![]() |
Monday, February 15, 2010
திருகாணி சவப்பெட்டி
Monday, November 03, 2008
சுவாமி ரஜினிகாந்தும் அவரோட சிஷ்யகோடிகளும்

ஆண்டவன் நினைத்தால் நாளையே அரசியல் கட்சி தொடங்கி விடுவேன். ஆனால் இப்போது நாடு சரியில்லை. அமைதியாக அவரவர் பணிகளில் கவனம் செலுத்துங்கள் பின்னர் பார்க்கலாம் என ரஜினி தன் ரசிகர்களிடம் கூறியுள்ளார்.
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று ரஜினி-ரசிகர்கள் சந்திப்பு நடந்த்து. காலை 10 மணிக்கு ரஜினிகாந்த் மேடைக்கு வந்தார். மேடையில் "கடமையைச் செய்; பலனை எதிர்பார்' என்று எழுதப்பட்டிருந்தது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அது முடிந்தவுடன் மேடையில் வைக்கப்பட்டிருந்த பாபாஜி உருவப் படத்தை ரஜினிகாந்த் வணங்கினார்.
தொடர்ந்து ரசிகர்களை நோக்கி, "உங்களுடைய கேள்விகளை பேப்பரில் எழுதி, மன்ற நிர்வாகி சுதாகரிடம் கொடுங்கள். அவர் மேடையில் உங்களுடைய கேள்விகளை மைக்கில் வாசிப்பார். அதற்கு நான் பதில் கூறுகிறேன்' என்றார். (கிட்டத்தட்ட ஒரு ஆன்மீக ஞானி போல சூப்பர்ஸ்டார ஆக்கிட்டாங்கப்பா!!)
இதைத் தொடர்ந்து ரசிகர்கள் தங்களுடைய கேள்விகளை எழுதி மேடைக்கு அனுப்ப ரஜினி பதில் கூறினார்.
கேள்வி: இந்த சந்திப்பின் நோக்கம் என்ன?
ரஜினி: நீங்கள் என்னை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள். அதே போன்று நானும் உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதுதான் நோக்கம். (என்ன ஒரு உன்னத நோக்கம்! ரஜினியும் ரசிகர்களும் காதலன் - காதலி போல ஆகிட்டாங்க)
என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று 300, 400 பேர் என கும்பலாக வருவதால், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒருமுறை சச்சிதானந்த சுவாமிகள் தன்னுடைய சிஷ்யர்களிடம் பேசும்போது உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை கேளுங்கள் அதற்கு பதில் அளிக்கிறேன் என்றார். அதுதான் இப்போது நடக்கிறது. (தலைவா! எதாவது ஒரு சாமியார உதாரணமா சொல்லாம உங்களால இருக்க முடியாதா?)
கே: எதிர்காலம் திட்டம் என்ன?
ரஜினி: முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள். என்னுடைய எதிர் காலத்திட்டம் தற்போதைக்கு எந்திரன் படம்தான். (இதை முதல்லே சொல்லி இருந்தா ஏன் இப்ப கேள்வி கேட்கிறாங்க!)
கே: மன்ற நிர்வாகிகள் மூலம் நலத்திட்ட உதவிகள் செய்யப்படுமா?
ரஜினி: பணம், ஜனம் இரண்டையும் ஒன்று சேர்க்கக் கூடாது. சேர்ந்தால் அங்கு அரசியல் வந்துவிடும். என்னிடம் பணத்தை எதிர்பார்க்காதீர்கள். உங்களால் இயன்றதை நீங்களே செய்யுங்கள். நான் தனியாக உதவிகள் செய்துகொண்டே தான் இருக்கிறேன்.
கே: ரஜினி ரசிகர்களுக்கு என ஒரு அங்கீகாரம் கிடைக்குமா? (விடுதலைப் போராட்டத்தியாகியா நீங்க பஸ் பாஸ், பென்சன் கொடுக்க!)
ரஜினி: சமூகத்தில் உங்களுக்கு என்று ஒரு அங்கீகாரம் கிடைக்கும்படி செய்வேன்.
கே: முதலில் ராகவேந்திரரை வழிபட்டீர்கள். பிறகு அருணாச்சலேஸ்வரர் என்றீர்கள். பாபாஜி என்றீர்கள். அடிப்படையில் உங்களுக்கே தெளிவான பார்வையில்லையா? (ரஜினி நெனச்ச சாமி கும்பிட கூட உரிமை இல்லையா?)
ரஜினி: (சிரிக்கிறார். சிறிது நேரம் யோசித்து விட்டு) இந்துவிலிருந்து முஸ்லீம், முஸ்லீம் இருந்து கிறிஸ்துவம் என்று மாறினால்தான் தவறு. அது கூட தவறு என்று சொல்ல முடியாது. நமது பாடத்திட்டத்திலேயே கூட வரலாறு, புவியியல், கணிதம் என்று பல படிப்புகள் உள்ளன.
அவை நமது ஞானத்தை விருத்தி செய்கிறது. அது போன்று தான் தேடல் நிறைந்த உள்ளம் நமது ஆன்ம ஞானத்தை விருத்தி செய்கிறது. இதில் தவறும் ஒன்றும் கிடையாது. விருப்பம் உள்ளவர்கள் பின்பற்றுகிறார்கள்.
கே: நீண்ட காலம் மன்றப் பணிகள் செய்து வரும் ரசிகர்களை பற்றி உங்கள் கருத்து?
ரஜினி: ரஜினி ரசிகர்களை பற்றி நான் பேச வேண்டிய அவசியம் கிடையாது. நாட்டு மக்களுக்கே தெரியும். இதை மற்றவர்களிடம் கேளுங்கள். (நான் கேட்டதுக்கு பைத்தியக்காரட்கள்னு சொன்னாங்கப்பா! ஏனென்றால் நானும் ஒரு ரஜினி விசிறி!)
கே: உங்களை குழப்பவாதி என்று சில பத்திரிக்கைகளில் எழுதும்போது அதை கேட்கவும், படிக்கவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்கு ஏன் நீங்கள் இடம் கொடுக்கிறீர்கள்?.
ரஜினி: பத்திரிக்கைக்காரர்களை வைத்துக் கொண்டே இந்த கேள்வியை கேட்டால் எப்படி. சில நேரங்களில் நான் செய்வது கூட அப்படித்தான் இருக்கிறது. எல்லாம் அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்வதுதான். இது செய்தால், இது நடக்கும் என யூகித்து செய்வதில்லை.
நாம் நினைப்பது சரி எனும்போது பேசி விடுகிறேன். வேறு கோணத்தில் பார்க்கிறவனுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். அது தவிர்க்க முடியாது. குழப்பவாதி என்று சொல்லலாம். சுயநலத்தோடு எதையும் செய்ய மாட்டேன். எது சரி என்று படுகிறதோ அதைத்தான் செய்வேன்.
சில செய்திகளை படிக்கும் போது சிரிப்பாக இருக்கும். சில சிந்திக்க வைக்க செய்யும். சமீபத்தில் நான் வெளியிட்ட அறிக்கையை பற்றிக்கூட குழப்பவாதி என்று கூறினார்கள். அன்று நான் அந்த முடிவு எடுக்காவிட்டால் நாட்டில் எத்தகைய குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்து சில நேரத்தில் கெட்ட பெயர் எடுத்துள்ளேன். இப்போது அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். நானும் அமைதியாக இருக்கிறேன். (குழப்பவாதியானு கேள்வி தானே கேட்டாங்க! உடனடியாக நிருபிச்சிட்டிங்களே!)
கே: ஒகேனக்கல் விவகாரத்தில் மன்னிப்பு கேட்டதாகவும், வருத்தம் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியானது. உண்மையில் நடந்தது என்ன? உங்கள் வாயால் சொல்லுங்கள்.
ரஜினி: (சிரித்துக் கொண்டே) முன்னாலே முன்னாலே போகனும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் பின்னாலே பின்னாலே போகனும் என்கிறீர்கள். விஷயம் நடந்தது முடிந்தது. விட்ருங்க. அதிலேயே இருந்தால் எப்படி.
முதலில் ஒகேனக்கல் பிரச்சனை சினிமா சம்பந்தப்பட்டது அல்ல. ஆனால் கர்நாடகாவில் எந்த பிரச்சனையானாலும் தியேட்டரைத்தான் முதலில் அடிப்பார்கள். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகத்தான் அந்த கூட்டத்தில் நான் அமர்ந்தேன்.
அங்கு பேசியவர்கள் எப்படி பேசினார்கள் என்று உங்களுக்கு தெரியும். எனக்கு சிறிது கோபம் ஏற்பட்டது. அப்போது உணர்ச்சி வசப்பட்டு உதைக்கனும் என்று கூறிவிட்டேன். தண்ணீர் கொடுக்க மறுப்பவர்களை உதைக்க வேண்டும் என்று கூறி இருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும். அப்போது குசேலன் ரிலீசாகும் சமயம் கர்நாடகா விநியோகஸ்தர்கள் என்னைச் சந்தித்தார்கள். எடியூரப்பா தியேட்டருக்கு பாதுகாப்பு தருவதாக கூறினார். ரசிகர்கள் கத்தி, கபடாவோடு நாங்களும் தயார் என்றார்கள்.
ஒரு பிரச்சனை ஆரம்பித்தால் உடனே முடிய வேண்டும். இழுத்தடிக்கக் கூடாது. அதனால் பொது நலத்திற்காக, மற்றவர்கள் நலனுக்காக நான் மன்னிப்பு கேட்டேன் என்றார்.
தொடர்ந்து ரசிகர்கள் எழுப்பிய மேலும் பல கேள்விகளுக்கு பதில் அளித்த ரஜினி பின்பு பேசியதாவது:
மீண்டும் மீண்டும் நான் சொல்வது எல்லாம் குடும்பத்தை கவனியுங்கள். நான் என் மனைவிக்கு நல்ல கணவனாக, என் குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாக, தயாரிப்பாளர்களுக்கு நல்ல நடிகனாக என்று என் கடமைகளை செய்து வருகிறேன். (ரசிகமணிகளே! இப்பயாவது உங்களுக்கு புரியலயா?)
நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள். கடமையைச் செய். பலனை எதிர்பார் இதுதான் நமது தத்துவம். அரசியலை பொறுத்தவரை ஒருவர் வெற்றி பெறுகிறார்கள் என்றால், அது திறமையாலோ, புத்திசாலித்தனத்தாலோ, உழைப்பாலோ என்று கூறினால் அது முட்டாள்தனம்.
சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம் ஆகியவை தான் ஒருவரின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்களிப்பாக இருக்கிறது.
சரியில்லாத நேரத்தில் நீங்கள் குட்டிகரணம் அடித்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது. 1996ம் ஆண்டு இருந்த நிலைமை வேறு. அன்று பதவியில் போய் அமர வேண்டியது தான். அப்படி ஒரு சூழ்நிலை இருந்தது. ஆனால் யாரோ ஜெயித்து நாம் அனுபவிப்பதா?.
நமக்கு ஒரு விஷயத்தில் திறமை இருக்க வேண்டும். அனுபவம் இருக்க வேண்டும். அதை நாம் செய்ய வேண்டும். தெரியாமல் ஒரு விஷயத்தை செய்யக் கூடாது.
என் சிறு வயதில் பணக் கஷ்டத்தில் இருந்த போது கூட சினிமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முறைப்படி 2 வருடம் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த பிறகு தான் நடிக்க வந்தேன். தெரியாத ஒரு விஷயத்தை செய்ய மாட்டேன். பலவந்தமாக திருமணம் செய்தால் அந்த வாழ்க்கை நடக்குமா? ஈடுபாடு இருந்தால் தான் இனிமையாக இருக்கும். ஒருவேளை ஆண்டவன் சொன்னால் நாளைக்கே நடக்கலாம்.
தொடர்ந்து நாட்டில் நடப்பதை கண்காணித்துக் கொண்டே வாருங்கள்.
தற்போது நாடு சரியில்லை. தமிழ்நாடு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த இந்தியா முழுக்கவே அப்படித்தான் இருக்கிறது. பார்க்கலாம் ஆண்டவன் இருக்கிறான் என்றார் ரஜினி. பிற்பகல், ரசிகர்கள் அனைவருக்கும் ராகவேந்திரா மண்டபத்தில் விருந்து பரிமாறப்பட்டது.
(பாவம்! கேள்வி கேட்கிறேன் என்று சொல்லி ரசிகர்கள் ரஜினியை ரொம்ப படுத்தி இருக்காங்க. ரஜினியும் சாய்பாபா ரேங்ஜுக்கு பத்திப்பரவசம் பொங்கி வழிய பதில் சொல்லி இருக்கார். இவரு பேசாம கட்சிக்கு பதில் ஆசிரமம் ஆரம்பிக்கலாம்.)
(தட்ஸ்தமிழ்.காம் இருந்து சுடப்பட்டது)
Monday, August 18, 2008
கொஞ்சம் படம் காட்டுவோம்!!
Tuesday, August 12, 2008
சாரு நிவேதிதாவின் விமர்சனம் மற்றும் கொஞ்சம் தைமூர்
குசேலன் படம் பார்த்தேன். பரவாயில்லை! 'கதபறயும்போள்' படம் போல இதுவும் மொக்கையாகத்தான் இருக்கிறது.பசுபதி மற்றும் ரஜினி தவிர யாரும் கதையோடு கொஞ்சமும் ஒட்டவில்லை. ரஜினியின் இமேஜை நம்பி மொத்தமாக கோட்டைவிட்டிருக்கிறார் இயக்குனர் வாசு. இப்படத்தில் ரஜினியைக் குறை சொல்லும்படி ஒன்றும் நடந்துவிடவில்லை. ஓவர் ஹைப் கொடுத்து ரஜினி ரசிகர்களை ஏமாற்றியது வாசு. சுமாராக படம் எடுத்துவிட்டு சிவாஜி, தசாவதாரம் ரேஞ்சுக்கு எதிர்பார்க்கிறது அவர்களுக்கே ஓவரா படலயா?
இது ஒரு பக்கம் இருக்க. நம்ம சாரு சார், அவரோட தளத்தில் குசேலனை ஒரு பிடி பிடித்துள்ளார். ஆனாலும்,
"ஹொகனேக்கல் பிரச்சினையிலும் கருத்து சொன்னார் ரஜினி. என்ன கருத்து? தண்ணி தராதவர்களை உதைக்க வேண்டும். அந்த உண்ணாவிரதக் கூட்டத்தில் பேசிய பலரும் இதையேதான் சொன்னார்கள். ரஜினியும் சொன்னார்." என்று எழுதி இருந்தார். ஆனால் "ஒகேனக்கல் குடிநீர்திட்டத்தை எதிர்ப்பவர்களை உதைக்கவேண்டாமா?" என்று தான் ரஜினி பேசினார். சாரு சார் எதோ புதுசா சொல்லி இருக்கார்...? அது அவருக்கே புரிந்த விடயம்.
சாரு சார் ஒரு தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட நூல் எழுதுவதாக சொல்லி இருந்தார். அவருக்கு கவுண்டமணியையே தெரியாதுனு சொல்லிட்டு தமிழ் சினிமாவை பற்றி எப்படி எழுத முடியும் என்று தெரியவில்லை. காமெடியையும் தமிழ் சினிமாவையும் எப்பவும் பிரிக்கமுடியாது. மற்றும் என்னைப் பொருத்தவரை காமெடியன்களுக்குத்தான் சிறந்த மற்றும் யதார்த்தமான நடிப்புத் திறன் உண்டு. அந்த வகையில் கவுண்டரும் சளைத்தவர் அல்ல. காலத்தால் மறையாத ஒரு புதிய தாக்கத்தை தமிழ்த்திரையுலகில் ஏற்ப்படுத்தியவர் அவர். இதை மறுப்பவர் யாரும் இருக்க இயலாது என்றே நினைக்கிறேன். கவுண்டமணி அப்படி ஏற்ப்படுத்திய 20 ஆண்டு தாக்கத்தை உணராதவர் எப்படி தமிழ் சினிமாவைப் பற்றி எழுத இயலும்?
***************
மம்மி படத்தில் வருவது போல ஒரு தகவலை சமீபத்தில் படித்தேன். 14-15-ம் நூற்றாண்டில் ஆசியாவை கலங்கடித்த தைமூர் இறந்தபோது, அவனது கல்லறையில் ஒரு சின்னம் பொறிக்கப்பட்டது, அது குறிப்பிடுவதாவது "இந்தக் கல்லறை திறப்பவர்கள் மண்ணில் போர் சூழும்". 1941-ல் ரஷியாவைச் சார்ந்த ஜெரசிமொவ் என்ற ஆராய்ச்சியாளர், தைமூரின் கல்லறையைத் தனது ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். தைமூரின் உயரம், தோற்ற அமைப்பு, மன்கோலிய அடையாளம் அனைத்தையும் உறுதிபடுத்தினார். அதேசமயம் ரஷியாவில் நாசிகளின் தாக்குதல் நடந்தது. 1942-ல் தைமூரின் உடல் மறுபடியும் அடக்கம் செய்யப்பட்டவுடன், அன்றைய தினமே, ரஷியா ஸ்டாலின்கிரெட்டில் மாபெரும் வெற்றியை ஈட்டியது. நம்ப முடிகிறதா உங்களால்...!!
**************
Saturday, April 26, 2008
தமிழ்ப்படம் வெளிநாட்டினரை எவ்வளவு பாதித்துள்ளது பாருங்கள்
இது வெளிநாட்டினரின் உருவாக்கிய படத்துண்டு (முடியும் வரைபாக்கவும்! நிச்சயம் சிரிப்பீர்கள்!)
Sunday, December 30, 2007
'Crop circle' பற்றிய ஒரு காணொளி
Saturday, December 22, 2007
சர்வதேசவிழாவில் "வேகம்" திரைப்படம் - என்னக் கொடுமை இது!!
அண்டு: என்னடா சிண்டு? இந்தக் கொடுமைய கேட்டியா? சிண்டு: வாங்கண்ணே! என்ன விஷயம் சொல்லுங்கண்ணே!!
அண்டு: பொதுவாக இந்தியாவில் வெளிநாட்டுப்படங்கள் என்றால் ஹாலிவுட் படங்களும், சீனமொழி படங்களே வெளியாகின்றன. அதுவும் அடிதடி, மசாலாப் படங்கள் தான் பெருமளவில் வெளியிடப்படுகின்றன.
சிண்டு: நம்ம ஜெட்லி, ஜாக்கிசான், அர்னால்ட் படங்களையா சொல்லுரிங்க!
அண்டு: ஆமாண்டா!! இப்படி படங்கள் வரும்போது, தரமான ஸ்பானிய, பிரென்சு, இத்தாலிய, பாரசீக, ஜப்பானிய, ரஷ்ய மொழிப்படங்கள் பார்க்கும் வாய்ப்புகள் சர்வதேச விழாக்களில் மட்டுமே சாத்தியம். இந்தியாவில் இத்தகைய விழாக்களில் தான் நம்மால் வேற்றுமாநில மொழிகளில் வெளியாகும் சிறந்த படங்களையும்் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. இவற்றில் திரையிடப்படும் படங்கள் சமூகசூழல்கள், மனித உறவுகள், கலாச்சாரம் போன்றவற்றைப் பிரதானப்படுத்தி எடுக்கப்பட்டவைகளாக இருக்கும். இப்படங்களை பார்ப்பதன் மூலம் உலகத் திரைப்படங்கள் எத்தகைய பரிமாணத்தில், எத்தகைய பரிநாம வளர்ச்சி பெற்று சென்று கொண்டு இருக்கிறது என்பதை நன்கு உணர முடியும்.
சிண்டு: அதுக்கென்ன இப்ப!!
அண்டு: அதுகென்னவா? தமிழ்சினிமா.காம் பார்க்கலையா? சமீபத்தில் நடந்த சென்னை சர்வதேச படவிழாவிற்குச் சென்ற நம் படைப்பாளிகளுக்கு மாபெரும் ஒன்று அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. தமிழில் வந்த நல்ல படங்களையும் திரையிட்டு வந்த இந்த படவிழா குழுவினர், எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் சேகர் நடித்த 'வேகம்' படத்தையும் திரையிட்டார்களாம். பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்களை திரையிடுகிற இவர்கள் வேகத்தை திரையிட்டதுதான் பெரும் அதிர்ச்சி.
சிண்டு: 'வேகம்' ஆங்கிலத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற Cellular என்ற திரைப்படத்தில் அப்பட்டமான உல்டா ஆச்சே!! இதுக்கு நம்ம மயிலாபூர் மாம்ஸ் என்ன சொல்லுறார்.
அண்டு: அவர் என்ன சொல்லுவார்! பெரியார் படத்திற்கு பணம் கொடுத்தால் இராஜாஜி பற்றிய படம் எடுக்கவும் பணவுதவி செய்யவேண்டும் என்று சட்டசபையில் சத்தமாக கூறிவிட்டு, தமிழ்மக்களின் இன்றைய தேவையைக் கருதி இந்த ஆங்கில உல்டாவைத்தான் எடுத்துள்ளார்.
சிண்டு: இதெல்லாம் டூ, திரி, போர் மச்!!!!
நன்றி: தமிழ்சினிமா.காம்
Wednesday, December 05, 2007
100 தியேட்டர்களில் ஒன்பது ரூபாய் நோட்டு!
பொதுவாக கிராமங்கள் என்றாலே, தெந்தமிழ்நாடு (பொதுவாக மதுரை, திருநெல்வேலி, கொயம்பத்தூர் ஒட்டிய கிராமங்கள்)தான் திரைப்படங்களில் காட்டப்படும். தங்கர்பச்சனின் படங்களில் தான் வடதமிழகத்தையும் பார்க்க முடிகிறது. பாரதிராஜவுக்குப் பிறகு தமிழக கிராமத்தின் உண்மையான பகுதியை காட்டியது தங்கர்பச்சான் தான். அண்மையில் தங்கரின் இயக்கத்தில் வெளிவந்த ஒன்பது ரூபாய் நோட்டு படத்தைப் பற்றி ஒரு பக்கம் ஊடகங்கள் புகழ்ந்து தள்ளினாலும், திரையரங்கில் ரசிகசிகாமணிகளின் வருகை அவ்வளவாக இல்லை என்று ஒரு செய்தி உலவுகிறது. (நம்ம சியான் விக்ரம் நடித்த சேது படம் கூட இப்படித்தான் முதலில் கஷ்டப்பட்டது). இதுபோன்ற படங்களை தவரவிட்டு பிறகு மணிக்கணக்கில் பண்பாடு பற்றியும் யதார்த்தம் பற்றியும் பேசுவது அபத்தம். இப்படத்தை மக்களிடம் முறையாகக் கொண்டு சேர்க்க சமீபமாக தமிழ்சினிமா.காமில் வெளிவந்த தகவல் உங்கள் பார்வைக்கு...!!**************************** ******************************* ******************************* ***************
ஒன்பது ரூபாய் நோட்டு படத்தை பார்த்து நெகிழ்ந்து போன பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் தலைவர் சாமிநாதன், தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான 100 தியேட்டர்களில் படத்தை திரையிட சம்மதித்துள்ளார். இந்த படத்தை பார்க்கிற ரசிகர்கள், தியேட்டருக்கு வெளியே இருக்கிற உண்டியலில் விரும்பிய பணத்தை செலுத்தலாம். அது ஒரு ரூபாயாக இருந்தாலும் சரி, ஆயிரம் ரூபாயாக இருந்தாலும் சரி. அது அவரவர் விருப்பம். உண்டியலில் பணம் செலுத்தாமல் இலவசமாக படத்தை பார்த்துவிட்டும் செல்லலாம். இந்த நிபந்தனையின் பேரில் இப்படியரு படத்தை திரையிடுவது தமிழ்சினிமா வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாகும்!
மிக அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை திரையிட சரியான தியேட்டர்கள் கிடைக்காமல் திண்டாடி வந்த இயக்குனர் தங்கர்பச்சான், பிரமிட் சாய்மீராவுக்கு சொந்தமான ஏழு தியேட்டர்களை வாடகை அடிப்படையில் கேட்டுப்பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்தாராம். ஆனால், அவர் கேட்பதற்கு முன்பாகவே முந்திக்கொண்ட அந்நிறுவனம், இவ்வளவு அற்புதமான படத்திற்கு நாங்கள் இலவசமாகவே தியேட்டர் தருகிறோம். அதுவும் 100 தியேட்டர்களை! என்று சொல்ல, பரவசத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார் தங்கர்.
எதிர்வரும் ஞாயிறன்று தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான 100 திரையரங்கங்களில் இந்த படம் ஒரு காட்சி மட்டும் திரையிடப்படும். வெளியே உண்டியலில் விழுகிற பணம் அத்தனையும் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தை எடுக்க முன்வந்த தயாரிப்பாளருக்குதான். அதில் ஒரு பைசா கூட தங்களுக்கு வேண்டாம் என்று பெருந்தன்மையோடு தெரிவித்துவிட்டார் அந்நிறுவனத்தின் இயக்குனர் சாமிநாதன். அவரின் இந்த பெருந்தன்மையான செயலுக்கு சத்யராஜ், நாசர், அர்ச்சனா, ரோஹினி உள்ளிட்ட அத்தனை பேரும் நேரடியாக நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.
நன்றி: தமிழ்சினிமா.காம்
Friday, November 23, 2007
ரஜினி சொன்ன கதையும் ஹாலிவுட் படமும்
இப்போது இதே கதை ஹாலிவுட்டில் படமாகிறது! இயேசுவின் 13 வயது முதல் 30 வயதுவரை உள்ள வாழ்க்கை குறித்து பைபிளில் எந்த செய்தியும் இல்லை. இந்த வருடங்களில் அவர் ஒரு பெண்ணை காதலித்து மணந்ததாகவும் இந்தியாவுக்கு வந்து பவுத்த மற்றும் இந்து தர்மங்கள் குறித்து கற்றதாகவும் ஒரு கதை உலவி வருகிறது. இயேசுவுக்கு நேரடி வாரிசு உண்டு என்ற பின்னணியில் உருவான 'டாவின்சி கோட்' நாவலாகவும் திரைப்படமாகவும் வந்து ரசிகர் நெஞ்சத்தை மட்டுகில்லாமல் பணத்தையும் அள்ளியது. (இதேபோல இயேசுவை ஒரு சாதாரண மனிதனாக சித்தரித்த The Last Temptation of Christ என்ற திரைப்படமும் பெரியளவில் எதிப்புகளைச் சந்தித்தது. இதைப்பற்றி தனியாக ஓர் இடுகை போடவுள்ளேன்). இதையெல்லாம் மனதில் வைத்து, இயேசுவின் 13 முதல் 30 வயதுவரையான வாழ்க்கையை காதல், கல்யாணம், இந்திய வருகை ஆகியவற்றின் பின்னணியில் எடுக்கிறார்.(இந்தியாவில் இமயமலைக்கு வரும் இயேசு பெருமானுக்கு ஒபனிங்சாங் இருக்குமா? இருக்கவே இருக்கு நம்ம எம்ஜிஆர் பாட்டு ரீமிக்ச் போட வேண்டியது தான்! "புதியவானம்! புதியபூமி! எங்கும் பனிமழை பொழிகிறது!") ஹாலிவுட் இயக்குனர் Drew Heriot. இந்தக் கதை எழுத்தாளர் Levi H. Dowling எழுதிய Aquarian Gospel of Jesus the Christ நாவலின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாவல் 1908-ல் வெளிவந்தது. புதிய ஏர்பாட்டில் சொல்லப்படாத இயேசுவின் 18 வருட மௌனத்தையும் கூறுகிறது. இயேசுவின் இந்திய வருகை குறித்த சுவாரசியமான தகவல்களுக்கு இயக்குனர் Drew Heriot-க்கு ரஜினியை தவிர வேறு தகுதியான நபர் கிடைக்கமாட்டார்.(எப்படியோ படம் "பாபா" போல ஊத்திக்கொள்ளாமல் இருந்தால் சரி!)
நன்றி: தமிழ்சினிமா.காம்
Thursday, November 22, 2007
கமல் எழுதிய கவிதை
(தமிழ்சினிமா.காம்-இல் வெளிவந்த அக்கவிதையை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்)
மனித வணக்கம்
தாயே, என் தாயே!
நான்
உரித்த தோலே
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே,
என் மனையாளின்
மானசீகச் சக்களத்தி, சரண்.
தகப்பா, ஓ தகப்பா!
நீ என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.
தமயா, ஓ தமயா!
என் தகப்பனின் சாயல் நீ
அச்சகம் தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு
தமக்காய், ஓ தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயே
துணை தேடி போனாயோ?
மனைவி, ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக்குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும்வரை.
மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறுபிறப்பே
மரண சௌகர்யமே, வாழ்!
மகளே, ஓ மகளே!
நீயும் என் காதலியே
எனதம்மை போல..
எனைபிரிந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை,
காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?
நண்பா, ஓ நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.
பகைவா, ஓ பகைவா!
உன் ஆடையெனும் அகந்தியுடன்
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்.
மதமென்றும், குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகி விடும்
நிர்வாணமே தங்கும்.
வாசகா, ஓ வாசகா!
என் சமகால சகவாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் எனத்தோன்றின்
பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்.
ஆம்,
நாளை உன் வரியில் நான் தெரிவேன்.
அன்பன்
-கமல்ஹாசன்
Tuesday, November 20, 2007
பில்லிசூன்யம் வைத்துவிட்டார்கள் குமுறுகிறார் எட்டியூரப்பா - மேலும் ரஜினிகாந்த் அறிவுரை
கர்நாடகத்தின் முதலமைச்சர் பதவி பறிபோன பிறகு எட்டியூரப்பா விரக்தி விளிம்புக்கே சென்றுவிட்டார் போலும். சாத்திரலு, சம்பிரதாயலுவில் அதிக நாட்டமுள்ள எட்டியூரப்பா எண்கணிதப்படி 'எடியூரப்பா" என்ற தன் பெயரை எட்டியூரப்பா என்று மாற்றி வைத்துக்கொண்டவர். ஆனால் அதனால் ஒருபலனும் காணவில்லை. இப்படி அடிமேல் அடி வாங்கி நொந்து போன எட்டியூரப்பா, இப்போது தேடகவுடா மீது சொன்ன குற்றச்சாட்டு என்னவென்றால், "தேவகவுடாவும் அவரது மகன் குமாரசாமியும் எனக்கு பில்லிசூன்யம் வைத்துள்ளனர்" என்பதே.இதற்கு பயந்து உயில் கூட எழுதி வைத்துவிட்டதாக கூறுகிறார். தான் இறந்தால் அதற்கு கவுடாவும் குமாரசாமியும் தான் காரணம் என்று வேறு கூறியுள்ளார். இது பற்றி, நம்ம உட்டலக்கடி உலகநாதன் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கருத்து கேட்க விரைந்தார். போயஸ்தோட்டத்தில், தேடியும் கிடைக்காத ரஜினி சென்னையிலுள்ள பாபாஜி ஆசிரமத்தில் கிடைத்தார்.
உ.உ: கன்னடர்களை விட, பிஜேபியை அதிகம் நேசிக்கும் நீங்க இந்த பில்லிசூன்யத்தை பத்தி சொல்லவருவது என்ன?
ரஜினி: என்னை வாலவைக்காத தெய்வங்களான கன்னடமக்களுக்கு என்னோட வணக்கங்கள், சமீபத்துல எட்டியுரப்பாவுக்கு பில்லிசூன்யம் வச்சிடாங்களாம்னு கேள்விபட்டேன். அதே பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது.(தெரியாம ஏன் சாமி பேசுறே!!) கர்நாடகல நடக்குறது தான் உங்களுக்கு தெரியும்.ஆனா வட இந்தியாவே எரிஞ்சிட்டு இருக்கு. அது உங்களுக்குத் தெரியாது. இத கவுடா ஐயா சுமூகமா எல்லாரோடவும் கலந்துபேசி பில்லிசூனியம் வைக்கணும். எந்த தலைவர்னு பேதமில்லாமல் வைக்க ஏற்பாடு செய்யணும்.
உ.உ.; இத்தகைய பேச்சுக்கு உங்கள் ஒத்துழைப்பு கிடைக்குமா?
ரஜினி: முடிய வச்சு தான் பில்லி சூன்யம் வைக்க முடியுமாம். இங்க சில பேர் முடியே இல்லாத தைரியத்தில் சேது இடிக்கபோறேன்னு சொல்லிட்டு இருக்காங்க!!அவங்களுக்கும் காவிரி வேணும்னு கேட்கிறவனுக்கும், பில்லிசூன்யம் வச்சா, நான் வேணும்ன்னா என்னோட பாக்கெட்ல இருந்து ஒரு கோடி ரூபாய் தரேன்.
உ.உ: சார்! உங்க பாணில இந்த விஷயத்துக்கு ஒரு குட்டிகதை சொல்லி முடிங்க, அப்ப தான் வாசகர்கள் விரும்பி படிப்பாங்க!!
ரஜினி: ஒரு ஊருல அத்துவானினு ஒருத்தர் இருந்தார். அவர் எப்பவும் எதயாவது இடிக்கனும் இடிக்கனும்னு சுத்திகிட்டு இருப்பாரு, இப்படித்தான் இவரு சின்ன வயசுல 10-15 மசூதி, 20-30 கிழவிகளை இடிச்சி தள்ளியிருந்தாரு. இதைப்பார்த்த இவரோட அப்பா. இவரை கூட்டிக்கொண்டு போய் சேதுசமுத்திரத்தில் விட்டுட்டார். விடியவிடிய சேதுவை இடிச்சார். பிறகு அவருக்கு எதையும் அழிக்கிறது புடிக்கல. மகாவதார் பாபாவோட பக்தரா மாறிட்டார். நீங்களும் வாங்க பாபாவோட பக்தரா மாறுங்க.
உ.உ.: ஐயோ! வேணம் சாமி இந்த விளையாட்டு!! எஸ்கேப்!!
Monday, November 19, 2007
ராமர் பிறந்தநாள் கி.மு., 5114, ஜன.10 - விஜயகாந்த் என்ன சொல்லிட போறாரு?
ராமர் பிறந்தது கி.மு., 5114ம் ஆண்டு, ஜனவரி 10ம் தேதி என்று கூறியுள்ளார் தொல்லியல் மற்றும் வானியல் ஆய்வு நிபுணர் டி.கே.ஹரி.
சென்னையில் செயல்பட்டு வரும் பாரத் ஞான் என்ற அமைப்பின் நிறுவனர் டி.கே.ஹரி. தொல்லியல், வானியல் மற்றும் ஜாதக நிபுணர். ஹரி துவக்கியுள்ள அமைப்பு, இந்து புராணங்களில் கூறப்பட்டு இருப்பவற்றை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து வருகிறது.
பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள கிரகங்களின் அம்சங்கள் அடிப்படையிலும், ராமாயண இதிகாசத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளின் அடிப்படையிலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளோரின் பிறந்த தினத்தை, ஆங்கில காலண்டர் முறைப்படி இவர் கணித்துள்ளார்.இதற்கெனவே, தேதிகளை கண்டுபிடிக்கும் கம்ப்யூட்டர் மென் பொருளையும் தயாரித்துள்ளார். இதன் மூலமும், புஷ்கர் பட்நாகர் எழுதிய, "கடவுள் ராமரின் காலத்தை நாளிடுதல்"் என்ற புத்தகத்தின் அடிப்படையிலும், ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களின் அடிப்படையிலும், இந்த தேதிகளை ஹரி கண்டுபிடித்துள் ளார்.
ஹரியின் கணக்குப்படி, ராமருக்கு ஒரு நாள் பிறகு பிறந்தவர் பரதர். ஹரி கூறுகிறார். ராமர் கி.மு., 5114ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியும், பரதன் அதே ஆண்டு ஜனவரி 11ம் தேதியும் பிறந்துள்ளனர். பரதனுக்கு கி.மு. 5089ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி முடிசூட்டு விழா நடைபெற்றது. பரதனுக்கு முடிசூட்டு விழா முடிந்ததும் ராமர் தனது 25வது வயதில் மனைவி சீதாதேவி மற்றும் லட்சுமணனோடு வனவாசம் சென்றார். ராவணனுடன் போருக்கு முன்பாக, இலங்கைக்கு அனுமன் கி.மு., 5076ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி சென்று, அங்கிருந்து இரண்டு நாள் கழித்து, செப்டம்பர் 14ம் தேதி இந்தியா திரும்பி உள்ளார். (கள்ளதோணியிலா வந்தாரு, 2 நாள் ஆகுது??) இதை கண்டுபிடிப்பதற்காக, 27 நட்சத்திரங்கள் மற்றும் ஏழு கோள்களின் அமைப்புகள் ஆராயப் பட்டன. அவை இருந்த இடம், ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. ராமர் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர். நாசா மையமும் கோள்களின் அமைப்பு குறித்து விரிவாக ஆராய்ந்து வருகிறது. (இந்த தகவலை பத்தி நாசாவுக்கு தெரியுமா? ஐ!!! அமெரிக்காவில் இருக்கும் தமிழ்மண அன்பர்கள் ஜாதகம், ஜோசியம், கைரேகை எல்லாம் இனிமேல நாசாவுலயே பார்த்துகலாம்). ராமர் குறித்த எங்களது ஆராய்ச்சி, முழுக்க முழுக்க அறிவியல் அடிப்படையிலானது. இவ்வாறு ஹரி கூறினார். (நன்றி: தினமலர்).
இந்த செய்தி பத்தி நம்ம கேப்டன் என்ன சொல்லியிருப்பாருனு யோசிச்சா.....!!!????!!!!????
//நாட்டுல எவ்வளவோ ஜனங்க கஸ்டப்படும்போது, நீங்க இராமருக்கு பொறந்தநாள கண்டுபிடிச்சிட்டு இருக்கீங்க. இதெல்லாம் தெரிஞ்சிகிட்டு நாளைக்கு இராமர்க்கு காவெண்ட்ல சீட்டா வாங்க போறாரு. இந்தியாவுல மொத்தம் 2038 கடவுள் இருக்கு, அதுல பூமியில பொறந்த கடவுள் 832. சாகாத கடவுள் 543. செத்துபோன கடவுள் 113, கல்யாணம் செய்துகிட்ட கடவுள் 1002, சாமியாரா போன கடவுள் 885. இதுகெல்லாம் பிறந்தநாள் கண்டுபிடிக்கத்தான் முடியுமா? அப்படி கண்டு பிடிச்சாலும் கேக் வெட்டி கொண்டாடத்தான் முடியுமா? அவனவன் இருக்கிற கஷ்டத்துல ஏன் பொறந்தோம்னு யோசிட்டு இருக்கான். ஆனா நீங்க இராமருக்கு பிறப்புச்சான்றிதழும், நபிகள்நாயகத்துக்கு சாதிச்சான்றிதழ் கொடுத்துட்டு இருக்கீங்க. இத ஒவ்வொரு தமிலனும் யோசிக்கனும். இவங்கள அடிச்சா உத்தரபிரதேஸ்ல இருக்கிற இராமர் இல்ல, உடுமலைபேட்டை இராமர் கூட வரமாட்டான்். பாகிஸ்தான் தீவிரவாதிகளை புடிக்க என்னய பர்வேஸ்முஸ்ரப் குபுட்டு இருக்காரு. நான் வரட்டுமா? ஆங்...//
Wednesday, November 14, 2007
ரஜினிக்கு ஏன் இந்த கொலைவெறி!!
'இனி தமிழகமெங்கும் சித்தர்களின் ஆட்சிதான் மலரப்போகிறது!' என்று ஸ்ரீஸ்ரீ அருள்மிகு ரஜினிகாந்த் சுவாமி அருள்வாக்கு கூறியுள்ளார்.
நடிகர் சரத்குமார் புதுக்கட்சி துவங்கிய பிறகு அவரை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை வாழ்த்தியதோடு, இனி சித்தர்களின் ஆட்சிதான் மலரப்போகிறது என்றாராம். (நம்ம ரஜினி சும்மானு இருக்க மாட்டார் போல) அப்போது ரஜினியிடம், இமயமலையில் இருக்கும் பாபாவை தரிசிக்க தன்னையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சரத்குமார் கேட்டுக் கொள்ள, (தம்பு செட்டி தெருவில் இருக்கிற குறுக்குசந்து வழியாகத்தான் 'பாபா' படத்தில் ரஜினி இமயமலைக்கு போனார், அங்கே போய் தேடினால் வழி கிடைக்கும்) உடனடி நிவாரணமாக சென்னையில் உள்ள பாபா கோவிலுக்கு சென்று வணங்கும்படி கேட்டுக் கொண்டாராம் ரஜினி.
ரஜினியின் உற்ற நண்பர் ஹரி என்பவர்தான் சென்னையில் இந்த பாபா கோவிலை கட்டியிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் அந்த கோவிலுக்கு செல்லும் ரஜினி அங்கேயே அமர்ந்து தியானமும் செய்வாராம். இது சித்தர்கள் வாழ்ந்த பூமி என்பதால் என்பதால்தான் ரஜினியின் இந்த வாராவார விசிட். (சென்னையில சித்தரா!! ஓ!! நம்ம மெட்ராஸ்காரரு!! அதாங்க பட்டினத்தார்) தான் ஒவ்வொரு வாரமும் அந்த கோவிலுக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன் என்று ரஜினி சொல்ல, அடுத்த நாளே மேற்படி கோவிலுக்கு சென்றுவிட்டார் சரத். (விஜயகாந்த்க்கு இன்னும் விஷயம் தெரியலயோ!! அவருக்கென்ன பிரச்சனை. அவருக்குத்தான் இமயமலையில்.நிறைய தீவரவாதிகள் தெரியுமே! ஹிந்தி கூட தேவையில்ல! தமிழிலேயே அவர்களிடம் பேசிடுவார் வேற) சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து தியானமும் செய்தாராம். மிகவும் அமைதியான கோவில் என்று தன் ஆச்சர்யத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார் சரத். விரைவில் ரஜினியோடு இமயமலைக்கு சென்று வரவும் திட்டமிட்டிருக்கிறார். (கூடிய சீக்கிரத்தில் ரசிகர்கள் ரஜினியையும், சரத்தையும் தம்பு செட்டி தெரு பக்கமாக பார்க்கலாம்). சரத்குமார் மேல ரஜினிக்கு ஏன் இந்த கொலைவெறி, இனிமேல சரத் படத்துலயும் "சாயா! மாயா" என்று வசனம் வரப்போகுது. ஜாசிசங்கம் ஆரம்பிப்பாரா? இமயமலைக்கு போவாரா? என்பது தான் அடுத்த படத்தோட கிளைமேக்ஸாக இருக்கும்.
நன்றி: தமிழ்சினிமா
Thursday, July 12, 2007
எம்.ஜி.ஆரை கைவிட்ட விஜயகாந்த்
சொந்தமாக சொல்லிக் கொள்ள விஜயகாந்திடம் எதுவுமில்லை. பூகம்ப நிவாரணத்துக்கு பணம் கொடுத்ததையும், அரசு மருத்துவமனைகளுக்கு கட்டில்கள் கொடுத்ததையும் கூறி (//மண்டபம் இடிச்சத விட்டுபோட்டீங்க//) ஓரளவுக்குதான் அரசியல் பண்ண முடியும் என்பது கேப்டனுக்கு புரிந்து விட்டது. இதனால் கறுப்பு எம்.ஜி. ஆர்., கறைபடாத எம்.ஜி. ஆர். என்றெல்லாம் எம்.ஜி.ஆர். பெயரில் சவாரி செய்ய ஆசைப்பட்டார். அதன் எதிரொலியாக தனது நூற்றைம்பதாவது படத்துக்கு 'எம்.ஜி.ஆர்.' என்று பெயர் வைத்தார்.(//பேசாம 150-ன்னே படத்துக்கு பெயர் வைக்கலாம், இப்ப இது தான் பேஸன்//) 'மதுர' படத்தை (//மதுர படத்துல தானே விஜய் கலெக்டரா நடிச்சாரு, ஆனா கோயம்பேடு குத்தாட்டம் போடுவாரு//)இயக்கிய மாதேஷ் 'எம்.ஜி.ஆரின்' இயக்குனர். இப்படியொரு பெயர் வைத்திருக்கிறீர்களே என்று விஜயகாந்திடம் கேட்டதற்கு, "பெயரை தேர்வு செய்தது மாதேஷ்" என நழுவிக் கொண்டார். இப்படத்துக்கான போட்டோசெஷன் சமீபத்தில் நடந்தது (//என்ன பெரிய போட்டோசெசன் எப்படி எடுத்தாலும் விஜயகாந்த் அப்படித்தான் இருப்பாரு, தலைவர பேசம பழைய போட்டோ இருந்தா கொடுக்க சொல்லுங்க//).
இதனிடையில் 'சிவாஜி' கிளைமாக்ஸில் 'நான் சிவாஜி இல்ல, எம்.ஜி.ஆர்.' என்று கூறி ரஜினி கைத்தட்டல் வாங்க, இனியும் இந்த பெயர் சரிப்படாது (//நான் சிவாஜியும் இல்ல! எம்.ஜி.ஆரும் இல்ல! புரச்சி தமிலன்...ஆங்!//) என 'புரட்சிதலைவன்' என்று மாற்றினார்கள். இப்போது இதையும் தவிர்த்து 'வித்தகன்' என புதுப்பெயர் சூட்டி அதனை சேம்பரில் பதிவும் செய்து விட்டனர். இந்தப் படத்தின் கதை லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளூரிலும் சில காட்சிகள் உண்டு. விஜயகாந்துக்கு படத்தில் இரண்டு ஜோடிகள். தொடர் தோல்வியில் இருக்கும் விஜயகாந்தை 'வித்தகன்' காப்பாற்றினால்தான் உண்டு!(//விளங்காதவன்... இந்த டைட்டில் ஓகேவா!!//)நன்றி: JBR (For www.cinesouth.com)
Sunday, July 08, 2007
சென்னையில் ஜப்பான் திரைப்பட விழா
Consulate General of Japan - Chennai மற்றும் Madras Film Societyயுடன் இணைந்து சென்னையில் இம்மாதம் ஒன்பதாம் தேதியிலிருந்து பனிரெண்டாம் தேதிவரை ஜப்பான் திரைப்பட விழாவை சென்னை பிலிம் சேம்பரில் நடத்துகிறது, இன்டர்நேஷனல் சினி அப்ரிசியேஷன் பாரம் (ICAF).Vice Consul, Ms. Sakura Ozaki இப்படவிழாவினை 9-ம் தேதி மாலை 6-15 மணி அளவில் தொடங்கி வைக்கிறார். பாலுமகேந்திரா உள்ளிட்ட திரைபிரபலங்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். படவிழாவில் Kuroki Kazuo இயக்கிய இரு படங்களும் Yamada Yaji, Furumaya Tomoyuki ஆகியோர் இயக்கிய படங்கள் தலா ஒவ்வொன்றும் திரையிடப்படுகிறது.
படப்பட்டியல்:
09.07.07 The Face of Jizo (Director: Kuroki Kuzuo)
10.07.07 The Hidden Blade (Director: Yamada Yoji)
1107.07 A Boys Summer (Director: Kuroki Kuzuo)
12.07.07 Robocon (Director: Furumaya Tomoyuki)
(சுட்ட இடம்: www.cinesouth.com)
Friday, June 22, 2007
ரசித்த மொகலாய ஓவியங்கள்

ஷாஜகான்

ஜாஹாங்கீர் மற்றும் இளவரசர் குர்ரம் (ஷாஜகான்)



ஷாஜகான்

மும்தாஜ்














