ஞானத்தைக் கற்பித்த மரம்!
அருகே ஒதுங்கினேன்!
நிழலால் அனைத்துக் கொண்டது!
****************************************
மரங்கள்!
கால மாற்றங்களை
உள்வாங்கிக் கொள்பவை!
துளிர்க்கும் இலைகளாக,
உதிரும் சருகுகளாக
மணித்துளி மாற்றத்தையும்
தன்னகத்தே தேக்கிநிற்கின்றன!
மண்ணில் இல்லாவிடினும்,
விலாசத்தை மறந்துவிடினும்
நம்முடைய இருப்பை
ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பன !
பூமிப்பந்தின் நாடித்துடிப்பு
அசைவுகளால் இசையானவை!
கவலையான தருணங்களில் மரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால், மனதிற்குள் பூக்கள் பூப்பது போல் இருக்கும். பேருந்தில் செல்லும்போது மரங்கள் நம்மோடு ஓடிவருவதாக நினைத்த சிறுவர்களில் நானும் ஒருவன். சிறுவயதில் நம்மோடு ஒருவராக விளையாடிக் கொண்டு, சுவாசங்களை பகிர்ந்து கொண்டிருந்த மரங்களை தனியாக விட்டுவிட்டு நெடிய தொலைவு வந்துவிட்டோம். மறுபடியும் அவற்றோடு விளையாட, உறவாட மனம் ஏங்குகிறது.
ரொம்ப நல்லா இருக்குங்க வாழ்த்துக்கள்...
ReplyDeleteஒவ்வொருத்தரும் மரம் வைக்கணும் ஒரு மரத்தையாவது காப்பாத்தணும் நாடு பசுமையாகனும். எல்லா பிரச்சினைகளும் தீரும்!!
ReplyDelete