தமிழ்திரைப்படவுலகில் குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன் வேடங்களில் 40 ஆண்டுகள் நடித்த டி.எஸ்.பாலைய்யா அவர்கள். 1934-ல் வெளிவந்த சதிலீலாவதி தான் இவருக்கு முதல் படம். இப்படத்தில் இவர் வில்லனாக நடித்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் இப்படத்தில் தான் சிறுவேடத்தில் முதன்முதலில் நடித்தார்.
புதுமைப்பித்தன் படத்தில் மொத்தமான உருவத்திலும் பாலைய்யா டி.ஆர்.ராஜகுமாரி நடனத்தை ரசித்தபடியே பார்க்கும் காதல்பார்வை.
1937-ல் வெளிவந்த எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்த 'அம்பிகாபதி' படத்தில் வில்லனாக நடித்தார். இப்படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே பாகவதருக்கும், பாலைய்யாவிற்கும் இடையே ஒரு கத்திச் சண்டைக் காட்சியும் உண்டு. இவருடைய கதாப்பாத்திரம் தான் சிவாஜிகணேசன் நடித்து வெளியான அம்பிகாபதியில் தங்கவேலு நகைச்சுவையாக நடித்திருப்பார் என்பது கூடுதல் தகவல். பி.யு.சின்னப்பா அவர்களின் 'மனோன்மணி' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார். மேலும் எம்.ஜி.ஆர் முதலில் கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி" என்ற படத்தில் (இந்த படம் அலாவுதீனும் அற்புதவிளக்கும் கதையோட தழுவல் தான்!) வில்லனாக நடித்தார். இப்படத்தில் எம்.ஜி.ஆருக்கும் பாலைய்யாவிற்கும் கத்திசண்டைக் காட்சியும் இருக்கிறது.
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவான 'சித்ரா' மற்றும் 'வெறும் பேச்சல்ல' (இப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக நடித்தவர் பத்மினியாம்!!) போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.(நன்றி:மாலைமலர்)
அறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி திரைப்படத்தில் கே.ஆர்.ராமசாமியின் நண்பனாக வந்து "கத்தியை தீட்டாதே! உன் புத்தியைத் தீட்டு!" என்று வசனம் பேசுவது பாலைய்யா தான். மேலும் அண்ணாவின் "ஓர் இரவு" படத்திலும் வில்லனாக நடித்தார்.
எம்.ஜி.ஆர் நடித்து தேவரின் தயாரிப்பில் வெளிவந்த 'தாய்க்கு பின் தாரம்' படத்தைத் தொடர்ந்து புதுமைப்பித்தன், பாக்தாத் திருடன், படங்களில் வில்லன் வேடங்களில் நடித்தார். பி.எஸ்.வீரப்பா, நம்பியார் போல அலட்டிக்கொள்ளாமல் நடிப்பார். மதுரைவீரன் படத்தில் நகைச்சுவை கலந்த வில்லன் வேடத்தில் நடித்தார். அதில் வரும் "படார் என குதித்தேன்! படபட என நீந்தினேன்! என்னை நெருங்கியது ஒரு சுழல், உபூ என ஊதினேன்! தூக்கினேன் பொம்மியை, சேர்த்தேன் கரையில்!!" என்று பாலைய்யா பேசும் வீரவசனம் பார்த்தவர் மறக்கமாட்டார்கள். சிவாஜிகணேசனுடன் பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பாலும்பழமும்,தூக்குத்தூக்கி்,காத்தவராயன் போன்ற பல படங்களில் நடித்தார். தில்லானா மோகனம்பாள் படத்தில் தவில் வித்துவானாக வெகுசிறப்பாக நடித்திருப்பார்.
புதுமைப்பித்தன் படத்தில் மொத்தமான உருவத்திலும் பாலைய்யா டி.ஆர்.ராஜகுமாரி நடனத்தை ரசித்தபடியே பார்க்கும் காதல்பார்வை.
திருவிளையாடல் படத்தில் ஹேமநாத பாகவதராக கம்பீரமாக நடித்திருப்பார்.
"காணடா...என் பாட்டு தேனடா...இசைதெய்வம் நானடா..."
"காணடா...என் பாட்டு தேனடா...இசைதெய்வம் நானடா..."
பாமாவிஜயம், காதலிக்கநேரமில்லை, ஊட்டி வரை உறவு போன்ற படங்களில் குணசித்திர வேடங்களில் வெகு இயல்பாக நடித்திருந்தார்.
காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் அவர்கள் பாலைய்யாவுக்கு திகில் கதை சொல்லும் காட்சி இன்றும் ரசிக்கக் கூடியது.
எங்கள் செல்வி படத்தில் ஹிந்திநடிகர் தாராசிங் மல்யுத்த மேடையில் " என்னுடன் மல்யுத்தம் செய்ய தமிழகத்தில் யாரும் இல்லையா?" என்று கேட்பார். உடனே நம்ம பாலைய்யா " நான் இருக்கேன்" என ஓடிப்போய் மல்யுத்தம் புரிவார். முடிவில் பாலைய்யா தோற்றாலும் தாராசிங் இவருக்கே பரிசைக் இவருடைய வீரத்திற்காக கொடுத்துவிட்டுச் செல்லுவார்.
பாகவதர், சின்னப்பா, எம்.ஜி.ஆர், சிவாஜி என இருதலைமுறை சூப்பர்ஸ்டார்களுடனும் முக்கிய வேடங்களில் நடித்த டி.எஸ்.பாலைய்யா அவர்கள் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
armai nanpa,
ReplyDeleteenakku pidiththa innoru nadikar
காதலிக்க நேரமில்லை,தில்லானா மோகனாம்பாள் மிக ரசித்தவை.
ReplyDeleteகொடுத்த பாத்திரத்தைச் சிறப்பாக
செய்து பாராட்டு வாங்குபவர்.
அவர் தடுமாற்றமான ஒவ்வொரு சொல்லையும் இரண்டு தரம் கூறும்
நடிப்பு வெகுவாக ரசிப்பேன்.
கானாபிரபா...யோகன் பாரீஸ்...
ReplyDeleteமிக்க நன்றி!!
//"ஓர் இரவு" படத்திலும் வில்லனாக நடித்தார். அப்படத்தில் பாலைய்யாவும், பத்மினியும் பாடுவதாக வரும் "துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயா.." என்ற பாரதி பாடல் மறக்கமுடியாத ஒன்று.//
ReplyDeleteஅது பத்மினி இல்லை. லலிதா என நியாபகம். பலையாவும் இல்லை என்பது என்னுடைய கருத்து. யாரவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்?
மேலும் அது பாரதி பாடலும் இல்லை; பாரதிதாசன் பாடல்.
அனானி,
ReplyDeleteபாரதி பாடல் என தவறாக இட்டுவிட்டேன். மாற்றிவிடுகிறேன். அது பத்மினியா? அல்லது லலிதாவா? என இப்போது சந்தேகம் வரவழைத்துவிட்டீர்கள். தகவலுக்கு மிக்க நன்றி!!
//அனானி,
ReplyDeleteபாரதி பாடல் என தவறாக இட்டுவிட்டேன். மாற்றிவிடுகிறேன். அது பத்மினியா? அல்லது லலிதாவா? என இப்போது சந்தேகம் வரவழைத்துவிட்டீர்கள். தகவலுக்கு மிக்க நன்றி!!//
லலிதா என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. அது கூட இல்லை, யார் என நியாபகத்தில் இல்லை. தெரிந்த யாரவது சொல்வார்கள் என நம்புகிறேன்.
நன்றிக்கு நன்றி. :)
//அனானி,
ReplyDeleteபாரதி பாடல் என தவறாக இட்டுவிட்டேன். மாற்றிவிடுகிறேன். அது பத்மினியா? அல்லது லலிதாவா? என இப்போது சந்தேகம் வரவழைத்துவிட்டீர்கள். தகவலுக்கு மிக்க நன்றி!!//
லலிதா என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. அது பாலைய்யா கூட இல்லை, யார் என நியாபகத்தில் இல்லை. தெரிந்த யாரவது சொல்வார்கள் என நம்புகிறேன்.
நன்றிக்கு நன்றி. :)
அனானி,
ReplyDeleteமன்னிக்கவும். மேற்கூறிய படத்தில் லலிதாவுடன் பாடுவது நாகேஸ்வரராவ் என்பதால், பேசாமல் நீக்கிவிட்டேன்!! இப்ப சரிதானே!!
பாலையா அவர்களின் ஊட்டி வரை உறவு சமீபத்தில் பார்த்தேன்.(எத்தனாவது தடவைன்னு கேட்கக்கூடாது :-)) ).
ReplyDeleteஅடேயப்பா! அந்த இரு தலைக் கொல்லி எறும்பு கதாபாத்திரத்தை அவரை விட நகைச்சுவையாகவும், சிறப்பாகவும் வேறு யாராலும் செய்ய முடியாது என்பது என் கருத்து.
ஊட்டி வரை உறவு (ஸ்ரீதரோட படம்!!) ரொம்ப நல்ல படம்.
ReplyDeleteநன்றி செல்வம்!!
காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம் மற்றும் திருவிளையாடல் படங்களில் வரும் T.S. பாலையா அவர்களை என்றென்றும் மறக்க முடியாது. காலத்தால் அழிக்க முடியாத மிகப் பெரும் கலைஞர் பாலையா. அவர் நடித்து நினைவில் நிற்கும் இன்னொரு கதாபாத்திரம் - 'சித்தூர் ராணி பத்மினி' பத்மினி படத்தில் அலாவுத்தீன் கில்ஜியாக வரும் வில்லன்ன் கதாபாத்திரம்.
ReplyDeleteபழந்தமிழ் நடிகர்களைக் கவுரவிக்கும் வீதமாக T.S. பாலையா பற்றிய அரிய தகவல்களை வழங்கிய உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
பாரதீய நவீன இளவரசன் அவர்களே,
ReplyDeleteமிக்க நன்றி!!
நல்ல தொகுப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteபாலைய்யாவின் சிறப்பே அவர் கண்கள் தான்! பாதி வசனத்தைக் கண்களே பேசிவிடும்! :-))
தொடர்ந்து இது போன்ற தொகுப்புகளைத் தரலாமே! சந்திரபாபு எவெர்க்ரீனா இருக்காரே!
//திருவிளையாடல் படத்தில் சோமநாத பாகவதராக கம்பீரமாக நடித்திருப்பார்.//
ஹேமநாத பாகவதர்! :-)
krs,
ReplyDelete//ஹேமநாத பாகவதர்! :-)//
மன்னிக்கவும்! தவறா போட்டுட்டேன்! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!!
பழம்பெரும் நடிகர் பாலையா அவர்களைப் பற்றிய அருமையான பதிவு. பாகப்பிரிவினை - காதலிக்க நேரமில்லை - தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல் - இன்னும் பலப்பல படங்கள் - குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர், வில்லன், பல பாத்திரங்கள் -
ReplyDeleteநன்றி
பாலையாவை மறக்க முடியுமா....அப்பப்பா...நடிகர். நடிகர். அவர் நடிகர்.
ReplyDeleteஓர் இரவு படத்துல லலிதா அக்கினேனி நாகேஸ்வரராவ் நடித்த பாடல் அது. துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா....பாரதிதாசன் பாடல். அந்தப் படத்துல பாலையா வில்லன்.
அற்புதமான நடிகர் பாலையா!! வீடியோக்களுக்கு நன்றி.
ReplyDelete