மலையாளத்தில் பாசில் இயக்கத்தில் 'மணிசித்ரதாழ்' என்றொரு படம் வந்தது. அதுவே பிறகு சந்திரமுகியாக தமிழிலும் கன்னடத்திலும் ரீமேக் ஆனது. அந்தப் படத்தில் கதாநாயகிக்கு பேய் பிடித்திருப்பதாக காண்பிக்கப்படும், பிறகு அது personality disorder என தெரியவரும். நம்ம சரவணனாக ரஜினி வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் 'ஒருவர் இன்னொருவராக மாறும் தன்மை'. அது மட்டுமில்லை, 'இன்னொருவராக வாழும்தன்மையும் கூட'.
நான் துவக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும்போது, என்னுடன் உஷா என்றொரு பெண் படித்தாள். கொஞ்சம் கருமையான நிறம். சுருட்டையான முடி. எங்கள் வகுப்பில் உள்ளவர்களைவிட இரண்டு வயது அதிகம். சரியாக படிக்காமல் மிகவும் மந்தமாக படித்ததால் அவளை 4ம் வகுப்பு அனுமதிக்காமல் எங்கள் வகுப்பிலேயே நிறுத்தி வைத்திந்தனர். வகுப்பில் எப்போதும் அமைதியாக இருக்கும் அவள் ஒருநாள் திடீரென சத்தமாக கத்த துவங்கிவிட்டாள். கண்களை உருட்டுவதும், சத்தமாக சிரிப்பதும் பார்க்க மிகவும் பயமாக இருந்தது. தன் கையில் இருக்கும் பல்பத்தினால் தரையில் ஒரு கோரமான உருவத்தை கீறி, 'இது நான் தான்' என சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள். சுற்றியிருந்த அனைத்து சிறுவசிறுமிகள் எழுந்து பக்கத்து வகுப்பிற்கு ஓடிவிட்டனர். நானும் எனது நண்பன் நந்தனும் சுவற்றோரமாக ஒட்டிக் கொண்டு நின்றோம். எங்களின் ஆசிரியை அவர்களுக்கும் என்ன செய்வதென்பது அறியாமல் திகைத்து நின்றார். உஷா தன் நிலை மறந்து, கண்களை உருட்டியும், நாக்கை வெளியே நீட்டிக் கொண்டும் தொடர்ந்து சிரித்த வண்ணம் இருந்தாள். சிறிது நேரம் கழித்து உஷா மயங்கிவிட்டாள். அவளுடைய வீட்டிற்கு நடந்தவை தெரிவிக்கப்பட்டது. அவளுடைய மாமா வந்து அவளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.
அன்று நடந்த சம்பவம் என் வாழ்வில் நான் எப்போதும் மறக்கவியலாது. அந்த உருண்ட விழிகள், கலைந்த கேசம் கொஞ்சம் திகில் தான். அன்று நடந்த சம்பவத்திற்குப் பிறகு ஒரு வாரம் கழித்து என் அம்மாவிடம் அன்று வகுப்பில் இருந்த ஆசிரியை உஷாவைப் பற்றி கூறிக்கொண்டிருந்தார். உஷாவின் தாய்-தந்தை இறந்துவிட்டனர். அவள் அவளின் மாமா வீட்டில் தங்கி இருந்தாள். தாயற்ற அவளை அவ்வீட்டிலுள்ளோர் அடித்து கொடுமைபடுத்திக் கொண்டு இருந்தார்கள். ஏன் அவள் அப்படிச் செய்தாள்? எதற்காக அவளுக்குப் பேய் வருகிறது? அது உண்மைதானா? இப்படி பல கேள்விகள் எனக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. பேய் பிடித்தது போல அவள் அன்று செய்தது, அவளுடைய வேதனையின் வெளிப்பாடாக இருக்கலாம். சில சமயம் மனிதன் தன்னை மற்றவர்களிடம் இருந்து காத்துக் கொள்ள அல்லது மற்றவர்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க, இவ்வாறு வேறொரு வியக்தித்வத்தை உருவாக்குகிறான். ஆனால் காலப்போக்கில் இவனால் உருவாக்கப்பட்ட வியக்தித்வம் முழுமையடைந்து இவனையே ஆட்கொள்கிறது. அவ்வாறு ஆட்கொள்ளப்படும்போது, தன்னை ஆளும் வியக்தித்வத்திற்கேற்ப வெவ்வேறாக செயல்படுகிறான். உஷா தன்னை மற்றவர்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள உருவாக்கிய அந்த கோரமான உருவம் மனதளவில் முழுமையாக அவளை ஆட்கொண்டுவிட்டது.அவள் நிலை இப்போது என்ன என்று எனக்குத் தெரியாது. அவளை அப்போதே ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் காண்பித்திருந்தால் அவள் குணமாக வாய்ப்பிருந்திருக்கும்.
இன்று பேய் பிசாசு போன்ற நம்பிக்கை எனக்கு இல்லாவிடினும், அன்று நடந்தவற்றை நினைத்தால், நினைத்த மாத்திரம் லேசான பயம் வந்துவிடும்.

**********************************************************************************