80,90 களில் இளையராஜா இசையமைத்த திரைப்படங்களில் பின்னணி இசை இன்றும் பலர் மனதில் நீங்காத இடத்தைப் பிடிப்பவை. அவற்றில் சில இசைக்கோர்வைகளைக் கேட்டால், படத்தின் காட்சிகள் நம் கண் முன்னே தோன்றும். அப்படி ஒரு ஈடுபாட்டுடன் நாம் அக்காட்சிகளை ரசித்திருப்போம். என்னைக் கவர்ந்த சில நகைச்சுவைக் காட்சிகளுக்கான பின்னணி இசை உங்களுக்காக.
Thursday, April 11, 2013
Wednesday, April 10, 2013
சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ
அமைதிப்படை
அமைதிப்படை இரண்டாம் பாகம் வெளிவரப்போகிறதாம். ஆனால் அதன் ட்ரெய்லர் பார்த்தால், படம் சுமாராகவே இருக்கும் எனத் தோன்றுகிறது. சில வசனங்கள் மஞ்சதுண்டை நேரடியாகத் தாக்குவது போலவே இருந்தன. பாடல் வெளியீட்டுவிழாவில், மணிவண்ணன் பேசியது சுவாரசியம்.
முதல் வந்த அமைதிப்படை படத்தில் அரசியல் நையாண்டி வசனங்களுக்காக பெரிதும் பேசப்பட்டது. நித்யாநந்தா புகழ் ரஞ்சிதா நல்லா அழகாக இருப்பாங்க. வயதான வில்லன் வேடத்தில் சத்யராஜ் அருமையாக நடித்திருப்பார். ஆனால் மற்றொரு இளைய சத்யராஜ் வேடத்தில் ஓவர் ஆக்டிங்.
எனக்குப் பிடித்த சில வசனங்கள்:
# தேங்கா பொறுக்கிறது தப்புன்னா, சாமிக்கு தேங்காய் உடைக்கிறதும் தப்புதாங்க.
# 6வது ரவுண்டுலயும் போதை ஏறாட்டி அப்புறம் எதுக்கு அந்த கருமத்தை குடிக்கோணும்.
#போனை கண்டுபுடிச்சது கிராகம்பெல்ங்குற விஞ்ஞானியா இருக்கலாம். ஆனா அதுல ஒத்து கேக்குரத கண்டுபிடிச்சி இந்தியாவுக்கு சொல்லிக் கொடுத்தது நான் தான்.
#சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ

இளையராஜாவின் இசையில் ஒரு நல்ல பாடல் "சொல்லிவிடு வெள்ளி நிலவே". ஆனால் இப்பாடல் படத்தில் வரவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிக்கோரி @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
முன்பெல்லாம் டீக்கடையில் காப்பி எனச் சொல்லி ஏமாற்றி சிக்கோரி (Chicory) காப்பி போடுவாங்க. காப்பி போன்று இருந்தாலும் சிக்கோரி காப்பியில் காப்பியின் சுவை வருவதில்லை. ப்ரூ விளம்பரத்தில் கூட சிக்கோரி கலக்காத கலவை என வரும். இப்பவெல்லாம் காபின்ப்ரீ காப்பி என சிக்கோரி காப்பியைத் தான் விற்கிறார்கள். இந்த சிக்கோரி ஒரு வகைக் கிழங்கிலிருந்து எடுக்கப்படுகிறது. இதற்கு மேல் வரும் இளசான செடியை அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் சலாடாக சாப்பிடிகிறார்கள். இதே வகைச் செடியின் முதிர்ந்த இலைகள் தமிழில் காசினிக்கீரை எனப்படுகிறது. காசினிக்கீரை போண்டா கேள்விப்பட்டிருப்பீர்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜோதிஜியின் தேவியர் இல்லம் பதிவில் இட்ட பின்னூட்டம்.
//சிங்களர்கள் மரபணு
ரீதியாக மட்டுமல்ல. எல்லாவகையிலும் அவர்கள் தமிழர்கள் தான் என்று வரலாற்று
குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் இடையிடையே கலப்புகள் அதிகரித்து கண்றாவியாக பல நிகழ்வுகள்
நடந்தேறி மனதளவில் பிறழ்வுகளாக மாறிப் போனார்களோ என்று நினைத்துக்
கொள்வுதுண்டு.//
சிங்களவர்களும் தமிழர்கள் தான் என்பதை சிங்களவர்கள் ஒத்துக்கொள்வது இருக்கட்டும். முதலில் இதை ஈழத்தமிழர்கள் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். யாழ்ப்பாணத்தமிழர்கள் தான் அக்மார்க் தமிழர்கள் என மார்தட்டிக்கொள்பவர்கள்.
எனக்கு ஒன்று தெரிலிங்க! தமிழன் என்றால் யார்? நன்றாகத் தமிழ் தெரிந்தால் தான் தமிழனா? வேற்றுமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பலர் தமிழகத்தில் வாழ்வதில்லையா? அவர்கள் தமிழர்கள் இல்லையா?
Arab என்பவர் யார் என்பதற்கு
The Arab League, a regional organization of countries intended to encompass the Arab world, defines an Arab as: An Arab is a person whose language is Arabic, who lives in an Arabic-speaking country, and who is in sympathy with the aspirations of the Arabic-speaking peoples.
இதே பொருள் தமிழருக்கும் பொருந்தும். தமிழ் பேசும், தமிழ்மண்ணில் வசிக்கும், தமிழ் மொழியையும் தமிழ் மக்களையும் நேசிக்கும் அனைவருமே தமிழர்கள் தான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நான் தொடக்கப்பள்ளி படிக்கும் காலங்களில் என்ன்னுடைய வகுப்பில் பாதிக்குப்பாதி முஸ்லீம் சிறுவர்கள் படித்தார்கள். இன்ஸ்க்பெக்ஷன் நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் கைலி/லுங்கி கட்டிக்கொண்டுதான் வருவார்கள். வெள்ளிக்கிழமை வந்தால் போதும். காலைவேளை வகுப்பு எண்ணிக்கை பாதியாக குறைந்துவிடும். மதியம் நமாஸ் முடிச்சிட்டு சாப்பிட்டுவிட்டு இரண்டுமணிக்கு மேல தான் வகுப்புக்கு வருவார்கள். கண்ணுக்கு மை, சென்ட், ரோஸ்பவுடர், முகத்துக்கு மினுமினுப்பு போட்டுக்கொண்டு வருவார்கள். நாங்களும் சென்ட், மினுமினுப்பு வாங்கி போட்டுக்கொள்வோம். சிலருடைய பெற்றோர்கள் வளைகுடாவில் வேலை பார்த்துவந்தார்கள். சிலருடைய பெற்றோர்கள் பஜாரில் காய்கறிக்கடை வைத்திருந்தார்கள். சிலருடைய பெற்றோர்கள் லுங்கி ஏற்றுமதி செய்து வந்தார்கள். இப்போதும் என்னுடைய பல முஸ்லீம் நண்பர்கள் எங்கள் ஊரில் கடை வைத்திருக்கிறார்கள். நான் அவர்களுடைய கடைகளுக்குப் போகாமல் தவிர்க்கக் காரணம், வாங்கிய பொருளுக்கு எவ்வளவு வற்புறுத்தினாலும் பணம் வாங்கமாட்டார்கள்.
பிறகு
மேல்நிலைப்பள்ளி வந்ததும், இம்ரான்
என்றொரு நண்பன். திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் உருது அல்லது
அரபியை மொழிப்பாடமாக எடுத்துப் படிக்கும் முஸ்லீம் மாணவர்கள் உண்டு. இவனும்
அப்படியே. தமிழை சரளமாகப் பேசமாட்டான். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நன்றாக ஊர் சுற்றுவோம். "காலெல்லாம் நோவுவுது...ரா" என்பான். தசாவதாரம் படத்தில் நாகேஷ் ஒரு
இடத்தில் இதே வசனம் சொல்லுவார் "காலெல்லாம் நோவுது...பா".
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வாரம் ஈவில் டெட் (Evil Dead) படம் அமெரிக்காவில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போதைய ரசனைக்கேற்றவாறு கோரமான காட்சிகள் அதிகமாக இடம் பெற்றுள்ளன. கிராபிக்ஸ் அதிகமாக பயன்படுத்தப்படவில்லை. ட்ரெலர் பார்த்தேன், பரவாயில்லை எனத் தோன்றியது. பழைய படத்தின் நாயகனான ப்ரூஸ் கேம்ப்பெல், இயக்குனர் சாம் ரைமி இருவரும் தயாரிப்பாளர்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Saturday, March 30, 2013
பரதேசி மற்றும் ஒரு காதல் கதை
பரதேசி
சமீபத்தில் பரதேசி படம் பார்த்தேன். வேதிகாவின் நடிப்பு எரிச்சலோ எரிச்சல். க்ளைமேக்ஸ் காட்சியில் நடிக்கும்போது முதல் மரியாதை ராதாவை ஞாபகப்படுத்துகிறார். தன்ஷிகாவின் நடிப்பு மிகவும் முதிர்ச்சியானதாக இருந்தது. பிரமாதம். அதர்வா செயற்கையாக நடித்திருந்தார். அவர் பல இடங்களில் அழும்போது ஏனோ ஈர்ப்பை ஏற்படுத்தவே இல்லை. பொதுவாக ஒரு அப்பாவி கதாபாத்திரம் தனக்கு நேரும் கொடுமையை எதிர்க்க துணிவில்லாமல், கஷ்டப்படும்போது நமக்கு ஒரு பச்சாதாபம் உண்டாகும். அது இங்கே மிஸ்சிங். ஜீவி. பிரகாஷுக்கு வைத்த பரிக்ஷையில் வெள்ளைப் பேப்பரை கொடுத்துவிட்டு ஓடிவிட்டார். பாவம் அவர் என்ன செய்வார். பின்னணி இசை கொடுமை. பாலா + இளையராஜா ஒரு நல்ல காம்பினேஷன். "நான் கடவுள்" படத்தில் மிகவும் பிரமாதமான பின்னணி இசையைக் கொடுத்திருப்பார் ராஜா. பாலா ஏன் இப்படி? ஒருவேளை சொந்தப்படம் என்பதால் இவ்வாறு செய்தாரோ? படத்தில் வறுமை, சாதிக்கொடுமை பற்றி வெளிப்படையாக குறிப்பிடாமல் விட்டது பாலாவின் சுதந்திரம் அதுபற்றி சொல்ல ஒன்றும் இல்லை. நாம எதுக்கு இந்தப் படத்தை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளவேண்டும். மற்றபடி ஒரு வித்யாசமான முயற்சி அவ்வளவே. அதற்காக பாராட்டலாம்.
சுதந்திரம் வருவதற்கு முதல் மக்களை தேநீர் அருந்த பழக்கப்படுத்த ஆங்கில அரசாங்கம் எல்லோருடைய வீட்டிற்கும் இலவசமாக விநியோகித்தது. வயசான ஒரு தாத்தா ஒருத்தர் சொன்னது "வெள்ளைகாரன் காசு வாங்கமல் டீயை சும்மா கொடுத்தான். சுதந்திரம் வாங்கி நம் ஆளுங்க டீயை காசுக்கு விக்க ஆரம்பிச்சிட்டாங்க. என்னா விலை விக்குது!". என்னமா திங்க் பண்ணுராரு பாருங்க.
தொலைக்காட்சியில் பரதேசி பேட்டி
அதர்வா: பாலா என்ன கெட்டப் கொடுப்பார்னு எனக்கு ஒரே எக்ஸைட்டிங்க இருந்தது.
தொகுப்பாளர்: நீங்க எப்படி அந்த இன்ஸ்ட்ருமென்டை (டே! அது தமுக்குடா!) கத்துகிட்டு அடிச்சிங்க?
நான் என்றாவது முடியை ஒட்ட வெட்டி வந்தால், "என்னடா! காரவடை முடிவெட்டு வெட்டிகிட்டு வந்திருக்க" என எங்க பாட்டி சொல்லும். பரதேசி படத்தில் வரும் முடிவெட்டைத் தான் அப்படி சொல்வதுண்டு.
மதபோதனை செய்யும் மருத்துவர் வரும் பகுதி ஏதோ இடைசெறுகல் போல உள்ளது. கதையோட்டதைத் தடுக்கிறது. ஆனாலும் அந்தப் குத்துப்பாட்டு (தன்னைத் தானே...). கேட்க நன்றாக இருக்கிறது. எங்க ஊரு பக்கத்தில் ஒரு தோல் மருத்துவனை இருக்கிறது. அது கிருத்துவ மிஷனரியால் நிறுவகிக்கப்படுகிறது. என்னுடைய தமையனுக்கு சிறுவயதில் வைட்டமின் குறைவால் முகத்தில் தேமல் இருக்கும். என்னுடைய பாட்டி அந்த மருத்துவமனைக்கு அவனைக் கூட்டிச் சென்றார்கள். நானும் உடன் செல்வதுண்டு. ஒவ்வொரு முறையும் சிறு சிறு வேதபுத்தகங்கள், நற்செய்தி வாசகங்கள் கொடுப்பார். பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ளச் சொல்வார்கள். எனக்கு என் தமையனுக்கு இதில் சுத்தமாக ஈடுபாடு இருப்பதில்லை. அவர்கள் சொல்வதும் விளங்காது. மணிக்கணக்கில் வேறு உட்காரவைத்து விடுவார்கள். பிறகு ஒரு வழியாக மருந்து சாப்பிட்டு தேமல் சரியாகிவிட்டது. ஆனாலும் வீட்டிற்கு வந்து புத்தகம் கொடுப்பார்கள். மேலும் வரச்சொல்வார்கள். மருத்துவமனை ஆட்கள் வந்தாலே போதும், நானும் தமையனும் புறகடை வழியாக அடுத்த தெருவிற்கு ஓடிவிடுவோம்.
*********************************************************************************
ஒரு காதல் கதை
கதையோட கதாநாயகன் அந்தண சாதியில் பிறந்தவன். சகோதரர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டு வீட்டைவிட்டு கோபித்துக் கொண்டு வேறொரு இடத்திற்குச் சென்று வேலை பார்க்கிறான். சகோதரர்கள் எப்படியோ அவனை சமாதானப்படுத்தி ஊருக்கு அழைத்துப் போகிறார்கள். போகும்வழியில் இளைப்பாற ஒரு இடத்தில் தங்குகிறார்கள். அங்கு ஒரு பாடல் கேட்கிறது. பாடல் கேட்கும் திசை நோக்கி கதாநாயகன் போகிறான். அங்கு இரண்டு சகோதரிகள். அவர்களுடைய குரலின் இனிமையில் மயங்கி, அவர்களுடன் பேச முயற்சிக்கிறான். அவர்கள் பயந்து ஓடுகிறார்கள். இவனும் துரத்திச் செல்கிறான். ஓடிச்சென்ற பெண்கள், தங்களை ஆண் ஒருவன் துரத்துவதாக தந்தையிடம் முறையிடுகிறார்கள். பெண்களுடைய தங்தை தகாதமுறை நடக்க நினைத்தவனை தண்டிக்க கத்தியுடன் வருகிறார். வரும்வழியில் கதாநாயகனைப் பார்க்கிறார். கதாநாயகன் தான் அப்பெண்களை நேசிப்பதாகவும், திருமணம் புரிய விரும்புவதாகவும் கூறுகிறான். அதற்கு பெண்களின் தந்தை தாங்கள் சக்கிலிய சாதியர் எனவும், இந்தத் திருமணம் பொருந்தி வராது எனக் கூறுகிறார். ஆனால் கதாநாயகன் திருமணம் செய்ய தீர்மானமாக இருக்கிறான். தவிர்ப்பதற்காகவோ, சந்தேகப்பட்டோ ஆனால் பெரியவரோ பெண்களை மணப்பதானால் சில கோரிக்கைகளை விடுக்கிறார். உன்னுடைய சாதிய அடையாளங்களான பூணூல், குடுமியைக் களைந்துவிட்டு, தோல் செருப்பு அணிந்து கொள்ள வேண்டும். எங்கள்வீட்டில் மாடுமேய்த்து, தோல் பதனிடுதல், செருப்பு தைத்தல் போன்ற வேலைகளை செய்ய வேண்டும் என்கிறார். அவ்வாறு செய்தால் என் மகள்களை திருமணம் முடித்துவைப்பதாக கூறுகிறார். இவற்றிற்கு ஒப்புக்கொண்ட கதாநாயகன் வீட்டிற்குச் செல்கிறான். பெற்றோர், சகோதரர்களின் சம்மதம் கேட்கிறான். கிடைக்கவில்லை. குடுமி, பூணூலைக் களைந்துவிட்டு சக்கிலிய தொழிலை ஏற்கிறான். சகோதிரிகளை மணக்கிறான். திருமணம் முடிந்த கொஞ்ச வருடங்களில் மாமனார் இறந்துவிட, இவனே அனைத்து பொறுப்புகளையும் பார்த்துக் கொள்கிறான். ஒருநாள் மேய்ந்துகொண்டிருக்கும் மாடுகளை திருடர்கள் கவர்ந்து சென்றுவிடுகிறார்கள். திருட்டுப்போன சேதி கேட்டவுடன் வேல்கம்பும் வாளுடனும் கிளம்புகிறான் கதாநாயகன். திருடர்களுடன் சண்டை செய்து எல்லாரையும் வீழ்த்தி விரட்டுகிறான். திரும்பும்வேளையில் பின்னிருந்து ஒருவன் கத்தியால் குத்தி கதாநாயகனைக் கொன்றுவிடுகிறான். நடந்தது தெரிந்து மனைவியர்கள் இருவரும் ஓடோடி வருகிறார்கள். துயரம் தாளாமல் இருவரும் கணவனுடன் தீப்பாய்ந்து உயிர்விடுகிறார்கள். இது திருநெல்வேலிசீமையில் வணங்கப்படும் முத்துபட்டன் (பட்டவராயன்) கதை. மனைவியர்கள் - பொம்மக்கா, திம்மக்கா. மாமனார் - வாலபகடை. இந்தக்கதை கதைப்பாடலாக இன்றும் தென்மாவட்டங்களில் சொல்லப்பட்டு வருகிறது.
நம்ம மகாஜனங்கள் இந்தக் கதையையும் விட்டுவைக்கவில்லை. மதுரைவீரன் கதையில் மதுரைவீரன் காசிராஜனின் மகன் சக்கிலியரின் மகன் அல்ல என்று இடைசெறுகியது போல, பொம்மக்கா திம்மக்காவிற்கும் முற்பிறவி வைதீக சாயம் பூசி இருக்கிறார்கள். (எதோ "சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்" படத்தைப் போன்றதொரு லவ் சப்ஜக்ட். என்ன கிளைமேக்ஸ் தான் சோகம். ட்ராஜிடி.)

பட்டவராயர் பொம்மக்கா திம்மக்காவுடன் ... சண்டையின் போது உடன் சென்ற பூச்சி காச்சி நாய்கள்.
***********************************************************************************
கானா பழனியின் பாட்டு (தாத்தா கொஞ்சம் பொடி கொடு)
Labels:
தகவல்,
திரைவிமர்சனம்,
நையாண்டி,
ரசித்தவை
Subscribe to:
Posts (Atom)