Sergio leone-ன் எல்லாப்படங்களிலும் வசனம் இல்லாமல் சில காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கும். இப்படத்திலும் அதுபோன்ற காட்சிகள் உண்டு. ஒரு சிறந்த இயக்குனர் கதையை நாடகபாணிவசனம் இல்லாமல் காட்சியைக்கொண்டு உணர்த்துதல் வேண்டும். எடுத்துகாட்டாக பாலசந்தரின் நாடகபாணி காட்சியமைப்பும், பாரதிராஜாவின் காட்சியின் மூலம் கருத்தும் கூறலாம். இவ்விஷயங்களில் Sergio leone கைதேர்ந்தவர். இப்படத்தில் கொள்ளையர் Elpaso நகரில் திருடும் போது வசனம் இல்லாமல் சுமார் 10 நிமிடம் படமாக்கப்பட்டு இருக்கும் (இதுபோன்ற வசனமில்லாக் காட்சியமைப்பு once upon a time west படத்தில் உச்சத்தை எட்டியிருக்கும்). படத்தின் முதல் 15-20 நிமிடம் வசனமில்லாக்காட்சிகள் தான், வெகு நேர்த்தியானவை. கொள்ளையர்களை நகரினுள் வரவழைக்க தங்கள் திட்டத்தை செயல்படுத்தும் பொது, பின்னணியில் ennio morricone காட்சிகளுக்கு தன் இசை மூலம் உயிர் கொடுத்திருப்பார்.
Sergio leone-ன் 90% படங்கள் அகில உலக திரைபட பட்டியலில் முதல் 50-க்குள் வந்துவிடுகின்றன. 1966-ல் வெளியிடப்பட்டு திரை உலகில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய படம் the good, the bad, and the ugly. Clint eastwood, Leevan cleef, மற்றும் Eli wallach சேர்ந்து இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஒரு சுடுகாட்டில் இருக்கும் புதையலைத்தேடி அலையும் மூவருக்குள் சுற்றிசுழலும் திரைக்கதை. Leevan cleef இப்படத்தில் வில்லன்வேடம் ஏற்றிருப்பார். Eli wallach தன் நகைசுவை நடிப்பால் அசத்தியிருப்பார். அவர் செய்யும் கோமாளிதனங்கள் எல்லாம் வெகு இயல்பாக அமைந்திருக்கும். Herosim என்ற பெயரில் கேலிகூத்தாக ஜல்லியடிக்கும் இந்தியதிரைப்படங்கள் போல் அல்லாமல், Clint eastwood-ன் ஸ்டைல் படத்திற்கு ஒரு பலம்.
இந்த படங்களின் இசை அமைப்பும் மிகச்சிறப்பாக இருக்கும். உன்மையிலேயே சிறப்பாக திறனாய்வு செய்கிறேர்கள். உங்கள் சிவாஜி பற்றிய பதிவும் அருமை
ReplyDeleteநன்றி முரளி சார்!!
ReplyDelete