Monday, February 10, 2014

உள்ளதைச் சொல்வேன் (09/02/2014)

ஜி.ராமனாதன், மெல்லிசை மன்னர்கள் விஸ்வனாதன்-ராமமூர்த்தி, இளையராஜா, சங்கர்-கணேஷ், சந்திரபோஸ், தேவா, ராஜ்குமார், ரகுமான் என பலரின் பாடல்களை ரசிப்பவன் நான். இளையராஜா பாடல் என்றால் எனக்கு விருப்பம். அதற்காக எனக்கு அவருடைய இசைமீது வெறியோ பக்தியோ இல்லை. பிடிக்கும் அவ்வளவே. இளையராஜா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பிறந்தவன் என்பதால் அவருடைய பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்கு காரணம் அவருடைய பாடல்கள் என்னுடைய சிறுவயது நினைவுகளை மீட்டெடுப்பவை. Nostalgia. தற்போது போன வருடம்  கிங் ஆப் கிங்ஸ் என்று மலேசியாவில் நிகழ்ந்து முடிந்த இசைநிகழ்ச்சியை காண முடிந்தது. அதைபற்றி எனது சில எண்ணங்கள்.


  • கிங் ஆப் கிங்ஸ் என்றால் ஏசுவை குறிக்கும் வாக்கியம். ஒருவேளை ராஜாதிராஜா என்பதை இப்படி மொழிபெயர்த்திருப்பார்களோ? எப்படியோ போகட்டும்.  பாலு எப்படி இந்த வயதிலும் இளமை பொங்க படுகிறார் என்று தெரியவில்லை. பாலு...பாலு தான். அவர் பாடியதை மிகவும் ரசித்தேன்.…
  • ஜனனி ஜனனி பாடல் உருவான விதம் பற்றி இளையராஜா உருகிஉருகி சொல்லிக்கொண்டிருந்தார். அப்பாடல் ஒன்றும் அப்படி உருக்கமான பாடல் அன்று. ஆதிசங்கரர் இளையராஜாவின் பாடலில் வந்ததைப் பற்றி  அவர் கூறும்போது, எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. "குருவே! இன்றைக்கு பாடலை கம்போஸ் செய்கிறேன். நீங்கள் அதில் வரவேண்டும்" என்று சொல்லிவிட்டு போனதாகவும், சங்கரரே பாடலில் வந்து அருள் புரிந்ததாக சொல்லி இருந்தார். இதைக்கேட்டு எனக்கு அப்படியே  புல் பூண்டு எல்லாம் அரித்துவிட்டது!
  • …ஒருவேளை நேத்துராத்திரி எம்மா பாடல் எப்படி உருவானது என்று கேட்டிருந்தால், இளையராஜா எப்படி பதில் சொல்லி இருப்பார்!!!!!!!!!!!…
    …நான் பாட்டு கம்போசிங்கிற்கு போயிட்டு இருந்தேன். போகிறவழியில் சில்க்கோட சினிமா போஸ்டரை தற்செயலாய் பார்த்தேன். "சில்க் நீ இன்னைக்கு என்னோட பாட்டுல வர" என்று சொல்லிவிட்டு போய்விட்டேன். பாட்டு கம்போஸிங்க் முடிச்சி பார்க்கிறேன். எல்லாருடைய கண்ணிலும்  (நோட் திஸ் பாய்ண்ட்) தண்ணி வந்துவிட்டது. கம்போசிங் முடித்துவிட்டு ஆர்மோனியத்தை வைக்கப்போனேன். சட்டென்று ஒரு பட்டுத்துணி என்மீது விழுந்தது. பட்டு என்றால் என்ன ? சில்க். சில்கினுடைய அருள். சில்க் என்னுடைய பாட்டில் வந்து, பாட்டை வேறொரு தளத்திற்கு கொண்டுபோய்விட்டதை எண்ணி எனக்கும் கண்ணில் தண்ணி வந்துவிட்டது. 
  • இளையராஜாவுடைய எவ்வளவோ நல்ல பாடல்கள் இருக்கும்போது, நிலா காயுது பாடலும் பாடப்பட்டது. இதுபோன்ற ஒரு கேவலம் எந்த மொழிக்கும் கிடைக்காது. இப்பாடலை பொதுவில் வயதுக்கு வராத பசங்களோட கேட்டு ரசிக்கும் நம்ம சமூகம் ஒரு புரட்சிகரமான சமூகம். வெட்கக்கேடு. இளையராஜாவுக்கு முந்தைய இசையமைப்பாளர்கள் பெரியவர்களுக்கு மட்டும் விளங்கும்படி இலைமறைவு காய்மறைவாக பாடல்களை உருவாகிக் கொண்டிருந்தார்கள். அதை வெளிப்படையாக விருந்து படைத்த பெருமை இளையராஜாவையே சேரும். அவருக்கு பின்னாடி வந்தவர்கள் பற்றி சொல்லவும் வேண்டுமா? பிரித்து மேய்ந்துவிட்டார்கள். கருமம். எப்படியோ போய் ஒழிங்க.
  • …நிகழ்ச்சி முழுவதும் காண இயலவில்லை. இயலவில்லை என்றால் என்னால் சகிக்க இயலவில்லை. அதிலும் இளையராஜாவின் மானத்தை வாங்க யுவன் ஒருவர் போதும் என்று நினைக்கிறேன். காதல் கசக்குதய்யா பாடலை நாலுநாள் கக்கூஸ் போகாதவன் போல பல்லை கடித்தபடி பாடிக்கொண்டிருந்தார். இளையராஜா பாடிய பாடல்களை அவருடைய தவப்புதல்வர்கள் இப்படி குதறி எடுப்பதை பார்க்க முடியவில்லை.

இளையராஜா மீதும், அவருடைய பாடல்கள் மீதும் இருக்கும் ரசிகர்களின் ஈர்ப்பை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க, இவனுங்களுக்கு எப்படிப்பட்ட வழி பாருங்க.

*******************************************************************
சமீபத்தில் 1989-ல் (அபூர்வ சகோதரர்கள் வந்த சமயம்) வெளியான பொம்மை மாதயிதழுக்காக சிவாஜி கணேசனிடம் கமல் எடுத்த பேட்டியைப் படித்தேன்.

…அதிலிருந்து எனக்குப் பிடித்த சில கேள்விகள்.

கமல்: உங்களுக்கு ஏன் டைரக்ட் பண்ணும் ஆசை வரல?
 
சிவாஜி: டைரக்ஷனைப் பற்றி நிஜமாகவே எனக்கு ஒன்றும் தெரியாது. இப்போ நீ டைரக்ஷன் செய்தால் ஒத்துழைப்பு தருவேன். எனக்கு டைரக்டர் ஆகவேண்டும் என்ற எண்ணம் என்னைக்குமே வந்ததில்லை. நான் நல்ல சொல்ஜராக இருந்தேனே தவிர கேப்டனாக விரும்பியதில்லை. எனக்கு கேப்டனாக இருந்தவங்க "இன்னும்...இன்னும்.." என்று சொல்லிட்டு இருந்தாங்களே தவிர "இது போதும்" என்று சொன்னதில்லை.

…கமல்: நீங்க நாடகத்துல இருந்ததாலே, கண்டிப்பாக மேடையிலே பாடி இருக்கணும். ஏன் சினிமாவில் பாடவில்லை.
சிவாஜி: இப்பவும் நல்லா பாடுவேனே. நானும் பாடிப்பார்த்தேன். ரெண்டு பேரோட வேலையை கெடுக்கர மாதிரி இருந்தது விட்டுட்டேன். அதுமட்டுமல்ல, அப்ப பாட்டுக்கு ரெண்டு நாள் மூணு நாள்  ரிகர்சல் பார்ப்பாங்க. நமக்கு இருந்த வேலையில் 2 நாள் 3 நாள் ஒதுக்க முடியாதுங்கிறது ஒண்ணு. தவிர, நம்மை விட நல்லா பாடுரவங்க இருந்தாங்க என்கிறது.

கமல்: இன்னைக்கு பல நடிகர்கள் புருவத்தை உயர்த்தி திரும்பி பார்க்கும்போது, என்ன என்று கேட்பதற்கு பதிலாக உறுமலே கேட்கிறது. அதெல்லாம் உங்கள் சாயல் தானே? 

…சிவாஜி: அந்த காலத்துல அது சரி கமல். இன்னைக்கு நீ குழந்தை மாதிரி வந்து நிக்குற, திரும்புற, அழற பாரு...அதுதான் சரி. நான் பண்ண காலம் வேற. இன்னைக்கு காலம் வேற. கலை தான் அப்பப்ப மாறிட்டே இருக்குமே. இப்ப கூட மறுபடியும் நான் நடிக்கவந்தேன்னா, ரெண்டு நாளைக்கு "ஜெர்க்" அடிப்பேன். இப்ப நீ நடிக்கிறது தான் நடிப்பு. அந்த காலத்துல நான் நடிச்சது நடிப்பா இருக்கலாம். கால ஓட்டதுல எல்லாத்துறையிலேயும் முன்னேற்றம், மாறுதல் வரும்.

இன்னும் பல விஷயங்கள் பற்றி அப்பேட்டியில் சிவாஜி அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்.

*********************************************************************

சோ ராமசாமி பல காலமாக விடுதலைப்புலிகளை எதிர்த்தே பேசிவந்துள்ளார். அவர்களை ஆதரிப்பவர்களையும் சாடியுள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலைப்படி அவர் ஈழத்தமிழர் விஷயத்தில் சொல்பவை கொஞ்சம் எரிச்சலாக இருந்தாலும், ஒன்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். விடுதலைப்புலிகள் தங்களின் சக விடுதலை இயக்கங்களின் உறுப்பினர்களை வேட்டையாடி கொன்றமை, அவற்றின் தலைமையை அழித்தமை என பல விடயங்களை கண்டித்துப்பேச அக்காலத்தில் மிகுந்த தைரியம் வேண்டும். ஈழத்தின் நிலைமை பற்றி மக்களுக்கு சரியாக தகவல்கள் கிடைக்காத காலம் அது. விடுதலைப்புலிகளால் டெலோ இயக்கத்தலைவர் சபாரத்தினம் மற்றும் 100க்கும் மேற்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்  கொல்லப்பட்டபோது கூட விடுதலைப்புலி இயக்கத்திற்குள்ளே ஏதோ சிறிய  சச்சரவு என்ற அளவில் தமிழகத்தின் சில முக்கிய பத்திரிகைகள் எழுதின. ஆனால் அப்போதும் தன்னுடைய கருத்தை தெளிவாக பதிவு செய்தவர் சோ. "தமிழின துரோகி" என பட்டம் கிடைக்கும் என்று தெரிந்தும் அதை அவர் செய்தார். நவம்பர் 1986-ல் துக்ளக் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை.



17 comments:

  1. பதில் சொல்வதிலும் சிவாஜி அவர்கள் The Boss... பணிவு...!

    அந்தக் காலத்தில் "அது" போல் பல பாடல்கள் உள்ளன... அவரை புரிந்து கொள்ளவே இன்றைய சமூகத்திற்கு தெரிய வாய்ப்பில்லை... ஏனென்றால் தமிழறிவு அப்படி...!

    ReplyDelete
  2. உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

    ReplyDelete
  3. Nice Article except the last one.

    ReplyDelete
    Replies
    1. ஏலியன்,
      ஈழ மக்களின் போராட்டம் பற்றிய சோவின் கருத்துக்கள் எனக்கும் பிடிப்பதில்லை. ஆனால் ஈழ விடுதலைப் போராட்டத்தின் பாதை, அவை தமிழகத்தில் விட்டுச்சென்ற சுவடுகள் மறக்கக்கூடியவை அல்ல. அதை அவர் விமர்சிப்பது எனக்கு சரியாகவே படுகிறது.

      Delete
  4. இசையமைப்பாளர்கள் இளையராஜா, 1986-ல் துக்ளக் தகவல்கள் சுவரசியம் .
    அது சரி யுவன் சங்கராஜாவின் இசைக்கு இஸ்லாமில் அனுமதியுண்டா?

    //சோ ராமசாமி பல காலமாக விடுதலைப்புலிகளை எதிர்த்தே பேசிவந்துள்ளார். அவர்களை ஆதரிப்பவர்களையும் சாடியுள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலைப்படி அவர் ஈழத்தமிழர் விஷயத்தில் சொல்பவை கொஞ்சம் எரிச்சலாக இருந்தாலும்//
    ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கொடுமைய சொன்னா இங்குள்ள மதவாதிகளுக்கு எரிச்சல் வருமா போல.
    //ஈழத்தின் நிலைமை பற்றி மக்களுக்கு சரியாக தகவல்கள் கிடைக்காத காலம் அது.//
    இப்போ மட்டும் பெரிய மாற்றமில்லை.
    முன்பு புலியிருந்தபோ எனக்கு வெளிநாட்டில் தெரிந்த இலங்கையரின் சகோதரன் புலிகள் யுத்தம் செய்ய தன்னை பிடித்து கொண்டு போயிடுவாங்க என்று தப்பி வந்து கொழும்பில் (colombo)படித்து கொண்டிருந்தார்.அவர் அங்கே தங்கியிருப்தற்கான செலவை இவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பிகொண்டிருந்தார். இப்படி பலர் கொழும்புக்கும்,வேறு சிங்கல இடங்களுக்கும் தப்பி வந்ததை நான் அங்கே கொழும்பில் நின்றபோ தெரிஞ்சுகிட்டேன். கொழும்பில் தமிழ் பள்ளி எல்லாம் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. புலிகள் செய்த அநியாயங்களைப் பற்றி அதன் ஆதரவாளர்களுக்கே தெரியும்.

      Delete
  5. குட்டிப் பிசாசு,
    சபாஷ். எத்தனை நடுநிலையான கருத்து! வெளிப்படையாக இவ்வாறு சொல்பவர்கள் வெகு குறைவு. அதற்காகவே உங்களுக்கு எனது பாராட்டுக்கள். நீங்கள் நிலா காயுது பாடலைப் பற்றி சொல்லியிருக்கும் கருத்துடன் நான் நூறு சதவிகிதம் உடன்படுகிறேன். இளையராஜாவைப் பற்றிய எனது வீழ்ந்த இசை என்னும் பதிவில் இதே கருத்தையே நான் முன்வைத்துள்ளேன். மேலும் யுவன் கழிப்பறையில் உட்காந்திருப்பது போலவே பாடுகிறார் என்றும் நான் சொல்வதுண்டு. இளையராஜாவைப் பற்றிய ஒரு வீண் பகட்டு பிம்பம் இணையத்தில் அதிகமாக இருக்கிறது. உங்களைப் போன்ற சிலர் உண்மையை எழுதுவது அவசியம் என்று உணர்கிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நண்பர் கு.பி அவர்களுக்கு, திரு காரிகன் குறிப்பிடவே உங்கள் பதிவைப் படித்தேன். திண்டுக்கல் தனபாலன் சொல்லியிருப்பதுபோல் தமிழ்மணத்தில் இணைக்கும் வாய்ப்பை செய்துவிட்டீர்களானால் இன்னமும் நிறையப்பேரின் கவனம் கிடைக்கும் அல்லவா?
    மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதனைப் பட்டவர்த்தனமாகச் சொல்லிச்செல்லும் உங்கள் மனப்பாங்கு பிடிக்கிறது. இளையராஜாவைப் பற்றிய மாற்றுக்கருத்துக்கள் என்னிடம் இருந்தாலும் உங்களைப் போல் கொஞ்சம் கடுமையாகவே சொல்லிச் செல்லும் பாணி என்னுடையதல்ல. மனதில் பட்டதை அப்படியே போட்டு உடைக்கிறீர்கள். நீங்கள் வைத்துக்கொண்டிருக்கும் புனைப்பெயரும் அதற்கு ஏதுவாக இருப்பதையும் குறிப்பிட வேண்டும். நல்ல எழுத்துக்கள், நல்ல கருத்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அமுதவன் ஐய்யா! இன்னுமும் விரிவாக எழுதுவேன். ஆனால் எனக்கு பொறுமை இருப்பதில்லை.

      Delete
  7. குட்டிப்பிசாசு,

    ரொம்ப நாளா ஆளேக்காணோம்? எங்காவது உல்லாசப்பயணம் போயிருந்தீரா?

    நமக்கு ராசாவின் பாட்டு பிடிக்கும் அவரோட பேச்சுப்பிடிக்காது :-))

    கோழிக்குருடா இருந்தா என்ன கொழம்பு ருசியா இருந்தா சரிதேன்!!!

    இணையத்தில சிலர் "தீவட்டித்தனமாக" கதை விடுவதால் , தேவையில்லாமல் இன்னும் விமர்சனத்துக்குள்ளாவே ஆகிறார் ராசா!

    காரிகன்,அமுதவன் போன்ற அனுபவசாலிகளின் ஆமோதிப்பே ,நீங்க சரியாக "மாட்டுக்கண்ணை(bulls eye)" தாக்கிட்டிங்கனு காட்டுது!!!


    # புலிகள் பற்றிய கருத்துக்களீல் எனக்கும் உடன்பாடே, புலிகள் தவிர்த்து ஈழம் பற்றி பேச பலருக்கும் தயக்கமே, நானும் ரொம்ப நாளா ஈழப்பிரச்சியனைப்பத்தி எழுதலாம்னு நினைச்சு , தள்ளிப்போடக்காரணம் ,இங்கே சிலருக்கு உண்மையை எதிர்க்கொள்ள தைரியமில்லை, ஓரேயடியாக "தமிழினத்துரோகி" முத்திரைய குத்திடுவாங்க அவ்வ்!

    ஈழப்போராட்டம் தோல்வியடையக்காரணம் புலிகளின் செயல்பாடும் "மேட்டுக்குடி" ஈழமக்களின் செயல்ப்பாடும் தான் என்ற உண்மையை ஒத்துக்கொள்ள பலருக்கும் விருப்பமில்லை!

    # லோகநாயகரின் "அரைவேக்காட்டு" அறிவு சீவித்தனத்தை பத்தி ஆராய்ஞ்சால் முடிவே இருக்காது ,நீஙக வேற கிளப்பிவிட்டுக்கிட்டு அவ்வ்!

    ReplyDelete
    Replies
    1. நமக்கு ஏது உல்லாச பயணம். எல்லாம் சொந்தக்கதை சோகக்கதை தான்.

      …//புலிகள் பற்றிய கருத்துக்களீல் எனக்கும் உடன்பாடே, புலிகள் தவிர்த்து ஈழம் பற்றி பேச பலருக்கும் தயக்கமே, நானும் ரொம்ப நாளா ஈழப்பிரச்சியனைப்பத்தி எழுதலாம்னு நினைச்சு , தள்ளிப்போடக்காரணம் ,இங்கே சிலருக்கு உண்மையை எதிர்க்கொள்ள தைரியமில்லை, ஓரேயடியாக "தமிழினத்துரோகி" முத்திரைய குத்திடுவாங்க அவ்வ்!

      ஈழப்போராட்டம் தோல்வியடையக்காரணம் புலிகளின் செயல்பாடும் "மேட்டுக்குடி" ஈழமக்களின் செயல்ப்பாடும் தான் என்ற உண்மையை ஒத்துக்கொள்ள பலருக்கும் விருப்பமில்லை!//

      …இலங்கைப் புலி ஆதரவாளர்கள் எல்லாரும் எங்கயோ ஒரே இடத்தில் உட்கார்ந்து பேசி முடிவெடுத்துவந்து கதைப்பது போல இருக்கும். இணையத்தில் வருபவராக இருக்கட்டும், என்னுடைய மாமாவாக எல்லாரும் ஒரே மாதிரி தான் கதைப்பார்கள். இதைப் பற்றி ஒருநாள் விலாவாரியா எழுதணும்.

      Delete
  8. சிவாஜி பதில்களை ரசித்தேன். இளையராஜா பற்றிய கருத்துகளில் வவ்வால் அவர்களின் பதில் எனக்கும் பொருந்தும். பாட்டு பிடிக்கும் பேச்சு பிடிக்காது! அமுதவன் அவர்களின் பின்னூட்டத்தையும் ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete
  9. சோ இவன் ஒரு கண்றாவி

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய