Friday, May 25, 2007

Citizen X - தொடர்கொலை

சமீபத்தில் “citizen x” என்னும் ஆங்கில படத்தை பார்க்க நேர்ந்தது. இப்படம் தொடர்கொலைகள் மூலம் பெரிதும் அறியப்பட்ட சிக்கடிலோ என்பவனைப் பற்றியது. சிக்கடிலோ சுமார் 53 கொலைகள் செய்துள்ளான். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் 16 வயதுக்குட்பட்டவர்கள். இத்தொடர்கொலைகளில் ஈடுபடும்போது, சிக்கடிலோவின் வயது 50 மேல் இருக்கும். இவனை உடனடியாக கண்டுபிடிக்க முடியாமல் போனதிற்கு காரணம், முன்னேறிய அறிவியல் முறையில் கொலைக்கான காரணத்தைத் துப்பறியவில்லை. முதல்முறை, சிக்கடிலோவை கைது செய்து, ஆதாரமின்மையால் விட்டுவிட்டனர். 1980களில் ரஷ்யாவில், அமெரிக்கா மற்றும் மேலைநாடுகள் போல உளவியல்ரீதியாக குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டதில்லை (மார்க்சியத்தின் பொருளியல் தத்துவத்தில் மனம் என்ற ஒன்றயே ஒத்துக் கொள்ளமாட்டார்கள் என ஓஷோ கூறியதாக ஞாபகம்) மற்றும் தடவியல் பெரிதும் வளராத நிலை . மேலும், இத்தொடர்கொலைகளை ஆராய்ந்த ஒரு உளவியல் மருத்துவர், கொலையாளி 1.கண்ணாடி அணிந்திருப்பான், 2.ஆண்மைக் கோளாறு உள்ளவன், 3.சுமார் 50 வயது உடையவன்,4.ஓரினசேர்க்கையாலன் அல்ல,5.திருமணமானவன் என சில கண்டுபிடிப்புதீர்வுகளை பட்டியலிட்டார். அதன்படி, இப்பட்டியல் கொலையாளி என சந்தேகப்பட்டவர்களிடம் படித்துக்காண்பிக்கப்பட்டது.

எல்லாகொலைகளும் ரயில்நிலையத்திற்கு அருகாமையில் நடந்து இருப்பதால், தீவிர தேடுதல் நடைபெறுகிறது. இரண்டாவதுமுறையாக கைதுசெய்யப்பட்ட சிக்கடிலோவிடம் படிக்கப்பட்டபோது, இவரின் ஆராய்ச்சியால் வியந்து “உங்களுக்கு இதெல்லாம் எப்படித்தெரியும்” என கேட்க, விசாரணை இறுக்கப்படுகிறது. முடிவாக, சிக்கடிலோ குற்றவாளி என நிருபிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப் படுகிறான். சிக்கடிலோ போன்ற தொடர்கொலையாளிகள் சிறுவயதில் உளவியல்படி அதிகமாக பாதிக்கப் பட்டவர்களாக இருக்கிறார்கள். பொதுவாக, தொடர்கொலையாளிகள் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தல், வறுமை, சமுதாய புறக்கணிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தன்னுடைய உணர்ச்சியின் கிளர்ச்சிக்காகவும் பழிக்குப்பழி வாங்கும் வெறியோடுதான் கொலை செய்ய முனைகிறார்கள். சிக்கடிலோவும் அவனது சகோதரனும் இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மானிய படையெடுப்பால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள். பட்டினியால் இறந்த சகோதரனுடைய உடலை அவனுடைய சுற்றத்தார்கள் உண்டது, மனதளவில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியதாக சிக்கடிலோ வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.

சிக்கடிலோ மணமாகி இரண்டு குழந்தைகளின் தந்தை என்பது குரிப்பிடத்தக்கது. அவனுடைய ஆண்மை கோளாறு காரணமாக மனைவியினால் அதிகமாக அவமானப்படுத்தப்பட்டான். சிக்கடிலோ கொலை செய்யும்போது மட்டும் ஆண்மை கிளர்ந்துள்ளதால், மேன்மேலும் அவனை கொலைசெய்யத் தூண்டியது. இந்த தொடர்கொலைகளை துப்பறிந்த வல்லுனர்கள் பெச்டொவ் ம்ற்றும் புர்ஸ்கோவ் ஆவார்கள்்.

தொடர்கொலை - திரைப்படங்கள்:


ஹாலிவுட்டில் தொடர்கொலை தொடர்பான படங்கள் எண்ணிலடங்காதவை. pscho, silence of lambs, saw, wrong turn, house of thousand corpse, texas chainsaw massacre, I know what you did lastsummer, என இப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தமிழ்திரைப்படங்களில்கூட சில தொடர்கொலை சார்பான படங்கள் பல வெளிவந்துள்ளன. குறிப்பாக, pscho படத்தின் தழுவலான மூடுபனி, கமல் நடித்த சிகப்பு ரோஜாக்கள், 1975-80 காலகட்டங்களில் வெளிவந்த மாறுபட்ட திரைப்படமங்கள். சமீபகாலங்களில் வெளிவந்த கௌதம்மேனன் இயக்கிய வேட்டையாடுவிளையாடு (திகிலில்லாத திரைக்கதை), ஆளவந்தான் (சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை), இந்தியன் (நாட்டுப்ப்ற்று என்ற பெயரில் தொடர்கொலைகள்).
(படத்தில் தொடர்கொலை தொடர்பான நிகழ்ச்சிகள் இல்லாவிட்டாலும், பார்ப்பவர்களை தொடர்ந்து கொலை செய்யும் படமாக...நம்ம TR-ன் வீராச்சாமி)

8 comments:

  1. நல்ல தகவல்! நல்ல விமர்சனம்!!

    ReplyDelete
  2. வேற ஹர்ரர் படத்தைப் பத்தியும் எழுதுங்க.

    ReplyDelete
  3. இன்னும் விளக்கமாக எழுதி இருக்கலாம்

    ReplyDelete
  4. இந்த மாதிரி படங்களில் எல்லாம் செக்ஸ் பிரச்சினைகள் இந்த வெறிக்கு முக்கிய காரணமாக காட்டப்படுகிற்தே. ஹிந்தியிலும் இந்த மாதிரி படங்கள் நிறய்ய உண்டு.நல்ல அனாலிசிஸ்

    ReplyDelete
  5. @முரளி,

    மிக்க நன்றி!!

    ReplyDelete
  6. silence of lambs paththiyum konjm ezhuthunge

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! வாழ்த்துக்கள்!!  தமிழில் தட்டச்சு செய்ய