Tuesday, December 15, 2009

Change in democracy



    Always the change is misunderstood in democracy.

தெலுங்கனாவை தனிமானிலமாக காங்கிரஸ் அரசு அறிவித்தபின் ஆந்திராவில் பெரும் அமளியை உருவாக்கியுள்ளது.

    It is a false choice.

தெலுங்கானாவை தனியாக பிரிப்பதால் சந்திரசேகரராவுடன் கூட்டணி அமைத்து தெலுங்கனாவில் ஆட்சியமைக்க காங்கிரஸ் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. ஆந்திராவில் இருந்து எதோ தெலுங்கனா பிரிந்தால் பொதுவுடைமை ஆட்சியா மலரப்போகிறது. அப்போதும் இதே காங்கிரஸ் கும்பல் தான் திருடப்போகிறது. சினிமாவையே ஜாதிரீதியாக ஆந்திராவில் பார்க்க ஒரு பெரிய கூட்டம் உண்டு. இந்த விடயத்தில் எப்படியோ? திருப்பதி நாமகாரருக்குத் தான் வெளிச்சம்.

    We're not perfect, but we do have democracy - Hugo Chavez


**************


காரல்மார்க்ஸின் ஆதர்ச நாயகன் ஸ்பார்சகஸ் (Spartacus).கி.மு-வில் மிகப்பெரிய பேரரசாகத் திகழ்ந்த ரோமாபுரிக்கு ஒரு ஆச்சரியக்குறியாக வந்தவர் தான் ஸ்பாடகஸ். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அடிமைகளை வீரர்களாக்கி கட்டுக்கோப்பான ரோமாபுரிப் படையையே கதிகலங்கடித்தவர். நான்கு அகெடமி விருதுகளை வென்ற Spartacus 1960-ல் வெளிவந்த திரைப்படம். வரலாற்றுப்படங்களில் முக்கியமான படம். Kirk douglas (Basic instincts புகழ் Michaeldouglas -ன் தந்தை) அற்புதமாக நடித்து இருப்பார். ஒரு கூடுதல் தகவல். இந்தப் படத்தில் வரும் ஒரு சிறைச்சாலை காட்சியை அப்படியே விருமாண்டியில் கமல் சுட்டு இருந்தார்.


****************

1 comment:

  1. இந்தப் படத்தில் வரும் ஒரு சிறைச்சாலை காட்சியை அப்படியே விருமாண்டியில் கமல் சுட்டு இருந்தார்.\\இதை மட்டும் தானா சுட்டார்..... இவர் சுட்ட கதைகள் பட்டி சுட்ட வடைகளை விட ஜாஸ்தியா இருக்கும்..........

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய