Wednesday, February 19, 2014

உள்ளதைச் சொல்வேன் (19/02/2014)

குழாயடிச்சண்டை

என் சிறுவயதில் எங்கள் வீட்டுக்கு முன்னாடி ஒரு பொதுக்குழாய் இருக்கும். குழாயில் தண்ணீர் வருகிறதோ இல்லையோ, அங்கு பெண்கள் சண்டை இடுவது மட்டும் தினந்தோறும் நடக்கும். பள்ளிக்கு செல்லும்முன் சற்றுநேரம் குழாயடிச்சண்டையைப் பார்த்துவிட்டு தான் போவேன். தமிழகராதியில் இல்லாத பல நல்ல "கெட்ட" வார்த்தைகளை அங்குதான் பயின்றேன். சாயுங்காலம் ஆறு ஏழு மணிக்கு பெண்கள் நான்கைந்து பேர் வாசர்படியில் அமர்ந்து கதை பேசுவார்கள். சினிமா, அக்கம்பக்கத்தின் காதல், கள்ளத்தொடர்பு, சமையல், ஆன்மீகம், அமானுஷ்யம் எனப் பல விஷயங்கள் பற்றி பேச்சுக்கள் வரும். நல்லா பொழுது போகும். எட்டு ஒன்பது மணிக்குமேல் சாப்பாட்டை முடித்து வெளியில் வந்து அமர்ந்தால், ஏ1 சாரயக்கடையில் குடித்துவிட்டு நடுரோட்டில் நின்று கண்ணதாசன் பாட்டை எவனாவது சத்தமாக பாடிக்கொண்டிருப்பான். கொஞ்சநேரத்தில் அவன் பொண்டாட்டியோ பசங்களோ இரண்டு போட்டு இழுத்துக்கொண்டு போவார்கள். இதை நான் ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், சமூக வலைத் தளங்களான முகநூல், ப்ளாக், கூகிள்ப்ளஸ், ட்விட்டர் என பலவற்றில் குழாயடிச்சண்டை, கிசுகிசு, சரக்கடித்தவன் உளறல் போன்றவைகளைத் தான் பார்க்க நேரிடுகிறது. விஞ்ஞானம் முன்னேறினாலும் நம்ம ஜனங்கள் மட்டும் அப்படியே தான் இருக்கிறார்கள்.  போனவாரம் யுவன் என்கிற உலகமகா இசையமைப்பாளர் இஸ்லாம் மாறிவிட்டார் என அதைப்பற்றி ஒரு அக்கபோரு. வார கடைசியில் பாலுமகேந்திரா ஷோபாவை ஏமாற்றிக் கொன்றுவிட்டார் என்று முப்பது வருடத்திற்கு முன்னாடி செத்துப்போன ஷோபாவைப் பற்றி ஒப்பாரி. இப்போது அடுத்துவரப்போவது, தூக்குதண்டனையில் இருந்து தப்பித்த மூன்று தியாகிகள் பற்றி இருக்கும் (இப்போதே துவங்கியாயிற்று என நினைக்கிறேன்). இவனுங்கதான் இப்படி என்று ஆங்கில செய்தி வாசிக்கப் போனால், அங்கு சிங்கம் பலமானதா? கழுதைகொறத்தி வலிமையானதா? என பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தார்கள். சரி! எதாவது யூட்யுபிள் பார்க்கலாம் என்று போனால், சாதி பெருமை பேசிக்கொண்டு ரெண்டு குருப் திட்டிக்கொண்டிருந்தார்கள். அடச்சே!!!

*******************************************************************************

சங்ககால தமிழர்களின் "ஊன்சோறு"

சங்ககால தமிழர்களின் "ஊன்சோறு" பற்றி வரலாறு.காம் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். நாம் இன்று அதிகமாக பயன்படுத்தும் மிளகாய், தக்காளி போன்றவற்றை பண்டைய தமிழர்கள் அறிந்ததில்லை. நாமும் செய்து தான் பார்ப்போமே என்று முயற்சித்தேன். ஊன்சோறு அருமை.

பன்றி இறைச்சி - 500 கிராம்
கடுகு, பெருஞ்சீரகம், …மிளகு - தேவைக்கேற்ற அளவு
உப்பு - தேவைக்கேற்ற அளவு
மஞ்சள் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கிராம்பு - நான்கைந்து
பட்டை - ஒன்று
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - மூன்று பல்
கறுவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு
  • …அரிசியை கழுவி சிறிது சேரம் ஊற வைக்கவும்.
  • இஞ்சி, பூண்டு, கிராம்பு, மிளகு இவற்றை உரலில் இட்டு நன்றாக இடித்துக்கொள்ளவும்.
  • வானலியில் எண்ணெய் சூடானபின், பட்டை, பெருஞ்சீரகம் மற்றும் கடுகைப் போடவும். கடுகு பொறிந்தவுடன், கறுவேப்பிலை, இடித்து வைத்திருக்கும் கலவையை இட்டு வதக்கவும். சிறிது வதங்கியபின் பன்றி இரைச்சி, மஞ்சள், உப்பு போன்றவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். 
  • சிறிது நேரத்தில் பன்றி இறைச்சி நீர்விடத்துவங்கும். இன்னும் சற்று நேரத்தில் ஊறவைத்த அரிசியைப் போட்டு நன்கு கிளரவும். கேவையான அளவு தண்ணீர் சேர்த்து (பாஸ்மதி அரிசியைப் பயன்படுத்தினால் 1:1 அளவில் நீர் சேர்ப்பேன்) மிதமான சூட்டில் 10 - 12 நிமிடங்கள் வேகவிடவேண்டும். 
  • நறுக்கிய கொத்துமல்லியை தூவி பரிமாறவும்.
  • பன்றி இறைச்சி பயன்படுத்தினால் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். (மாடு போல அல்லாமல் பன்றி இறைச்சிக்காவே வளர்க்கப்படுவது. சங்க காலத்தில் பன்றியை இறைச்சிக்காக அதிகமாக பாவித்தனர் தமிழர்கள்).

பதிவுலகில் பலர் ஓட்டலில் சாப்பிடுவதை சிலாகித்து பதிவிடுகிறார்கள். தனியாகவோ குடும்பமாகவோ சென்று சாப்பிடுவதாக சொல்கிறார்கள். அதை மற்றவருக்கும் பரிந்துரை செய்கிறார்கள். வகையாக சாப்பிட்டுவிட்டு தொகைதொகையாக கதை எழுதுகிறார்கள். இதில் ஒருவர் இக்கொடுமையை புத்தகமே போடுகிறார்.

முடிந்தவரை வீட்டு உணவு சாப்பிட பாருங்கள். அப்படி முடியாதபட்சத்தில் வெளியில் நல்ல உணவாக சாப்பிடுங்கள். குறிப்பாக வீட்டில் உள்ள வாண்டுகளுக்கு ஓட்டல் உணவை அறிமுகப்படுத்தாதீர்கள், உங்களுக்கு புண்ணியமாக போகும். இதை அறிவுரையாக எடுத்துக்கொளாதீர்கள்: ஒரு வேண்டுகோள் அவ்வளவே.


**********************************************************************************

காபி...நரசூஸ்...

சென்னை தூர்தர்ஷனில் வந்த பழைய விளம்பரங்களைப் பார்ப்பதில் எனக்கு ஒரு அலாதி சுகம். அதிலும் அப்போது வந்த நரசுஸ் காபி விளம்பரம் மிகவும் பிரபல்யம். YOUTUBE-யிருந்து உங்களுக்காக.

தேங்காய் சீனிவாசன் மற்றும் மனோரமா



…உசிலைமணி



26 comments:

  1. அவரவர் உணர வேண்டிய வேண்டுகோள்...

    வீட்டிலேயே "வெளிச் சாப்பாடு" என்றிருந்தால் ஒன்றும் செய்ய முடியாது...!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்
      //வீட்டிலேயே "வெளிச் சாப்பாடு" என்றிருந்தால் ஒன்றும் செய்ய முடியாது...!!!//

      என்ன நாமே ஒரு ஓட்டல் வைக்கலாம்னு சொல்லுறிங்களா?

      Delete
  2. சுவையான பதிவு .
    ஊன்சோறு சமையல் கலக்கல். சங்க கால தமிழங்க மேற்கு நாட்டவர்கே வழிகாட்டிகளா இருந்திருக்கிறார்கள்.
    தூக்குதண்டனையில் இருந்து தப்பித்த மூன்று தியாகிகள் உலக நாடுகளில் நடக்க முடியாத சாதனை.

    ReplyDelete
  3. //தூக்குதண்டனையில் இருந்து தப்பித்த மூன்று தியாகிகள்//

    வேகநரி & குட்டிபிசாசு

    ஒரு விஷயத்த பத்தி முழுசா தெரிஞ்ச கருத்து சொல்லுங்க ..இல்லைனா பொத்திகிட்டு (வாயசொன்னேன் ) இருங்க. உங்களுக்கு மட்டும் என்னவோ இண்டர்நேட்னால அறிவு பூத்துகுளுன்கர மாதிரி பேசுறீங்க. நீங்களும் விசயத்த முழுசா புரிஞ்சுக்காம பொரணி தானா பேசுறீங்க ..grow up

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. பெயரில்லா அறிவுகொழுந்து,

      நீங்‌களே விளக்கி சொல்லுங்க

      Delete
    3. 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்திருக்கிறார்கள். தூக்கு தண்டனை ரத்தாகிவிட்டது, நல்லது. நியாயத்திற்குக் கிடைத்த வெற்‌றி! நீதிக்குக் கிடைத்த வெற்‌றி! என்ற சாமான், வைக்கோ கும்பல் கத்துவதைப் பற்றி தாங்கள் கருத்து என்ன?

      Delete
    4. அனானிகளின் உளறுகளை பொருட்படுத்தாதிங்க.

      Delete
  4. வெங்காயம் தக்காளி இல்லாமல் சமையலா? ஆச்சரியமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏலியன்! ஒரு முயற்சி தானே!

      Delete
  5. இன்று தினமலரில் வாசகர் கருத்து:

    \\நல்லது. ராஜீவ் கொலை மூலம் அப்போது முதல்வர் ஆனார் ஜெயா. களங்கம் DMK மீது, தமிழர்கள் கோபத்தில் வாக்குகளை AIADMK மீது குத்தி தள்ளினார்கள் . ராஜீவ் கொலையாளிகள் விடுதலை மூலம் இன்னும் வாக்குகள் வாங்க பார்கிறார் . நல்லது ராஜீவ் வீழ்ந்து ஜெயா வை முதல்வர் ஆக்கினார். இப்போது அவர் வழக்கைவைத்து மீண்டும் அரசியல் சித்து விளயாடுகிறார். நீதி அநீதி தழைத்திட உதவிடுமா? வெளியில் வந்த உடன் இவர்களுக்கு அரசு வீடு , வேலை , உதவி தொகை கொடுத்தாலும் கொடுக்கும் ..தேர்தல் காலம் .. \\

    குழாயடியில் அனைத்து செய்திகளும் கிடைக்கும், தண்ணீர் வருதோ இல்லையோ, சண்டை கண்டிப்பாக வரும்.

    கருப்பு வெள்ளை விளம்பரம் Old is Gold!!

    ReplyDelete
    Replies
    1. ராஜீவ் கொலைக்கு உடந்தையானவர்களை விடுவிப்பதன் மூலம் தமிழ் மக்களின் ஓட்டுகளை பெற இயலாது. அந்த ட்ரிக் தெரிந்த ஒரே ஆள் மு.க. மட்டுமே. எவன் இருந்தா என்ன செத்தா என்ன நமக்கு என்ன ஆதாயம். அதுதான் தமிழனுக்கு முக்கியம்.

      Delete
    2. நண்பர் ஜெயதேவ தாஸ், குழாயடியில் நிறய உண்மைகள் எல்லாம் வருகிறதே.

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. நீங்க கொடுத்த வரலாறு.காம் இணைப்பை பீதியோடுதான் படிக்க ஆரம்பித்தேன். என் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் பிரியாணியை கண்டுபிடித்தவன் தமிழன் என சொல்லிவிட்டார்கள். வரவர தமிழ் கட்டுரைகளை படிக்கவே பயமாக உள்ளது. உலகத்தில் உள்ள எல்லா வார்த்தையும் தமிழில் இருந்துதான் வந்ததது, எல்லாத்துக்கும் தமிழன்தான் முன்னோடி என போகிற போக்கில் அடித்துவிடுகிறார்கள். நல்ல காலமாக இவ்வகை கட்டுரைகள் தமிழில் மட்டும் எழுதப்படுவது ஒரு விதத்தில் நல்லதுதான்!
    ----

    வைகோவை விடுதலைபுலி ஆதரவாளர் என்பதற்காவே எதிர்க்கும் சோ தற்போது அம்மாவைப் பற்றி என்ன எழுதுவார் என அறிய ஆவலாக இருக்கிறது.

    ஓவர் நைட்டில் தமிழ்பற்றாளர் & வெறியாளிகளின் மனதில் அம்மா சிறந்த நிர்வாகியாக மாறிவிட்டதை நினைக்கும் போது ஆச்சர்யமாக உள்ளது. இனி மின்சாரம் போன்ற அத்தியாவிடய தேவைகள் பற்றி கவலையே படமாட்டார்கள் போல! உணர்ச்சிவசப்படுவதில் நம்மவர்களை விட்டால் உலகில் ஆளே கிடையாது!

    ReplyDelete
    Replies
    1. //பிரியாணியை கண்டுபிடித்தவன் தமிழன் என சொல்லிவிட்டார்கள்//
      …செய்முறைப்படி …பிரியாணி போன்ற ஒரு உணவு என்று தான் சொல்லி இருக்காங்க. வரலாறு.காம் நம்பகமான தளம்.

      //ஓவர் நைட்டில் தமிழ்பற்றாளர் & வெறியாளிகளின் மனதில் அம்மா சிறந்த நிர்வாகியாக மாறிவிட்டதை நினைக்கும் போது ஆச்சர்யமாக உள்ளது. இனி மின்சாரம் போன்ற அத்தியாவிடய தேவைகள் பற்றி கவலையே படமாட்டார்கள் போல! உணர்ச்சிவசப்படுவதில் நம்மவர்களை விட்டால் உலகில் ஆளே கிடையாது!//
      …திமுகவையும், மத்திய அரசையும் முந்திகிட்டாங்க, அவ்வளவு தான். மற்றபடி தமிழ் பற்றாளர்களின் ஆத"ரவை" வைத்து உப்புமா கூட கிண்ட முடியாது என்பது ஜெவிற்கு தெரியும்.

      Delete
    2. சகோ நந்தவனத்தான் நீங்க சொன்ன சோ தான் அம்மாவின் ஆலோசகர் என்கிறார்களே. இந்தம்மா ஒரு விபத்தாக கூட நாட்டின் பிரதமாராக வந்துவிட கூடாது.

      Delete
    3. சகோ வேகநரி, ஜெ பிரதமர்னதும் தட்ஸ்தமிழில் வந்திருந்த இந்த படம்தான் ஞாபகம் வந்தது. :)
      http://tamil.oneindia.in/img/2014/02/19-1392800865-sarathkumar-facebook-funny-600.jpg

      Delete
    4. சகோ நந்தவனத்தான், சரியான படம் தான் ராதிகாவின் கணவர்மட்டுமா! அவர் மாதிரியே இங்கே பலர் கண்ணு மண்ணு தெரியாம காமெடி பண்ணி கொண்டு திரிகிறார்கள் :)
      விடுதலையாக போகும் தியாகிகளின் அகிம்சை இயக்கம் இலங்கையில் என்ன செய்தது என்பதை 2.20-5.45 & 10.00-12.00 என்பதை பாருங்க.
      http://www.youtube.com/watch?v=heFhTh1PxQE#t=444

      Delete
  8. ஆங்கிலச் செய்திகளில் சிங்கம் பலமானதா கழுதைக்கொறத்தி பலமானதா என்ற சர்ச்சையாவது சுவாரஸ்யமாக இருக்கக்கூடும். நாட்டில் அல்லது உலகில் எத்தனைப் பெரிய செய்திகள் நடந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு யுவராஜ்சிங் எட்டுகோடிக்கு வாங்கப்பட்டார், டோனியை முப்பது கோடிக்கு வாங்குவார்களா என்பதையே இந்த நாட்டில் அதிகம் விற்பனையாகும் ஆங்கில நாளிதழ் தலைப்புச் செய்தியாகவே போட்டுக் கொல்கிறதே அதைப் பார்த்திருக்கிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. //யுவராஜ்சிங் எட்டுகோடிக்கு வாங்கப்பட்டார், டோனியை முப்பது கோடிக்கு வாங்குவார்களா என்பதையே இந்த நாட்டில் அதிகம் விற்பனையாகும் ஆங்கில நாளிதழ் தலைப்புச் செய்தியாகவே போட்டுக் கொல்கிறதே அதைப் பார்த்திருக்கிறீர்களா?//

      சமீபத்தில் டெல்லியில் கற்பழிப்பு எதுவும் நடக்கவில்லை, அதனால் கிரிக்கெட் செய்தி போட்டுவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

      …20- 20 கிரிக்கெட் வந்த பிறகு, நான் கிரிக்கெட் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். செய்தித்தாளில் அதுபற்றி வந்தாலும் அப்பக்கத்தை வேகமாக கடந்து விடுவேன்.

      Delete
  9. குட்டிப்பிசாசு,

    அந்தக்காலத்துலவே குழாயடில ஆண்டிங்களை சைட் அடிச்சிருக்கீரா அவ்வ்!

    ஹி...ஹி இப்பவும் அது போல பாக்கலாம், தண்ணி லாரி வரும் போது!

    வெறும் நைட்டில வந்து ஈரமாகி தண்ணிப்புடிச்சுக்கிட்டு போகும் போது தளும்பும், குடம்!, மனசும் தடுமாறும் ஹி...ஹி இப்படிலாம் சொன்னதும் என்னையே ஏதோ காமக்கிராதன் போல பார்க்கதீர் மி பாவம்!

    # ஊன் சோறு ,தேறல்னு படிச்சிருக்கிறேன் , ஊன் சோறுலாம் செஞ்சிப்பார்க்கலை.

    தக்காளி , மிளகாய் எல்லாம் 14-15 ஆம் நூற்றாண்டில் தான் வந்தது,ஏதோ ஒரு பதிவில் கூட சொல்லி இருப்பேன்.

    மாம்பழமே நம்ம ஊரு பழம் இல்லை ஆனால் எவனோ மா,பலா,வாழை தான் தமிழ் நாட்டின் முக்கனினு எழுதி இருப்பான், போர்ச்சுகீசியர்கள் தான் மாம்பழத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தாங்க , அப்புறம் ஈஸ்ட் இந்தியா கம்பெனி தான் சிட்டுக்குருவியை கொண்டு வந்தாங்க ஆனால் இப்போ நம்ம நாட்டில எல்லாம் சிட்டுக்குருவி செல் போனால் அழிஞ்சுப்போச்சுனு கவலைப்படுறாங்க அவ்வ்!

    உலகம் முழுக்க சிட்டுக்குருவிகள் அதிகமா இருக்காம்,அவற்றை "தானியங்களின் பெஸ்ட் (pest) அழிக்க சொல்லி பல நாட்டிலும் ஆபரேஷன் சிட்டுக்குருவினு அழிக்கிறாங்க அவ்வ்!

    உலகம் முழுக்க பல தாவர,விலங்கினங்கள் பரவ காலனியாக்கம் ஒரு காரணம் ,அதே போல நோய்கள் பரவவும்.

    # செஞ்சோறு என ஒன்று இருக்க அதை சாப்பிட்டு பார்க்க முயற்சிக்காதீர் , அதுக்கு நரபலி கொடுக்கணும் அவ்வ்!

    செஞ்சோற்று கடன் என்பதன் பின்னால் உள்ள கதை கொடூரமா இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. //தளும்பும், குடம்!,//
      குடம் அல்ல. குடங்கள்.

      …//செஞ்சோற்று கடன் என்பதன் பின்னால் உள்ள கதை கொடூரமா இருக்கும்!//
      …செஞ்சோறு பற்றி விலாவாரியாக சொல்லிவிட்டுப் போனால், அடியேன் தன்யனாவேன்.

      …//அப்புறம் ஈஸ்ட் இந்தியா கம்பெனி தான் சிட்டுக்குருவியை கொண்டு வந்தாங்க ஆனால் இப்போ நம்ம நாட்டில எல்லாம் சிட்டுக்குருவி செல் போனால் அழிஞ்சுப்போச்சுனு கவலைப்படுறாங்க அவ்வ்!//

      …சிட்டுக்குருவி கொண்டு வந்தது வெள்ளைக்காரனாக இருக்கலாம். சிட்டுக்குருவி லேகியம் கண்டுபிடிச்சது நாங்க தான்.

      Delete
  10. பொறுப்பான வேண்டுகோள்
    பின்பற்றலாம்...

    ReplyDelete
  11. Ever wanted to get free Google+ Circles?
    Did you know you can get them ON AUTOPILOT AND TOTALLY FOR FREE by registering on You Like Hits?

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய