பிரதமரைக் கொன்றவர்களை தண்டிக்காமல் விடுவதா?
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தொடர்புடைய நபர்களை தமிழக அரசு விடுதலை செய்ய முயற்சி எடுத்துள்ளது வரவேற்கதக்கது. ஜெயலலிதா எடுத்த முடிவு அரசியல் காரணங்களுக்காக இருக்கலாம். ஆனால் இப்போது அது முக்கியமல்ல. மத்தியில் ஆளும் காங்கிரஸ் மட்டுமல்லாமல், பல வட இந்திய ஊடகங்கள் வழக்கம்போல "ராஜீவ் காந்தி கொலையாளிகள்" என்றே பிரசாரம் செய்து வருகிறது. ராஜீவ் கொலைவழக்கில் இவர்கள் யாரும் நேரடியாக தொடர்புடையவர்கள் அல்ல. கொலையில் நேரடியாக தொடர்புடையவர்கள் அனைவரும் சிவராசனோடு இறந்துவிட்டார்கள். கொலைக்குக் காரணமாக இருந்த பிரபாகரனும், பொட்டுவும் போரில் இறந்துவிட்டார்கள். எப்படி இருப்பினும் தண்டனையாக 23 வருடம் சிறையில் இருந்துவிட்டார்கள். கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வாழ்க்கை சிறையிலேயே முடிந்துவிட்டது. இனிமேலாவது அவர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும். இனியும் இவர்களின் தண்டனையை நீட்டிப்பது தேவையற்றது. சமீபத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக ராகுல்காந்தி கருத்து தெரிவித்திருந்தார். "பிரதமரைக் கொன்றவர்களை தண்டிக்காமல் விடுவதா?" என்று கூறியிருந்தார்.
ஆயிரக்கணக்கான தமிழர்கள், சீக்கியர்கள் சாவிற்கும் காரணமான ராஜீவ் காந்தியை தண்டிக்க வேண்டுமென்றால், அவருடைய குடும்பத்தின் நான்கு தலைமுறைகள் (ராகுலையும் சேர்த்து) தூக்கில் தொங்க வேண்டும்.
*********************************************************************************
YOUTUBE-ல் ரஜினி நடித்த எதோ ஒரு திரைப்படத்தின் படத்துண்டு. ரஜினி ரசிகர் ஒருவர் "தலைவர் தலைவர்தான்! என்னா ஸ்டைல்!" என்று கருத்திட்டு இருந்தார். அதற்கு பதிலாக விடுதலைப்புலி கொடியின் புகைப்படம் போட்ட ஒருவர் "தலைவர் என்றால் தேசியத்தலைவர் பிரபாகரன் தான். கண்டவனெல்லாம் தலைவரில்லை" என்று கருத்திட்டு இருந்தார். பிறகு அவ்விவாதம் சச்சரவாக மாறி, கண்ணாபின்னாவென்று தனிப்பட்டமுறையில் திட்டிக் கொண்டிருந்தார்கள்.
எனக்கு ஒரு சந்தேகம். நான் இன்னாரைத்தான் தலைவர் என்று சொல்லவேண்டும் என்று சொல்ல இவர்கள் யார்? நான் யாரை வேண்டுமானாலும் தலைவர் என்று அழைப்பேன். ஆட்டோ ஓட்டுனரைக் கூப்பிடுவேன், டீக்கடைக்காரரைக் கூறுவேன், எங்கள் சந்தியில் இருக்கும் பிச்சைக்காரரிடம் "என்ன தலைவரே! இன்னைக்கு வசூல் குறைவாக இருக்கே!" என்று கேட்பேன்.
**********************************************************************************
இப்புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் என்று தெரிகிறதா...!
1.சிறீ சபாரத்தினம் (டெலோ இயக்கத் தலைவர் - 1986-ல் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்)
2.பத்மநாபா (ஈ பி ஆர் எல் எஃப் இயக்கத் தலைவர் - 1990-ல் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்)
4.பாலகுமாரன் (ஈரோஸ் தலைவர் - மேலே உள்ளவர்களின் நிலைமை வேண்டாமென்று (வேறுவழியின்றி) விடுதலைப் புலிகளோடு சேர்ந்து கொண்டவர்)
3.மேதகு. பிரபாகரன் (ஈழவிடுதலைக்காக போராடி(?) 2009-ல் உயிர் நீத்தார்)
நான் ஒரு ராசியில்லா ராஜா
மறைந்த பாடகர் டி எம் சௌந்திரராஜன் சிவாஜி கணேசன், எம் ஜி ஆர், ஜெமினி, எஸ் எஸ் ஆர் , ஜெய்சங்கர், எ வி எம்ராஜன், ரவிசந்திரன் என அனைவருக்கும் பொருந்தக் கூடிய அளவிற்கு 1950, 60, 70களில் பல பாடல்களைப் பாடி சாதனை படைத்தவர். தனிப்பாடல்களாகவும் பல பாடியுள்ளார். இருப்பினும் பல சமயம் அவர் கூறும் பதில்கள் எரிச்சலைக் கொடுக்கக் கூடியவை. பல ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சியில் அவருடைய பேட்டியில் அவர் கூறிய சில கருத்துகள்.

(1984-ல் ஈழ தேசிய விடுதலை முன்னணி (TNLF) என்று டெலோ, ஈ பி ஆர் எல் எஃப், ஈரோஸ் இயக்கங்களின் கூட்டமைப்பாகத் துவக்கப்பட்டது. 1985-ல் விடுதலைப்புலிகள் இயக்கமும் பிரபாகரன் தலைமையில் இணைந்து கொண்டது. ஒற்றுமையாக களத்தில் நிற்போம் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள் தலைவர்கள், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்)
1.சிறீ சபாரத்தினம் (டெலோ இயக்கத் தலைவர் - 1986-ல் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்)
2.பத்மநாபா (ஈ பி ஆர் எல் எஃப் இயக்கத் தலைவர் - 1990-ல் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்)
4.பாலகுமாரன் (ஈரோஸ் தலைவர் - மேலே உள்ளவர்களின் நிலைமை வேண்டாமென்று (வேறுவழியின்றி) விடுதலைப் புலிகளோடு சேர்ந்து கொண்டவர்)
3.மேதகு. பிரபாகரன் (ஈழவிடுதலைக்காக போராடி(?) 2009-ல் உயிர் நீத்தார்)
***********************************************************************************
நான் ஒரு ராசியில்லா ராஜா
மறைந்த பாடகர் டி எம் சௌந்திரராஜன் சிவாஜி கணேசன், எம் ஜி ஆர், ஜெமினி, எஸ் எஸ் ஆர் , ஜெய்சங்கர், எ வி எம்ராஜன், ரவிசந்திரன் என அனைவருக்கும் பொருந்தக் கூடிய அளவிற்கு 1950, 60, 70களில் பல பாடல்களைப் பாடி சாதனை படைத்தவர். தனிப்பாடல்களாகவும் பல பாடியுள்ளார். இருப்பினும் பல சமயம் அவர் கூறும் பதில்கள் எரிச்சலைக் கொடுக்கக் கூடியவை. பல ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சியில் அவருடைய பேட்டியில் அவர் கூறிய சில கருத்துகள்.
- சிவாஜி கணேசன், எம் ஜி ஆர் புகழடைந்ததற்கு என் பாடல்களே காரணம்.
- என்னுடைய தாய்மொழியான சௌராஷ்ட்டிரம் பேசுவதால்தான் பாடலை நன்றாக உச்சரிக்கிறேன். (சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதனை விடவா இவர் தமிழை சிறப்பாக உச்சரிக்கிறார்)
- பெண்ணை போன்று பாவணை செய்து (நடித்து காட்டுகிறார்) குழைந்து குழைந்து பேசுவாரே ஒரு நடிகர் (டி ராஜேந்தர் தான் அப்பெண்தன்மையுள்ள நடிகர்), அவர் படத்தில் பாடினேன். அதோடு எனக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விட்டது. அப்பாடலை கேட்டுவிட்டு ஏன் அதைப் பாடினாய் என பலர் என்னை கடிந்து கொண்டனர்.
டி எம் எஸ் குறிப்பிடுவது ஒரு தலை ராகம் படத்தில் வரும் நான் ஒரு ராசியில்லா ராஜா, என் கதை முடியும் நேரமிது போன்ற சோக பாடல்களை. எல்லோரும் கடிந்து கொண்டனர் என்றால், ஏன் அதற்கு அடுத்த ஆண்டு வந்த ரயில் பயணங்களில் படத்திலும் நூலும் இல்லை வாலும் இல்லை என்ற பாடலைப் பாடினார் என்று தெரியவில்லை. எல்லா கலைஞர்களுக்கு ஒரு காலத்திற்குமேல் ஒரு வீழ்ச்சி என்பது கட்டாயம் இருக்கவே செய்யும், அதை உணராவிட்டால் இப்படி புலம்பக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
**********************************************************************************
'ஜால்ரா'முத்து
இளையராஜாவை புகழ்வதாக இருந்தாலும் சரி, ரகுமானை புகழ்வதாக இருந்தாலும் சரி, அவரவர்களின் ரசிகசிகாமணிகள் எடுத்துவிடும் ஒரே வாசகம்.
ஒருவேளை ரகுமான் விஷயத்தில் பாதி உண்மை இருக்கலாம். இந்தி பேசுபவர்களையும் தமிழ் பாடல்களை கேட்க வைத்தார். இந்திய சினிமாவில் அதுவரை இல்லாத ஒரு நுணுக்கமான இசை அனுபவத்தை ரகுமான் 90களில் துவங்கி வைத்தார். 90களில் வெளியான ரோஜா, ஜென்டில்மேன், பம்பாய், காதலன் பாடல்களை வட இந்தியவில் பரவலாக ரசிகர்கள் வரவேற்பைப் பெற்றது. மொழிபெயர்க்கப்பட்டு ஹிந்திசேனல்களில் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் இப்போதெல்லாம் அவரது இசையை கேட்கும்போதெல்லாம் 'பழைய நெனப்புடா பேராண்டி' என்பதாகவே இருக்கிறது. (வெளிநாட்டவர்கள் பாலிவுட்டை மட்டுமே இந்திய சினிமாவாக பார்க்கிறார்கள். ரகுமான் பாடல்கள் மட்டுமல்ல பல பாலிவுட் பாடல், ஆடல்களையும் பார்க்கிறார்கள். பார்த்துவிட்டு, இதுதான் இந்தியாவின் சங்கீதம், இதுதான் இந்தியாவின் நடனம் என முடிவு செய்துகொள்கிறார்கள்)
தமிழ் கூறும் நல்லுலகில் "ஜிங்சாக் போடும் கவிஞர்களின் பேரரசர்" என்று ஒரு பட்டம் கொடுத்தால், அதற்கு வைரமுத்து மட்டுமே முழுத்தகுதியுடையவர். வெள்ளை ஜிப்பாவோடு, விரல் சொடுக்கி, ஆள்காட்டி விரலை நீட்டி, 90 டிகிரியில் கண்ணை வைத்துக்கொண்டு இவர் விடும் பீலா இருக்கிறதே! (இந்த வயதிலும் கலைஞரையே புல்லரிக்க வைக்கிறார் என்றால் பாருங்களேன்.) எவனையாவது காக்கா பிடிக்க வேண்டுமென்றால் போதும் "இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள், ---- கழுவியவர்கள்" என ஜால்ரா சத்தம் காது கிழியும்.
*******************************************************************************

இந்திப் பாடலில் காதை வைத்திருந்த தமிழனின் காதுகளை தமிழ்ப் பாடல்களைக் கேட்க வைத்தவர் இசைஞானி.
இந்திப் பாடலில் காதை வைத்திருக்கும் இந்திக்காரனையும், ஆங்கிலப் பாடலில் காதை வைத்திருந்த ஆங்கிலேயனையும் தமிழ்ப் பாடலைக் கேட்க வைத்தவர் இசைப்புயல்.
வைரமுத்து இளையராஜாவையோ, ரகுமானையோ காக்கா பிடிப்பதில் தவறில்லை. புதுப்புதுக் கதைகளை எதற்கு உருவாக்க வேண்டும். இளையராஜாவின் இசை என்கிற சாகாப்தம் 70களின் இறுதியில் தொடங்கி 80களில் உச்சத்தை தொட்டது. இளையராஜா அவருக்கு முந்தையவர்களிடமிருந்து விலகி வித்யாசமான இசையால் மக்களைக் கவர்ந்தார். பாடல்களில் இசையின் ஆதிக்கம் அதிகரித்தது. சரி! இளையராஜாவின் வருகைக்கு முன்னர் தமிழர்கள் இந்திப் பாடலை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தனரா? இல்லை அதற்கு முன் யாரும் கேட்கக்கூடிய தரமான பாடல்களைக் கொடுக்கவில்லையா? முதலில் இசைக்கு மொழி ஏது. யார் எந்த மொழிப் பாடலை வேண்டுமானாலும் கேட்கலாம். இரண்டாவது தமிழகத்தில் 80களின் துவக்கத்தில் தான் கேசட்கள் (கிட்டத்தட்ட 20 பாடல்கள் பதிவு செய்யலாம்) பெருமளவில் புழங்கத் தொடங்கின. எல்லா தரப்பு மக்களும் பாடல்களைப் பதிவு செய்து கேட்கத் துவங்கனார்கள். அதற்குமுன் பெரும்பாலான மக்கள் வானொலியில் மட்டுமே பாடல்களைக் கேட்டு வந்தனர். அக்காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள், தமிழ் மட்டுமின்றி இசை இன்பத்திற்காக மொழி புரியாவிடினும் தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள பாடல்களைக் கேட்பார்கள். இதனை வைத்து தமிழர்கள் ஏதோ ஹிந்திமொழிப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது ரொம்ப ஓவர்.
- இவை ஐஸுக்கே ஐஸ் வைக்கும் வைரமுத்துவின் ஜால்ரா வரிகள்.