அமைதிப்படை
அமைதிப்படை இரண்டாம் பாகம் வெளிவரப்போகிறதாம். ஆனால் அதன் ட்ரெய்லர் பார்த்தால், படம் சுமாராகவே இருக்கும் எனத் தோன்றுகிறது. சில வசனங்கள் மஞ்சதுண்டை நேரடியாகத் தாக்குவது போலவே இருந்தன. பாடல் வெளியீட்டுவிழாவில், மணிவண்ணன் பேசியது சுவாரசியம்.
முதல் வந்த அமைதிப்படை படத்தில் அரசியல் நையாண்டி வசனங்களுக்காக பெரிதும் பேசப்பட்டது. நித்யாநந்தா புகழ் ரஞ்சிதா நல்லா அழகாக இருப்பாங்க. வயதான வில்லன் வேடத்தில் சத்யராஜ் அருமையாக நடித்திருப்பார். ஆனால் மற்றொரு இளைய சத்யராஜ் வேடத்தில் ஓவர் ஆக்டிங்.
எனக்குப் பிடித்த சில வசனங்கள்:
# தேங்கா பொறுக்கிறது தப்புன்னா, சாமிக்கு தேங்காய் உடைக்கிறதும் தப்புதாங்க.
# 6வது ரவுண்டுலயும் போதை ஏறாட்டி அப்புறம் எதுக்கு அந்த கருமத்தை குடிக்கோணும்.
#போனை கண்டுபுடிச்சது கிராகம்பெல்ங்குற விஞ்ஞானியா இருக்கலாம். ஆனா அதுல ஒத்து கேக்குரத கண்டுபிடிச்சி இந்தியாவுக்கு சொல்லிக் கொடுத்தது நான் தான்.
#சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ

இளையராஜாவின் இசையில் ஒரு நல்ல பாடல் "சொல்லிவிடு வெள்ளி நிலவே". ஆனால் இப்பாடல் படத்தில் வரவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிக்கோரி @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
முன்பெல்லாம் டீக்கடையில் காப்பி எனச் சொல்லி ஏமாற்றி சிக்கோரி (Chicory) காப்பி போடுவாங்க. காப்பி போன்று இருந்தாலும் சிக்கோரி காப்பியில் காப்பியின் சுவை வருவதில்லை. ப்ரூ விளம்பரத்தில் கூட சிக்கோரி கலக்காத கலவை என வரும். இப்பவெல்லாம் காபின்ப்ரீ காப்பி என சிக்கோரி காப்பியைத் தான் விற்கிறார்கள். இந்த சிக்கோரி ஒரு வகைக் கிழங்கிலிருந்து எடுக்கப்படுகிறது. இதற்கு மேல் வரும் இளசான செடியை அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் சலாடாக சாப்பிடிகிறார்கள். இதே வகைச் செடியின் முதிர்ந்த இலைகள் தமிழில் காசினிக்கீரை எனப்படுகிறது. காசினிக்கீரை போண்டா கேள்விப்பட்டிருப்பீர்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜோதிஜியின் தேவியர் இல்லம் பதிவில் இட்ட பின்னூட்டம்.
//சிங்களர்கள் மரபணு
ரீதியாக மட்டுமல்ல. எல்லாவகையிலும் அவர்கள் தமிழர்கள் தான் என்று வரலாற்று
குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் இடையிடையே கலப்புகள் அதிகரித்து கண்றாவியாக பல நிகழ்வுகள்
நடந்தேறி மனதளவில் பிறழ்வுகளாக மாறிப் போனார்களோ என்று நினைத்துக்
கொள்வுதுண்டு.//
சிங்களவர்களும் தமிழர்கள் தான் என்பதை சிங்களவர்கள் ஒத்துக்கொள்வது இருக்கட்டும். முதலில் இதை ஈழத்தமிழர்கள் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். யாழ்ப்பாணத்தமிழர்கள் தான் அக்மார்க் தமிழர்கள் என மார்தட்டிக்கொள்பவர்கள்.
எனக்கு ஒன்று தெரிலிங்க! தமிழன் என்றால் யார்? நன்றாகத் தமிழ் தெரிந்தால் தான் தமிழனா? வேற்றுமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பலர் தமிழகத்தில் வாழ்வதில்லையா? அவர்கள் தமிழர்கள் இல்லையா?
Arab என்பவர் யார் என்பதற்கு
The Arab League, a regional organization of countries intended to encompass the Arab world, defines an Arab as: An Arab is a person whose language is Arabic, who lives in an Arabic-speaking country, and who is in sympathy with the aspirations of the Arabic-speaking peoples.
இதே பொருள் தமிழருக்கும் பொருந்தும். தமிழ் பேசும், தமிழ்மண்ணில் வசிக்கும், தமிழ் மொழியையும் தமிழ் மக்களையும் நேசிக்கும் அனைவருமே தமிழர்கள் தான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நான் தொடக்கப்பள்ளி படிக்கும் காலங்களில் என்ன்னுடைய வகுப்பில் பாதிக்குப்பாதி முஸ்லீம் சிறுவர்கள் படித்தார்கள். இன்ஸ்க்பெக்ஷன் நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் கைலி/லுங்கி கட்டிக்கொண்டுதான் வருவார்கள். வெள்ளிக்கிழமை வந்தால் போதும். காலைவேளை வகுப்பு எண்ணிக்கை பாதியாக குறைந்துவிடும். மதியம் நமாஸ் முடிச்சிட்டு சாப்பிட்டுவிட்டு இரண்டுமணிக்கு மேல தான் வகுப்புக்கு வருவார்கள். கண்ணுக்கு மை, சென்ட், ரோஸ்பவுடர், முகத்துக்கு மினுமினுப்பு போட்டுக்கொண்டு வருவார்கள். நாங்களும் சென்ட், மினுமினுப்பு வாங்கி போட்டுக்கொள்வோம். சிலருடைய பெற்றோர்கள் வளைகுடாவில் வேலை பார்த்துவந்தார்கள். சிலருடைய பெற்றோர்கள் பஜாரில் காய்கறிக்கடை வைத்திருந்தார்கள். சிலருடைய பெற்றோர்கள் லுங்கி ஏற்றுமதி செய்து வந்தார்கள். இப்போதும் என்னுடைய பல முஸ்லீம் நண்பர்கள் எங்கள் ஊரில் கடை வைத்திருக்கிறார்கள். நான் அவர்களுடைய கடைகளுக்குப் போகாமல் தவிர்க்கக் காரணம், வாங்கிய பொருளுக்கு எவ்வளவு வற்புறுத்தினாலும் பணம் வாங்கமாட்டார்கள்.
பிறகு
மேல்நிலைப்பள்ளி வந்ததும், இம்ரான்
என்றொரு நண்பன். திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் உருது அல்லது
அரபியை மொழிப்பாடமாக எடுத்துப் படிக்கும் முஸ்லீம் மாணவர்கள் உண்டு. இவனும்
அப்படியே. தமிழை சரளமாகப் பேசமாட்டான். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நன்றாக ஊர் சுற்றுவோம். "காலெல்லாம் நோவுவுது...ரா" என்பான். தசாவதாரம் படத்தில் நாகேஷ் ஒரு
இடத்தில் இதே வசனம் சொல்லுவார் "காலெல்லாம் நோவுது...பா".
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வாரம் ஈவில் டெட் (Evil Dead) படம் அமெரிக்காவில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போதைய ரசனைக்கேற்றவாறு கோரமான காட்சிகள் அதிகமாக இடம் பெற்றுள்ளன. கிராபிக்ஸ் அதிகமாக பயன்படுத்தப்படவில்லை. ட்ரெலர் பார்த்தேன், பரவாயில்லை எனத் தோன்றியது. பழைய படத்தின் நாயகனான ப்ரூஸ் கேம்ப்பெல், இயக்குனர் சாம் ரைமி இருவரும் தயாரிப்பாளர்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
வணக்கம் சகோ குட்டிப் பிசாசு,
ReplyDeleteஎங்கே கொஞ்ச நாளா ஆளைக் காணோம். மாதம் இரு பதிவு போட்டால் கூட போதும்.
அமைதிப் படை 1 கூட மஞ்சள் துண்டை எதிர்த்து கருப்பு சால்வைக்கு ஆதரவு கொடுத்து எடுத்த படம்தான்.
அம்மாவாசையிடம் கொஞ்சம் எம்.ஆர் .இராதா பணி நக்கல் இருக்கும்!!
இரண்டாம் பாகம் என்ன் வித்தியாசமாக சொல்லி விடும் என்ப பார்க்கலாம்?
**
காசினிக்கீரை செடியில்தான் சிக்கரி கிடைக்கிறதா, அறியாத தகவல்!! நன்று
அப்போ இந்தக் காப்பி உடலுக்கு நல்லதா!!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
காசினிக் கீரை என்றால் டார்டர் அகபர் கவுசர் ஞாபகம் வருகிறார். ஹி ஹி
**
தமிழர்கள் கலப்பினத்தவர்தான்.தமிழ்நாட்டின் எல்லைக்குள் வாழும் த்மிழை நேசிக்கும் எவரும் தமிழரே!!!
சிங்களர் ,ஈழத் தமிழர் நெருங்கிய இனம்.
பவுத்த மதம் மாறிய ஈழதமிழர்+ இந்தியாவில் இருந்து விரட்டப் பட்டு புலம் பெயர்ந்த இந்திய பவுத்தர்களின் கலப்பே சிங்களவர்.
**
அப்புறம் உங்களின் கருத்தான சமஸ்கிருதம் இந்தியா முழுதும் பொது மக்களின் பேச்சு மொழியாக இருக்கும் வாய்பு இருக்க முடியாது என்பதே நம் கருத்தும்.
இது குறித்து ஒரு பதிவு இட்டால் நன்கு அலசுவோம்!!
மத புத்தக மொழிகள் எதுவுமே மக்களின் பேச்சு மொழியாக இருந்திருக்க முடியாது என்பதே நம் கருத்து!!!
புரியாதது போல் இருந்தால் மட்டுமே மத குரு பிழைக்க முடியும்!!!!
நன்றி!!
சார்வாகன்,
Deleteகொஞ்சம் தனிப்பட்ட பிரச்சனைகள், எழுத முடியவில்லை.
//அம்மாவாசையிடம் கொஞ்சம் எம்.ஆர் .இராதா பணி நக்கல் இருக்கும்!!//
எம்.ஆர்.ராதாவின் தாக்கம் பலரிடம் உண்டு. மணிவண்ணன், கவுண்டமணி கூட சில படங்களில் எம்.ஆர்.ராதா ஸ்டைலில் பேசுவார்கள்.
//காசினிக் கீரை என்றால் டார்டர் அகபர் கவுசர் ஞாபகம் வருகிறார். ஹி ஹி//
வாணியம்பாடி அக்பர் கவுசர் காசினிக்கீரைப் பற்றிக் கேட்டால் சும்மா அள்ளிவிடுவார். குரானில் போட்டு இருக்கு, சொர்க்கத்தின் நீர் காசினியின் மேல் விழுகிறது, முகம்மது சல் அல்லா அலைக்கு வசல்லம் சொல்லி இருக்கார், சர்வரோக நிவாரணி... என்று சரமாரியாக ரீல் அந்துபோகும் அள்விற்கு சுத்துவார்.
//சிங்களவர்களும் தமிழர்கள் தான் என்பதை சிங்களவர்கள் ஒத்துக்கொள்வது இருக்கட்டும். முதலில் இதை ஈழத்தமிழர்கள் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். யாழ்ப்பாணத்தமிழர்கள் தான் அக்மார்க் தமிழர்கள் என மார்தட்டிக்கொள்பவர்கள்.//
ReplyDeleteஎனக்கு தெரிந்து நீங்க தான் இந்த உண்மையை சரியா சொல்லியிருக்கிறீர்கள்.தமிழ் பிரசார புலிகள் யாவும் சிங்களவர்கள் ஏதோ காட்டுமிராண்டி இனம் என்றே பிரசாரம் செய்கின்றனர்.
//தமிழ் பிரசார புலிகள் யாவும் சிங்களவர்கள் ஏதோ காட்டுமிராண்டி இனம் என்றே பிரசாரம் செய்கின்றனர்.//
Deleteஎல்லா சிங்கள மக்களும் அப்படி அல்ல. அது அங்குள்ள தமிழருக்கே தெரியும். நல்லவன் கெட்டவன் எல்லா இடத்துலயும் தான் இருப்பான். சமீப காலங்களில் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல எண்ணி கைதான இலங்கையர்கள் பட்டியலைப் பார்த்தால் புரியும். 20 தமிழர்கள், 10 சிங்களவர்கள் என்று இருக்கும்.
//சமீப காலங்களில் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல எண்ணி கைதான இலங்கையர்கள் பட்டியலைப் பார்த்தால் புரியும். 20 தமிழர்கள், 10 சிங்களவர்கள் என்று இருக்கும்//
Deleteஇது புதிய செய்தி நான் அறிந்திருக்கவில்லை. தமிழகம் வரும் சிங்கள பயணிகளே தாக்கபடும் போது நாகப்பட்டினத்திற்கு துணிந்து சிங்களவர்களும் இலங்கை தமிழர்களுடன் வந்தது ஆச்சரியம் தான்.
நான் சொன்னது நாகப்பட்டினம் வரும் ஈழத்தமிழர்களை அல்ல. இந்தோனேஷியாவில் வந்திறங்குபவர்களை, ஆஸ்ட்ரேலியா செல்பவர்களை. இன்று வெளிநாடுகளில் இருக்கும் ஈழத்தமிழர்களில் போரினால் பாதிக்கப்பட்டு சென்றவர்களைவிட பிழைக்கப் போனவர்கள் தான் அதிகம். 20000 ஈரோ கொடுத்தால் ஐரோப்பிய, கனடா நாடுகளில் விசா வாங்கித்தர இடைத்தரகர்கள் இருக்கிறார்கள்.
Delete