொடுக்காதவர்கள் மீது இரத்ததை தெளிக்கவும் செய்வார்கள்.

ஜாஹாங்கிர், ஔரங்கசீப் காலத்தில் இந்தியாவில் தங்கியிருந்த இத்தாலியர் ஒருவர் அக்காலத்தில் நடந்த பல சம்பவங்கள் பற்றி குறிப்பெழுதியுள்ளார், இவர் அக்காலத்தில் மொகலாய அரசின் மருத்துவராகவும், பீரங்கிப்படையிலும் பணிபுரிந்துவர். ஔரங்கசீப் இடித்த கோயில்கள், சர்ச்சுகள் சிலவற்றை குறிப்பிட்டுவிட்டு, முழுவதும் எழுதவேண்டுமானால் பல பக்கங்கள் தேவைப்படும் என தவிர்த்துவிடுகிறார். மொகலாய மன்னர்களில் ஜஹாங்கீர் பெரும்பாண்மையான நேரத்தை முல்தான் பகுதியிலேயே கழித்தார். அங்குதான் அவர் நூர்ஜஹான் என்றழைக்கப்பட்ட மெஹ்ருநிஸாவை சந்தித்தார். ஔரங்கசீப் கோடைக்காலங்களில் காஷ்மீரில் தங்குவார். ஆனால் அவர் இறக்கும்வரை ஹஜ் பயணம் மேற்கொள்ளவில்லை, காரணம் இவர் இல்லாத சமயம் ஆட்சியை உடனிருப்பவர்கள் யாராவது பிடித்துவிடுவார்கள் என்ற அச்சம் எப்போதும் இருந்தது. இவர் மற்றவர்களுக்குக் கொடுத்ததை, மற்றவர்கள் இவருக்கு கொடுத்துவிடுவார்களோ என்ற பயம்.

ஔரங்கசீப் இஸ்லாத்தை தீவிரமாக தன்னுடைய வாழ்க்கையிலும், நாட்டின் சட்டங்களிலும் பின்பற்றினார் எனச் சொல்வதுண்டு. ஆனால் அவர் ஆட்சியிலும் ஐரோப்பியர்களுக்கு மதுபானங்கள் காய்ச்சிக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது. (ஐரோப்பியர்கள் இந்தியாவில் சூரத், அகமதாபாத், ஆக்ரா, கல்கத்தா (ஹூக்லி), பலாஷூர், க்வாலியர், மசூலிப்பட்டினம், மதராஸ் என இன்னும் பல முக்கிய நகரங்களில் தொழிற்சாலைகள் அமைத்து பணிபுரிந்ததோடல்லாமல், மொகலாயர்களின் ஆர்டிலரிபடைகளிலும், கோட்டைபாதுகாவலிலும், மருத்துவர்களாகவும் பணி புரிந்துள்ளார்கள்) அதுமட்டுமில்லாமல் ஔரங்கசீப் தன்னை முஸ்லீம் என்பதைவிட சுன்னிப்பிரிவைச் சேர்ந்த முஸ்லீமாகவே அடையாளப்படுத்திக் கொண்டார். ஔரங்கசீபின் ஆட்சியில் ஷியாபிரிவு முஸ்லீம்களும், ஆப்கானிய பத்தான்களும், பிஜ்ஜபூர்-கோல்கொண்டா சுல்தான்களும், பாரசீக முஸ்லீம்களும் பெருவாரியாக ஒதுக்கப்பட்டார்கள். அவர்களின் பதவி உயர்வு மறுக்கப்பட்டன. அக்பர் காலத்தில் நவ்ரோஸ் எனப்படும் பாரசீக புத்தாண்டைக் கொண்டாட அளிக்கப்பட்டிருந்த அனுமதி முற்றிலும் மறுக்கப்பட்டது. 

Niccolai Manucci – Storia do Mogor (Story of Mughals)

7 comments:

  1. அனைத்தும் அறியாத தகவல்கள்
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  2. குட்டிப்பிசாசு,

    வேறப்பதிவில் போட்ட பின்னூட்டம் இங்கே இருக்கே?

    ----------

    கிசு கிசு என சொன்னதால் இதெல்லாம் கதையாக இருக்கவே வாய்ப்புண்டு.

    விஷம் பற்றிய அறிவு அக்பர் காலத்திற்கு முன்னரே உருவாகிடுச்சு, அக்பர் தற்செயலாக பாம்பு விஷம் பற்றி அறிந்து கொண்டது போல இருப்பது சரியானதாக இருக்க வாய்ப்பில்லை.

    பாபர் ,இப்ராகிம் லோடியின் தாயாரால் ஆர்செனிக் வைத்து கொல்லப்பட்டார்.

    கி.மு முதல் நூற்றாண்டில் ஆசிய மைனரில் ,பாரசீக மன்னன் மித்ரிடேட் -6 என்பவன் , உணவில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கலந்து சாப்பிட்டு எந்த விஷம் சாப்பீட்டாலும் பாதிக்காத எதிர்ப்பு சக்தியை பெற்றிருந்தான் என புளுடார்க் முதலான வரலாற்று ஆசிரியர்களே பதிவு செய்துள்ளனர்.

    இப்போதும் விஷத்திற்கு எதிர்ப்பு தன்மை இருப்பதை மித்ரிடேட்டிசம் என்கிறார்கள்.

    கிரேக்க,ரோமானிய காலத்தில் மரண தண்டனையாக விஷம் குடிக்க வைப்பார்கள். உ.ம்: சாக்ரட்டீஸ் ஹேம்லாக் விஷம் அருந்தி மாண்டது.

    ReplyDelete
    Replies
    1. //வேறப்பதிவில் போட்ட பின்னூட்டம் இங்கே இருக்கே?//

      அது சின்ன கன்புசன். இப்ப சரி செய்துவிட்டேன்.

      //விஷம் பற்றிய அறிவு அக்பர் காலத்திற்கு முன்னரே உருவாகிடுச்சு, அக்பர் தற்செயலாக பாம்பு விஷம் பற்றி அறிந்து கொண்டது போல இருப்பது சரியானதாக இருக்க வாய்ப்பில்லை.//

      அக்பருக்கு தற்செயலாக தெரிந்து கொண்டார் என்று சொல்லவில்லை. விஷங்களை சேகரிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். அதைத்தான் சொன்னேன். அக்காலத்தில் விஷம் தயாரிக்க தனி துறைகள் இருந்தன. எல்லாம் ஸ்லோ பாய்சன். ரகசியமாகக் கொல்லுதல். அடுத்த பதிவில் இன்னும் விவரமாக சொல்கிறேன்.

      //கி.மு முதல் நூற்றாண்டில் ஆசிய மைனரில் ,பாரசீக மன்னன் மித்ரிடேட் -6 என்பவன் , உணவில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கலந்து சாப்பிட்டு எந்த விஷம் சாப்பீட்டாலும் பாதிக்காத எதிர்ப்பு சக்தியை பெற்றிருந்தான் என புளுடார்க் முதலான வரலாற்று ஆசிரியர்களே பதிவு செய்துள்ளனர்.//

      அக்காலத்தில் விஷகன்யா என்று சிலர் இருப்பார்கள். அப்பெண்களை எதிரி அரசர்களை மயக்கி விஷம் கொடுக்கப் பயன்படுத்துவார்கள்.


      Delete
  3. முஸ்லீம் வம்சத்தைப் பார்த்தால் பெரும்பாலும் தந்தையை ஜெயிலில் போட்டுவிட்டு, தனயர்களை போட்டுத் தள்ளிவிட்டு பதவிக்கு வந்தவர்களாகவே இருப்பார்கள்..........

    ReplyDelete
    Replies
    1. மொகலாய அரசர்களின் வாழ்க்கை டெம்ப்லெட் போல, ஆட்கள் தான் மாறுவார்கள். தான் பிரருக்கு செய்ததை மற்றவர் நமக்குச் செய்யும் போது ஆச்சரியப்பட ஒன்றும் இல்லையே!

      Delete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய