Sunday, December 30, 2007

'Crop circle' பற்றிய ஒரு காணொளி

Signs படத்தில் வரும் பயிர்வட்டம், வேற்றுகிரகவாசிகளிடம் இருந்துவரும் எதோ தகவல் பரிமாற்றம் என்பது போல காட்டப்படும். பல்வேறு பயிர்வட்டங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை தான். பயிர் வட்டம் (crop circle) பற்றி கூகிளில் மேயும் போது எனக்கு youtube-ல் கிடைத்த ஒரு காணொளியை உங்களுடன் பகிரந்துகொள்கிறேன்.

நச்சுனு எதோ ஒரு எழவு!!

தமிழில் வந்த பில்லா படம், ஹிந்தியில் வெளிவந்த டான் படத்தோட ரீமேக் என்பது எல்லாருக்கும் தெரியும். அதே சமயம் தெலுங்கிலும் ராமாராவ்காரு நடித்து 'யுகந்தர்' என்று வெளியானது. அதில் குத்துப்பாட்டுக்கு(தமிழில் வெத்தலய போட்டேண்டி! பாட்டு) ராமாராவ்காரு ஒரு ஆட்டம் போட்டு இருப்பாரு பாருங்க! ஏன் இந்த கொலைவெறினு கேட்கனும் போல தோணும். சரி நம்ம வினுசக்கரவர்த்தி, வெண்ணிறாடைமூர்த்தியோட சேர்ந்து நீங்களும் பாட்டை கேளுங்க!!
வினுசக்ரவர்த்தி: யோவ்! என்ன எழவுய்யா இது! கவிதை, கதை, கண்டராவி எந்த எழவை எழுதினாலும் நச்! நச்!னு நச்சரிக்கிறிங்க!
வெண்ணிறாடைமூர்த்தி: பாப்!! ப்ப்ப்ப்ப்ர்ர்ர்!! அப்பத்தான் ஒரு கிளுகிளுப்பா இருக்கும்!

வி.ச: எழவு என்னய்யா கிளிகிளுப்பை!
வெ.மூ: ஏன் இப்படி பீதிய கிளப்புரிங்க! படக்குனு பயத்துல லொடக்குனு என் வேட்டி கழண்டு போச்சி பாருங்க! கால்ல இருந்து கபாலம் வரை குஜால இருக்கிற மாதிரி ஒரு விஷயத்த விலாவரிய காட்டுரேன் வாங்க!
வி.ச: அடி செருப்பால! யோவ்வ்வ்வ்!! வீட்டுல இருந்து அருவாளை எடுத்துட்டு வந்தேன், எங்க வெட்டுவேன்னு எனக்கே தெரியாது!
வெ.மூ: அருவாளா? வெட்டுறத கைகாலோட நிறுத்திக்குங்க!!.....! ம்ம்ம்!! தலைய வெட்டிடாதிங்க! நான் ராமாராவ் பாட்டைத்தான் பார்க்கலாம்னு சொன்னேன். கை கால சொழட்டி என்னமா ஆடுராரு பாருங்க! நீங்க அந்தப்பாட்டை கேட்டிங்கன்னா தொபகட்டினு மயங்கி கீழ விழபோறிங்க!
வி.ச: சரி! அப்ப அந்த எழவு பாட்டை போடு! கருமம் பார்த்துத் தொலையரேன்!!


வி.ச: யோவ்! எழவு ரத்தகண்ணீர் எம்.ஆர்.ராதா பாட்டுக்கு ஆடினது மாதிரி என்ன கருமம்ய்யா இது!!
வெ.மூ: சரி! அப்ப இந்தப் பாட்டைப் பாருங்க!! அமிதாபச்சனோட ஜீனத் ப்ப்ப்ப்ப்பாப்பா வேற பப்பரபேன்னு ஆடுது, அதைப் பார்த்திங்கன்னா குப்புரபடுத்து குதுகலமாகிடுவிங்க!!


Thursday, December 27, 2007

தமிழ்த்திரையுலகில் டி.எஸ்.பாலைய்யா

தமிழ்திரைப்படவுலகில் குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன் வேடங்களில் 40 ஆண்டுகள் நடித்த டி.எஸ்.பாலைய்யா அவர்கள். 1934-ல் வெளிவந்த சதிலீலாவதி தான் இவருக்கு முதல் படம். இப்படத்தில் இவர் வில்லனாக நடித்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் இப்படத்தில் தான் சிறுவேடத்தில் முதன்முதலில் நடித்தார்.
1937-ல் வெளிவந்த எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்த 'அம்பிகாபதி' படத்தில் வில்லனாக நடித்தார். இப்படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே பாகவதருக்கும், பாலைய்யாவிற்கும் இடையே ஒரு கத்திச் சண்டைக் காட்சியும் உண்டு. இவருடைய கதாப்பாத்திரம் தான் சிவாஜிகணேசன் நடித்து வெளியான அம்பிகாபதியில் தங்கவேலு நகைச்சுவையாக நடித்திருப்பார் என்பது கூடுதல் தகவல். பி.யு.சின்னப்பா அவர்களின் 'மனோன்மணி' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார். மேலும் எம்.ஜி.ஆர் முதலில் கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி" என்ற படத்தில் (இந்த படம் அலாவுதீனும் அற்புதவிளக்கும் கதையோட தழுவல் தான்!) வில்லனாக நடித்தார். இப்படத்தில் எம்.ஜி.ஆருக்கும் பாலைய்யாவிற்கும் கத்திசண்டைக் காட்சியும் இருக்கிறது.
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவான 'சித்ரா' மற்றும் 'வெறும் பேச்சல்ல' (இப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக நடித்தவர் பத்மினியாம்!!) போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.(நன்றி:மாலைமலர்)
அறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி திரைப்படத்தில் கே.ஆர்.ராமசாமியின் நண்பனாக வந்து "கத்தியை தீட்டாதே! உன் புத்தியைத் தீட்டு!" என்று வசனம் பேசுவது பாலைய்யா தான். மேலும் அண்ணாவின் "ஓர் இரவு" படத்திலும் வில்லனாக நடித்தார்.
எம்.ஜி.ஆர் நடித்து தேவரின் தயாரிப்பில் வெளிவந்த 'தாய்க்கு பின் தாரம்' படத்தைத் தொடர்ந்து புதுமைப்பித்தன், பாக்தாத் திருடன், படங்களில் வில்லன் வேடங்களில் நடித்தார். பி.எஸ்.வீரப்பா, நம்பியார் போல அலட்டிக்கொள்ளாமல் நடிப்பார். மதுரைவீரன் படத்தில் நகைச்சுவை கலந்த வில்லன் வேடத்தில் நடித்தார். அதில் வரும் "படார் என குதித்தேன்! படபட என நீந்தினேன்! என்னை நெருங்கியது ஒரு சுழல், உபூ என ஊதினேன்! தூக்கினேன் பொம்மியை, சேர்த்தேன் கரையில்!!" என்று பாலைய்யா பேசும் வீரவசனம் பார்த்தவர் மறக்கமாட்டார்கள். சிவாஜிகணேசனுடன் பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பாலும்பழமும்,தூக்குத்தூக்கி்,காத்தவராயன் போன்ற பல படங்களில் நடித்தார். தில்லானா மோகனம்பாள் படத்தில் தவில் வித்துவானாக வெகுசிறப்பாக நடித்திருப்பார்.

புதுமைப்பித்தன் படத்தில் மொத்தமான உருவத்திலும் பாலைய்யா டி.ஆர்.ராஜகுமாரி நடனத்தை ரசித்தபடியே பார்க்கும் காதல்பார்வை.



திருவிளையாடல் படத்தில் ஹேமநாத பாகவதராக கம்பீரமாக நடித்திருப்பார்.
 "காணடா...என் பாட்டு தேனடா...இசைதெய்வம் நானடா..."


பாமாவிஜயம், காதலிக்கநேரமில்லை, ஊட்டி வரை உறவு போன்ற படங்களில் குணசித்திர வேடங்களில் வெகு இயல்பாக நடித்திருந்தார்.

காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் அவர்கள் பாலைய்யாவுக்கு திகில் கதை சொல்லும் காட்சி இன்றும் ரசிக்கக் கூடியது.


எங்கள் செல்வி படத்தில் ஹிந்திநடிகர் தாராசிங் மல்யுத்த மேடையில் " என்னுடன் மல்யுத்தம் செய்ய தமிழகத்தில் யாரும் இல்லையா?" என்று கேட்பார். உடனே நம்ம பாலைய்யா " நான் இருக்கேன்" என ஓடிப்போய் மல்யுத்தம் புரிவார். முடிவில் பாலைய்யா தோற்றாலும் தாராசிங் இவருக்கே பரிசைக் இவருடைய வீரத்திற்காக கொடுத்துவிட்டுச் செல்லுவார்.

பாகவதர், சின்னப்பா, எம்.ஜி.ஆர், சிவாஜி என இருதலைமுறை சூப்பர்ஸ்டார்களுடனும் முக்கிய வேடங்களில் நடித்த டி.எஸ்.பாலைய்யா அவர்கள் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.